உசிலம்பட்டியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சார பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் உசிலம்பட்டி தொகுதி தலைவர் டி. சரவணகுமார் தலைமையில் வட்டார தலைவர்கள் சேடபட்டி புது ராஜா செல்லம் பட்டி செந்தில்குமார் முன்னாள் நகரத் தலைவர் ஓ.காந்தி சரவணன் முன்னாள் மாவட்டச் செயலாளர் எல் விஜய காந்தன் மாநில விஸ்வகர்ம இயக்கம் துணை தலைவர் பிச்சை ஆசாரி […]

பட்டிவீரன்பட்டி அருகே அரசு பேருந்து டயர் பஞ்சர், மாற்று டயர் இல்லாமல் பொதுமக்கள் அவதி!

பட்டிவீரன்பட்டி அருகே அரசு பேருந்து டயர் பஞ்சர், மாற்று டயர் இல்லாமல் பொதுமக்கள் அவதி! திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் இருந்து செம்பட்டிக்கு அரசு பேருந்து 40 பயணிகளுடன் பட்டிவீரன்பட்டி அருகில் சென்று கொண்டிருந்தபோது முன்பக்க டயர் பஞ்சர் ஆகி நடுரோட்டில் நின்றது. மாற்று டயர் இல்லாததால், பேருந்தில் இருந்த பயணிகள் அவ்வழியாக வந்த ஷேர் ஆட்டோ மற்றும் தனியார் பேருந்துகளில் ஏறி ஊர்களுக்கு சென்றனர். கிராமப்புறங்களுக்கு தரமான அரசு பேருந்துகளை வத்தலக்குண்டு பணிமனையில் இருந்து இயக்க சம்பந்தப்பட்ட […]

நிலக்கோட்டையில் கேரளாவைச் சேர்ந்த, பூ ஏற்றுமதியாளர் வீட்டில் கேரளாவைச் சேர்ந்த வருமான வரித்துறையினர் சோதனை. 

நிலக்கோட்டையில் கேரளாவைச் சேர்ந்த, பூ ஏற்றுமதியாளர் வீட்டில் கேரளாவைச் சேர்ந்த வருமான வரித்துறையினர் சோதனை.      திண்டுக்கல் மாவட்டம்,  நிலக்கோட்டை  மெகாசிட்டியில் வசித்து வருபவர் முகமது அலி  (52),  கேரளாவைச் சேர்ந்த இவர்,  கடந்த சில ஆண்டுகளாக நிலக்கோட்டையில் வசித்து வருகிறார். இவர்,  நிலக்கோட்டையில் இருந்து பூக்களை விலைக்கு வாங்கி, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும்,  வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்.   இவர், வசிக்கும் நிலக்கோட்டை வீட்டில் கேரளா பதிவு எண்  கொண்ட  4-கார்களில்  […]

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு..

தமிழகம், புதுச்சேரியில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, கோவை மாவட்டம் சின்னக்கல்லார் பகுதியில், 6 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, கோவை மாவட்டம் சோலையார், வால்பாறை, நீலகிரி மாவட்டம் செருமுள்ளி ஆகிய இடங்களில் தலா, 3 செ.மீ., மழை பெய்துள்ளது. மத்திய கிழக்கு அரபிக் கடலில் நிலவிய காற் றழுத்த தாழ்வு மண்டலம், அதே பகுதியில் […]

இவர்கள் எல்லாம் திமுகவின் B டீம்! எடப்பாடி பழனிச்சாமி பேச்சு..

அதிமுகவில் இருந்தபோதே ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன் மூவரும் குழி பறித்ததால்தான் வெற்றிவாய்ப்பை இழந்தோம். இப்படிப்பட்ட துரோகிகளால்தான் 2021ல் எங்களால் ஆட்சிக்கு வரமுடியவில்லை. திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று ஓபிஎஸ் சில தினங்களுக்கு முன்பு கூறினார். உண்மையான அதிமுக தொண்டர் வாயில் இருந்து இப்படியொரு வார்த்தை வருமா? அவருடன் எப்படி சென்று மீண்டும் இணைய முடியும்? இவர்களெல்லாம் திமுகவின் B டீமாக செயல்படுகிறார்கள், என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சசிகலா, செங்கோட்டையன், ஓபிஎஸ் திடீர் சந்திப்பு! நடக்கப் போவதைப் பொருத்திருந்து பாருங்கள்; சசிகலா அதிரடி..

 பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவையொட்டி அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆகிய இருவரும் மதுரையில் இருந்து பசும்பொன்னுக்கு ஒரே காரில் பயணித்தனர். அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரனும் இவர்களுடன் இணைய உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில் பசும்பொன் செல்லும் வழியில் அபிராமம் பகுதியில் உள்ள சாலையில் மூவரும் […]

சோழவந்தானில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க வெங்கடேசன் எம்எல்ஏவுக்கு கொடிக்கால் விவசாயிகள் கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமப் பகுதிகளான இரும்பாடி கருப்பட்டி தச்சம்பத்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கொடிக்கால் விவசாயம் செய்து வந்த நிலையில் கொடிக்கால் விவசாயிகளுக்கு போதிய வருவாய் கிடைக்காததால் சிறிது சிறிதாக மாற்று விவசாயம் செய்ய தங்களை தயார் செய்து வந்தனர் இந்த நிலையில் சுமார் 1000க்கும் மேற்பட்ட ஏக்கரில் கொடிக்கால் விவசாயம் செய்து வந்த சோழவந்தான் பகுதி விவசாயிகள் தற்போது பத்துக்கும் குறைவான ஏக்கரில் விவசாயம் செய்ய வேண்டிய […]

காலையில் இறங்கி மாலையில் எகிறிய தங்கம்!

தங்கம் விலை கடந்த 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. அதன் பின்னர் விலை குறையத் தொடங்கியது. கடந்த 23-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை சவரனுக்கு ரூ.9 ஆயிரம் சரிந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.89 ஆயிரத்துக்கு கீழ் வந்து அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.தொடர்ந்து குறைந்துவந்த தங்கம் விலைக்கு முற்றுப்புள்ளி வைத்து, நேற்று மீண்டும் ஏற்றம் கண்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 75-க்கும், ஒரு சவரன் ரூ.88 […]

உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு பல்வேறு கட்சியினரும், பல்வேறு அமைப்புகளும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதன் ஒரு பகுதியாகஉசிலம்பட்டி தமிழ் மாநில பிரமலைக் கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவை மாநில தலைவர் இராஜா பாண்டியன் டாக்டர் ஜெபமணி தலைமையில் குருநாதன் வீரணன் பூங்கொடி கள்ளிப்பட்டி தினேஷ் செளந்தரபாண்டி ஆகியோர் கலந்து கொண்டு தேவர் சிலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.

சோழவந்தானில் அதிமுக சார்பாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைவிழாவை முன்னிட்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மதுரை மாவட்டம்சோழவந்தானில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சோழவந்தான் பேரூர்அதிமுக சார்பாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி குருபூஜையையொட்டி சோழவந்தான் பேருந்து நிலையத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. சோழவந்தான் பேரூர் கழகச் செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார்.வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதில் வார்டு கவுன்சிலர்கள் டீக்கடை கணேசன் ரேகா ராமச்சந்திரன் சண்முக பாண்டியராஜா, முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் எம் கே முருகேசன், […]

மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இளம் காட்டு யானை சடலமாக கண்டுபிடிப்பு.!

மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இளம் காட்டு யானை சடலமாக கண்டுபிடிப்பு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனசரக எல்லைக்குள் உள்ள வனப்பகுதியில் 13 முதல் 15 வயதுக்குட்பட்ட ஆண் காட்டு யானை ஒன்று இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் வனத்துறைக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, கோவை மாவட்ட வன பாதுகாவலர் வெங்கடேஷ் மற்றும் மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, வனசரக அலுவலர் சசிகுமார் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், வன […]

பெரியநாயக்கன்பாளையத்தில் அடிப்படை வசதிகள் கோரி சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம்.!

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பேருந்து நிலையம் அருகில் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) சார்பில் மக்களின் அடிப்படை வசதிகளை கோரி பெரிய அளவில் மக்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரியநாயக்கன் பாளையம் பேரூராட்சி மற்றும் தமிழக அரசு இரண்டும் இணைந்து மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளான சாலை, சாக்கடை, மேம்பாலம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பேரூராட்சியின் பல வார்டுகளில் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுவதால் மக்கள் பெரும் […]

மத்திய குழுவினர் ஆய்வுக்கு பின்னும் நெல் கொள்முதலில் தாமதம்

சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கொள்முதல் நிலையங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள 5000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாக கூடிய சூழ்நிலை இருப்பதாக விவசாயிகள் குமுறல் மத்திய குழுவினர் ஆய்வு செய்து சென்ற பின்பும் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்படுவதாக விவசாயிகள் பரபரப்பு குற்றச்சாட்டு மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட ஆண்டிபட்டி கருப்பட்டி அம்மச்சியாபுரம் கட்டக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை செய்து கொள்முதல் நிலையங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல் குவியல்கள் மற்றும் நெல் மூட்டைகள் மழையில் […]

தென்காசி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (29.10.2025) தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில், 141 கோடியே 60 இலட்சம் ரூபாய் செலவிலான 117 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 291 கோடியே 19 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 83 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் 2,44,469 பயனாளிகளுக்கு 587 கோடியே 39 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இந்த அரசு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், […]

ஜித்து எனும் ஆண் காட்டு யானை உயிரிழப்பு..

கோவை வனக்கோட்டம் மேட்டுப் பாளையம் வனசரகத்தில் 13 முதல் 15 வயது மதிக்கத்தக்க ஜித்து என்னும் பேர் கொண்ட ஆண் காட்டு யானை உயிரிழந்த நிலையில், வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தலின் படி யானை இறந்த பகுதிக்கு விலங்குகள் உடற் கூறாய்வு மருத்துவ குழு வந்தடைந்தது. தற்போது பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

விக்கிரமங்கலத்தில் திருமங்கலம் கால்வாய் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு. உசிலம்பட்டி ஐயப்பன் எம்எல்ஏ தண்ணீர் திறந்து வைத்தார்

மதுரை விக்கிரமங்கலத்தில் திருமங்கலம் கால்வாய் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு உசிலம்பட்டி ஐயப்பன் எம்எல்ஏ தண்ணீர் திறந்து வைத்தார் விவசாய சங்க தலைவர் எம் பி ராமன் செயற்பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பாசன சங்க பிரதிநிதிகள் விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்விக்கிரமங்கலம் முதல் திருமங்கலம் வரை சுமார் 30க்கும் மேற்பட்ட கண்மாய்க்கு உட்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்

சோழவந்தான் அருகே தென்கரை ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி பெருவிழாவில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத மூல நாத ஸ்வாமி திருக்கோவிலில் 14 ஆம் ஆண்டு கந்த சஷ்டி திருவிழா கடந்த வாரம் புதன்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது தொடர்ந்து தினந்தோறும் வள்ளி தேவசேனா முருகப்பெருமானுக்கு பல்வேறு அபிஷேகங்கள் அலங்காரங்கள் செய்யப்பட்டு வந்தன. பக்தர்களின் விண்ணத்திறும் கோஷத்துடன் சூரசம்காரம் நடைபெற்றது தொடர்ந்து. முருகப்பெருமான் ஸ்ரீ வள்ளி தேவசேனா திருக்கல்யாணம் நடைபெற்றது. கோவிலில் உள்ள கல்யாண மண்டபத்தில் கணபதி பூஜை உடன் தொடங்கி […]

சோழவந்தான் அருகே வாகன விபத்தில் புகைப்படக் கலைஞர் உயிரிழந்த சோகம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கச்சிராயிரப்பு கிராமத்தை சேர்ந்த மணி இவர் புகைப்பட கலைஞராக இருந்து வருகிறார் இவருக்கு திருமணம் ஆகி மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் வாடிப்பட்டியில் குடியிருந்து வருகிறார் பணி நிமித்தமாக சோழவந்தான் வந்துவிட்டு திரும்பி வீட்டிற்கு சென்ற போது சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனை அருகில் நாகம்மாள் கோவில் பகுதியில் தனது இரு சக்கர வாகனத்தில் சென்றபோது பின்னால் வந்த இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் […]

நலம் காக்கும் ஸ்டாலின்; உயர் மருத்துவ சேவை முகாம்..

தென்காசி மாவட்டம் நெட்டூர் வட்டாரம் ஊத்துமலை ஆர்.சி. நடுநிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலம் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் 01.11.2025 (சனிக் கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் பொது மருத்துவம். பொது அறுவை சிகிச்சை, எலும்பியல், மகப்பேறு மற்றும் மகளிர் நலம், குழந்தைகள் நலம் இருதயவியல். நரம்பியல் தோல், பல், கண் காது, மூக்கு, தொண்டை, […]

முதலமைச்சரின் கவனத்தை எதிர் நோக்கி பொது மக்கள்..

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்டத்திற்கு நாளை வருகை தரும் நிலையில் முதல்வரின் கவனத்தை சுரண்டை நகராட்சி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு மக்களின் மத்தியில் எழுந்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் வணிக நகரங்களுள் சுரண்டை நகராட்சி ஒன்றாகும். மாவட்டத்தின் மத்தியில் அமைந்துள்ள சுரண்டை நகராட்சியில் தற்போது சுமார் 75 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். விவசாயமும், வர்த்தகமும் இப்பகுதி மக்களின் பிரதானமாக உள்ளது. மேலும் சுரண்டையை சுற்றியுள்ள சுமார் 40 ஊராட்சி 4 […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!