அலங்காநல்லூர் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி ஊராட்சி மன்ற தலைவர் மீது சரமாரி புகார்!- ஓட்டு கேட்டு வரக்கூடாது என பொதுமக்கள் ஆவேசம்.. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொண்டையம்பட்டி ஊராட்சியில் கொண்டையம்பட்டி சம்பக்குளம் மீனாட்சிபுரம் ஒட்டுப்பட்டி பெருமாள் பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளது இந்த கிராமத்தில் சுமார் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர் இங்கு தலைவராக மலைச்சாமி என்பவரும் துணைத் தலைவராக ரங்கராஜன் என்பவரும் உள்ளனர் ஒன்பது வார்டுகளை கொண்ட […]
Category: செய்திகள்
மதுரையில் டீ கடைக்காரரை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய கும்பல் கைது..
மதுரையில் டீ கடைக்காரரை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய கும்பல் கைது.. மதுரை மாநகர் கூடல்நகர் அருகேயுள்ள சொக்கலிங்க நகர் முதல் தெரு பகுதியில் வசித்துவருபவர் பழனிச்சாமி(வயது 59). இவர் அதே பகுதியில் டீக்கடை வைத்து நடத்திவருகிறார். மேலும் சிலருக்கு பைனான்ஸ் கொடுத்தும் வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை பழனிச்சாமி டீ கடையை திறக்க சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக காரில் காத்திருந்த சிலர் முகவரி விசாரிப்பதுபோல அருகே சென்று கண் இமைக்கும் நேரத்தில் பழனிச்சாமியை காரில் […]
கீழக்கரை அருகே சின்னாண்டிவலசை கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் !
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் சின்னாண்டிவலசை கிராமத்தில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாளர்மைத்துறையின் மூலம் மக்கள் தொடர்பு முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா விஷ்ணு சந்திரன் தலைமையேற்று பொதுமக்களிடம் கோரிக்கைகள் மனுக்கள் பெற்று, மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அறிவு றுத்தியதுடன், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி போகையில் : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்க அரசின் சார்பில் பல்வேறு திட்டங்களை அறிவித்து அதனை மக்களிடம் கொண்டு செல்லும் […]
திருப்புல்லாணியில் மன்னர் குமரன் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி !
ராமநாதபுரம் மாவட்டம் மன்னர் குமரன் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு திருப்புல்லாணியில் நம்ம ஊர் திருப்புல்லாணி குழு மற்றும் ஐ சி ஐ சி ஐ ஃபவுண்டேஷன் இணைந்து பாலசுப்பிரமணிய சாமி கோயில் பகுதியில் ரத்தினகுமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர் ராஜபாரதசாரதி ஊராட்சி மன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் சுமார் 600 மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி சிறப்பு அழைப்பதறாக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.மேலும் நிழல் […]
நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிக்கு கட்டாய கல்வி உரிமைச் சட்டத் தொகை விடுவிக்க கோரி மனு !
இராமநாதபுரம் மாவட்டத்தின் உள்ள தனியார் பள்ளிகளுக்கு கட்டாய கல்வி உரிமைச் சட்டத் தொகை விடுவிக்க கோரி மாவட்ட கல்வி அலுவலரிடம் தமிழ்நாடு நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் நல சங்கத்தின் மாவட்டத் தலைவர் முனிசாமி மாவட்ட செயலாளர் நயிமுதீன் மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் நசுருதீன் ஆகியோர் இணைந்து மனு வழங்கினார். அதில் தெரிவித்ததாவது 2022-23, 2023-24ஆம் ஆண்டிற்கான கட்டாய கல்வி உரிமைச் சட்ட தொகைகள் இந்த மாத இறுதிக்குள் வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசின் […]
பழனியில் மத்திய அதிவிரைவு படையினர் முக்கிய இடங்களில் திடீர் ஆய்வு..
பழனியில் மத்திய அதிவிரைவு படையினர் முக்கிய இடங்களில் திடீர் ஆய்வு.. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மத்திய அதிவிரைவு படையைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர் கலவர தடுப்புபபணி, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள கூடிய இந்தப் படையினர் பொதுமக்கள் இயல்பான வாழ்க்கையை வாழ்வதற்கு பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்யும் வகையில் பழனி நகரின் முக்கிய இடங்களே பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பழனி ரயில்நிலைய சாலை, காந்தி மார்க்கெட், மலையடிவாரம் உள்ளிட்ட இடங்களில் மத்திய அதிவிரைவு […]
பாகிஸ்தானில் நீடிக்கும் குழப்பம்!- புதிய பிரதமர் ஆகிறார் நவாஸ் ஷெரீஃப் சகோதரர் ஷெபாஸ் ஷெரீஃப்..?
பாகிஸ்தானில் பரபரப்பான பொதுத்தேர்தல் நடந்து முடிந்து 5 நாட்களுக்கு பிறகும், அங்கு எந்த கட்சி ஆட்சி அமைக்க போகிறது, அடுத்த பாகிஸ்தான் பிரதமர் யார் என்பது இன்னும் பெரிய குழப்பமாகவே உள்ளது. முன்னாள் பிரதமர் இம்ரான்கான் சிறையில் அடைக்கப்பட்டு, அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி தேர்தலில் போட்டியிட பல தடைகள் விதிக்கப்பட்ட போதிலும், அக்கட்சியின் ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிட்ட 101 வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றிப்பெற்று ஆச்சரியப்படுத்தியுள்ளனர். 3 முறை பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் […]
ராமநாதபுரம் கோட்ட கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் !
ராமநாதபுரத்தில் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே கோரிக்கைகளை வலியுறுத்திய கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் கோட்டப்பொறுப்பு தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் சேகர் முதன்மை ஆலோசகர் ஜான் பிரிட்டோ முன்னிலை வைத்தனர். டார்கெட் என்ற பெயரால் நடைபெறும் அடக்குமுறை அராஜகத்தை கண்டிக்கிறோம் கமலேஷ் சந்திரா கமிட்டியின் சி பாரிசுகளை அமல்படுத்தவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர் கோட்டப் பொருளாளர் சுப்பிரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -2 கப்ளிசேட் அப்பாஸிய பேரரசு-10 (கி.பி.750-1258) முஃதஸிலா கொள்கை என்பது நவீனத்துவம் என்ற பெயரிலும், பகுத்தறிவு சிந்தனை என்ற பெயரிலும், குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் மனம் போன போக்கில் விளக்கங்கள் அளித்து மக்களை திசை திருப்பும் கொள்கையாகும். இந்த கூட்டம் மக்களை தவறாக வழிநடத்தியது. குர்ஆன்,ஹதீஸிற்கு குதர்க்கமான விளக்கங்களை மனம்போன போக்கில் அளித்தனர். பகுத்தறிவு என்ற பெயரில் குர்ஆன், ஹதீஸின் பல கருத்துக்களை அறிவிற்கு பொருந்தாது என்று புறக்கணித்தனர். இதனால் ஆன்மீகத்தில் வறட்சியான நிலைகள் […]
கடின உழைப்பால், 23 வயதிலேயே நீதிபதியாகத் தேர்ச்சி பெற்றுள்ள திருமதி. ஶ்ரீபதி அவர்களுக்கு, பாரதிய ஜனதா கட்சி சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!- அண்ணாமலை..
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை புலியூர் கிராமத்தைச் சேர்ந்த திருமதி. ஶ்ரீபதி அவர்கள், தமிழகத்தின் முதல் பழங்குடியின நீதிபதியாகத் தேர்ச்சி பெற்றுள்ளார் என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நமது நாட்டின் குடியரசுத் தலைவர் பதவியை, பழங்குடியினத்தைச் சேர்ந்த திருமதி திரௌபதி முர்மு அவர்கள் அலங்கரிக்கும் இதே காலகட்டத்தில், தனது கடின உழைப்பால், 23 வயதிலேயே நீதிபதியாகத் தேர்ச்சி பெற்றுள்ள திருமதி ஶ்ரீபதி அவர்களுக்கு, பாரதிய ஜனதா கட்சி சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். சுதந்திரம் […]
23 வயதில் சிவில் நீதிபதி தேர்வில் சாதித்த பழங்குடி பெண்!-“சத்தியபாதை”, “கீழை நியூஸ்”குழுமத்தின் நிறுவனர் வாழ்த்து செய்தி..
இது சம்பந்தமாக சத்தியபாதை மற்றும் கீழை நியூஸ் குழுமத்தின் நிறுவனர் சையது ஆப்தீன் கீழ்கண்டவாறு வாழ்த்து செய்தி கூறியுள்ளார்.. 23 வயதுடைய பழங்குடி பெண் ஸ்ரீபதி, சிவில் நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.இதற்காக ஸ்ரீபதியை பலரும் பாராட்டி வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை உச்சியில் இருக்கிறது புலியூர் குக்கிராமம். இக்கிராமத்தில் வசிக்கும் ஸ்ரீபதி என்ற பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த இளம்பெண், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் நீதிபதி தேர்வில் […]
பழங்குடியின சமூகத்தின் முதல் பெண் உரிமையியல் நீதிபதி ஸ்ரீபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!-ஜவாஹிருல்லாஹ்..
பழங்குடியின சமூகத்தின் முதல் பெண் உரிமையியல் நீதிபதி ஸ்ரீபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!-ஜவாஹிருல்லாஹ்.. திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப்பகுதியில் உள்ள பழங்குடி கிராமமான புலியூர் பகுதியில் பிறந்தவர் ஸ்ரீபதி. ஏலகிரி மலையில் தமிழ் வழியில் கல்வி கற்று, அதன் பின்னர் சட்டப் படிப்பை மேற்கொண்டு இருந்தார். இடையில் அவருக்குத் திருமணமான போதும், படிப்பைக் கைவிடாமல் தொடர்ந்து பட்டப்படிப்பைப் படித்து முடித்துள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய உரிமையியல் நீதிபதிக்கான போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள ஸ்ரீபதி, ஆறுமாத […]
பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி தொகுதி பங்கீடு பற்றி முடிவு எடுக்க ஜி. கே. வாசனுக்கு முழு அதிகாரம்!- தமிழ் மாநில காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் முடிவு..
பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி தொகுதி பங்கீடு பற்றி முடிவு எடுக்க ஜி. கே. வாசனுக்கு முழு அதிகாரம்!- தமிழ் மாநில காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் முடிவு.. பாராளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக முடிவு செய்வதற்காக தாமாக செயற்குழு கூட்டம் கட்சித் தலைவர் ஜி கே வாசன் தலைமையில் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைப்பெற்றது இந்தக் கூட்டத்தில் கட்சியின் மாநில நிர்வாகிகள் மாவட்டத் தலைவர்கள் மாநில செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநிலத் […]
தேசிய டியூபால் போட்டி தமிழக வீரர் வீராங்கனைகள் இறுதிப் போட்டியில் வெற்றி!- மதுரை ரயில் நிலையத்தில் மாலை அணிவித்து வரவேற்பு..
தேசிய டியூபால் போட்டி தமிழக வீரர் வீராங்கனைகள் இறுதிப் போட்டியில் வெற்றி!- மதுரை ரயில் நிலையத்தில் மாலை அணிவித்து வரவேற்பு.. இந்திய டியூபால் சங்கம் நடத்திய 9வது சீனியர் தேசிய அளவிலான டியூபால் போட்டிகள் டெல்லி மாநிலத்தில் பிப்ரவரி 7 முதல் 10 வரை நடைபெற்றது அதில் தமிழ்நாடு டியூபால் சங்கம் சார்பில் ஆண்கள் மற்றும் பெண்கள் தமிழக டியூபால் அணி தேர்வு செய்யப்பெற்று டெல்லியில் நடைபெற்ற போட்டியில் விளையாடினர். இதில் பல்வேறு மாவட்டங்களை சார்ந்த 30 […]
மதுரை மத்திய சிறைவாசிக்கு கஞ்சா வழங்கியதாக சிறைக்காவலர் சஸ்பெண்ட் – சிறைத்துறை நடவடிக்கை..
மதுரை மத்திய சிறைவாசிக்கு கஞ்சா வழங்கியதாக சிறைக்காவலர் சஸ்பெண்ட் – சிறைத்துறை நடவடிக்கை.. மதுரை மதிச்சியம் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்ற வழுக்கை கார்த்திக் (26) கஞ்சா வழக்கில் 2 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் விசாரணை கைதியாக உள்ளார். இந்நிலையில் வழுக்கை கார்த்தியிடம் சிறையில் வைத்து இரு நாட்களுக்கு முன் 15 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கரிமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வழுக்கை கார்த்திக்கிடம் நடத்திய விசாரணையில் சிறை காவலர் ஆனந்தராஜ் […]
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தேமுதிகவின் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது..
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தேமுதிகவின் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.. மதுரை வடக்கு மாவட்டம் ,வாடிப்பட்டி பேரூர் தே.மு.தி.க சார்பாக கட்சி கொடிநாள் கொடியேற்று விழா போடிநாயக் கன்பட்டியில் நடந்தது. இந்த விழாவையொட்டி, விஜயகாந்த் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து, தே.மு.தி.க . கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. இந்த விழாவில், பேரூர் செயலாளர் பாலாஜி தலைமை தாங்கி, விஜயகாந்த் உருவப்படத்திற்கு மலர்துாவி கொடியேற்றினார். அவைத்தலைவர் கோபால் முன்னிலை வகித்தார். பொருளாளர் சோமநாதன் வரவேற்றார். முன்னாள் பேரூர் […]
திருப்பரங்குன்றம் பகுதிகளில் ஆளூநரை கண்டித்து திரும்பி போ, திரும்பி போ, கெட்அவுட் ரவி என திருப்பரங்குன்றம் திருநகர், அவனியாபுரம் பகுதிகளில் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு..
திருப்பரங்குன்றம் பகுதிகளில் ஆளூநரை கண்டித்து திரும்பி போ, திரும்பி போ, கெட்அவுட் ரவி என திருப்பரங்குன்றம் திருநகர், அவனியாபுரம் பகுதிகளில் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு.. தமிழக ஆளுநர் ஆர் என் ரவி நேற்று சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை இடைநிறுத்தி வெளியில் சென்றதை கண்டித்து மதுரை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் திருப்பரங்குன்றம் பகுதிகளில் கெட் அவுட் ரவி என வால்போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் தமிழக […]
நிலக்கோட்டையில,பல முறை,பல ஆண்டுகள், பல அதிகாரிகள், நோ ரெஸ்பான்ஸ்!- களம் இறங்கிய விடுதலைச் சிறுத்தைகள்…
நிலக்கோட்டையில,பல முறை,பல ஆண்டுகள், பல அதிகாரிகள், நோ ரெஸ்பான்ஸ்!- களம் இறங்கிய விடுதலைச் சிறுத்தைகள்… திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே விநாயக புரத்தில் (ஈபி காலனி) 1998ல் வைகை அணை ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றோரம் இருந்த கிராமங்களில் விநாயக புரம் கிராமம் முழுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அன்றைய அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.எஸ்.பொன்னம்மாள் ஆகியோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மேற்படி கிராமத்தை பார்வையிட்டு மக்களுக்கு நிவாரணங்களை வழங்கி, வீடுகளை இழந்தோருக்கு அரசின் […]
கீழக்கரை ஹமீதியா தொடக்கப் பள்ளியில் பாரத சாரண சாரணியர் இயக்க துவக்க விழா !
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஹமீதியா தொடக்கப் பள்ளியில் பாரத சாரண சாரணியர் இயக்க துவக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு உஸ்வத்துன் ஹசனா முஸ்லிம் சங்க உறுப்பினர் உமர்தீன் தலைமை தாங்கினார். வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஜெயா உஷாராணி இருவரும் முன்னிலை வகித்தனர். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரும் மாவட்ட பாரத சாரண சாரணியர் இயக்க ஆணையருமான இரா .பிரின்ஸ் ஆரோக்கியராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். மாவட்ட பாரத சாரண சாரணிய இயக்க செயலாளர் சிவா. செல்வராஜ் […]
நீதிபதியாகும் முதல் பழங்குடியின பெண்!- குவியும் பாராட்டுக்கள்..
நீதிபதியாகும் முதல் பழங்குடியின பெண்!- குவியும் பாராட்டுக்கள்.. தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின சிவில் நீதிபதி என்ற பெருமையை பெற்றுள்ளார் திருவண்ணாமலை மாவட்டம் புலியூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீபதி.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் நீதிபதிக்கான போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள ஸ்ரீபதி, 6 மாத பயிற்சிக்கு பின் நீதிபதி ஆகிறார். தேர்வுக்கு 2 நாட்களுக்கு முன்பு இவருக்கு குழந்தை பிறந்த நிலையில், அதையும் கடந்து சென்னைக்கு வந்து தேர்வெழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment.