கீழமாத்தூர் ஊராட்சி செயலாளர் மீது முறைகேடு மற்றும் ஆள்மாறாட்ட புகார்..

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழ மாத்தூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற கிளர்காக உள்ள கார்த்திகேயன் என்பவருக்கு பதிலாக அவருடைய மனைவி கீதா என்பவர் கிராம சபை கூட்டங்களிலும் ஊராட்சி மன்ற உறுப்பினர் கூட்டங்களிலும் அதிகார தலையீடு செய்து வருவது சம்பந்தமாகவும் மேலும் கீதா என்பவர் தன்னை ஊராட்சி மன்ற உதவியாளர் என்றும் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் என்றும் ஊராட்சி மன்ற கிளர்க் என்றும் முன்னுக்குப் பின் முரணாக தன்னை கூறி வருவதாகவும் மதுரை மாவட்ட […]

கடந்த ஒரு வாரமாக தேடப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல் மீட்பு..

கடந்த ஒரு வாரமாக தேடப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல் மீட்பு.. இமாச்சலப் பிரதேசத்தில் கார் விபத்தில் சட்லெஜ் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல் மீட்பு. சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன், வெற்றி துரைசாமி கடந்த 4ம் தேதி விபத்தில் சிக்கினார். விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் ஆற்றில் அவரது உடல் கிடைத்துள்ளது.

சிறுபான்மையினர், இலங்கை தமிழர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள சிஏஏ சட்டத்தை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்!-சபாநாயகர்..

சர்வதேச விளையாட்டு போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்திக் காட்டியது பெருமை அளிக்கிறது: சபாநாயகர் அப்பாவு.. சர்வதேச விளையாட்டு போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்திக் காட்டியது பெருமை அளிக்கிறது என சபாநாயகர் அப்பாவு உரையில் தெரிவித்துள்ளார். சிறுபான்மையினர், இலங்கை தமிழர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள சிஏஏ சட்டத்தை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு தராதது வருத்தம் அளிக்கிறது என்று ஆளுநர் உரையில் […]

ஆளுநர் உரைக்கு முன்பாக தேசிய கீதம் இசைக்கப்படவில்லை எனக் கூறி உரையை வாசிப்பதை புறக்கணித்தார் ஆர்.என்.ரவி..

ஆளுநர் உரைக்கு முன்பாக தேசிய கீதம் இசைக்கப்படவில்லை எனக் கூறி உரையை வாசிப்பதை புறக்கணித்தார் ஆர்.என்.ரவி.. “தேசிய கீதத்திற்கு உரிய மரியாதை செலுத்தும் விதமாக ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் இறுதியிலும் அதை இசைக்க வேண்டும் என நான் பலமுறை விடுத்த கோரிக்கையும் அறிவுரையும் புறக்கணிக்கப்பட்டது. இந்த ஆளுநர் உரையில் உள்ள பல பத்திகளில் தார்மீக அடிப்படையில் எனக்கு உடன்படவில்லை. இந்த உரையை நான் வாசிப்பது அரசியலமைப்பு கேலிக்கூத்து. எனவே, இந்த பேரவையை பொறுத்தவரை, எனது உரையை முடித்துக்கொள்கிறேன்.. […]

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -2 கப்ளிசேட் அப்பாஸிய பேரரசு-8 (கி.பி 750-1258) மன்னர் அல்-மஃமூன் அப்பாஸிய பேரரசின் தலைநகரான பாக்தாத் போகாமல் மெர்வ் நகரத்திலிருந்து ஆட்சி செய்தார். பதிலு இப்னு சஹல் என்ற மஃமூனின் தலைமை அமைச்சர் பாக்தாத் நகரிலிருந்து பேரரசின் மேற்கு பகுதிகளை ஆட்சி செய்தார். மன்னர் மஃமூன் அவர்கள் மெர்வ் நகரிலிருந்து பேரரசின் கிழக்குப்பகுதிகளை ஆட்சி செய்தார். பேரரசர் மஃமூன் பாக்தாத் நகருக்கு செல்லாததற்கு சில காரணங்கள் கூறப்படுகிறது. அப்போது பாக்தாத் நகரம் செழிப்பில்லாமல் […]

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் பதினைந்து ஆண்டுகளாக தலை மறைவாக இருந்த நபர் கைது..

தென்காசி மாவட்டத்தில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபர் கைது தென்காசி மாவட்டத்தில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடையநல்லூர் காவல் நிலையத்தில் 2006 ஆம் ஆண்டு பதிவான குற்ற வழக்கின் குற்றவாளியான கபீர்@ மணிசாகுல் @ அபு குரைரா(42) என்பவர் கடந்த 2007ம் ஆண்டு முதல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு முறையாக ஆஜராகாமல் ஒவ்வொரு முறையும் தனது பெயரை மாற்றி கூறி வந்துள்ளார். […]

தென்காசி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சிறுவர் பூங்காவில் மரக்கன்றுகள் நடும் பணி; நகர்மன்ற தலைவர் சாதிர் பங்கேற்பு..

தென்காசி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சிறுவர் பூங்காவில் மரக்கன்றுகள் நடும் பணி நடந்தது. இதில் தென்காசி நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர் மற்றும் துணைத் தலைவர் கே.என்.எல். சுப்பையா ஆகியோருடன் நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தென்காசி நகர தூய்மை நகருக்கான மக்கள் இயக்கத்தின் சார்பில் நகர்மன்ற தலைவர் ஆர். சாதிர் தலைமையில் நகர்மன்ற துணைத் தலைவர் சுப்பையா, நகராட்சி ஆணையாளர் ரவிசந்திரன் ஆகியோர் முன்னிலையில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு […]

ஒட்டன் சத்திரம் ,பழனி சுற்றியுள்ள ஊராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு 1000 கோடியில்  தண்ணீர் பிரச்சனை இல்லாத அளவிற்கு திட்டம் செயல்படுத்தபட்டு வருவதாக உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்..

ஒட்டன் சத்திரம் ,பழனி சுற்றியுள்ள ஊராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு 1000 கோடியில்  தண்ணீர் பிரச்சனை இல்லாத அளவிற்கு திட்டம் செயல்படுத்தபட்டு வருவதாக உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்.. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 12 ஊராட்சிகளில் அடிக்கல் நாட்டு விழா மற்றும் புதிய ரேஷன் கடை திறப்பு விழா உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ரூபாய் 17.56 கோடி அடிக்கல் நாட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இன்று மொல்லம்பட்டி ஊராட்சியில் […]

மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தமிழ்நாடு தவ்ஹீது ஜமா அத் சார்பில் “சமூக தீமைகளுக்கான மார்க்க விளக்க கூட்டம்..

மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தமிழ்நாடு தவ்ஹீது ஜமா அத் சார்பில் “சமூக தீமைகளுக்கான மார்க்க விளக்க கூட்டம்.. மதுரை திருப்பரங்குன்றம் அருகே வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் “சமூக தீமைகளுக்கு எதிரான மார்க்க விளக்க கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்குதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிளைச்சாளர் தாங்கினார் வரதட்சணை ஒரு வன்கொடுமை என்ற தலைப்பில் ஜாஹிரா பேசினார் சமூகத் தீமைகளும் சத்திய மார்க்கத்தின் தீர்வுகளும் என்ற தலைப்பில் தவ்ஹீத் […]

இராஜபாளையத்தில் மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி; 36 அணிகள் பங்கேற்பு!- முன்னாள் அமைச்சர்கே டி ஆர் துவங்கி வைத்தார்..

இராஜபாளையத்தில் மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி; 36 அணிகள் பங்கேற்பு!- முன்னாள் அமைச்சர் கே டி ஆர் துவங்கி வைத்தார்.. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் குறிஞ்சி கால்பந்தாட்ட குழு சார்பில் ஐந்தாம் ஆண்டு மாநில அளவிலான ஐவர் கால்பந்தாட்ட போட்டி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது இந்த போட்டியை முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி துவங்கி வைத்தார். இந்த ஐவர் கால்பந்தாட்ட போட்டியில் விருதுநகர் தேனி மதுரை திருச்சி நெல்லை தூத்துக்குடி தென்காசி நாகர்கோவில் […]

தேசிய அளவில் நடைபெற்ற டேபிள் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் ஷிப் தங்கம் வென்ற 10 வயது சிறுவனுக்கு மதுரையில் பாராட்டு விழா..

தேசிய அளவில் நடைபெற்ற டேபிள் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் ஷிப் தங்கம் வென்ற 10 வயது சிறுவனுக்கு மதுரையில் பாராட்டு விழா.. மதுரை சேர்ந்த முத்துக்குமார் -சுஜிதா தம்பதியின் மகன் அஸ்வஜித். மதுரை தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவயதிலேயே விளையாட்டின் மீது ஆர்வம் கொண்ட சிறுவன் மகாராஷ்டிராவில் நடைபெற்ற தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் (அண்டர் லெவன்) கலந்து கொண்டார். இந்த போட்டியில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து […]

திருப்பரங்குன்றம் அய்வைத்தனேந்தல் கம்மாயில் பரிசலில் சிக்கிய வாலிபர்!- தீயணைப்பு துறை அலுவலர்களால் மீட்பு..

திருப்பரங்குன்றம் அய்வைத்தனேந்தல் கம்மாயில் பரிசலில் சிக்கிய வாலிபர்!- தீயணைப்பு துறை அலுவலர்களால் மீட்பு.. மதுரை காமராஜபுரம் வாழைத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் நரேந்திரன் மணி வயது 31 இவர் பெருங்குடி அருகே ஒரு திருமண விழாவில் கேட்டதின் வேலை பார்த்து வேலை முடித்து வந்தவர் கம்மாயில் குளிப்பதற்காக இறங்கியுள்ளார் அப்போது வழிக்கு இதில் அருகில் இருந்த பரிசலில் ஏறி அமர்ந்ததை எடுத்து காற்றின் வேகத்தில் பரிசல் கம்மை நடுவில் சென்றது இதனை தொடர்ந்து இவருக்கு வெளியிட்டதில் அருகில் இருந்தவர்கள் […]

கடைசி முகூர்த்த நாளான இன்று முருகன் திருக்கோவிலில் 50 திருமணங்களும் சுற்றியுள்ள மண்டபங்களில் 30க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைப்பெற்றது..

கடைசி முகூர்த்த நாளான இன்று முருகன் திருக்கோவிலில் 50 திருமணங்களும் சுற்றியுள்ள மண்டபங்களில் 30க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைப்பெற்றது.. தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் இந்த ஆண்டு தை மாத கடைசி முகூர்த்தமான இன்று ஏராளமான திருமணங்கள் நடைபெற்றது. திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் வளாகத்தில் இன்று பதிவு செய்யப்பட்ட 50 திருமணங்கள் நடைபெற்றது . மேலும் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலிலகோவிலை சுற்றியுள்ள […]

மேலூர் அருகே இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்து – ஒருவர் பலி..

மேலூர் அருகே இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்து – ஒருவர் பலி.. மதுரை மாவட்டம் மேலூர் அருகே சத்தியபுரம் நான்கு வழிச்சாலையில் இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி விபத்தானது. இதில் இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்ற 37 வயதுடைய புரண்டிபட்டியை சேர்ந்த கார்த்திக் என்ற நபர் நிகழ்வு இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த மேலூர் போலீசார் அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]

பார்வர்ட் பிளாக் பிரமுகர்  இல்ல விழாவில் முன்னாள் எம்எல்ஏ, கதிரவன் பங்கேற்பு..

பார்வர்ட் பிளாக் பிரமுகர்  இல்ல விழாவில் முன்னாள் எம்எல்ஏ கதிரவன் பங்கேற்பு.. அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் உசிலம்பட்டி நகர் தலைவர் கேடெக் செளந்திரபாண்டி விஜயா இல்ல விழாவில் தேசிய துணைதலைவர் தமிழ் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் பிவி கதிரவன் பிகாம் எல்எல்பி எக்ஸ் எம்எல்எ கலந்துகொண்டு குடுபத்தினர் அனைவரையும் வாழ்த்தினார் இதில் மாவட்ட தலைவர் பொன் ஆதிசேடன் மாவட்ட செயலாளர் மணிகண்டன் மாவட்ட கவுன்சிலர் காசிமாயன் தேனி மாவட்ட செயலாளர் எம்பிஎஸ் முருகன் மதுதேவன் […]

வடுகப்பட்டி கிராமத்தில் ஸ்ரீ பகவதிஅம்மன்ஸ்ரீ முத்தாலம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம்..

வடுகப்பட்டி கிராமத்தில் ஸ்ரீ பகவதிஅம்மன் ஸ்ரீ முத்தாலம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம்.. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் த.வடுகபட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பகவதிஅம்மன், ஸ்ரீ முத்தாலம்மன், திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முதல் நாள் யாக சாலை பூஜையில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மங்கல இசை முழங்க கோபூஜை, கணபதி பூஜை உள்ளிட்ட சிறப்பு அபிஷேக ஆராதனைகள் யாக வேள்விகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் நாள் […]

மதுரையில் மத்திய அரசு நிதியுடன் கட்டிய புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை அடித்து நொறுக்கி இளைஞர்கள் அட்டகாசம்..

மதுரையில் மத்திய அரசு நிதியுடன் கட்டிய புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை அடித்து நொறுக்கி இளைஞர்கள் அட்டகாசம்.. மதுரை மாவட்டம் ஆத்திகுளம் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக வீடு இல்லாத பொது மக்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் யோஜனா திட்டத்தின் கீழ் சுமார் 30 கோடி ரூபாய் மதிப்பில் மூன்று அடுக்குகளை கொண்ட 320 மாடி கட்டிடம் கடந்த மூன்று ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த நிலையில் கடந்த 2023 நவம்பர் […]

அரசு நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது..

அரசு நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.. மதுரை கிழக்கு ஒன்றியம் எல்கேபி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா ஊராட்சி மன்ற தலைவர் நாகலட்சுமி தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய கவுன்சிலர் நூர் முகம்மது முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் தென்னவன் ஆண்டறிக்கை வாசித்தார். ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார். மாணவ மாணவியரின் பறை இசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. விழாவில் மாணவ மாணவியரின் சிலம்பம், கோலாட்டம், கும்மி, கிராமிய நடனம், நவீன நாடகம், நாட்டுப்புற நடனம், யோகா, […]

திருப்புல்லாணியில் வேளாண்மை துறையின் தொழில்நுட்ப வேளாண்மை முகாம் !

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி வேளாண்மை துறை சார்பில்  சேதுக்கரை பஞ்சாயத்திற்கு உட்பட்ட பஞ்சதாங்கி கிராமத்தில் நெற்பயிரில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப வேளாண்மை முகாம் திட்டத்தின் கீழ்பயிர் மேலாண்மை பண்ணை பள்ளி பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில்  விருதுநகர் வேளாண்மை இணை இயக்குனர் (ஓய்வு) சுப்ரமணியன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு நெல் சாகுபடியில் பின்பற்ற வேண்டிய முக்கிய தொழில் நுட்பங்களான ரகம் தேர்வு செய்தல், உயிர் உர விதை நேர்த்தி, பூஞ்சான  விதை நேர்த்தி செய்தல், மற்றும் கலை நிர்வாகம் பயிர் […]

வடகரையில் கல்வி மேதை சாகுல் ஹமீது மிஸ்பாஹி படிப்பகம் திறப்பு விழா; சிறப்பு அழைப்பாளராக செங்கோட்டை நூலகர் இராமசாமி பங்கேற்பு..

வடகரையில் கல்வி மேதை சாகுல் ஹமீது மிஸ்பாஹி படிப்பகம் திறப்பு விழா; சிறப்பு அழைப்பாளராக செங்கோட்டை நூலகர் இராமசாமி பங்கேற்பு.. தென்காசி மாவட்டம் வடகரையில் எஸ்டிபிஐ கட்சியின் தீ.ப. கிளை சார்பில் அரசுபோட்டி தேர்வர்களின் வசதிக்காகவும், கல்வி வளர்ச்சிக்காகவும், கல்விக்காக அரும்பாடுபட்ட வடகரை கல்வி மேதை சாகுல்ஹமீது மிஸ்பாஹி நினைவாக படிப்பகம் திறக்கப்பட்டுள்ளது. சிறப்பு அழைப்பாளராக செங்கோட்டை நூலகர் இராமசாமி கலந்து கொண்டு படிப்பகத்தை திறந்து வைத்தார். இந்த படிப்பகத்தில் அரசு போட்டி தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!