நெல்லை – தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்ட நிலவரம்..

நெல்லை மாவட்டம் பாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143.00 அடி, நீர் இருப்பு : 114.60 அடி, கொள்ளளவு:, 3830.00 மி.க.அடி, நீர் வரத்து : 82.87 கன அடி, வெளியேற்றம் : 1504.75 கன அடி. சேர்வலாறு : உச்சநீர்மட்டம் : 156.00 அடி,, நீர் இருப்பு : 103.44 அடி, கொள்ளளவு: 486.49 மி.க.அடி. மணிமுத்தாறு : உச்சநீர்மட்டம்: 118.00 அடி, நீர் இருப்பு : 109.46 அடி, கொள்ளளவு: 4664.78 மி.க.அடி, நீர் […]

தென்காசி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவ மாணவியருக்கு கல்வி உதவித் தொகை; மாவட்ட கலெக்டர் தகவல்..

தென்காசி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவ மாணவியருக்கு கல்வி உதவித் தொகை; மாவட்ட கலெக்டர் தகவல்.. தென்காசி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட (பிவ), மிகப் பிற்படுத்தப்பட்ட (மிபிவ) மற்றும் சீர்மரபினர் (சீம) மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், அரசு, அரசு உதவி […]

இராமநாதபுரத்தில் இந்திய கடலோர காவல்படை, தமிழக கடலோர பாதுகாப்ப குழும போலீசார்கள் இணைந்து சஜாக் பாதுகாப்பு ஒத்திகை !

இராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் இந்திய கடலோர காவல்படை, தமிழக கடலோர பாதுகாப்ப குழும போலீசார் இணைந்து சஜாக் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். கடலோர பாதுகாப்பு குழும போலீசார் நடுக்கடலில் மீன் பிடிக்கம் மீனவர்கள் உரிய அடையாள அட்டைகள் மற்றும் படகின் ஆவணங்களை வைத்து கொள்ளுமாறு அறிவுறுத்தினர். பாதுகாப்பு ஒத்திகையின் போது சந்தேகத்திற்கிடமான நபர்கள், அந்நிய படகுகளின் ஊடுருவல் குறித்த தகவல்களை 1093 அவசர எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவித்திடுமாறு மீனவர்களுக்கு அறிவுறுத்தாபட்டு வருகின்றனர். அதனை […]

திமுகவின் ஆட்சி தொடர்ந்தால் தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது; எடப்பாடி பழனிசாமி பேட்டி..

திமுகவின் ஆட்சி தொடர்ந்தால் ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது. – மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டி. முதலமைச்சர் ஸ்டாலின் மதுரைக்கு என அறிவித்த பல திட்டங்கள் இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை. டைடல் பார்க் அறிவிப்பு வெளியிடப்பட்டு 2 ஆண்டுகள் ஆகிய நிலையில் அதற்கு நிதி ஒதுக்கி பணிகள் துவங்கவில்லை. மதுரை விமான நிலையம் ஓடுதளம் விரிவாக்கம்., மெட்ரோ ரயில் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மதுரைக்கு குடிநீர் திட்டம் அதிமுக ஆட்சி காலத்தில் துவங்கப்பட்ட […]

ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் மூன்றாம் ஆண்டு வருடாபிஷேகம்..

திருமங்கலம் அருகே உச்சப்பட்டி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் மூன்றாம் ஆண்டு வருடாபிஷேகம் மற்றும் பதினெட்டாம் படி கருப்பசாமி திருக்கோவில் பிரதிஷ்டை நடந்தது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உச்சப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் மூன்றாம் ஆண்டு வருட அபிஷேகம் மற்றும் பதினெட்டாம்படி கருப்பசாமி சிலை பிரதிஷ்டை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் உச்சப்பட்டி கிராம மக்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் […]

பள்ளிக்கல்வித்துறையுடன் கள்ளர் பள்ளிகளை இணைத்தால் திமுகவுக்கு எதிராக செயல்படுவது என தமிழ் மாநில பிரமலைக்கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தமிழ் மாநில பிரமலைக்கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவை அலுவலகத்தில் மாநிலத்தலைவர் ராஜபாண்டியன் தலைமையில் அவசரக் கூட்டம் நடைபெற்றது.இதில் கள்ளர் சமுதாய மக்களுக்கான உரிமை மீட்கும் மற்றும் கள்ளர் சீரமைப்பு துறை மீட்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறையுடன் கள்ளர் பள்ளிகளை இணைத்தால் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் திமுக அரசை எதிர்த்து செயல்படுவதென்றும் தேர்தலை கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவை சார்பில்; புறக்கணிக்கப் போவதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் உடனடியாக தமிழக […]

இந்தியாவின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் பாலி நரிமன் மறைவு; தமிழ்நாடு முதலமைச்சர் இரங்கல்..

இந்தியாவின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் பாலி நரிமன் மறைவு; தமிழ்நாடு முதலமைச்சர் இரங்கல்.. புகழ்பெற்ற சட்டவியல் அறிஞரும் முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுமான பாலி நரிமன் மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்த செய்திக்குறிப்பில், புகழ்பெற்ற சட்டவியல் அறிஞரும் முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுமான பாலி நரிமன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். வழக்கறிஞராக எழுபதாண்டுகளுக்கும் மேலான தனது பயணத்தில் சுமார் ஐம்பதாண்டுகள் அவர் உச்சநீதிமன்றத்தில் வாதாடியுள்ளார் என்பது வரலாற்றுச் சிறப்புமிக்கதும், […]

ராமநாதபுரத்தில் பண மோசடி எஸ் பி யிடம் மனு !

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள கல் கிணற்று வலசை பகுதியில் சேர்ந்தவர்கள் உறவினர் தானே என நம்பி கட்டிய குலுக்கள் சீட்டு பணத்தை சுருட்டிக்கொண்டு தலைமறைவான பெண் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தருமாறு பெண்கள் கண்ணீர் மல்க  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு  அளித்துள்ளனர். அவர்கள் அளித்த மனுவில் தனது உறவுக்கார பெண்ணான உச்சிப்புளியை சேர்ந்த மங்கையர்கரசி என்பவரிடம் மாத குலுக்கள் சீட்டுக்கு பணம் கட்டி வந்ததாகவும் மாதம் 10,000 […]

வாடிப்பட்டியில் கலைஞர் நூற்றாண்டு விழா கலைச் சங்கமம் நிகழ்ச்சி..

வாடிப்பட்டியில் கலைஞர் நூற்றாண்டு விழா கலைச்சங்கமம் நிகழ்ச்சி.. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி தாதம்பட்டி மந்தை திடலில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பாக கலைச்சங்கமம் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு இசை நாடக கலைஞர்கள் பேரவை மாநில தலைவர் எம்.ஆர். எம்.பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் மு பால்பாண்டியன், செயல் அலுவலர் ஜெயலட்சுமி, முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேணி, பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை […]

அலங்காநல்லூர் அருகே ஸ்ரீ அரியநாச்சி அம்மன் பரந்தாங்கி அய்யன் திருக்கோவில் கும்பாபிஷேகம்..

அலங்காநல்லூர் அருகே ஸ்ரீ அரியநாச்சி அம்மன் பரந்தாங்கி அய்யன் திருக்கோவில் கும்பாபிஷேகம்.. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள சி.புதூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அரியநாச்சி அம்மன் ஸ்ரீ பரந்தாங்கி அய்யன் மற்றும் பரிவார தெய்வங்கள் கோவில் கும்பாபிஷேகம் மூன்று நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் யாக சாலை பூஜையில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து இரண்டாம் நாள் மங்கல இசை முழங்க கோபூஜை, கணபதி பூஜை உள்ளிட்ட […]

தென்காசி மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம்..

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித்துறை மூலம் ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் துவக்கி வைத்தார். தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித்துறை மூலம் ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் 20.02.2024 அன்று நடைபெற்றது. பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்தாவது, தமிழ்நாடு முதலமைச்சரின் […]

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -2 கப்ளிசேட் அப்பாஸிய பேரரசு -17 (கி.பி 750-1258) பாத்திமிய சிற்றரசு தனது ஆதிக்கத்தை ஆரம்பித்தது.இது எகிப்தை மையமாக கொண்டு இயங்கியது. இது முழுக்க சியா சிந்தனைகளை கொண்ட அரசாக இருந்தது. அபூ முஹம்மது உபைதுல்லா அல்மஹதி மொரோக்கோ பகுதியில் இருந்த ஆட்சியாளரை தோற்கடித்து தனது அரசை ஆரம்பித்தார். கைரவான் பகுதியை வெற்றி கொண்டு அவர் தனது அரசை பாத்திமியாக்கள் அரசு என பிரகடனம் செய்தார்.எகிப்து அருகில் மஹ்தியா நகரை தலைநகராக கட்டமைத்தார். […]

மதுரை மாவட்டத்தில் ஆபத்தான முறையில் ஆட்டோக்கள் பயணம்..

மதுரை மாவட்டத்தில் அதிக பயணிகளை ஏற்றி ஆபத்தான முறையில் ஆட்டோக்கள் பயணம்.. மதுரை மாவட்டத்தில், பல ஊர்களில் ஆட்டோக்கள் மினி பஸ்களாக செயல்படுகிறது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மதுரை நகரில் பல இடங்களில் பஸ் நிறுத்தங்கள் அருகே பயணிகள் பஸ்ஸில் பயணிக்க முடியாத நிலையில், படிக்கட்டு அருகே நின்று இடையூறு செய்து வருகின்றனர் ஆட்டோ டிரைவர்கள். மேலும் ,அதிக அளவில் பயணிகளை ஏற்றி ஆட்டோக்கள் ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு வருகின்றனராம். மதுரை நகரில் கோரிப்பாளையம், […]

ராமேஸ்வரத்தில் இந்திய கடலோர காவல் படை அதிகாரிகளின் கயாகிங் சாகச பயணம் !

ராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் தீவை சுற்றி வரும் சவாலான கயாகிங் சாகச பயணம் இரண்டாவது நாளாக ஓலைக்குடா கடற்கரையில் இருந்து  துவங்கியது இந்த பயணத்தின் போது டெவில் பாயிண்ட் லைட் ஹவுஸ் வில்லுண்டு தீர்த்தம் போன்ற பல்வேறு  கடல் பகுதிகளை கடந்து சென்றனர் அவர்களின் பயணத்தின் இடையே பாம்பன் பாலத்தில் உள்ள ஐ சி ஜி எஸ் மண்டபத்தின் கட்டளை குழுவினர்   வரவேற்று உற்சாகப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து பாம்பன் தூக்கு பாலம் வழியாக […]

ஆலங்குளத்தில் காவல் துறை பொது மக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டிகள்; பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கல்..

ஆலங்குளத்தில் காவல் துறை பொது மக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டிகளை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் தொடங்கி வைத்து வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கினார். ஆலங்குளத்தில் காவல் துறை பொது மக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டிகளை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் தொடங்கி வைத்து வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கினார். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் உட்கோட்ட காவல்துறை மற்றும் பொதுமக்கள் […]

சமூக வலை தளங்களில் ஆபாசமாக பதிவிட்டநபர் கைது; தென்காசி மாவட்ட எஸ்.பி. அதிரடி..

சமூக வலைதளங்களில் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக பதிவிட்ட நபர் கைது; தென்காசி மாவட்ட எஸ்.பி.அதிரடி நடவடிக்கை.. தென்காசி மாவட்ட எஸ்.பி. சுரேஷ்குமார் அறிவுறுத்தலின் பேரில், சமூகவலை தளங்களில் ஆபாசமாக பதிவிட்ட நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தன்னை பழிவாங்கும் நோக்கத்திற்காக அடையாளம் தெரியாத நபர் தனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து முகநூல் பக்கத்தில் வெளியிட்டு பரப்பி வருவதாகவும், இதை தடுத்து புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த நபர் […]

ஃபார்வேர்ட் பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் கதிரவன் செய்தியாளர் சந்திப்பு..

ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முதலில் கோரிக்கை வைத்தவர்களே நாங்கள் தான். டிஎன்டி ஜாதி சான்றிதழ் வழங்குவதில் உள்ள குளறுபடிகளை சரி செய்யும் கட்சிக்கு நாங்கள் ஆதரவளிப்போம்; ஃபார்வேர்ட் பிளாக் கட்சி மாநில பொதுச் செயலாளர் கதிரவன் பேட்டி.. அகில இந்திய ஃபார்வேர்ட் பிளாக் மத்திய செயற்குழு கூட்டம் கல்கத்தாவில் நடைபெற்றது. எப்பொழுதும் போல் பொதுச் செயலாளராக கதிரவன் தொடர்வார் என்று அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. கூட்டணி குறித்து கதிரவன் தான் முடிவு எடுக்க வேண்டும் […]

“போதையில்லா மதுரை” விழிப்புணர்வு நிகழ்ச்சி; பரிசுகள் வழங்கல்..

போதையில்லா மதுரை என்ற தலைப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி; பரிசுகள் வழங்கல்.. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே நிலையூர் ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு போதை பற்றிய விழிப்புணர்வு மாணவர்கள் நல நிகழ்ச்சி நடைபெற்றது. போதை விழிப்புணர்வு அளித்து போதை இல்லாத மதுரையை உருவாக்குவோம் என்னும் நோக்கில் மாணவர்கள் நல விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் முன்னிலையில் நிலையூர் அரசு உயர்நிலைப் […]

அரசு பணிமனை பஸ் மோதி முதியவர் பலி; காவல்துறை விசாரணை..

அரசு பணிமனை பேருந்து மோதி முதியவர் பலி; காவல்துறை விசாரணை.. மதுரை பழங்காநத்தம் பசும்பொன் நகர் பகுதியில் இருந்து எலக்ட்ரிக் பைக்கில் முதியவர் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது அவர் பின்னால் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த இளைஞர் அவர் மீது மோதியதாக கூறப்படுகிறது. அப்போது நிலை தடுமாறிய முதியவர் மீது பழங்காநத்ததில் இருந்து பைபாஸ் சாலை வழியாக பணிமனை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பணிமனை பேருந்து பின் சக்கரத்தில் சக்கரம் ஏறி இறங்கியது. சம்பவ இடத்திலேயே […]

மின் இணைப்பு வழங்க லஞ்சம் பெற்ற மின்வாரிய போர்மேன் கைது; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி..

மதுரையில் மின் இணைப்பு வழங்க லஞ்சம் பெற்ற மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்ததில் பணிபுரியும் போர்மேனை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர். மதுரை ஞானஒளிவுபுரம் பகுதியை சேர்ந்த பிரிட்டோ சகாயராஜ் என்பவர் புதிய வீடு கட்டுவதற்காக தற்காலிக மின் இணைப்பு பெறுவதற்கு மதுரை விளாங்குடி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்து உள்ளார். அப்போது மின்வாரிய உதவிப் பொறியாளர் அலுவலகத்தில் பணிபுரியும் போர்மென் ஜான் கென்னடி என்பவர் 20ஆயிரம் லஞ்சம் கேட்ட பின்னர் 17 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தந்தால் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!