கடையம் யூனியனுக்கு உட்பட்ட பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமை தொகை பெற தகுதி இருந்தும் வராமல் உள்ள 43 மகளிருக்கு உரிமை தொகை வழங்கக் கோரி சமூக நல்லிணக்க கூட்டமைப்பின் சார்பில் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மொத்தமாக மனு அளிக்கப்பட்டது. கடையம் அருகில் உள்ள ரவணசமுத்திரம், முதலியார்பட்டி, பொட்டல்புதூர், ஆழ்வார்குறிச்சி, வீராசமுத்திரம், மாலிக் நகர், சம்பன்குளம், மந்தியூர், சிவசைலம், கடையம், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதி இருந்தும் […]
Category: செய்திகள்
மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம்..
மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம்.. மதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் விழாக் குழுவினர் உடனான ஆலோசனைக் கூட்டம், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி , தலைமையில் நடைபெற்றது. மதுரை மாவட்டம், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தலைமையில், மதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ள உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம், […]
இராமேஸ்வரம் கடலில் இரட்டை வலை மீன்பிடி: 24 விசைப்படகுகள் மீது நடவடிக்கை..,
இராமநாதபுரம், ஜன. 9- ராமேஸ்வரம் மீன்பிடி தங்குதளத்தில் இருந்து 491 விசைப்படகுகள் நேற்று காலை தொழிலுக்குச் சென்றன. இப்படகுகள் இன்று அதிகாலை முதல் கரை திரும்பின. அப்படகுகளில், ராமேஸ்வரம் உதவி இயக்குனர் அப்துல் காதர் ஜெயிலானி உத்தரவுப்படி மீன்வள ஆய்வாளர் ஆர்த்தீஸ்வரன், கடலோர பாதுகாப்பு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் குமரவேல், கடல் வள மேற்பார்வையாளர் குத்தாலிங்கம், தலைமைக் காவல் கருணாமூர்த்தி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்ட படகுகள் […]
மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நலச்சட்டம் செயல்பாடுகள் பயிலரங்கம்..
இராமநாதபுரம், ஜன.9- இராமநாதபுரத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களுக்கான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நலச்சட்டம் 2007 (ம) விதிகள் 2009 குறித்த செயல்பாடுகள் தொடர்பான ஒரு நாள் பயிலரங்கம் நிகழ்ச்சி இன்று (09.01.2024) நடைபெற்றது. பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கெளர் துவக்கி வைத்தார். அவர் பேசுகையில், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களுக்கான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நல சட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதன் நோக்கம் மூத்த குடிமக்களை நன்றாக […]
இறால் ஏற்றுமதி நிறுவன தொழிலாளர்களுக்கு தொற்றா நோய் பரிசோதனை முகாம்..
இராமநாதபுரம், ஜன.9- பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறையின் கீழ் மக்களை தேடி மருத்துவம் திட்டம் சார்பில் தொழில் நிறுவன ஊழியர்களுக்கு தொற்றாநோய் பரிசோதனை முகாமை சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் காணொலி காட்சி மூலம் இன்று துவங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் இறால் ஏற்றுமதி நிறுவன தொழிலாளர்களுக்கு தொற்றாநோய் இலவச பரிசோதனை முகாம் இன்று நடந்தது. மண்டபம் பேரூராட்சி தலைவர் டி. ராஜா தலைமை […]
இந்தியாவிலேயே வீர விளையாட்டுக்கு என, தனி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் தான்: அமைச்சர்கள் ஏ.வ. வேலு, பி. மூர்த்தி ஆகியோர் பெருமிதம்..
இந்தியாவிலேயே வீர விளையாட்டுக்கு என, தனி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் தான்: அமைச்சர்கள் ஏ.வ. வேலு, பி. மூர்த்தி ஆகியோர் பெருமிதம்.. மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை கிராமத்தில் 66 ஏக்கர் பரப்பளவில் 44 கோடி மதிப்பில் கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு கலையரங்க கட்டுமான பணி தொடங்கப்பட்டது கடந்த 10 மாத காலத்திற்குள் இந்த கட்டுமான பணிகள் முழுவதும் முடிக்கப்பட்டு தற்போது திறப்பு விழா காணப்பட உள்ளது. இந்த நிலையில், ஜல்லிக்கட்டு கலையரங்க […]
அர்ஜூனா விருதுகள் பெற்ற ஆறு தமிழர்கள்! விருதுகளை வழங்கினார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு..
2023-ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இன்று வீரர்களுக்கு வழங்கினார். விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் போட்டியாளா்கள், பயிற்சியாளா்கள், பங்களிப்பாளா்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் விருதுகள் அறிவித்து வருகிறது. 2023-ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரர்கள், பயிற்சியாளர்களுக்கான விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தில்லி குடியரசுத் தலைவா் மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் நிகழ்வில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வீரர்களுக்கு விருதுகளை வழங்கி கெளரவித்தார். விளையாட்டுத் […]
பள்ளி குழந்தைகள் மீது அக்கறை இல்லாத திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம்! கொந்தளித்த இந்திய மாணவர் சங்கம்..!
பள்ளி குழந்தைகள் மீது அக்கறை இல்லாத திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம்! கொந்தளித்த இந்திய மாணவர் சங்கம்..
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை 6 – 10 மணி வரை 100.80 மிமீ மழை..
இராமநாதபுரம், ஜன.9- நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை இன்று விடுக்கப்பட்டிருந்தது. இதன் எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதை தொடர்ந்து பெய்யத் துவங்கிய மழை படிப்படியாக வேகமெடுத்து கனமழையாக தீவிரமடைந்தது. ராமநாதபுரம் நகரில் ஒரு சில இடங்கள், கமுதி, கடலாடி, கீழக்கரை, பரமக்குடி, ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், ரெகுநாதபுரம், திருப்புல்லாணி, வாலாந்தரவை உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டித்தீர்த்தது. இன்று காலை […]
நமது நாட்டிற்கு பெருமையை தேடித்தந்த இயற்பியல் பேராசிரியர் மருத்துவர். செந்தில்குமார்..
நமது நாட்டிற்கு பெருமையை தேடித்தந்த இயற்பியல் பேராசிரியர் மருத்துவர். செந்தில்குமார்.. மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் உதவி இயற்பியல் பேராசிரியராக பணிபுரியும் மருத்துவர்.செந்தில்குமார் கதிரியக்க பாதுகாப்பு கவச உடை கண்டுபிடிப்பை பாராட்டி இந்திய அரசு காப்புரிமை வழங்கி சிறப்பித்துள்ளது இதை கேள்விப்பட்ட மதுரை கலாம் சமூக நல அறக்கட்டளை நிறுவனர் சேவா ரத்னா. Dr. ஆ. மாயகிருஷ்ணன் மதுரை ராஜாஜி மருத்துவமனை முதல்வர் .Dr இரத்தினவேல் தலைமையில் மருத்துவர் செந்தில்குமார் அவர்களுக்கு பாராட்டி சான்றிதழ் மற்றும் பதக்கம் […]
இராமநாதபுரத்தில் அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயக்கம்..
இராமநாதபுரம், ஜன.9- ஊதிய உயர்வு, ஓய்வூதியருக்கு அகவிலைப்படி உயர்வு உட்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 2023 டிச.19ல் சிஐடியு, ஏஐடியுசி உள்பட 16 தொழிற்சங்கங்கள், டிச.20 ல் அண்ணா தொழிற்சங்க பேரவை வேலைநிறுத்த நோட்டீஸ் விநியோகித்தன. இதைதொடர்ந்து 3 கட்ட சமரக பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து தொழிற்சங்கங்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனை தொடர்ந்து மக்களின் நலன் கருதி ராமநாதபுரம் புறநகர், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், முதுகுளத்தூர் ஆகிய 5 பணி […]
சிவகாசியில், அனுமன் சிலை வழிபாடு,14ம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா கொண்டாட்டம்…
சிவகாசியில், அனுமன் சிலை வழிபாடு, 14ம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா கொண்டாட்டம்… விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், விருதுநகர் மாவட்ட விசுவ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பின் சார்பில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் நடைபெறும் 14ம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, சிவகாசி சிவன் கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள அலங்கார பந்தலில் ஆஞ்சநேயர் சிலை வைக்கப்பட்டு பூஜைகள் மற்றும் பஜனைகள் நடைபெற்று வருகின்றன. […]
தொடர்ந்து மழையின் காரணமாக நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (09-01-2024) ஓர் பார்வை..
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (09-01-2024) பாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143 அடி நீர் இருப்பு : 141.95 அடி நீர் வரத்து : 1509.028 கன அடி வெளியேற்றம் : 1666.687 கன அடி சேர்வலாறு : உச்சநீர்மட்டம் : 156 அடி நீர் இருப்பு : 150.36 அடி நீர்வரத்து : NIL வெளியேற்றம் : NIL மணிமுத்தாறு : உச்சநீர்மட்டம்: 118 நீர் இருப்பு : 115.01 அடி நீர் வரத்து […]
சோழவந்தான் போக்குவரத்து பணிமனையில் இருந்து சுமார் 60 சதவீத பேருந்துகள் இயக்கம்..!
சோழவந்தான் போக்குவரத்து பணிமனையில் இருந்து சுமார் 60 சதவீத பேருந்துகள் இயக்கம்..! தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தை இன்று தொடங்கியுள்ள நிலையில் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குறைந்த அளவு பேருந்துகள் இயக்குவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் இந்த நிலையில் சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில் மொத்தமுள்ள 53 பேருந்துகளில் 38 பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் இல்லை […]
மதுரையில் வழக்கம்போல இயங்கும் அரசு பேரருந்துகள்..! அரசு போக்குவரத்து கழகம் சார்பாக அறிவிப்பு..
மதுரையில் வழக்கம்போல இயங்கும் அரசு பேரருந்துகள்..! அரசு போக்குவரத்து கழகம் சார்பாக அறிவிப்பு.. மதுரை மாவட்டத்தில் 16 அரசு போக்குவரத்து கழக பணிமனைகள் உள்ளன. 16 பணிமனைகளில் நகர் மற்றும் புறநகர் பேருந்துகள் என 900 பேருந்துகள் இயக்கப்படுகிறது மதுரை மாவட்டத்தில் 5,200 ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள் மதுரை மண்டலம் மதுரை பைபாஸ் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து தலைமையகத்தில் உள்ள போக்குவரத்து பனிமலையில் இருந்து 100க்கும் மேற்ப்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன […]
சேப்பங்கிழங்கில்,இவ்ளோ இருக்கா.?ரத்த சோகை முதல் நீரிழிவு வரை போக்கும் சேப்பங்கிழங்கு..
சேப்பங்கிழங்கில், இவ்ளோ இருக்கா.? ரத்த சோகை முதல் நீரிழிவு வரை போக்கும் சேப்பங்கிழங்கு.. சேப்பங்கிழங்கை சாப்பிட்டு வந்தால், சாகும்வரை கண்களுக்கு எந்தவிதமான கோளாறுகளும் நெருங்காதாம்.. அந்தவகையில், கிழங்கு மட்டுமல்ல, சேப்பங்கிழங்கின் இலைகளும் பெருத்த நன்மைகளை தரக்கூடியவை. சேப்பங்கிழங்கை வைத்து அமெரிக்காவில் ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அந்த ஆய்வில், புற்றுநோய்க்கு எதிராக சேப்பங்கிழங்கு செயல்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. முக்கியமாக, சேப்பங்கிழங்கில் உள்ள கிரிப்டோக்சாந்தின், நுரையீரல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், வாய் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை குறைக்கிறதாம். அதேபோல, சேப்பங்கிழங்கை சாப்பிட்டு […]
தென்காசி அம்பாசமுத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோர பூங்கா அமைக்கும் பணி..
தென்காசி அம்பாசமுத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோர பூங்கா அமைக்கும் பணி. தென்காசி மாவட்ட இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தென்காசி அம்பாசமுத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோர பூங்கா அமைக்கும் பணிகள் நடந்தது. சாலையில் பயணிப்பவர்கள் பூங்காவில் அமர்ந்து உணவருந்துதல், இளைப்பாறுதல், இயற்கை சூழல் உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு பொதுமக்கள் பயன் பெறும் வகையில் சாலையோர பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பறவைகள் அதிகமாக வந்து தங்கி இந்த மரங்களில் உள்ள பழங்களை உட்கொள்ள ஏதுவாக நாவல் மரம், பட்டர் […]
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -1 கப்ளிசேட் உமையாக்களின் பேரரசு-4 (கி.பி 661-750) மத்திய தரைக்கடலின் அந்த கடல்பகுதி திடீரென பரபரப்பாகியது. தங்களது கப்பலை ரோமக் கப்பல் வரிசையை நோக்கி செலுத்த உத்தரவிட்டார் தளபதி உக்பத் இப்னு நாபீ அவர்கள். நெருப்பு அம்புகள் பறந்து வந்ததை லட்சியம் செய்யாத முஸ்லீம்களின் போர் கப்பல்கள் ரோமப்பேரரசின் கப்பல் அணிவகுப்புக்குள் நுழைந்தன. முஸ்லீம்களின் நூறுகப்பல்கள் ரோமர்களின் ஐம்பது கப்பல்களை சுற்றி வளைத்தன. அப்போதுதான் ரோமர்களின் கப்பல்படை தலைவருக்கு தனது தவறு புரிந்தது. […]
UPI மூலம் ஒரே நேரத்தில் இனி ரூ.5 லட்சம் வரை அனுப்ப அனுமதி..!!
UPI மூலம் ஒரே நேரத்தில் இனி ரூ.5 லட்சம் வரை அனுப்ப அனுமதி..!! ஸ்மார்ட் போன்கள் மூலம் உடனடி பண பரிமாற்றத்தை செய்ய உதவும் யு.பி.ஐ. பரிவர்த்தனையில் ரூ.5 லட்சம் வரை அனுப்புவதற்கான புதிய விதிகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன. உடனடி பணப்பரிமாற்றம் செய்வதில் யு.பி.ஐ. முறை முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாக முதற்கட்டமாக கல்வி நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகள் கூகுள் பே, போன் பே மற்றும் பே.டி.எம். ஆகியவற்றில் ஒரே […]
கீழக்கரையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் ! திரளாக கலந்து கொண்ட பொதுமக்கள் !!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தனியார் பள்ளி வளாகத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் கலந்து கொண்டு பேசுகையில் கீழக்கரையில் அரசு மருத்துவமனை 10 கோடியில் புதிய கட்டிடம் , புதிய மீன் மார்க்கெட் அறிவு சாரா மையம் போன்ற திட்டங்கள் அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடைபெறும் என்பதை தெரிவித்தார். முகாமில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, எரிசக்தித் துறை / தமிழ்நாடு மின் உற்பத்தி […]
You must be logged in to post a comment.