ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் சமீப காலமாக தனுஷ்கோடி, மரைக்காயர்பட்டினம் வேதாளை, களிமண்குண்டு, கீழக்கரை, நரிப்பையூர் உள்ளிட்ட தெற்கு கடற்கரை கிராமங்களில் இருந்து கஞ்சா, மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருட்கள் நாட்டுப்படகில் கடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே சட்டவிரோதமான முறையில் போதைப் பொருட்கள் சாலை மார்க்கமாக கடத்தி வந்து பின்னர் கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்திச் செல்லப்படுவதற்கும், இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக வரும் கடத்தல் தங்கத்தை சாலை மார்க்கமாக திருச்சி, மதுரை […]
Category: செய்திகள்
காவல் நிலையம் தாக்கப்பட்ட விவகாரத்தில் முதல்வர் பதவி விலக வேண்டும் -ஆர்பி
வல் நிலையம் தாக்கப்பட்ட விவகாரத்தில் முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என்பது தான் தமிழ்நாடு மக்களின் கோரிக்கையாக உள்ளது – தங்க காசை கொட்டி கொடுத்து உடன்பிறப்புகளை சரி செய்துவிட்டு மக்களிடம் இந்த ஆட்சியின் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியை சரி செய்து விடலாம் என்று தான் ஊர் ஊராக ஊர்வலம் போய் உதயநிதி ஊருக்கு உழைக்கிறார் என்ற ஒரு மாயா ஜாலத்தை இந்த நாடக கம்பெனி அரங்கேற்றி வருகிறது., ஆர்.பி.உதயக்குமார் பேட்டி. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே […]
வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம்இடமாற்றம் பொதுமக்கள் அவதி
– மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பெரியார் பாசன கால்வாய் அருகில் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் முன்பகுதியில் உள்ள இரண்டு கட்டிடங்கள் 1982ஆம் ஆண்டு கட்டப் பட்டது. ஆனால் அதில் இன்று வரை எந்தப் பழுதும் ஏற்படவில்லை. இந்நிலையில் 43 ஆண்டுகள் ஆகிவிட்ட தால் பழைய கட்டிடத்தை இடித்து நவீனமயமாக புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் அந்த இரண்டு கட்டிடத்திலும் உள்ள அலுவலக கோப்புகள் பின்புறம் உள்ள கார் செட் […]
சோழவந்தான் பேருந்து நிலையத்தில் செல்போன் மற்றும் பல ஜூஸ் கடை வைத்திருக்கும் சமூக ஆர்வலருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் ஓட்டுனரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலையத்தில் மொபைல் போன் சர்வீஸ் சென்டர் மற்றும் ஜூஸ் கடை வைத்து நடத்தி வருபவர் வணங்காமுடி இவர் தனது கடையில் கண் காணிப்பு கேமரா மூலம் பேருந்து நிலையத்தில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகளை எடுத்து சமூக வலைதளம் மற்றும் செய்தியாளர்களுக்கு பகிர்ந்து வருவது தினசரி வாடிக்கையாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு பேருந்து நிலையத்திற்குள் வந்த பேருந்து பயணிகளை ஏற்றிச் செல்லாமல் உடனே பேருந்து நிலையத்தை விட்டு […]
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா 13ம்நாள் திருவிழாவை முன்னிட்டு அம்மன் ரிஷப வாகனத்தில் திருவிதி உலா 500க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கடந்த ஜூன் இரண்டாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 13ஆம் நாள் மண்டகப்படியையொட்டி சோழவந்தான் வடக்கு ரத வீதி வேளாளர் வெள்ளாளர் உறவின்முறை சங்கம் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. காலை வைகை ஆற்றில் இருந்து மேளதாளம் அதிர்வேட்டுகள் முழங்க தீர்த்த குடம் எடுத்து நான்கு ரத வீதிகளில் சுற்றி வந்து அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து உறவின்முறை சங்கத்தில் மாரியம்மனுக்கு […]
IUML மகளிர் அணி சார்பில் பரிசளிப்பு விழா..
கடையம் அருகே உள்ள ரவண சமுத்திரம் பகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி சார்பில், முதலியார் பட்டி, திருமலையப்பபுரம், பொட்டல் புதூர், ஆகிய அரசுப் பள்ளி, மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி ரவண சமுத்திரம் ஹிதாயத்துல் முஸ்லிமீன் தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. IUML மகளிர் அணி மாவட்ட செயலாளர் நாகூர் அலி பாத்திமா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, கடையம் ஒன்றிய […]
தென்காசி மாவட்ட எஸ்.பி தலைமையில் சட்டம் சார்ந்த கலந்தாய்வு கூட்டம்..
தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில், சட்டம் சார்ந்த கலந்தாய்வு கூட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.அரவிந்த் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான இந்த கூட்டத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் உதவி அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு சட்டம் சார்ந்த பொருட்கள் குறித்து விவாதிக்கப் பட்டது. மேலும் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்ட வழக்குகள் குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும் ஆராயப்பட்டு எதிர்காலத்தில் அதனை தவிர்ப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய குற்ற […]
அருள்மிகு ஸ்ரீ மகாசக்தி மாசாணி அம்மன் கோவில் ஏழாம் ஆண்டு பால்குட உற்சக விழா.!
திருவாடானை அருகே அருள்மிகு ஸ்ரீ மகாசக்தி மாசாணி அம்மன் கோவில் ஏழாம் ஆண்டு பால்குட உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள அரசூர் கிராமத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மகாசக்தி மாசாணி அம்மன் திருக்கோவிலின் ஏழாம் ஆண்டு குண்டம் திருவிழா கடந்த மே 26 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழா நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று 600க்கும் மேற்பட்ட […]
திருவாடானை அருகே மாவிலங்கையில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு!
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவிற்குட்பட்ட மாவிலங்கை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நல்லமுத்து ஈஸ்வரர் மற்றும் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் திருக்கோயிலின் ஆறாம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, சிறப்பாக வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த மஞ்சுவிரட்டில் சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வீரமிக்க காளைகள் பங்கேற்றன. அதேபோல, இந்தக் காளைகளை அடக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து துடிப்புமிக்க காளையர்களும் கலந்துகொண்டனர்.வீரர்களின் கரகோஷங்களுக்கிடையே மஞ்சுவிரட்டு களைகட்டியது. கடுமையான பலப்பரீட்சைக்குப் பிறகு, […]
பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் (லோக் அதாலத்)தேசிய மக்கள் நீதிமன்றம் .!
இராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் /முதன்மை மாவட்ட நீதிபதி மெகபூப்அலிகான் உத்தரவின்படி பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் (லோக் அதாலத்) தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் சார்பு நீதிபதி அறிவு தலைமை தாங்கினார். குற்றவியல் நீதிபதி ஐயப்பன் முன்னிலை வகித்தார். மேலும் 112 வழக்குகள் முடிக்கப்பட்டு தீர்வு தொகையாக ரூபாய். 1,83,62,412/-ஒரு கோடியே எண்பத்தி மூன்று லட்சத்து அறுபத்தி இரண்டு ஆயிரத்து நானூற்றி பன்னிரெண்டு அறிவிக்கப்பட்டது. வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் மூத்த இளம் வழக்கறிஞர்கள் […]
தொண்டியில் தென்மண்டல அளவிலான பயிலரங்கம் .!
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் அழகப்ப பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், அழகப்பா பல்கலைக்கழக கடலியல் மற்றும் கடலோரவியல் துறை இணைந்து நடத்தும் தென்மண்டல அளவிலான பயிலரங்கம் சமகால சுற்றுச்சூழல்களும் தீர்வுகளும் என்ற தலைப்பில் நடைபெற்றது. பயிலரங்கத்திற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் ஜெ.ஜே. லியோன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் பாலமுருகன், மாவட்ட துணைத் தலைவர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட இணைச் செயலர் புல்லூர் ஜீவானந்தம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் போது ராஜா ஆகியோர் முன்னிலை […]
சோழவந்தான் ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா 13ம்நாள் மண்டகப்படியையொட்டி வடக்கு ரத வீதிவேளாளர் வெள்ளாளர் உறவின் முறை சங்கம் சார்பாக மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கடந்த ஜூன் இரண்டாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 13ஆம் நாள் மண்டகப்படியையொட்டி சோழவந்தான் வடக்கு ரத வீதி வேளாளர் வெள்ளாளர் உறவின்முறை சங்கம் சார்பாக மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. காலை வைகை ஆற்றில் இருந்து மேளதாளம் அதிர்வேட்டுகள் முழங்க தீர்த்த குடம் எடுத்து நான்கு ரத வீதிகளில் சுற்றி வந்து அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து உறவின்முறை சங்கத்தில் மாரியம்மனுக்கு […]
18 வாலிபர்கள் கல்வி மற்றும் நல அறக்கட்டளையின் பொதுக்குழு கூட்டம்.!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை 18வாலிபர்கள் ஷஹீத் கல்வி மற்றும் நல அறக்கட்டளையின் 8ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் 18 வாலிபர்கள் கல்வி மற்றும் நல அறக்கட்டளை மூத்த உறுப்பினர்கள் க.கு ஜப்பார், இபுறாஹிம் முஹம்மது முபாரக் ஆகியோர் தலைமையில் காதர் சாஹிப் முன்னிலையில் நடைபெற்றது. இதில் அலி அஹமது கிராத் ஓதி துவக்கி வைத்தனர். மன்சூர் ஆலிம் சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து உறுப்பினர்களிடையே கருத்துக்கள் விவாதிக்கப்பட்டு ஊர் சார்ந்து சுகாதாரம் மரங்களை நட்டு அதனை பராமரித்தல் போக்குவரத்து […]
குயவன்குடி மற்றும் காரான் கிராமங்களில் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்.!
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே குயவன்குடி மற்றும் காரான் கிராமங்களில் தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை மற்றும் வேளாண்மை உழவர் நல துறையின் கீழ் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம் நடைபெற்றது. இதில் வேளாண்மை உதவி இயக்குநர் சிவகாமி கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவங்கி வைத்து விதைச்சான்று மற்றும் உயிர்மச்சான்று பற்றி விளக்க உரையாற்றினார். உச்சிப்புளி வட்டார வேளாண்மை அலுவலர் மோனிஷா விவசாயிகள் அடையாள அட்டை பதிவு செய்ய வேண்டியதன் அவசியம் மற்றும் […]
கடுகுசந்தை சத்திரம் கிராமத்தின் உங்கள் ஊரில் உங்கள் எஸ்.பி முகாம்.!
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் கடுகுசந்தை சத்திரம் கிராமத்தின் உங்கள் ஊரில் உங்கள் எஸ்.பி திட்ட முகாம் நடைபெற்றது. இம்முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் பொதுமக்களை நேரடியாக சந்தித்து சட்டம் ஒழுங்கு தொடர்பான சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்தும் பொதுமக்களின் குறைகளை குறித்தும் கேட்டறிந்தார். மேலும் இளைஞர்களிடம் வேலைவாய்ப்பு மற்றும் கல்லூரி மேற்படிப்பிற்கு தேவையான உதவிகள் செய்வதாகவும், இளைஞர்கள் சமூக வலைதளங்களில் வாள் போன்ற ஆயுதங்களுடன் புகைப்படங்களை பகிர்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். அதேபோன்று சிசிடிவி […]
திருவாலவாயநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இலவச நோட்புக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
சோழவந்தான் அருகே வாடிப்பட்டி ஊராட்சி திருவாலவாயநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விஜயலட்சுமி அறக்கட்டளை சார்பில் இலவச நோட்புக் எழுதுபொருள் ஸ்கூல் பேக் உள்ளிட்ட பொருட்கள் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் அழகசுந்தரம் தலைமை தாங்கினார் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சகுபர் சாதிக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நோட்புக் எழுது பொருட்களை வழங்கினார் பள்ளி ஆசிரியை ஆசிரியர் பெருமக்கள் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர் தொடர்ந்து பள்ளிக்கு இரண்டு மின்விசிறிகளும் […]
கெமிக்கல் பால்; மூவர் கைது..
தென்காசி அருகே கெமிக்கல் பால் தயாரித்து விற்பனை செய்த சம்பவத்தில் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டனர். தென்காசி மாவட்டம் மேலப்பாவூர் பகுதியை சேர்ந்த நபர் பாலில் கெமிக்கல் பவுடரை கலப்படம் செய்து விற்பனை செய்து வருவதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து, தென்காசி ரயில் நிலையம் அருகே ரசாயன பவுடரை தண்ணீரில் கலந்து பால் தயாரித்து அது […]
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி என் வல்லரசு பிறந்தநாள் விழா.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி வாளாகத்திலுள்ள முன்னாள் எம் எல் ஏ அ இ பார்வர்ட்பிளாக் தேசியச் செயலாளர் பி.என் வல்லரசு நினைவிடத்தில் 79 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பாக மாநில பொதுச் செயலாளர் முன்னாள் எம் எல் ஏ பி. வி. கதிரவன் தலைமையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி என் வல்லரசு நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாநிலச் செயலாளர்கள் பி. […]
உசிலம்பட்டியில் பள்ளியில் பள்ளி குழந்தைகளின் இரத்த வகை கண்டறியும் முகாம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 600 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இக்குழந்தைகளின் ரத்தம் எந்த வகையைச் சார்ந்தது என்பதை கண்டறியும்a பரிசோதனை முகாம் நடைபெற்றது. மாணவர்களின் இரத்த வகை இலவசமாக கண்டறியப்பட்டு அரசின் கல்வி இணையதளத்தில் பதியப்பட்டது. மேலும் ரத்தம் எந்த வகை என்று மாணவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் இளம் வயதிலேயே மாணவர்கள் தங்கள் இரத்த வகைகளை அறிந்து கொள்ள ஏதுவாகவும், […]
சோழவந்தான் ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா தேரோட்டத்திற்கு முகூர்த்த கால் நடுவிழா நடைபெற்றது
ம.துரை மாவட்டம் சோழவந்தானில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 17 நாள் நடைபெறும் திருவிழாவில் 16ஆம் நாள் மண்டகப்படியாக வரும் செவ்வாய்க்கிழமை காவல்துறை குடும்பத்தார் சார்பாக திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது. தேரோட்டம் நிகழ்ச்சிக்கு தேர் தயார் படுத்துவதற்காக முகூர்த்த கால் நடும் விழா நடைபெற்றது. தேர் நிலையில் நடைபெற்ற விழாவிற்கு காவல்துறை மற்றும் திருக்கோவில் நிர்வாகத்தினர். தேர் பராமரிப்பாளர்கள் ஆசாரியார்கள் பக்தர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். […]
You must be logged in to post a comment.