டி.என்.பி.எஸ்.சி மக்களை ஏமாற்றும் வகையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது! அன்புமணி ராமதாஸ் கடும் தாக்கு..

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கடந்த ஓராண்டில் மட்டும் 17 ஆயிரம் பேருக்கும் கூடுதலானோருக்கு புதிதாக அரசு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. கடந்த ஓராண்டில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே புதிய வேலைவாய்ப்புக்கான அறிவிக்கையை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள நிலையில், வரலாறு காணாத வகையில் வேலைகளை வழங்கிவிட்டதாக கூறுவது அப்பட்டமான பொய் ஆகும்.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள […]

ஜூலை 15 முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்! முதற்கட்ட பணியில் 1 லட்சம் தன்னார்வலர்கள்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டம் தொடங்கப்பட இருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 10 ஆயிரம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் நடத்தப்படும் முதல் முகாமினை, வரும் ஜூலை 15 ஆம் நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைக்க உள்ளார். இந்தத் திட்டம் ஜூலை 15 முதல் நவம்பர் மாதம் வரை அனைத்து […]

சாலை பணியை துரிதப்படுத்துக!மதிமுக சார்பில் வலியுறுத்தல்..

திருநெல்வேலி – தென்காசி சாலை விரிவாக்கப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், ஆவுடையானூர் செல்லும் சாலையில் புதிதாக திறக்கப்பட உள்ள மதுபான கடைக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கக் கூடாது எனவும் மதிமுக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட அலுவலகம் வைகோ செயலகத்தில் வைத்து மாவட்ட அவைத் தலைவர் ந.வெங்கடேஷ்வரன் தலைமையில் நடைபெற்றது. தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக துணைச் செயலாளர் எஸ்.கே.டி. துரை முருகன் […]

சோழவந்தான் அருகே மரம் விழுந்து 1மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

சோழவந்தான் அருகே தச்சமுத்து விவேகானந்தா கல்லூரி இடையில் மரம் விழுந்ததில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு இரவு நேரம் என்பதால் பொதுமக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவிப்பு மதுரை சோழவந்தான் அருகே தச்சம்பத்து விவேகானந்தா கல்லூரி இடையில் புங்கமரம் விழுந்ததில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது மரத்தை அகற்ற அதிகாரிகள் யாரும வராத நிலையில் பொதுமக்களே மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர் தச்சம்பத்து அருகே இரவு 7 […]

சோழவந்தான் அருகே பேருந்து வசதி இல்லாததால் ஆபத்தான முறையில் ஆட்டோவில் தொங்கி செல்லும் கல்லூரி மாணவர்கள்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் சுமார் 3009க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு பயிலும் மாணவர்கள் வாரத்தின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தங்களின் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்று பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் நண்பர்களை சந்தித்து விட்டு அன்று இரவே கல்லூரிக்கு திரும்புவது வழக்கம் இந்த நிலையில் கல்லூரியில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் மாணவர்கள் வாரந்தோறும் 500க்கும் மேற்பட்டோர் […]

அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வந்த நபரை காவலர்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

  சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலர் அஜித்குமார் தனிப்படை போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் விசாரணைக்காக அழைத்து வந்தவர்களை காவலர்கள் தாக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களிலும் செய்தி சேனலிலும் ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில் நேற்று முன்தினம் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வந்த நபரை காவலர்கள் தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது அந்த வீடியோவில் தந்தைக்காக மகனை […]

தென்காசி மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்”..

தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்டம் ஜீலை 15 முதல் அக்டோபர் மாதம் வரை நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்து உள்ளார். முதலமைச்சர் அறிவிப்பின் படி, தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்டம் துவக்கப்படுகிறது. இத்திட்டதின் கீழ் மொத்தம் 282 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இத்திட்டம் ஜீலை 15 முதல் […]

வீரவநல்லூர் நூலகத்தில் தமிழால் இணைவோம்! சிறப்பு நிகழ்வு..

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் நூலக வாசகர் வட்டம் சார்பில் “தமிழ் பேசுவோம் தமிழால் இணைவோம்” நிகழ்ச்சி வாசகர் வட்ட தலைவர் பீ. ஆதம் இல்யாஸ் தலைமையில் நூலக அரங்கில் வைத்து நடைபெற்றது. நிகழ்ச்சியில், வாசகர் வட்ட சாதனை பொன் விழா மலர் நூல் திறனாய்வு செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு வாசகர் வட்ட தலைவர் பீ. ஆதம் இல்யாஸ் தலைமை தாங்கினார். வாசகர் வட்ட நிர்வாகிகள் மருத்துவர் மா. முத்து ராமலிங்கம், சொ.துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாத்திலிங்கம் வரவேற்றார். […]

முதல்வருக்கு நன்றி பாராட்டு சிறப்பு மலர்..

முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் புதிய பல்கலைக் கழகம் அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு, நன்றி பாராட்டு சிறப்பு மலரினை தமிழக உயர்கல்வி அமைச்சர் கோவி. செழியனிடம் பொதிகை தமிழ்ச் சங்க நிறுவுநர் கவிஞர் பேரா வழங்கினார். தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியனை நெல்லை பொதிகைத் தமிழ்ச் சங்க நிறுவுநர் கவிஞர் பேரா, செயற்குழு உறுப்பினர் பா.இராமகிருஷ்ணன் ஆகியோர் அரசு விருந்தினர் மாளிகையில் 05.07.2025 அன்று சந்தித்தனர்.   அப்போது, பொதிகைத் தமிழ்ச் சங்கம் சார்பாக தயாரிக்கப்பட்ட […]

அரசு பள்ளி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறை..

தென்காசி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. அரவிந்த் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் காவல் துறையினரால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று மாணவ மாணவரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பேருந்து நிலையங்களுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்குதல், மேலும் விழிப்புணர்வு பேரணி நடத்துதல் போன்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கொண்டலூர் அரசு […]

சோழவந்தானில் தமிழ்நாடுவிவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பொது வேலை நிறுத்த மறியல் விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் வட்ட பிள்ளையார் கோவிலில் எதிர்வரும் ஒன்பதாம் தேதி தமிழ்நாடுவிவசாயிகள் சங்கம் தலைமையில் மற்றும் தொழிற்சங்கம், தொழிலாளர்கள் சார்பில் அகில இந்திய அளவில் நடைபெறும் பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. விவசாயிகள் சங்கம் கந்தவேலு தலைமை வகித்தார். சிஐடியூ மாவட்ட துணைச் செயலாளர் பொன்ராஜ், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் அ.வேல்பாண்டி மறியலை விளக்கி பேசினார். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் […]

சோழவந்தானில் வெறி நாய் கடித்து சிறுமி உட்பட 2பேர் படுகாயம்

சோழவந்தானில் வெறி நாய் கடித்ததில் ஆறு வயது சிறுமி உட்பட இருவர் படுகாயம் காயமடைந்த இருவருக்கும் சோழவந்தான் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு மதுரை மாவட்டம் சோழவந்தான் கள்ளர் தெரு பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக வெறி நாய் சுற்றித்திரிந்ததாக அந்த பகுதி பொதுமக்கள் கூறிவந்த நிலையில் வெறி நாயை பிடிப்பதற்கு அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் சோழவந்தான் கள்ளத்தெருவில் வசிக்கும் […]

உசிலம்பட்டியில் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் மற்றும் பாலஸ்தீன் நாடுகள் பாதிப்படைந்ததை முன்னிட்டும். இஸ்ரேல் பாலஸ்தீனம் மற்றும் ஈரான் நாடுகள் மீது தாக்குதலை கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் அகில இந்திய செயல் தலைவர் எஸ். நம்பிராஜன் தலைமையில் மாவட்ட தலைவர் கே. தவமணி செயலாளர் வி. […]

உசிலம்பட்டி தினசரி சந்தையில் எம் எல் ஏ அலுவலகம் புதிய கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தினசரி சந்தையில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் புதிய எம் எல் ஏ அலுவலகம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தினசரி சந்தை பகுதியில் பழைய சட்டமன்ற தொகுதி அலுவலகம் செயல்பட்டு வந்தது. அந்த கட்டிடம் சேதமடைந்து காணப்பட்ட நிலையில் உசிலம்பட்டி எம் எல் ஏ அய்யப்பன் புதிய கட்டிடம் கட்டித்தர தமிழ்நாடு அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார். […]

விஜய் முதல்வர் வேட்பாளராக அறிவித்தது குறித்து விஜய்-இடம் தான் கேள்வி கேட்க வேண்டும் என ஆர் பி உதயகுமார் பதில்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெ.கன்னியம்பட்டியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு கன்னியம்பட்டியில் உள்ள முணுசாமி ஒச்சாண்டம்மன் – கோட்டை கருப்பசாமி கோவிலில் வழிபாடு செய்த பின் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் வழங்கினார்., தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.உதயக்குமார்., விஜய் முதல்வர் வேட்பாளராக அறிவித்தது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும், எங்கள் குறித்து எங்களிடம் கேட்க வேண்டும் மாத்தி மாத்தி கேட்டால் எப்படி […]

அரசின் வளர்ச்சி திட்டப் பணிகள்; கலெக்டர் கமல் கிஷோர் ஆய்வு..

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை 04.07.2025 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் தென் மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்கள் அறிவித்து செயல்படுத்தி வரும் நிலையில், […]

உசிலம்பட்டியில் மறைந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வீரவணக்க நாள் பேரணி

உசிலம்பட்டியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக வீர வணக்க பேரணி நடைபெற்றது இந்தப் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வீரவணக்க பேரணிக்கு மாநில துணைத்தலைவர் ஆர் உதயகுமார் மற்றும் மாநில துணைப் பொதுச் செயலாளர் நேதாஜி தலைமையில் நடைபெற்றது . இந்த வீரவணக்க பேரணியில் தமிழக விவசாயி பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட அவைத் தலைவர் தமிழ்ச்செல்வன் முன்னிலையிலும் இந்தப் பேரணியில் விவசாய பெருமக்கள் நூற்றுக்கும் அதிகமான விவசாயிகளும் மகளிர் விவசாய அணியினர் கலந்து கொண்டனர் . […]

மாதாந்திர மின் பராமரிப்பு பணி; ஜூலை.05 மின் தடை..

திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள உபமின் நிலையங்களில் 05.07.2025 (நாளை) சனிக்கிழமை மாதந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரியம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.   திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற் பொறியாளர் G.குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஊத்துமலை, ஆலங்குளம் உப மின் நிலையங்களில் 05/07/2025 சனிக் கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற […]

நெல்லையில் “ஓரணியில் தமிழ்நாடு” பரப்புரை..

நெல்லையில் “ஓரணியில் தமிழ்நாடு” பிரச்சாரம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி தலைமையில் நடந்தது. தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க ’ஓரணியில் தமிழ்நாடு’ என்ற முன்னெடுப்பை திராவிட முன்னேற்றக் கழகம் செயல்படுத்தி வருகிறது. ஜூலை 1 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்து ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை தொடங்கி வைத்தார் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின். அதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் “ஓரணியில் தமிழ்நாடு” என்ற பிரச்சார பரப்புரை மற்றும் […]

தனிநபர் மற்றும் குழுக்களுக்கு கடனுதவி..

தென்காசி மாவட்டத்தில் பிற்படுத்தப் பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினை சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்களுக்கு சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம், செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுகடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப் பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.   இது பற்றிய செய்திக் குறிப்பில், பிற்படுத்தப் பட்டோர், மிகப் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினை சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!