தென்காசி மாவட்டம், செங்கோட்டை அரசு பொது நூலகத்தில் புத்தக வெளியீட்டு விழா நடந்தது. சிறந்த எழுத்தாளரும், திருநெல்வேலி சதக்கத்துல்லா அப்பா கல்லூரி தமிழ் பேராசிரியருமான மாலிக் பாதுஷா எழுதிய “எங்க வீடு” என்ற நாவல் வெளியீட்டு விழா செங்கோட்டை அரசு நூலகத்தில் நடைபெற்றது. ஓய்வு பெற்ற தமிழாசிரியர் வரிசைக் கனி புத்தகத்தை வெளியிட்டார். தமிழ் செம்மல் விருதாளர், பாப்பாக்குடி அ.முருகன் நூலை பெற்றுக் கொண்டார். விழாவிற்கு, வாசகர் வட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் […]
Category: செய்திகள்
புரட்சி தமிழகம் பறையர் பேரவை தலைவர் ஏர்போர்ட் மூர்த்திக்கு விசிகவினர் கடும் எதிர்ப்பு! தனியார் ஹோட்டலில் போலீசார் குவிப்பு! வத்தலக்குண்டுவில் பரபரப்பு..
புரட்சி தமிழகம் பறையர் பேரவை தலைவர் ஏர்போர்ட் மூர்த்திக்கு விசிகவினர் எதிர்ப்பு! தனியார் ஹோட்டலில் போலீசார் குவிப்பு! வத்தலக்குண்டுவில் பரபரப்பு.. வத்தலகுண்டு வருகை புரிந்த, புரட்சி தமிழகம் பறையர் பேரவை தலைவர் ஏர்போர்ட் த.மூர்த்திக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் ஞாயிற்றுக்கிழமை எதிர்ப்பு தெரிவித்ததால், அவர் தங்கியுள்ள ஹோட்டலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு அவர் அந்த மாநாட்டில் கலந்து கொள்ள விடாமல் தடுத்ததால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவில் தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் […]
நிலக்கோட்டை அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து போலீஸ்காரர் பலி..
நிலக்கோட்டை அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து போலீஸ்காரர் பலி.. மதுரை, போலீஸ் குடியிருப்பைச் சேர்ந்த கூடல் புதூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் கணபதி(40) மற்றும் அவரது மனைவி சங்கீதா(40) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வத்தலக்குண்டு சாலையில் உள்ள தியாகராஜா மில் அருகே வந்து கொண்டிருந்தபோது ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த காவலர் ஹரிஹரன் என்பவர் ஓட்டி வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மதுரையைச் சேர்ந்த […]
உடன்காட்டுப்பட்டியில் முதலமைச்சர் பிறந்த நாளை ஒட்டி வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கொடிக்குளம் 5 ஊர் சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி உடன்காட்டுப்பட்டியில் முதலாம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. மதுரை தெற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் பாலாஜி துவக்கி வைத்தார். செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் சுதாகரன் உசிலம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் அஜித் பாண்டி முன்னிலை வகித்தனர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வனிதா ராமன் வரவேற்றார். இதில் மதுரை ராமநாதபுரம் சிவகங்கை […]
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் கூட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சந்தை திடல் தேவர் மகாலில் மதுரை மாவட்டம் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் உசிலம்பட்டி ஒன்றிய ஐந்தாவது மாநாடு நடைபெற்றது.
பட்டாசு வெடித்ததில் சின்னத்திரை நடிகை வீட்டின் மேல் முகப்பு இடிந்து விழுந்ததில் ஒருவர் காயம்
மதுரைசெக்கானூரணி தேவர் சிலை அருகே சின்னத்திரை நடிகை வீட்டின் மேல் முகப்பு இடிந்து விழுந்தில் ஒருவர் படுகாயம் மராமத்து பணிக்காக மேல் மாடியில் பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த போது அருகில் சுப நிகழ்ச்சிக்கு ஊர்வலமாக சென்றவர்கள் பட்டாசு வெடித்ததில் அதிர்வு ஏற்பட்டு கட்டடத்தின் மேல் பகுதி இடிந்து விழுந்ததாக பொதுமக்கள் பரபரப்பு குற்றச்சாட்டு மதுரை மாவட்டம் செக்கானூரணி தேவர் சிலை அருகே குடியிருந்து வருபவர் சின்னத்திரை நடிகை சந்திரசேகரி இவரது கணவர். கணேசன் இவர்களின் வீட்டின் […]
பாகிஸ்தானுடன் போரில் வெற்றி! பழநியில் 200 அடி தேசிய கொடி ஏந்தி ஊர்வலம்.
பாகிஸ்தானுடன் போரில் வெற்றி! பழநியில் 200 அடி தேசிய கொடி ஏந்தி ஊர்வலம். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தேசியக்கொடி ஏந்தி ஊர்வலம் நிகழ்ச்சி நடைபெற்றது. 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு 200 அடி நீளம் உள்ள தேசியக் கொடியை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். பாகிஸ்தான் உடன் நடைபெற்ற போரில் தீவிரவாதிகளை அழித்து வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் தேசியக்கொடி ஊர்வலம் நடைபெற்றது. சுபாஷ் சந்திரபோஸ் சிலை முன்பு பா.ஜ.க மேற்கு மாவட்ட தலைவர் ஜெயராமன் தலைமையில் துவங்கிய […]
செம்பட்டி அருகே, கோவில் திருவிழாவில் குளிக்கும் பெண்களை வீடியோ எடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, 10 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் செம்பட்டியில் 5 மணி நேரம் சாலை மறியல் போராட்டம்..
செம்பட்டி அருகே, கோவில் திருவிழாவில் குளிக்கும் பெண்களை வீடியோ எடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, 10 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் செம்பட்டியில் 5 மணி நேரம் சாலை மறியல் போராட்டம்.. செம்பட்டி அருகே, கோவில் திருவிழாவில் குளிக்கும் பெண்களை வெள்ளிக்கிழமை இரவு வீடியோ எடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, 10 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் செம்பட்டியில் சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு தொடங்கி 5 மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தில் […]
உசிலம்பட்டி அருகே ரோட்டை கடக்க முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் கார் மோதி பலி.
உசிலம்பட்டி தேனி மெயின் ரோட்டில் குஞ்சாம்பட்டியில் தேனியில் இருந்து வந்த கார் பஸ் நிறுத்தத்தில் பஸ்ஸிலிருந்து இறங்கி ரோட்டை கடக்க முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் மீது கார் மோதியது. இதில் மூன்று பெண்கள் ஒரு குழந்தை உட்பட 4 பேர்கள் சம்பவ இடத்தில் பலி. மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.ஜோதிகா வயது 20 லட்சுமி வயது 55 பாண்டிச்செல்வி வயது28 குழந்தை பிரகலாதன் வயது 2 மற்றும் ஜெயபாண்டி கருப்பாயி வயது 65 […]
பழநியில் ரோப்கார் அந்தரத்தில் பழுதாகி நிற்கும் போது பக்தர்களை மீட்பது எப்படி! தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஒத்திகை..
பழநியில் ரோப்கார் அந்தரத்தில் பழுதாகி நிற்கும் போது பக்தர்களை மீட்பது எப்படி! தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஒத்திகை.. பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் மலை மீது எளிதாக சென்று வர வசதியாக ரோப் கார் சேவை இயக்கப்பட்டு வருகிறது. ரோப் காரில் பயணம் செய்யும் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கோயில் நிர்வாகம் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ரோப் காரில் பக்தர்கள் செல்லும் போது பழுதாகி நின்றால் அந்தரத்தில் பெட்டியில் […]
மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை! ஏழு பேரை அதிரடியாக கைது செய்த போலீசார்!
பழனியில் கஞ்சா விற்பனை செய்த ஏழு பேர் கைது- கைதானவர்களிடமிருந்து இரு சக்கர வாகனம் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பழனி திண்டுக்கல் சாலையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த நிலையில் போலீசார் திடீரென திண்டுக்கல் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த பாலசமுத்திரத்தைச் சேர்ந்த கோகுல கண்ணன், பழனி நகரைச் சேர்ந்த மணிகண்டன், கார்த்திக், நாகேந்திர பிரசாத், முகமது சேக் ,சரவணகுமார் […]
பேருந்து ஓடும்போதே ஓட்டுநர் உயிரிழப்பு! பலரின் உயிரைக் காப்பாற்றிய நடத்துநர்..
பழனி அருகே பேருந்து ஓட்டுனர் நெஞ்சுவலியால் மரணம்- பேருந்தை ஓட்டிச் சென்ற போது நெஞ்சு வலி ஏற்பட்டது- நடத்துனர் விரைந்து செயல்பட்டதால் பேருந்து விபத்தில் சிக்காமல் தப்பியது! திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து புதுக்கோட்டை கிராமத்திற்கு சென்றுள்ளது. பேருந்தை ஓட்டுனர் பிரபு இயக்கி சென்றுள்ளார். பேருந்து கணக்கம்பட்டியில் இருந்து புதுக்கோட்டை சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநர் பிரபுவிற்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் பேருந்து ஓடும் போதே மயங்கி விழுந்து பிரபு […]
தேவகோட்டை நகர சிவன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்.!
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர சிவன் கோவிலில் வைகாசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடை பெற்றது. வைகாசி மாதத்தில் வரும் வளர் பிறை பிரதோஷத்தில் நந்தீஸ்வரரை வழிபட்டால் மகிழ்ச்சி , செழிப்பும் பெருகும் என்ற ஐதீகத்தால், சிவன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரச் சிவன் கோயிலில் இன்று வைகாச மாத வளர் பிறை பிரதோஷத்தை முன்னிட்டு கோவிலில் உள்ள நந்திகேஸ்வரருக்கு பல்வேறு மஞ்சள், சந்தனம்,பால், […]
இராமநாதபுரம் மன்னர் குமரன் சேதுபதி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு கால்பந்தாட்ட போட்டி .!
இராமநாதபுரம் மன்னர் குமரன் சேதுபதி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு கால்பந்தாட்ட போட்டி இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் வழித்தோன்றலான மன்னர் என்.குமரன் சேதுபதியின் மூன்றாம் ஆண்டு நினைவு கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது இதில் 18 அணிகள் 216 வீரர்கள் பங்கேற்றனர் இந்த விளையாட்டானது மூன்று நாட்களாக நடைபெற்று இறுதிப்போட்டியில் பெரியபட்டினம் அணியும் இராமநாதபுரம் சேதுபதி அணியும் விளையாடின இதில் பெரிய பட்டிண அணி இரண்டு கோள்கள் அடித்து வெற்றி பெற்றது வெற்றி பெற்ற அணி பெரியபட்டிணம் முதல் […]
சோழவந்தான் பிரளயநாத சிவாலயத்தில் சனி மகா பிரதோஷ விழா
மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றின் வடகரையில் பிரளயநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. விசாக நட்சத்திரத்துக்குரிய திருக்கோவிலாகும். இங்கே வைகாசி மாச சனி மகா பிரதோஷம் நடைபெற்றது. விழாவையொட்டி நந்தி பகவானுக்கு பால் தயிர் வெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமியும் அம்பாளும் பிரியாவிடையுடன் ரிஷப வாகனத்தில் திருக்கோவில் சுற்றி வலம் வந்தனர் அப்போது பக்தர்கள் ஓம் நமச்சிவாய நமச்சிவாயா என்று வலம் வந்தனர். தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் […]
கோவையின் சிவப்பு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம்.!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் வருகின்ற 23.05.2025 முதல் 27.05.2025 வரை மழைப்பொழிவு அதிக அளவு இருக்கும் எனவும், சிவப்பு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின்படி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நகராட்சியின் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பேரிடர் மேலாண்மை பணிகள் மேற்கொள்ள தயார் நிலையில் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் பேரிடர் மேலாண்மை பணிக்கென மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் சிறப்பு தொலைப்பேசி எண். 04254 222151 கொண்ட நிவாரண உதவி […]
போட்டியே இல்லாம’ தேர்வான பெருநாழி நாடார் உறவின்முறை நிர்வாகிகள்…
‘போட்டியே இல்லாம’ தேர்வான பெருநாழி நாடார் உறவின்முறை நிர்வாகிகள்… ராமநாதபுரம் மாவட்டம்,கமுதி தாலுகா பெருநாழியில் செயல்பட்டு வரும் சத்திரிய இந்து நாடார் உறவின்முறை சங்கத்திற்கான புதிய நிர்வாகிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சத்திரிய இந்து நாடார் உறவின்முறை சங்கம் (பதிவு எண் – 137/2021) கல்விச் சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறது. இன்று (மே 24, 2025) நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில், புதிய தலைவராக K. பாலமுருகன், செயலாளராக P. முத்துக்குமார், மற்றும் பொருளாளராக A. ஜெகதீஸ்குமார் ஆகியோர் போட்டியின்றி […]
சோழவந்தான் அருகே துர்க்கை அம்மன் கோவிலில் நடைபெற இருந்த திருவிழா பொதுமக்களின் எதிர்ப்பையடுத்து தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு. டிஎஸ்பி கோட்டாட்சியர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேட்டு நீரேத்தான் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த துர்க்கை அம்மன் கோவில் அமைந்துள்ளது இங்கு திருவிழா கொண்டாடுவதில் அவ்வப்போது சிறு சிறு பிரச்சனைகள் இருந்து வந்துள்ளது. பெரும்பாலான மக்கள் பழைய நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்று விரும்புகின்றனர். இந்நிலையில் சிலர் திருவிழா கொண்டாடும் நோக்கில் முன்னேற்பாடு பணிகளை செய்து வந்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது மேலும் அவர்கள் பழைய நடைமுறையை பின்பற்றி ஊரில் […]
சோழவந்தானில் அதிமுக சார்பில் மூத்த உறுப்பினர்கள் 1000 நபர்களுக்கு பொன்னாடை அணிவித்து ஊக்கத்தொகை முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் வழங்கினார்
அதிமுகபொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு ,மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம் மற்றும் அம்மா பேரவை சார்பில் தொடர்ந்து 100 திருக்கோயில்களில் எடப்பாடி பழனிச்சாமி பெயரில் சிறப்பு பிராத்தனை, 100 கிராமங்களில் மாபெரும் அன்னதானம் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி சார்பில் அதிமுகவை சார்ந்த 1000 மூத்த முன்னணியினர்களுக்கு பாராட்டு விழா மற்றும் ஊக்கத்தொகை (பொற்கிழி) வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு சோழவந்தான் முன்னாள் சட்டமன்ற […]
நாய் கடித்து இரண்டு ஆடுகள் பலி:5 க்கும் மேற்பட்ட ஆடுகள் காயம்..!
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் அருகே உள்ள அண்ணாமலைநகரில், மணிமுத்து (65) என்பவருக்கு சொந்தமான ஆடுகளை நாய்கள் கடித்து குதறியதில் இரண்டு ஆடுகள் உயிரிழந்தன. மேலும், ஐந்துக்கும் மேற்பட்ட ஆடுகள் படுகாயமடைந்தன. இன்று காலை தனது ஆடுகளைக் கொட்டகையில் கட்டிவிட்டு வெளியே சென்றிருந்த மணிமுத்து திரும்பி வந்து பார்த்தபோது, நாய்கள் ஆடுகளைக் கடித்து குதறியதைக் கண்டார். அக்கம் பக்கத்தினர் விரட்டியடித்ததால் நாய்கள் ஓடிவிட்டன. காயமடைந்த ஆடுகளுக்கு ஆர்.எஸ். மங்கலம் அரசு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்பகுதியில் […]
You must be logged in to post a comment.