பழநி தைப்பூசத் திருவிழாவின் போது முருகனை திருமணம் செய்த வள்ளிக்கு தாய் வீட்டு சீதனம் கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தைப்பூசத் திருவிழாவின் போது முருகனை திருமணம் செய்த வள்ளிக்கு தாய் வீட்டு சீதனம் கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனியில் கடந்த 28 ம் தேதி தைப்பூசத் திருவிழா நடைபெற்று நிறைவடைந்தது. தைப்பூசத் திருவிழாவின் போது அருள்மிகு முத்துக்குமாரசாமி-வள்ளி,தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்நிலையில் குறவர் இனத்தை சேர்ந்த வள்ளிக்கும்- முருகனுக்கும் திருமணம் நடைபெற்றதால் வள்ளியின் பிறந்தவீடான குறவர் இனமக்களின் சார்பில் தாய் வீட்டு சீதனம் வழங்கப்பட்டது.இதன்படி தமிழகம் முழுவதும் உள்ள குறவர் […]

வேலியே பயிரை மேய்ந்த கதை; மோட்டார் சைக்கிளில் வந்து பெண்களிடம் நகை பறித்த போலீஸ் கைது!-கோவையில் பரபரப்பு..

வேலியே பயிரை மேய்ந்த கதை; மோட்டார் சைக்கிளில் வந்து பெண்களிடம் நகை பறிக்கும் போலீஸ்! கோவையில் பரபரப்பு.. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருசக்கர வாகனத்தில் சென்று செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட சபரிகிரி என்ற காவலர் கைது, கோவை செட்டிபாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றும் சபரிகிரி, பொள்ளாச்சி சென்று வழிப்பறி செய்தநிலையில் இன்று கைது செய்யப்பட்டார்.

பழனி – புது தாராபுரம் சாலையில் ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்கப்படுமா? கொங்கு மக்கள் முன்னணி, வலியுறுத்தல்..

பழனி – புது தாராபுரம் சாலையில் ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்கப்படுமா? கொங்கு மக்கள் முன்னணி, வலியுறுத்தல்.. “பழனி -புது தாராபுரம் சாலையில் ரயில்வே கேட் அமைந்துள்ளது இந்த சாலையின் வழியாகத்தான் பழனியில் இருந்து தாராபுரம், ஈரோடு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்களில் பொதுமக்கள் நாள்தோறும் கடந்து செல்ல வேண்டிய சூழல் இருக்கிறது. பழனி நகருக்குள் நுழையும் முக்கிய பகுதியில் இந்த கேட் அமைந்துள்ளதால் நாள்தோறும் ரயில் வருகிற நேரங்களில் இந்த கேட் மூடப்படுகிறது அப்போது […]

இடிந்து விழுந்த கழிவறை, பழநியில் சமூக ஆர்வலர்கள் பலர் எழுப்பும் கேள்விகள்.? விடை சொல்லுமா நிர்வாகம்.?

பழனி பேருந்து நிலையம் அருகே பழனி நகராட்சிக்கு சொந்தமான தங்கும் விடுதி உள்ளது. பொதுமக்கள் தங்குவதற்கு வசதியாக வாடகைக்கு விடப்படும் இந்த விடுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை நகராட்சி தங்கும் விடுதியில் உள்ள ஒரு அறையின் கழிவறை பகுதி இடிந்து விழுந்தது. இருப்பினும் யாருக்கும் எவ்வித பாதிப்பும், சேதமும் ஏற்படவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் நகராட்சி […]

அரசு வேலைக்கு காத்திருப்பவர்கள் கவனத்திற்கு; முக்கிய அறிவிப்பு வெளியீடு..!

அரசு வேலைக்கு காத்திருப்பவர்கள் கவனத்திற்கு; முக்கிய அறிவிப்பு வெளியீடு..! தமிழக அரசின் சார்பில் மாநகராட்சி மற்றும் நகராட்சியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது.தமிழகத்தில் உள்ள மாநகராட்சி நகராட்சி, பேருராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட இடங்களில் உள்ள 1,933 காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்த காலிப்பணியிடங்களுக்கு பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் மார்ச் 12 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் www.tnmaws.ucanapply.com என்ற […]

சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா..

தென்காசி மாவட்டம் குற்றாலம் கலைவாணர் கலையரங்கத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் திருமண நிதி உதவி திட்டம் சார்பில் தாலிக்குத் தங்கம் விழாவில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் 394 பயனாளிகளுக்கு 3152 கிராம் தாலிக்கு தங்கமும் ரூ.1.53 கோடி மதிப்பிலான திருமண நிதி உதவித் தொகைக்கான காசோலையினையும் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் தாலிக்குத் தங்கம் வழங்கும் விழா […]

உங்களில் ஒருவனான நானும் சூளுரை ஏற்கிறேன்!-அண்ணா வழியில் அயராது உழைப்போம்! ஆதிக்க ஒன்றிய அரசை அகற்றியே தீருவோம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..

“அண்ணாவை நெஞ்சில் ஏந்தி வெற்றிக் களம் காண்போம்…” – உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்! மக்களிடம் செல் என்றார் பேரறிஞர் அண்ணா. உங்களில் ஒருவனான நான் அதை வழிமொழிவதுடன், ‘மக்களிடம் செல் மக்களிடம் சொல்’ என்று ஒவ்வொரு உடன்பிறப்பையும் கேட்டுக்கொள்கிறேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்.. அண்ணா வழியில் அயராது உழைப்போம் என்பதே முத்தமிழறிஞர் கலைஞர் வழங்கிய ஐம்பெரும் முழக்கங்களில் முதல் முழக்கம். அதனை முன்னெடுத்து, அயாராது உழைத்து, வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் மட்டுமின்றி, இந்தியா […]

இராயப்பன்பட்டி சவரியப்ப உடையார் நினைவு மேல்நிலைப்பள்ளி வைரவிழா:அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்பு..

இராயப்பன்பட்டி சவரியப்ப உடையார் நினைவு மேல்நிலைப்பள்ளி வைரவிழா:அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்பு.. தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா இராயப்பன்பட்டியில் சவரியப்ப உடையார் நினைவு மேல்நிலைப்பள்ளி வைரவிழா சிறப்பாக நடைபெற்றது .இதில் சிறப்பு விருந்தினராக தகவல் தொழில் நுட்ப வியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி வளாகத்தில் மகாத்மா காந்தி திருவுருவச் சிலையை திறந்து வைத்து உரையாற்றினார்.அவர் பேசும் போது, இந்த முக்கியமான ஒரு வரலாற்று மைல்கல் […]

இஸ்லாமிய சிம்மாசனங்கள்…!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -1 கப்ளிசேட் உமைய்யாக்களின் பேரரசு -34 (கி.பி 661-750) கவர்னர் அஸ்ரஸ் ஒரு பைத்திய காரத்தனமான உத்தரவை பிறப்பித்தார். முஸ்லீம்களாக மாறிய மக்கள் கத்னா செய்திருக்கிறார்களா தொழுகிறார்களா, குர்ஆன் ஓதுகிறார்களா என்று சோதித்து சரியாக இவைகளை செய்யவில்லை எனில் அவர்களிடம் ஜிஸ்யா வரியை வசூலிக்க உத்தரவிட்டார். அதிகாரிகளின் அராஜகங்களால், சோதனை அழுத்தங்களால், நிறைய மக்கள் மீண்டும் காஃபிர்களாக மாறினர். உமைய்யா அரச குடும்பத்தினர் மிகுந்த அராஜகத்தில் ஈடுபட்டனர். காவலர்கள் அவர்களை கண்டு கொள்ளவில்லை. […]

முழுநேர நேரடி, நேர்மை அரசியலை மேற்கொண்டால் நடிகர் விஜய்க்கு தமிழ்நாடு வெற்றிக்கனியை பரிசளிக்கும், அல்லது…?”

“முழுநேர நேரடி, நேர்மை அரசியலை மேற்கொண்டால் நடிகர் விஜய்க்கு தமிழ்நாடு வெற்றிக்கனியை பரிசளிக்கும், அல்லது…?” திரைப்பட நட்சத்திர இயக்குனரின் மகன் என்கிற அடையாளத்தோடு திரையுலகில் அடிபதித்து, தனக்கென தனி ஸ்டைலை உருவாக்கி, தனது திறமைகளை படிப்படியாக வளர்த்துக் கொண்டு, இளம் தலைமுறையினரின் மனதில் “இளைய தளபதி”, “தளபதி” என “விஸ்வரூபம்” எடுத்தவர், பல ஆண்டுகளுக்கு முன்பே தனது பெயரிலேயே மக்கள் இயக்கத்தை தொடங்கி அதன் மூலம் தொடர்ந்து பல்வேறு நிவாரண உதவிகளையும், மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும் […]

சிறப்பாக செயல்பட்டதாக விசிகவின் திண்டுக்கல் மாநகர் மாவட்ட செயலாளர் க.மைதீன் பாவா வுக்கு தொல் திருமாவளவன் பாராட்டு..

சிறப்பாக செயல்பட்டதாக விசிகவின் திண்டுக்கல் மாநகர் மாவட்ட செயலாளர் க.மைதீன் பாவா வுக்கு தொல் திருமாவளவன் பாராட்டு.. வெள்ளிக்கிழமை (2.02.2024) அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சென்னை தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளன் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தல் சம்பந்தமாக பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது. மேலும் கட்சிப் பணிகளில் மிகவும் சிறப்பாக செயல்பட்டதாக திண்டுக்கல் மாநகர் மாவட்ட செயலாளர் க.மைதீன் பாவா வுக்கு தொல். திருமாவளவன் பாராட்டு சான்றிதழ் […]

விஜய் தொடங்கிய கட்சியில் கழகம் என்று இருப்பது தி.மு.க., அ.தி.மு.க கட்சிகளுக்கு மட்டுமே ஒப்பந்தம் போட்டு கொடுக்கவில்லை. கழகம் என்பது ஓர் கூட்டமைப்பிற்கு கூறப்படும் சொல்; சீமான் கருத்து..

நடிகர் விஜய் தொடங்கியுள்ள புதிய அரசியல் கட்சியில் திராவிடம் என்ற சொல் இல்லாததே மகிழ்ச்சி அளிப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை பதிவு செய்துள்ளார். இதன்மூலம் தனது அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றனர். அரசியல் கட்சியை சேர்ந்த பலரும் நடிகர் விஜய்யின் இந்த செயல் குறித்து கருத்து […]

என்னைப் பொறுத்த வரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல; அது ஒரு புனிதமான மக்கள் பணி! நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் அறிக்கை..

என்னைப் பொறுத்த வரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல; அது ஒரு புனிதமான மக்கள் பணி என்று நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: “‘விஜய் மக்கள் இயக்கம்’பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும், நிவாரண உதவிகளையும் செய்துவருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர […]

கோவில் கும்பாபிஷேகத்திற்கு மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இஸ்லாமிய ஜமாத்தார்களுக்கு அழைப்பிதழ் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

கோவில் கும்பாபிஷேகத்திற்கு மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இஸ்லாமிய ஜமாத்தார்களுக்கு அழைப்பிதழ் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே நெய்க்காரப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பெரிய கலை முத்தூர் ஸ்ரீ ஜகோர்ட் பத்ரகாளியம்மன் கோயிலில் வருகின்ற 15- 2 -2024 -ஆம் அன்று 12 வருடங்களுக்குப் பின்பு மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து பத்திரகாளி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் நடைபெறும் திருவிழாவில் ஜல்லிக்கட்டு மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் […]

இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் அறிவிப்பு !

இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த 2023-ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த இரண்டாம் நிலை காவலர் (ஆண் மற்றும் பெண்) சிறைக்காவலர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற 737 ஆண் விண்ணப்ப தாரர்களுக்கு இராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்திறன் மற்றும் உடற்தகுதித் தேர்வு வருகின்ற 06.02.2024-ஆம் தேதி முதல் காலை 06.00 மணிக்கு நடைபெறவிருக்கிறது. உடற்திறன் , சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதித் தேர்வுக்கு வரும் விண்ணப்பதாரர்கள் […]

இராமநாதபுரத்தில் 6-வது புத்தக திருவிழா ! பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் மாணவ, மாணவியர்கள் புத்தகங்களை நேசிக்க வேண்டுகோள் !!

இராமநாதபுரம் மாவட்டம் இராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் கலை இலக்கிய ஆர்வலர்கள் சங்கம் இணைந்து நடத்திய 6வது புத்தக திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன் முன்னிலை வகித்தனர்.துவக்க நாள் நிகழ்வில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் காணொளிக்காட்சி வாயிலாக பங்கேற்று விழாப்பேருரை வழங்கினார்அவர் கூறியதாவது :-இராமநாதபுரத்தில் 6வது புத்தக திருவிழா […]

என் பெயரில் ஃபேக்(போலி) ஐடி உருவாக்கி பண மோசடி யாரும் நம்ப வேண்டாம்; பிரபல எழுத்தாளரும், நடிகருமான வேலராமமூர்த்தி வேதனை..

என் பெயரில் ஃபேக்(போலி) ஐடி உருவாக்கி பண மோசடி யாரும் நம்ப வேண்டாம்; பிரபல எழுத்தாளரும், நடிகருமான வேலராமமூர்த்தி வேதனை.. சமீப காலங்களில் சமூக வலைதளங்களில் வேறொரு புகைப்படம் மற்றும் விபரங்களைக் கொண்டு போலியாக ஐடி உருவாக்கி அந்த நபரின் நண்பர்களுக்கு அவரைப் போல குறுஞ்செய்தி அனுப்பி பணம் கேட்டு ஏமாற்றும் மோசடிகள் அதிகமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பிரபல எழுத்தாளரும் நடிகருமான வேலராமமூர்த்தி நேற்று தனது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். தன் பிறந்த நாளுக்கு […]

கடையம் ஒன்றியத்தில் பகுதிநேர ரேஷன் கடைகள் வேண்டும்; மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தமிழக அமைச்சரிடம் கோரிக்கை..

தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பகுதி நேர ரேஷன் கடைகளை அமைத்திட வேண்டும் என தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வே. ஜெயபாலன் தமிழக அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட திமுக செயலாளர் வே. ஜெயபாலன், தமிழக உணவு (ம) உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணியை நேரில் சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில், தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ராஜாங்கபுரம், வாகைக்குளம், பாப்பான்குளம், பெரியத்தெரு, […]

மாபெரும் 35 வது சாலை பாதுகாப்பு மாத விழா விழிப்புணர்வு பேரணிமற்றும் கண் பரிசோதனை முகாம்..

மாபெரும் 35 வது சாலை பாதுகாப்பு மாத விழா விழிப்புணர்வு பேரணி மற்றும் கண் பரிசோதனை முகாம்.. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 35 ஆவது சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு, மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா விழிப்புணர்வு பேரணி மற்றும் கண் பரிசோதனை முகாமை, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆ.ஆறுமுகம் , தலைமையேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்கள், பின்பு அவர் பேசும் […]

வீட்டுமனை பட்டா வேண்டி முடி திருத்தும் தொழிலாளர்கள் வாடிப்பட்டி வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு..

வீட்டுமனை பட்டா வேண்டி முடி திருத்தும் தொழிலாளர்கள் வாடிப்பட்டி வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு.. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா முடி திருத்தும் தொழிலாளர்கள் மத்திய சங்கம் சார்பாக வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார்மூர்த்தியிடம் இலவச வீட்டு மனை பட்டா வேண்டி கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில் மாவட்ட துணை தலைவர் செல்வம், மாவட்ட துணைச் செயலாளர் பாலமுருகன்,வாடிப்பட்டி நகர தலைவர் முத்துப்பாண்டி,நகரச் செயலாளர் கோபி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!