மதுரை கீழக்குயில் குடியில் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது தமிழர் பாரம்பரியத்தை போற்றும் விதமாக கோலப்போட்டிகள் ஜல்லிக்கட்டு மாடு மற்றும் பொங்கல் விழா நடைபெற்றது.. மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள கீழக்குயில் குடியில் புகழ்பெற்ற சமணர் படுகை உள்ளது இங்கு சுற்றுலாத் துறையின் சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது பொங்கல் விழாவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் கீழக்குயில் குடி கிராம மக்கள் கலந்து கொண்டனர் தமிழக கலாச்சார மரபினை போற்றும் வகையில் […]
Category: செய்திகள்
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா..
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா.. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்தில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடந்தது.இதற்கு திண்டுக்கல் எம்.பி வேலுச்சாமி தலைமை தாங்கி பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ ஆண்டிஅம்பலம், திமுக மேற்கு மாவட்ட பொருளாளர் விஜயன்,பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர் பாட்சா, திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் பச்சரிசி, சர்க்கரை, […]
சொத்து குவிப்பு வழக்கு:பொன்முடி சரணடைவதிலிருந்து விலக்கு அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவு..
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்தும், நீதிமன்றத்தில் சரண் அடைவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொன்முடி வழக்கு தாக்கல் செய்து இருந்தார். இந்நிலையில் பொன்முடி தாக்கல் செய்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சொத்துகுவிப்பு வழக்கில் சரணடைவதில் இருந்து […]
மேல்பெண்ணாத்தூர் அரசு பள்ளியில் பொங்கல் திருவிழா..
தி.மலை அடுத்த மேல்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பொங்கல் திருவிழா கொண்டாட்டம் விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் இரா ஜெயந்தி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பிரகாஷ் பள்ளி மேலாண்மை குழு தலைவர் அலமேலு முன்னிலை வகித்தனர் இதில் பாரத சாரணர் இயக்கம் இளம் செஞ்சிலுவை சங்கம் தேசிய பசுமை படை அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளி அனைத்து மாணவ மாணவிகளும் கலந்து கொண்டு சிறப்பாக வண்ண கோலம்மிட்டு செங்கரும்பு மஞ்சள் வைத்து […]
சி.எஸ்.ஐ பள்ளியில் கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் தமிழர் திருநாள் சமத்துவ பொங்கல் விழா..
கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் தமிழர் திருநாள் சமத்துவ பொங்கல் விழா சிஎஸ்ஐ நடுநிலைப் பள்ளியில் ரோட்டரி சங்கம் தலைவர் கபீர் தலைமையில், பள்ளி தலைமை ஆசிரியர் திரு.பெஞ்சமின் வசீந்திரன் முன்னிலையில் நடைபெற்றது.சங்க செயலாளர் எபன் வரவேற்றார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கீழக்கரை சிஎஸ்ஐ குருசேகர தலைவர் அருட்திரு.டேனியல் சுப்பிரமணியம் அவர்கள் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் பற்றி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் டாக்டர் ராசிக்தீன், டாக்டர் சுந்தரம், உறுப்பினர்கள் மரியதாஸ்,முப்தா , பள்ளி […]
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அரோகரா கோஷம் முழங்க தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அரோகரா கோஷம் முழங்க தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.. அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தெப்பத் திருவிழா 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். தெப்பத் திருவிழாவானது இன்று முதல் 21.01.2024 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இன்று காலை 9.30 மணிக்கு உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜையும், சர்வ அலங்காரமும் நடைபெற்றது. தொடர்ந்து., மேளதாளங்கள் முழங்க உற்சவர் […]
கோயம்பேடா? கிளாம்பாக்கமா? – அய்யோ தலை சுத்துதே:எங்கு பஸ் ஏறுவது? குழப்பத்தில் பயணிகள்..
கோயம்பேடா? கிளாம்பாக்கமா? – அய்யோ தலை சுத்துதே:எங்கு பஸ் ஏறுவது? குழப்பத்தில் பயணிகள்.. விரைவு போக்குவரத்து கழகபேருந்துகள் இயக்கம் தொடர்பாக மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் கோயம்பேடு, தாம்பரம், பெருங்களத்தூர் ஆகியபகுதிகளில் இருந்து பயணிக்கும் வகையில் முன்பதிவு செய்தவர்கள் கிளாம்பாக்கம் சென்று பயணிக்கவேண்டும். கோயம்பேட்டில் பயணிக்க முன்பதிவு செய்த நேரத்தில், கிளாம்பாக்கத்தில் இருந்து இந்த பேருந்துகள் புறப்படும். முன்பதிவு செய்த பயணிகளுக்கான விரைவு பேருந்துகள் மட்டுமே கிளாம்பாக்கத்தில் […]
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வாடிவாசல் உள்பகுதியில் சுவர் எழுப்பியதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு அமைச்சர் முன்னிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வாடிவாசல் உள்பகுதியில் சுவர் எழுப்பியதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு அமைச்சர் முன்னிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.. உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வருகின்ற 17ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது குறிப்பாக அலங்காநல்லூர் பாலமேடு ஜல்லிக்கட்டை மடைமாற்றும் முயற்சியாக அருகில் உள்ள கீழக்கரை பகுதியில் புதிய ஜல்லிக்கட்டு மைதானம் ஏற்படுத்தப்பட்டு ஜல்லிக்கட்டு அங்கு நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக அடுத்த ஆண்டு கீழக்கரையில் […]
செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூற முடியாமல் கையெடுத்து கும்பிட்டு நழுவிச் சென்ற வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி..
செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூற முடியாமல் கையெடுத்து கும்பிட்டு நழுவிச் சென்ற வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி.. வருகின்ற 15ஆம் தேதி உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பொங்கல் திருநாளன்று நடைபெற உள்ள நிலையில் இதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின் வாடி வாசலை ஆய்வு செய்த அமைச்சர் வாலிவாசல் அகலமாக உள்ளது என்று அதிகாரியிடம் கேள்வி கேட்டபோது அருகே […]
மதுரை மத்திய சிறையில் சிறைவாசிகளுக்கு திறன் மேம்பாட்டு தொழிற்பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா..
மதுரை மத்திய சிறையில் சிறைவாசிகளுக்கு திறன் மேம்பாட்டு தொழிற்பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா.. மதுரை மத்திய சிறை மூலமாக சிறைவாசிகளுக்கு விடுதலைக்கு பின் அவர்கள் வாழ்வாதாரத்திற்காக சான்றிதழ் உடன் கூடிய திறன் மேம்பாட்டு தொழில் பயிற்சி வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது அதன் அடிப்படையில், மதுரை மத்திய சிறையில் *JK பென்னர்* நிறுவனம் மற்றும் *பியர்ஸ் ஹியூமன் சைல்டு சோசியல் வெல்ஃபேர் ட்ரஸ்ட்* இணைந்து சிறைவாசிகளுக்கு பல்வேறு வகையான திறன் மேம்பாட்டு தொழில் பயிற்சிகள் வழங்குவதற்கு முன்வந்து ஏற்பாடுகள் […]
தேசிய இளைஞர் தினம்!உலகப்புகழ் பெற்ற பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ள, பகுத்தறிவுப்பெற்ற சிந்தனைவாதி சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம் இன்று (ஜனவரி 12, 1863).
தேசிய இளைஞர் தினம், உலகப்புகழ் பெற்ற பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ள, பகுத்தறிவுப்பெற்ற சிந்தனைவாதி சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம் இன்று (ஜனவரி 12, 1863). சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12ல் தேசிய இளையவர்கள் நாளாக கடைப்பிடிக்க இந்திய அரசு 1984ல் முடிவுசெய்து அடுத்து வந்த ஆண்டான 1985 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12ஐ தேசிய இளைஞர்களின் நாளாக (National Youth Day) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 2013ம் ஆண்டு ஜனவரி 12ல் […]
மதுரையில் போக்குவரத்து விதிகளை தானியங்கி முறையில் அபராதம்!மதுரை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் எச்சரிக்கை..
மதுரையில் போக்குவரத்து விதிகளை தானியங்கி முறையில் அபராதம்!மதுரை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் எச்சரிக்கை.. விபத்து மற்றும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போக்குவரத்து சிக்னல்களில் கேமராக்கள் மூலம் கண்காணித்து, தானியங்கி முறையில் அபராதம் விதிக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துணை ஆணையர் குமார் தெரிவித்துள்ளார். மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் சார்பில், ‘பொது நலனில் போக்குவரத்துத் துறை’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. ரோட்டரி சங்கத் தலைவர் நெல்லை பாலு வரவேற்று பேசினார். மதுரை மாநகரப் போக்குவரத்துத் துணை ஆணையர் குமார் […]
உசிலம்பட்டியில் பள்ளிகளில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தமிழகமெங்கும் தைத்திருநாளையொட்டி பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டிப் பகுதியில் உள்ள பள்ளி கல்லூரிகளில் பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அரசு உதவி பெறும் பள்ளியான நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் மதன்பிரபு தலைமையில் ஆசிரியைகள் பள்ளி வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.தலைமை ஆசிரியர் மதன் பிரபு தைத்திருநாள் கொண்டாடுவது குறித்து மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். உசிலை மோகன்
உசிலம்பட்டியில் கல்லூரிகளில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தமிழகமெங்கும் தைத்திருநாளையொட்டி பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டிப் பகுகுதியில் உள்ள பள்ளி கல்லூரிகளில் பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ஜோதிராஜன் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.இவ்விழாவில் கல்லூரி மாணவ மாணவிகள் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர்.இவ்விழாவில் கல்லூரி பேராசியர்கள் ஆசிரியைகள் மாணவ மாணவிகள் பலர் பங்கேற்றனர். உசிலை மோகன்
“பொங்கல் விழா” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
“பொங்கல் விழா” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வசன கர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி, மனோகரன், மீசை தங்கராஜ், அழகப்பன், சண்முகம், செந்தில் ராஜன், கோடீஸ்வரன், வேல்முருகன், எழுத்தாளர் விவேக் ராஜி ஆகியோர் முன்னிலை வைத்தார்கள். சிறப்பு விருந்தினர்களாக ரஜினி மன்ற தலைவர் பால தம்புராஜ், அகஸ்தியர் ஹெர்பல் […]
பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை, வெறும் விளம்பரத்திற்கான அறிவிப்பா..?, ஏமாற்று நாடகமா..?
ஆவினுக்கான பால் கொள்முதல் ஊக்கத்தொகை அறிவிப்பின் அரசாணை வெளியிடாதது ஏன்..? அறிவிப்பு வெளியிட்டு ஒருமாத காலமாகும் சூழலில் பால் உற்பத்தியாளர்களுக்கு இதுவரை ஊக்கத்தொகை வழங்காதது ஏன்..?” பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை, வெறும் விளம்பரத்திற்கான அறிவிப்பா..?, ஏமாற்று நாடகமா..? ஆவினுக்கு பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்களுக்கு கடந்தாண்டு (2023) டிசம்பர் 18ம் தேதி முதல் லிட்டருக்கு 3.00ரூபாய் ஊக்கத்தொகை வழங்குவதாக தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்ட நிலையில், பசும்பால் ஒரு லிட்டர் 35.00ரூபாயிலிருந்து 38.00ரூபாயாகவும், எருமைப்பால் ஒரு லிட்டர் 44.00ரூபாயிலிருந்து […]
திருச்சியில் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு : 20 ஆண்டுகள் சிறை என்ற தீர்ப்பை கேட்டதும், நீதிமன்ற வளாகத்திலேயே விபரீத முடிவெடுத்த 2 குற்றவாளிகள்..
திருச்சியில் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு : 20 ஆண்டுகள் சிறை என்ற தீர்ப்பை கேட்டதும், நீதிமன்ற வளாகத்திலேயே விபரீத முடிவெடுத்த 2 குற்றவாளிகள்.. 20 ஆண்டு சிறை தண்டனை என்ற தீர்ப்பை கேட்டதும் சம்பந்தப்பட்ட இரு குற்றவாளிகளும் திருச்சி நீதிமன்றத்தின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்ததனர். இதையடுத்து படுகாயமடைந்த அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே கடந்த 2020 ஆம் ஆண்டு 14 […]
கீழக்கரை ஏர்வாடியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஏர்வாடி போன்ற ஊர்களில் இராமநாதபுரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் மது மற்றும் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்கள் கண்டு களிக்கும் வகையில் பொது இடங்களில் தமிழ்நாட்டின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு செய்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர். இதில் ராமநாதபுரம் உதவி ஆணையாளர் (கலால்) சிவசுப்புரமணியன், ராமநாதபுரம் கோட்டா ஆய அலுவலர் (கலால்) முருகேசன் , கீழக்கரை தனி வட்டாட்சியர் (ச.பா.தி) சேகு ஜலாலுதீன் […]
தென்காசி மாவட்ட மைய நூலகம் மற்றும் அரசு அலுவலர் ஒன்றியம் இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் விழா..
தென்காசி மாவட்ட மைய நூலகம் மற்றும் தென்காசி மாவட்ட அரசு அலுவலர் ஒன்றியம் இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் விழா தென்காசி மாவட்ட மைய நூலக வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட அரசு அலுவலர் ஒன்றிய தலைவர் சுப்பிரமணியன் தலைமையிலும், இந்தியன் வங்கி மேலாளர் வினோத்குமார் முன்னிலையிலும் விழா நடந்தது. விழாவில் அலுவலக கண்காணிப்பாளர் திருமலை குமாரசாமி, வட்டார கல்வி அலுவலர் இளமுருகன், மாவட்ட துணைச் செயலாளர் வெற்றிவேலன், உதவி மேலாளர் ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் முகம்மது […]
ராமேஸ்வரம் கடலில் இரட்டை வலை மீன்பிடி: 47 விசைப்படகுகள் மீது நடவடிக்கை…
ராமநாதபுரம், ஜன.12- ராமேஸ்வரம் மீன்பிடி தங்குதளத்தில் இருந்து 477 விசைப்படகுகள் நேற்று முன் தினம் காலை தொழிலுக்குச் சென்றன. இப்படகுகள் நேற்று அதிகாலை முதல் கரை திரும்பின. அப்படகுகளில், ராமேஸ்வரம் உதவி இயக்குனர் அப்துல் காதர் ஜெயிலானி அறிவுறுத்தல் படி மீன்வள ஆய்வாளர் ஆர்த்தீஸ்வரன், கடலோர பாதுகாப்பு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் குமரவேல், கடல் வள மேற்பார்வையாளர் குத்தாலிங்கம் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்ட படகுகள் தொடர்பான […]
You must be logged in to post a comment.