ஆர். எஸ். மங்கலம் ஜமாபந்தி: தாமதமாக வந்த அதிகாரியால் மக்கள் அவதி..!

ராமநாதபுரம் மாவட்டம் ஆர். எஸ். மங்கலம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்று வந்த ஜமாபந்தி நிறைவு நாளான இன்று, வருவாய் கோட்டாட்சியர் ராஜ மனோகரன் தாமதமாக வந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். வருவாய் கோட்டாட்சியர் ராஜ மனோகரன் தலைமையில் ஜமாபந்தி நடந்து வரும் நிலையில், இறுதி நாளான இன்று அவர் வருவதற்கு மிகவும் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் தங்கள் மனுக்களை அளிப்பதற்காக நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்திருந்த பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்த தாமதம் அப்பகுதியில் சலசலப்பை […]

திருவாடானையில் சட்ட விழிப்புணர்வு முகாம்.!

திருவாடானை அருகே உள்ள அச்சங்குடி ஊராட்சியில் திருவாடானை வட்ட சட்ட பணிகள் குழுவின் சார்பாக சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் – முதன்மை மாவட்ட நீதிபதி மெஹபூப் அலிகான் அறிவுறுத்தலின் படியும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர்- சார்பு நீதிபதி சரவண பாபு ஆலோசனையின் பேரிலும் திருவாடானை வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவர் தலைவர் அன்டோனி ரிஷந்தேவ் உத்தரவின் பேரில் வட்ட சட்டப் பணிகள் குழுவின் […]

ஆதியூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா .!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே ஆதியூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோவில் உள்ளது. இந்தக் கோவில் சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அந்த கிராமப் பொதுமக்களால் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு இன்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கருட பகவான் வானத்தை வட்டமிட கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் அதிவிமரிசையாக நடைபெற்றது. அதன்பிறகு […]

உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை.!

திருவாடானை அருகே உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜையில் 100 கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று வழிபாடு. இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே பழங்குளம் ஊராட்சி கீழ்ப்புலி ஶ்ரீ முத்து மாரியம்மன் கோவிலில் வைகாசி மாத கரகம் எடுப்பு உற்சவ திருவிழா முன்னிட்டு உலக நன்மை வேண்டி 4 ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது, ஆண்டுதோறும் இக்கோவிலில் உற்சவ விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம்,இந்த ஆண்டும் நடைபெற்றது இதில் கோவில் நிர்வாகம் சார்பில் […]

சரந்தாங்கியில் உள்ள பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அதிமுக மீட்பு குழு சார்பில் மாலை அணிவித்து மரியாதை

அதிமுக மீட்பு குழு மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன் ஆலோசனையின் பேரில்பாலமேடு அருகே சரந்தாங்கியில் உள்ள பெரும்பிடுக முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது ஒன்றிய செயலாளர் கல்லணை சேது சீனிவாசன் ஏற்பாட்டில் பாலமேடு நகர செயலாளர் இ.ப சேகர் அவைத்தலைவர் அய்யாவு நாயக்கர் வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் சத்திர வெள்ளாளப்பட்டி நடராஜன் வடக்கு மாவட்ட எம் ஜி ஆர் மன்ற இணைச் செயலாளர் அய்யாவு செட்டியார்பாலமேடு இளைஞரணி செயலாளர் […]

காடுபட்டி ராமலிங்க சுவாமி சௌடாம்பிகை அம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள காடுபட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு இராமலிங்க சாமி சௌடாம்பிகை அம்மன் திருக்கோவில் வைகாசி திருவிழா நடைபெற்று வருகிறது திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான அக்னி சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர் ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாமுகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா வருகின்ற ஜூன் இரண்டாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில் அதற்கான கொட்டகை முகூர்த்த கால் நடும் நிகழ்வு இன்று காலை 7 மணி அளவில் கோவில் முன்பு நடைபெற்றது முன்னதாக கோவிலில் இருந்து அர்ச்சகர் சண்முகவேல் பூஜை பொருட்களை கொண்டு வந்தார் தொடர்ந்து முகூர்த்த காலுக்கான பணிகள் நடைபெற்று முகூர்த்தக்கால் நடப்பட்டது இந்த நிகழ்ச்சியில் சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே […]

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு ஏற்படும் கடும் போக்குவரத்து நெருக்கடியால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கடும் அவதி

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெருக்கடியால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் குறிப்பாக ஜெனகை மாரியம்மன் கோவில் முன்புறம் உள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் ஒருபுறம் சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் ஜெனகை மாரியம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது மறுபுறம் என பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தி […]

வாக்குசாவடி முகவர்கள் மற்றும் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் .

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஒன்றிய அதிமுக சார்பில் வாக்குசாவடி முகவர்கள் மற்றும் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி உசிலம்பட்டி ஒன்றிய அ தி மு க கழகம் சார்பில் இடையபட்டி , பெருமாள் கோவில் பட்டி, உத்தப்பநாயக்கனூர் , நல்லுத்தேவன்பட்டி , எருமார்பட்டி ஆகிய கிராமங்களில் முன்னாள் அமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் மாவட்ட செயலாளர் […]

சோழவந்தான் தீயணைப்பு நிலைய பணியாளர்களுக்கு மாவட்ட அலுவலர் வெங்கட்ராமன் நேரில் பாராட்டு

மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் தினத்தில் நீரில் மூழ்கிய நிலையில் சோழவந்தான் தீயணைப்புத்துறையினரால் காப்பாற்றப்பட்ட பிளஸ் ஒன் மாணவன் அய்யனாரின் குடும்பத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு நன்றி தெரிவித்திருந்த நிலையில் தீயணைப்புத் துறையின் மதுரை மாவட்ட அலுவலர் வெங்கட்ராமன் பிளஸ் ஒன் மாணவனின் உயிரை காப்பாற்றிய தீயணைப்பு நிலைய பணியாளர்களுக்கு நேரில் பாராட்டு தெரிவித்தார் நிகழ்ச்சியில் சோழவந்தான் தீயணைப்பு நிலைய அலுவலர் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்

சோழவந்தான் மற்றும் சுற்று வட்டார பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்களை திடீரென மூடியதால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்து சேதமடைந்துள்ளது

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளால முள்ளி பள்ளம் தென்கரை ஊத்துக்குளி நாராயணபுரம் ரிஷபம் திருமால் நத்தம் கரட்டுப்பட்டி கருப்பட்டி இரும்பாடி நாச்சிகுளம்போன்ற கிராமப் பகுதிகளில் நெல் நெல் கொள்முதல் நிலையங்களை பாதியிலேயே மாவட்ட நிர்வாகம் மூடியதால் கொள்முதல் நிலையங்களில் மூடைகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள நெல்கள் மழையில் நனைந்து வீணாகி வருகிறது மேலும் நெல்கள் முளைத்தும் உள்ளதால் விவசாயிகள் கடும் நஷ்டம் அடைந்துள்ளனர் மழையில் நனைந்த நெல் மூட்டைகளை உலர்த்தும் பணிகளில் தற்போது விவசாயிகள் […]

வடகாடுபட்டியில் மோசமான சாலையால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதி

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வடகாடுபட்டி கிராமத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கப்படாமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர் விக்கிரமங்கலத்தில் இருந்து சோழவந்தான் செல்லும் சாலையில் வடகாடுபட்டி பகுதியில் சாலை அமைக்காமல் பல வருடங்களாக உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர் மேலும் இது குறித்து அதிகாரிகளுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் சாலை அமைத்து தர கோரிக்கை வைத்திருந்தனர் இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு […]

அதிமுக சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் மேற்கு தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளான அரியூர் கட்டப்புலி நகர் பொதும்பு அதலை ஆகிய ஊராட்சிகளில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும் மாநில அம்மா பேரவை செயலாளருமான முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கி சிறப்புரையாற்றினார் முன்னாள் எம்எல்ஏக்கள் எம் வி […]

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்..

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் (19.05.2025) அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் பெற்றுக் கொண்டார். தகுதி வாய்ந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனு தாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார்.  மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் மூலம் உதவி […]

அமெரிக்காவில் வாழும் நபரிடம் ரூ.3 கோடி மோசடி செய்த நபர் கைது

அமெரிக்காவில் வாழும் நபரின் வங்கிக்கணக்கில் ரூ.3 கோடி வரை பண மோசடியில் ஈடுபட்ட செங்கோட்டையை சேர்ந்த காளிதாஸ் என்பவரை தென்காசி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள வல்லத்தை சேர்ந்தவர் முத்துசுவாமி என்பவரது மகன் ராமச்சந்திரன் சுவாமி. இவர் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவர் தனது சொந்த ஊருக்கு வரும் போதெல்லாம், செங்கோட்டை இலத்தூர் சாலையில் வசித்து வரும் ராயல் நாயுடு என்பவரது மகன் […]

ரஜினி பெயரில் இரத்ததான கழகம்..

திரைப்பட நடிகர் ரஜினியின் இயற்பெயரான “சிவாஜி ராவ் கெய்க்வாட்” பெயரில் ரஜினி படித்த பெங்களூரு ஏ.பி.எஸ் கல்லூரியில் ரத்ததானக் கழகம் தொடங்கப்பட உள்ளதாக தென்காசி மாவட்ட சமூக ஆர்வலர் பூ.திருமாறன் தெரிவித்து உள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூரில் அமைந்து உள்ளது புகழ்பெற்ற ஏ.பி.எஸ் கல்லூரி. இக்கல்லூரியில் 5000 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். நடிகர் ரஜினி 1964ஆம் ஆண்டில் இங்குள்ள மாலை நேர கல்லூரியில் படித்துள்ளார். அதற்கான ஆதார ஏட்டினை இன்றளவும் முதல்வர் சுதர்ஸன் பாதுகாத்து […]

சோழவந்தான் நகர கூட்டுறவு வங்கி சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் நகர கூட்டுறவு வங்கி மற்றும் வாசன் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது சோழவந்தான் நகர கூட்டுறவு வங்கி வளாகத்தில் நடைபெற்ற முகாமில் கம்ப்யூட்டர் கண் பரிசோதனை கண் கண்ணாடி பரிசோதனை மாறுகண் குறைபாடு கண்டறிதல் பரிசோதனை தூரம் மட்டும் கிட்டத்து பார்வை குறைபாடு கண்டறிதல் பரிசோதனை கண்புரை நோய் கண்டறிதல் கண்ணில் தசை வளர்தல் நோய் கண்டறிதல் சர்க்கரை நோய் காரணமாக கண்ணில் ஏற்படும் குறைபாடுகள் குறித்த […]

பாஜக பிரமுகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு..

தென்காசி மாவட்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக மாவட்ட பாஜக செயற்குழு உறுப்பினர் மீது நீதிமன்ற உத்தரவுப்படி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியை சேர்ந்தவர் நீலகண்டன் (வயது 58). இவர் தென்காசி மாவட்ட பாஜக செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் கடந்த 2023ஆம் ஆண்டு பாவூர்சத்திரம் பகுதியில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.   இந்நிலையில், இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியதையடுத்து […]

தென்காசி இ.விலக்கில் வரவேற்பு பூங்கா..

தென்காசி அருகே உள்ள இலத்தூர் இ.விலக்கு ரவுண்டானாவில் நெல்லை முடநீக்கியல் மருத்துவர்கள் சங்கம் மற்றும் குற்றாலம் சாரல் ரோட்டரி சங்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள வரவேற்பு பூங்காவின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. தென்காசி அருகே கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் இலத்தூர் இ.விலக்கு பகுதியில் ரவுண்டானா அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ரவுண்டானா பராமரிப்பு இன்றி புற்கள் மற்றும் புதர்கள் மண்டி கிடந்தன. இதனால் அப்பகுதியில் சாலை விபத்துகள் அதிகமாக நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. இதனை தடுக்கும் விதமாக பசுமை […]

தன்னைக் காப்பாற்றிய அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்த மாணவன்

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் சித்திரை திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி கடந்த 12ஆம் தேதி நடைபெற்றது சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் கள்ளழகர் தரிசனம் செய்தனர் இந்த நிலையில் வைகை ஆற்றில் மூழ்கி பிளஸ் ஒன் மாணவர்கள் இருவர் உயிருக்கு போராடிய நிலையில் சோழவந்தான் தீயணைப்புத் துறையினர் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அதில் விருதுநகர் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!