மதுரை மாவட்டம் சோழவந்தானில் ஆர் எம் எஸ் காலனி அருகில் தனியார் திருமண மஹால் முன்பு சாலையின் நடுவே கட்டட வேலைக்காக கொட்டி வைத்திருந்த மணலில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர் தவறி விழுந்து சம்பவ இடத்தில் பலியான பரிதாபம் அப்பாவி இளைஞரின்மரணத்தால் அனாதையான குடும்பம் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தச்சம்பத்து கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார் வயது 29 திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கொரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார் இவர் நேற்று […]
Category: செய்திகள்
காவல்துறை வாகனங்கள் பொது ஏலம்..
தென்காசி மாவட்ட காவல் துறையில் கழிவு செய்யப்பட்ட அரசு வாகனங்கள் வரும் 14.07.2025 அன்று காலை 10 மணிக்கு குற்றாலம் ஆயுதப்படை வளாகத்தில் பொது ஏலம் விடப்படுகிறது. இந்த ஏலத்தில் 03 இரு சக்கர வாகனங்களும் 08 நான்கு சக்கர வாகனமும் ஏலம் விடப்படுகின்றன. வாகனங்களை 11.07.2025 முதல் 13.07.2025 காலை 09.00 முதல் மாலை 05.00 மணி வரை நேரில் வந்து பார்வையிடலாம், இதில் ஏலம் எடுக்க விரும்பும் நபர்கள் இருசக்கர வாகனத்திற்கு 1,000 […]
அலங்காநல்லூரில் குடிநீர் குழாய்க்காக தோன்டிய பள்ளத்தை சரிவர மூடாததால்பள்ளத்தில் இறங்கிய கார்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் பல்வேறு பகுதிகளில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக ஆங்காங்கே பள்ளங்களை தோண்டி சரிவர மூடாத நிலை ஏற்பட்டுள்ளது அலங்காநல்லூர் முக்கிய பகுதிகளான பத்திரப்பதிவு அலுவலகம் யூனியன் அலுவலகம் அரசு மருத்துவமனை பேரூராட்சி அலுவலகம் தீயணைப்பு அலுவலகம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தனியார் பள்ளி ஆகியவை உள்ள முக்கிய பகுதிகளில் குடிநீர் குழாய் பதிப்பதாக கூறி அதிகாரிகள் ஆங்காங்கே பள்ளங்களை தோண்டி போட்டுள்ளனர் இந்த நிலையில் பள்ளங்களை சரிவர மூடாததாலும் குடிநீர் குழாய்களை பதிப்பதற்கான நடவடிக்கைகளை […]
வாடிப்பட்டி அருகே நலத்திட்டம்மற்றும் அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது
தமிழ்நாடு ரெட்டி நல சங்க மாநில பொதுச் செயலாளர் மற்றும் மதுரைமாவட்ட தலைவர் ராஜா பூர்ண சந்திரன் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு வாடிப்பட்டி அருகே நலத்திட்ட உதவிகள், மற்றும் அன்னதானம் நடைபெற்றது, இந்த விழாவில் மதுரை மாவட்ட செயலாளர் மோனிகா சதீஷ் பொருளாளர் ரவிச்சந்திரன் மாநில இளைஞர் அணி செயலாளர் மணிகண்டன், மாவட்ட துணைத் தலைவர் சோமசுந்தரம், மாவட்ட துணைச் செயலாளர் மணிகண்டன், முன்னிலை வகித்தனர், நிகழ்ச்சி ஏற்பாடு வாடிப்பட்டி ரெட்டி நல சங்கம் சார்பாக […]
சோழவந்தான் பிரளயநாத சிவாலயத்தில் ஆனி மாத வளர்பிறை பிரதோஷ விழா திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு பிரளயநாத சிவ ஆலயத்தில் ஆனி மாத வளர்பிறை பிரதோஷ விழா நடைபெற்றது. நந்தி பகவானுக்கு பால் தயிர் வெண்ணெய் உள்பட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து சுவாமியும் அம்பாளும் ரிஷப வாகனத்தில் திருக்கோவிலின் உட்பிரகாரத்தில் வலம் வந்தனர் அப்போது பக்தர்கள் ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா என்று மனமுருக வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாக அதிகாரி, மற்றும் […]
அலங்காநல்லூர் அருகே பெரிய ஊர் சேரியில் அதிமுக சார்பில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அன்னதானம் வழங்கும் விழா ஆர்.பி உதயகுமார் எம்எல்ஏ மற்றும் நிர்வாகிகள் பங்கேற்பு
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றிய அதிமுக சார்பில் பெரிய ஊர் சேரியில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சிக்கு அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் எம்எல்ஏ கலந்துகொண்டு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அன்னதானம் வழங்கி சிறப்புரையாற்றினார் முன்னாள் எம்எல்ஏக்கள் எம் வி கருப்பையா மாணிக்கம் அலங்காநல்லூர் பேரூர் செயலாளர் அழகுராஜா வாடிப்பட்டி யூனியன் முன்னாள் சேர்மன் ராஜேஷ் கண்ணா […]
கிளை செயலாளர் இல்ல விழா. முன்னாள் அமைச்சர் பங்கேற்பு
சோழவந்தான் அருகே கல்லாங்காடு அதிமுக கிளைச் செயலாளர் ராமு இல்ல திருமணம் ஆர்.பி உதயகுமார் எம்எல்ஏ நிர்வாகிகள் பங்கேற்பு மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் மன்னாடிமங்கலம் கல்லாங்காடு கிளை செயலாளர் ராமு இல்ல திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் எம்எல்ஏ நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார் நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன், தலைமை தாங்கினார் மன்னாடி மங்கலம் தெற்கு கிளைச் செயலாளர் ராஜபாண்டி வரவேற்பு […]
திருவாடானை அருகே குடிநீர் குழாய் உடைப்பு: பல மாதங்களாகியும் நடவடிக்கை இல்லை!
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே பல இடங்களில் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு மாதக்கணக்கில் குடிநீர் வீணாகி வருகிறது. இது குறித்து குடிநீர் வடிகால் வாரியத்திற்கு பலமுறை தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். திருவாடானையில் இருந்து பாண்டுகுடிக்கு பாரதிநகர் பகுதியில் இருந்து குடிநீர் நீரேற்றம் செய்யப்படுகிறது. இந்தக் குடிநீர் குழாய் திருவாடானை, பண்ணவயல், எல்.கே. நகர், அஞ்சுகோட்டை, வாணியேந்தல், டி. கிளியூர் வழியாகச் செல்கிறது. இதில் எல்.கே. நகர் பகுதியில் […]
அடிப்படை வசதிகள் இல்லாத திருவாடானை சந்தை ரூ. 65 லட்சத்திற்கு ஏலம்!
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குச் சொந்தமான வாரச் சந்தை, போதிய அடிப்படை வசதிகள் இல்லாமலேயே ரூ. 65.11 லட்சத்திற்கு 2025-26 ஆம் ஆண்டிற்கான ஏலத்தில் விடப்பட்டுள்ளது. இந்தச் சந்தை மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் முக்கிய வணிக மையமாக இருந்தாலும், மின்சார வசதி, கொட்டகைக் கட்டிடம், கழிப்பறை, மற்றும் குடிநீர் வசதிகள் போன்ற அத்தியாவசிய அடிப்படை வசதிகள் இன்றி செயல்பட்டு வருகிறது. இதனால் வியாபாரிகளும் பொதுமக்களும் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக, மழைக் […]
தொண்டி அருகே தென்னந்தோப்பில் தீ விபத்து: பத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நாசம்!
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தொண்டி அருகே உள்ள படப்புவயல் கிராமத்தில் கிழக்கு கடற்கரைச் சாலை ஓரம் அமைந்துள்ள ஒரு தென்னந்தோப்பில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அபுல்ஹசம் என்பவரின் மகன் அக்பர்அலி (67) என்பவருக்குச் சொந்தமான இந்தத் தோப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், பத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் ஐந்துக்கும் மேற்பட்ட பனை மரங்களும் எரிந்து நாசமாகின. தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் […]
காளியம்மன் கோவில் ஆனித் திருவிழா பக்தர்கள் பால்குடம் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தச்சம்பத்து பாலகிருஷ்ணபுரம் கிராமத்தில் அமைந்துள்ள காளியம்மன் கோவில் ஆனித்திருவிழா கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு பால் தயிர் நெய் வெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று காலை திருவேடகம் வைகை ஆற்றில் இருந்து பால்குடம் அக்னி சட்டி அலகு குத்தி ஊர்வலமாக வந்து திருக்கோவிலை அடைந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு பால் தயிர் […]
விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ. 5 இலட்சம் வரை கடன் உதவி : தூத்துக்குடி ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்..
விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ. 5 இலட்சம் வரை கடன் உதவி : தூத்துக்குடி ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்.. தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலமாக நிலமற்ற ஏழை எளிய பெண் விவசாயத் தொழிலாளர்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு கடன் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். 2025-2026-ம் ஆண்டுக்கான கூட்டுறவு துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது, கூட்டுறவு துறை அமைச்சர் நிலமற்ற ஏழை எளிய பெண் விவசாயத் தொழிலாளர்கள் விவசாய […]
பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்து:பலி எண்ணிக்கை 3-ஆக உயர்வு..
கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது. கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது சிதம்பரம் நோக்கிச் சென்ற ரயில் மோதியது. இந்த விபத்தில், திராவிட மணி மகள் சாருமதி (16), விஜயசந்திரகுமார் மகன் விமலேஷ்(10) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், ஓட்டுநர் சங்கர் (47), தொண்டமாநத்தம் பகுதியைச் சேர்ந்த விஷ்வேஸ் (16), நிவாஸ் (13), சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்த செழியன் (15) […]
அரசு பள்ளிக்கு செல்ல முறையான சாலை வசதி அமைத்து தர கோரி 200 க்கும் அதிகமான கிராம மக்கள் பள்ளி மாணவ மாணவிகளுடன் சாலையில் தடுப்புகள் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு .
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வி.பெருமாள்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளியில் 200 க்கும் அதிகமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்., இந்த பள்ளிக்கு செல்ல முறையான சாலை வசதி இல்லை என்றும், தனிநபர்களின் பட்டா இடத்தின் வழியாக மாணவ மாணவிகள் சென்று வரும் சூழலில், மாணவ மாணவிகள் சென்று வர சாலை வசதி ஏற்படுத்தி தர தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்., இந்நிலையில் இன்று 200 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்றிணைந்து மாணவ […]
பொது மக்கள் குறை தீர்ப்பு கூட்டம்..
தென்காசி மாவட்டத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, நலத்திட்ட உதவிகள், உபகரணங்கள், நலவாரிய அடையாள அட்டை, பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றுகள் வழங்கப்பட்டது. தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 07.07.2025 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் பெற்றுக் கொண்டார். மாற்றுத் திறனாளிகள் நலத் […]
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கல்லூரி மாணவியருடன் ‘Coffee with Collector’ நிகழ்ச்சி..
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கல்லூரி மாணவியருடன் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.. மாணவியருடன் கலந்துரையாடி அவர்களின் ஆர்வம், உயர்கல்வி, வேலைவாய்ப்பு, நான் முதல்வன், புதுமைப்பெண் உள்ளிட்ட தமிழ்நாடு அரசு எடுத்து வரும் முன்னெடுப்புகள் குறித்து உரிய வழிகாட்டுதல்கள் வழங்கினார். தொழில்முனைவோர் ஆவதற்கான படிநிலைகள், நேரத்தை வீணடிக்காமல் பயன்படுத்துவது, சமூக வலைதளங்களில் மூழ்கிக் கிடப்பதை தவிர்த்தல், தினசரி செய்தித்தாள் வாசித்தல், உயர்ந்த இலக்குகளைத் தீர்மானித்தல் குறித்தும் […]
பொது மக்களுக்கு இலவச மரக்கன்றுகள்
சோழவந்தான் அருகே நகரி கிராமத்தில் நடைபெற்ற முனைவர் இல்ல விழாவில்பொதுமக்களுக்கு ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நகரி கிராமத்தில் நடைபெற்ற பழனிக்குமார் முனைவர் ராமலட்சுமி இல்ல விழாவிற்கு வருகை தந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு நிவாஸ் டிராவல்ஸ் நிரஞ்சன் பிராய்லர் நிறுவனத்தினர் சார்பாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது மா பலா கொய்யா சப்போட்டா உள்ளிட்ட மரக்கன்றுகளை நிறுவனத்தின் சார்பில் அனைவருக்கும் வழங்கினர் பொது நிகழ்ச்சிகளில் அன்பளிப்புகள் வழங்கப்படுவதை தவிர்த்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட […]
திருப்புல்லாணி மாரியம்மன் ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா.!
ராமநாதபுரம் அருகே பிரசித்தி பெற்ற திருப்புல்லாணி மாரியம்மன் ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி வடக்கு தெரு பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ புல்லாணி மாரியம்மன் ஆலயத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது கோவை ரவி சாஸ்திரி குருக்கள் தலைமையில் யாக பூஜைகள் துவங்கப்பட்டு சிறப்பு வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடு துவங்கியது அதனை தொடர்ந்து ஆன்மீக பக்தர்கள் குழுவையிட்டு மேள தாளத்துடன் கடம் […]
டி.என்.பி.எஸ்.சி மக்களை ஏமாற்றும் வகையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது! அன்புமணி ராமதாஸ் கடும் தாக்கு..
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கடந்த ஓராண்டில் மட்டும் 17 ஆயிரம் பேருக்கும் கூடுதலானோருக்கு புதிதாக அரசு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. கடந்த ஓராண்டில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே புதிய வேலைவாய்ப்புக்கான அறிவிக்கையை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள நிலையில், வரலாறு காணாத வகையில் வேலைகளை வழங்கிவிட்டதாக கூறுவது அப்பட்டமான பொய் ஆகும்.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள […]
ஜூலை 15 முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்! முதற்கட்ட பணியில் 1 லட்சம் தன்னார்வலர்கள்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டம் தொடங்கப்பட இருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 10 ஆயிரம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் நடத்தப்படும் முதல் முகாமினை, வரும் ஜூலை 15 ஆம் நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைக்க உள்ளார். இந்தத் திட்டம் ஜூலை 15 முதல் நவம்பர் மாதம் வரை அனைத்து […]
You must be logged in to post a comment.