திருவாலவாயநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இலவச நோட்புக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

சோழவந்தான் அருகே வாடிப்பட்டி ஊராட்சி திருவாலவாயநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விஜயலட்சுமி அறக்கட்டளை சார்பில் இலவச நோட்புக் எழுதுபொருள் ஸ்கூல் பேக் உள்ளிட்ட பொருட்கள் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் அழகசுந்தரம் தலைமை தாங்கினார் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சகுபர் சாதிக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நோட்புக் எழுது பொருட்களை வழங்கினார் பள்ளி ஆசிரியை ஆசிரியர் பெருமக்கள் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர் தொடர்ந்து பள்ளிக்கு இரண்டு மின்விசிறிகளும் […]

கெமிக்கல் பால்; மூவர் கைது..

தென்காசி அருகே கெமிக்கல் பால் தயாரித்து விற்பனை செய்த சம்பவத்தில் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டனர். தென்காசி மாவட்டம் மேலப்பாவூர் பகுதியை சேர்ந்த நபர் பாலில் கெமிக்கல் பவுடரை கலப்படம் செய்து விற்பனை செய்து வருவதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.   இதனையடுத்து, தென்காசி ரயில் நிலையம் அருகே ரசாயன பவுடரை தண்ணீரில் கலந்து பால் தயாரித்து அது […]

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி என் வல்லரசு பிறந்தநாள் விழா.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி வாளாகத்திலுள்ள முன்னாள் எம் எல் ஏ அ இ பார்வர்ட்பிளாக் தேசியச் செயலாளர் பி.என் வல்லரசு நினைவிடத்தில் 79 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பாக மாநில பொதுச் செயலாளர் முன்னாள் எம் எல் ஏ பி. வி. கதிரவன் தலைமையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி என் வல்லரசு நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாநிலச் செயலாளர்கள் பி. […]

உசிலம்பட்டியில் பள்ளியில் பள்ளி குழந்தைகளின் இரத்த வகை கண்டறியும் முகாம் 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 600 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இக்குழந்தைகளின் ரத்தம் எந்த வகையைச் சார்ந்தது என்பதை கண்டறியும்a பரிசோதனை முகாம் நடைபெற்றது. மாணவர்களின் இரத்த வகை இலவசமாக கண்டறியப்பட்டு அரசின் கல்வி இணையதளத்தில் பதியப்பட்டது. மேலும் ரத்தம் எந்த வகை என்று மாணவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் இளம் வயதிலேயே மாணவர்கள் தங்கள் இரத்த வகைகளை அறிந்து கொள்ள ஏதுவாகவும், […]

சோழவந்தான் ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா தேரோட்டத்திற்கு முகூர்த்த கால் நடுவிழா நடைபெற்றது

ம.துரை மாவட்டம் சோழவந்தானில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 17 நாள் நடைபெறும் திருவிழாவில் 16ஆம் நாள் மண்டகப்படியாக வரும் செவ்வாய்க்கிழமை காவல்துறை குடும்பத்தார் சார்பாக திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது. தேரோட்டம் நிகழ்ச்சிக்கு தேர் தயார் படுத்துவதற்காக முகூர்த்த கால் நடும் விழா நடைபெற்றது. தேர் நிலையில் நடைபெற்ற விழாவிற்கு காவல்துறை மற்றும் திருக்கோவில் நிர்வாகத்தினர். தேர் பராமரிப்பாளர்கள் ஆசாரியார்கள் பக்தர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். […]

அகமதாபாத் கோரமான விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி மரணம்..

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் AI171 லண்டனுக்கு நண்பகல் நேரத்தில் புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, திடீரென குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதில் பி.ஜே. மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதி சேதடைந்தது. இந்த கோரவிபத்து, நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. விமான விபத்தில் பயணம் செய்த 242 பயணிகளும் உயிரிழந்துள்ளனர். அவர்களது சடலங்கள் மீட்கப்பட்டு, உடற்கூறு ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது. மேலும், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகே உள்ள […]

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் பயங்கர விபத்து: நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி..

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. ஏர் இந்தியாவின் B 787-8 ட்ரீம்லைனர் விமானம் மதியம் 1.40 மணியளவில் லண்டனில் உள்ள கேட்விக் நகரை நோக்கிப் புறப்பட்ட நிலையில் சில நொடிகளில் விபத்திற்குள்ளானது. விபத்து நடந்த இடத்திலிருந்து கரும்புகைகள் கிளம்பிய காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. விமானத்தில் 2 விமானிகள், 10 ஊழியர்கள் உள்பட மொத்தம் 242 பேர் விமானத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

தமிழ் நாடு பிரலைக் கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவையின் அனைத்து கட்சி கூட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மதுரை மெயின் ரோட்டில் உள்ள மஹாலில் அனைத்து கட்சி கூட்டம் தமிழ் நாடு பிரலைக் கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவை சார்பாக நடைபெற்றது. தமிழ் மாநில பிரமலைக்கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவை தலைவர் ராஜா பாண்டியன் தலைமையில் பொது செயலாளர் பூபதி ராஜா முன்னிலையில் கீழ் கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கைரேகை சட்டத்தை கண்டித்து போராடிய போராளிகள் உயிர் தியாகத்தால் பிரிட்டிஷ் அரசு கள்ளர் சீரமைப்புத் துறையை உருவாக்கி இன்று வரை கள்ளர் […]

தமிழ் நாடு விவசாயி தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ் நாடு விவசாயி தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ் நாடு விவசாயி தொழிலாளர் சங்கம் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் வி. விருமாண்டி தலைமையில் விவசாயிகள் தொழிலாளர்கள் சங்கம் நிர்வாகிகள் அஜய் பாண்டி, தாலுகா செயலாளர்கள் சாத்தப்பன், நாகராஜ், பெத்தணசாமி முன்னிலையில் ஆர்ப்பாட்ட விளக்கவுரை யாக மதுரை மாவட்டம் தலைவர் ஜோதி ராமலிங்கம், மாவட்ட செயலாளர் சந்தானம் உசிலம்பட்டி தாலுகா […]

ராமநாதபுரத்தில் கடத்தல் ரேசன் அரிசி பறிமுதல் : தொடரும் சட்டவிரோத செயல்கள்!

ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை அருகே டாட்டா சுமோ காரில் கடத்தி வரப்பட்ட 2,659 கிலோ (58 மூட்டைகள்) ரேஷன் அரிசியை பறக்கும் படை தாசில்தார் தமீம் ராஜா மற்றும் ஆர்.ஐ முத்துராமலிங்கம் ஆகியோர் பறிமுதல் செய்துள்ளனர். வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்ந்து நடைபெறுவது கவலை அளிக்கிறது. இதற்கு முன்பு, ராமநாதபுரம் அருகே 2 டன் ரேஷன் அரிசி கடத்திய ஒருவர் கைது செய்யப்பட்டார். மாவட்டம் முழுவதும் […]

ஏர்வாடியில் கட்டிட தொழிலாளி வெட்டிக்கொலை: போலீசார் விசாரணை!

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா முத்தரையர் நகரில் கட்டிட தொழிலாளியான செல்வராஜ் (விழுப்புரத்தைச் சேர்ந்தவர்) வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, அவரது முதல் மனைவியின் மகன் மணிகண்டன் (வயது 22) மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செல்வராஜுக்கு முதல் மனைவி முனியம்மாள், மகன் மணிகண்டன் மற்றும் மகள் கோமதியும், இரண்டாவது மனைவி அபிராமி மற்றும் மகன் சுரேஷ், மகள் தேவி ஆகியோர் உள்ளனர். முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாக சொல்லப்படுகிறது.இதனிடையே […]

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா 7000 பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திகடன்

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர் இவ்விழாவை முன்னிட்டு நேற்று மாலை அர்ச்சகர்சண்முகவேல் மேளதாளத்துடன் வைகைஆற்றுக்கு சென்று அங்கு அக்னிகரகம் ஜோடித்து பூஜைகள் செய்தார்.அங்கிருந்து புறப்பட்டு வடக்குரதவீதி, மார்க்கெட்ரோடு வழியாக மந்தைக் களத்தில் அமைக்கப்பட்டிருந்தபூக்குழி இறங்கும் இடத்திற்கு வந்தனர் முன்னதாக ஜனவரி மாரியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட அம்மன் கோவிந்தம்மாள் தெரு வழியாக பூக்குழி இறங்கும் இடத்திற்கு வந்தது பின்னர் மந்தை களத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடை […]

குற்றாலத்தில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்பு..

தென்மேற்கு பருவமழை தீவிரமடைய உள்ளதால், குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது எனவும், கேரளா மற்றும் கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் பரவலான மழை பெய்யும் என்றும் வானிலை ஆராய்ச்சியாளர் வெதர்மேன் ராஜா தெரிவித்து உள்ளார். இது பற்றிய முழுமையான வானிலை அறிவிப்பில், கன்னியாகுமரி, கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்கள் மற்றும் அம்பாசமுத்திரம், தென்காசி, செங்கோட்டை, கடைய நல்லூர், ஆகிய 4 தாலுகாவிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், ஆந்திரா ஒரிசா ஒட்டிய வங்க கடல் […]

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா பால்குடம் அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

மதுரை மாவட்டம்சோழவந்தான் ஜெனகைமாரியம்மன்கோவில் மிகவும் பிரசித்திபெற்றது.இக்கோவிலில் கடந்த 2தேதி வைகாசிபெருந்திருவிழா கொடியேற்றம் நடந்தது.இதில் இருந்து தினசரி அம்மன்புறப்பாடு நடைபெற்றது. இதில் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான பால்குடம் அக்னிச்சட்டி எடுக்கும் திருவிழா இன்று நடந்தது.இதில் பக்தர்கள் வைகை ஆற்றுக்கு சென்று பூஜை செய்து பால்குடம் மற்றும் அக்னி சட்டி எடுத்து அங்கிருந்து கோவில் முன்பு உள்ள மூன்றுமாத கொடிக்கம்பத்தைச் சுற்றி நான்கு ரத வீதி வலம் வந்து நேர்த்திகடனை செலுத்தினார்கள்.இந்த விழா நேற்றைய இரவு முதல் பக்தர்கள் பால்குடம், […]

சிறுமி பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கிட IUML வலியுறுத்தல்..

சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என முஸ்லிம் லீக் தென் மண்டல தலைவி ஃபரீதா அப்துல் காதர் வலியுறுத்தி உள்ளார். இது பற்றிய அறிக்கையில், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நாள்தோறும் அதிகரித்து கொண்டு வருகிறது. சிறுமிகளை பாலியல் வன் கொடுமை செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ஆயுள் தண்டனை என்று தண்டனைகள் வழங்கப்பட்டு வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில், ஒன்றிய […]

தொண்டியில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற பாய்மரப் படகுப் போட்டி

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தொண்டியில் உள்ள மகாசக்திபுரம் பகுதியில், அருள்மிகு கடல் சூழ்ந்த மாரியம்மன் திருக்கோவில் வைகாசி விசாகத் திருவிழா மற்றும் கங்காதேவி பொங்கல் விழாவை முன்னிட்டு பாய்மரப் படகுப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டி 16 வருடங்களுக்குப் பிறகு இந்தப் பகுதியில் நடப்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் நடத்தப்பட்டது. இப்போட்டியில் மொத்தம் 25 படகுகள் பங்கேற்றன. மதியம் 2 மணிக்குத் தொடங்கிய போட்டி மாலை வரை நீடித்தது. போட்டியின் முடிவில், முதல் நான்கு இடங்களைப் பிடித்தவர்களுக்கு […]

திருவாடானை பெரிய சிவன் கோயிலில் சப்தாவர்ணம் விழா:

ராமநாதபுரம் மாவட்டம்: திருவாடானையில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு சினேகவல்லி தாயார் சமேத ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயத்தின் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தொன்மையான விழா, இந்த ஆண்டு சிறப்பாக நடைபெற்றது. 10 நாள் திருவிழா மற்றும் தேரோட்டம்: கடந்த மே 31 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கிய 10 நாள் திருவிழா, தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வந்தது. திருவிழாவின் ஒன்பதாம் நாளான அன்று, இரண்டு தேர்கள் ஓடும் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான […]

பயிர் காப்பீடு இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம்: விவசாயிகள் குற்றச்சாட்டு.!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா புல்லந்தை கிராமத்தில் 200க்கும் மேற்பட்டோர் பூர்வீக விவசாய குடிகளாக இருந்து வருகிறார்கள் . கிராமத்தை சுற்றிலும் சுமார் 300 ஏக்கர் நெல் விவசாயம் செய்ததில் பருவமழை தவறி பெய்த காரணத்தினால் கடந்த 2023 24 மற்றும் 202425 25 ஆம் ஆண்டு நெல் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது இந்நிலையில் இவர்கள் பயிர் காப்பீடு செய்ததால் அதற்கான காப்பீட்டுத் தொகையாக ஏக்கருக்கு 1500 ரூபாய் வழங்கப்பட்டது. இது அப்பகுதி விவசாயிகள் பெரும் அதிர்ச்சியை […]

கொலை வழக்கு குற்றவாளிகள் மூன்று பேருக்கு ஆயுள் சிறை..

வாசுதேவ நல்லூரில் கணவனை கொலை செய்த வழக்கில் மனைவி உட்பட 3 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி முதன்மை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாசுதேவநல்லூர் பசும்பொன் தெருவை சேர்ந்த கருப்பசாமி என்பவரை கடந்த 2013 ஆம் ஆண்டு கொலை செய்த வழக்கில் அவரின் மனைவியான மகேஸ்வரி, மற்றும் பசும்பொன் தெருவை சேர்ந்த பொன்னையா என்பவர் மகன் மாரியப்பன் @ மாரிசாமி (70), இல்லத்துப் பிள்ளைமார் […]

கால்நடைகள் சிறப்பு சுகாதார விழிப்புணர்வு முகாம்..

தென்காசி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் வேட்டைக்காரன் குளம் கிராமத்தில் நடந்தது. தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேட்டைக்காரன் குளம் கிராமத்தில் 09.06.2025 அன்று கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனி நாடார் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தொடங்கி வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது, […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!