மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே செல்லம்பட்டி ஒன்றியம் முதலைக்குளம் ஊராட்சி முதலைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாயக்கால் இவருக்கு இரண்டு கால்களும் இல்லாத நிலையில் தனது அன்றாட வேலைகளை செய்வதற்கு சிரமப்பட்டு வந்தார் இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தனக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்க வேண்டி மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பத்துக்கும் மேற்பட்ட முறை மனு அளித்திருந்த நிலையில் எந்த ஒரு நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்படாமல் இருந்தது இதனை தொடர்ந்து […]
Category: செய்திகள்
உசிலம்பட்டி சமத்துவ புரத்தில் தந்தை பெரியார் 147 வது பிறந்தநாள் விழா
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் சாலையில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் தந்தை பெரியார் 147 வது பிறந்தநாள் விழா திராவிட கழகம் சார்பாக கொண்டாடப்பட்டது. சமத்துவ புரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து திராவிட கழகம் மாநில பொதுக்குழு உறுப்பினர் மன்னர் மன்னன் தலைமையில் ம தி மு க மாவட்ட செயலாளர் கே.பி.ஜெயராமன் நகரச் செயலாளர் ஜெ.டி. குமார் ஒன்றிய செயலாளர்கள் தெற்கு ஏ.ஓ.பெரியபாண்டி வடக்கு பி. பழனித்துரை மாநில பொதுக்குழு […]
புதிய பாலம் கட்ட பூமி பூஜை
பாலமேடு அருகே ரூ.3.60 கோடியில் புதிய பாலம் கட்ட பூமி பூஜை – எம்.எல்.ஏ வெங்கடேசன் தொடங்கி வைத்தார் மதுரை மாவட்டம் பாலமேடு அருகே வலையபட்டி ஊராட்சி ராமக்கவுண்டன்பட்டி கிராமத்தில் ரூ.3 கோடியே 60 லட்சம் மதிப்பில் சாத்தியார் அணை நீர் வரத்து ஆற்றில் புதிய பாலம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. இதில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். மாவட்ட திட்ட இயக்குனர் வானதி, […]
தெரு நாய்கள் கடித்து ஆடுகள் பலி
சோழவந்தான் அருகே முள்ளி ப்பள்ளம் கிராமத்தில் ஜெயராமன் என்பவரது ஆட்டு மந்தையில் புகுந்த தெரு நாய் கடித்ததில் ஐந்துஆடுகள் பலியான பரிதாபம் இறந்த ஆடுகளில் இரண்டு ஆடுகளை தெரு நாய் இழுத்துச் சென்றதால் விவசாயி வேதனை மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் தெரு நாய்களால் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர் குறிப்பாக பொதுமக்கள் நடமாடும் இடங்கள் விவசாய நிலங்களில் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக திரிவதால் பொதுமக்கள் […]
உசிலம்பட்டி நகராட்சியில் மீண்டும் பதவி ஏற்றுக்கொண்ட நகர் மன்ற சேர்மன் சகுந்தலா
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் நகர் மன்ற தலைவராக இருந்த சகுந்தலா என்பவரை கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு அரசு தகுதி நீக்கம் செய்தது., சகுந்தலா சென்னை உயர்நீதிமன்றத்தை நாடிய சூழலில், தமிழ்நாடு அரசின் தகுதி நீக்க உத்தரவை ரத்து செய்து கடந்த மாதம் 26 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது., இந்நிலையில் கடந்த 4 ஆம் தேதி மீண்டும் நகர் மன்ற தலைவராக பதவியேற்க வந்த சகுந்தலாவை பதவியேற்க அனுமதிக்காத சூழலில் நகர் மன்ற […]
மேட்டுப்பாளையத்தில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், அமமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.நகர அம்மா மக்கள் முன்னேற்றக் கூட்டம் சார்பில், கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் P. சரவணன் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் JH. ஹக்கீம், நகரச் செயலாளர் PS. கார்த்திகேயன், அவைத் தலைவர் சந்திரன், ஒன்றிய செயலாளர் ரங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்து, மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே உள்ள […]
மேட்டுப்பாளையத்தில் அண்ணா பிறந்தநாள் விழா.!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், அமமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நகர அம்மா மக்கள் முன்னேற்றக் கூட்டம் சார்பில், கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் P. சரவணன் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் JH. ஹக்கீம், நகரச் செயலாளர் PS. கார்த்திகேயன், அவைத் தலைவர் சந்திரன், ஒன்றிய செயலாளர் ரங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்து, மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் […]
வாடிப்பட்டியில்அண்ணா பிறந்தநாள் விழா.ஆர். பி. உதயகுமார் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்.
மதுரை மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பாக முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாள் விழா வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் தலைமை தாங்கி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மகேந்திரன், தமிழரசன், மாணிக்கம், கருப்பையா, மாநில பேரவைஇணை ராஜேஷ் கண்ணா, ஒன்றிய செயலாளர்கள் காளிதாஸ், ரவிச்சந்திரன்,கொரியர் கணேசன், அரியூர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பேரூர் […]
பாலமேட்டில் பேருந்து நிலையத்தை மறித்து மேடை போட்ட திமுகவினர்.
பாலமேட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்காக பேருந்து நிலையத்தை மறித்து மேடை போட்ட திமுகவினர் பேருந்து நிலையத்திற்குள் பேருந்து வர முடியாத நிலையில் பொதுமக்கள் அவதி மதுரை மாவட்டம் பாலமேட்டில் பல்வேறு இடங்களில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்காக பாலமேடு பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து மேடை அமைத்ததால் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் வர முடியாத நிலை ஏற்பட்டது இதனால் பாலமேட்டில் இருந்து பல்வேறு கிராம பகுதிகளுக்கும் மற்றும் நகர் பகுதிகளுக்கும் […]
விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மதுரை அலங்காநல்லூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பஞ்சமி நிலங்களை மீட்டுத் தர கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை அலங்காநல்லூரில் சோழவந்தான், உசிலம்பட்டி தொகுதிக்கு உட்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி மதுரை புறநகர் மேற்குமாவட்ட செயலாளர் ஊர்ச்சேரி சிந்தனை வளவன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கேட்டு கடையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மதுரை மாவட்டத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை ஏழை தலித் மக்களிடம் ஒப்படைப்பு செய்யவும், அலங்காநல்லூரில் தேசிய […]
உசிலம்பட்டியில் கள்ளர் பள்ளிகள் முன்னாள் மாணவர்கள் நலச் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
உசிலம்பட்டியில் கள்ளர் பள்ளிகள் முன்னாள் மாணவர்கள் நலச் சங்கம் சார்பில் அரசு கள்ளர் பள்ளிகள் மற்றும் கள்ளர் விடுதிகளுக்கு எதிரான அரசானையை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது* தமிழக அரசு கள்ளர் பள்ளிகள் மற்றும் கள்ளர் விடுதிகளை சமூக நீதி பள்ளி மற்றும் விடுதிகள் என பெயர் மாற்றம் செய்து வருகின்ற சூழலில் தேனி,திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற சூழலில் இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு […]
சோழவந்தான் திமுக பேரூர் செயலாளர் வழக்கறிஞர்க்கு சிறந்த பேரூர் செயலாளர் விருது
மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சோழவந்தான் திமுக பேரூர் கழக செயலாளராக இருப்பவர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ். இவரது கட்சி செயல்பாடுகளை பார்த்த திமுக தலைமை தென்மண்டல பேரூர் செயலாளர்கள் பட்டியலில் அவரை முதலிடம் அறிவித்து அவருக்கு விருது வழங்கி கௌரவிக்க இருக்கிறது. கரூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழா மாநாட்டில் இந்த விருது வழங்கப்படுகிறது. தெற்கு மண்டலத்தில் சிறந்த திமுக பேரூர் செயலாளராக அறிவிக்கப்பட்ட வழக்கறிஞர் வார்டுகவுன்சிலர் சத்ய பிரகாஷ் வணிகவரித்துறை […]
சோழவந்தான் மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் நந்தி பகவான் பிரதிஷ்டை விழா
மதுரை மாவட்டம் சோழவந்தான் மின்சாரம் வாரியம் அருகில் மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் நந்தி பகவான் பிரதிஷ்டை விழா நடைபெற்றது. பிரசாத் சர்மா சிவாச்சாரியார் கணபதி பூஜை உடன் தொடங்கி பூர்ணாஹூதியுடன் நிறைவுற்ற யாகசாலை பூஜையினை நடத்தினார். தொடர்ந்து புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து அம்பாள் சொக்கநாதர், நந்தி பகவான் ஆகியோருக்கு பால் தயிர் வெண்ணை நெய் இளநீர் மஞ்சள் பொடி மா பொடி திரவியம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பூசாரி வீராச்சாமி தீபாராதனை காட்டினார். பக்தர்களுக்கு […]
வாடிப்பட்டியில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க 9வது வட்டக்கிளை மாநாடு
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க 9வது வட்டக்கிளை மாநாடு நடைபெற்றது. கிளைத் தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெற்றி தமிழன் தீர்மானங்களை நிறைவேற்றினார். இணைச் செயலாளர் கணேசன் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்டச் செயலாளர் மனோகரன் தொடக்க உரையாற்றினார். கண்ணன் செயலாளர் அறிக்கையும், துரைப்பாண்டி பொருளாளர் அறிக்கையும் வாசித்தனர். மாவட்ட இணைச் செயலாளர் மகேந்திரன் ,மாவட்ட தலைவர் மணிமாறன் பேரணியை துவக்கி வைத்தனர். வட்டக்கிளை […]
சோழவந்தானில் முக்குலத்து தலைவர்களின் குரு பூஜை விழாக்களை புறக்கணிக்கும் வெங்கடேசன் எம் எல் ஏ
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட சோழவந்தான் பேரூர் மற்றும் வாடிப்பட்டி தெற்கு வடக்கு ஒன்றிய பகுதிகளில் முக்குலத்து தலைவர்களின் குருபூஜை விழாக்கள் பிறந்தநாள் விழாக்கள் நினைவு தின நிகழ்ச்சிகளை திமுகவை சேர்ந்த வெங்கடேசன் எம் எல் ஏ தொடர்ச்சியாக புறக்கணித்து வருவதாக இந்த சமுதாயத்தை சேர்ந்த நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்து உள்ளனர் சட்டமன்ற உறுப்பினர் என்பவர் அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவானவராக இருக்கும் நிலையில் தலைவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சிகள் மற்றும் நினைவு நாள் நிகழ்ச்சிகளில் பாரபட்சம் […]
40வது கண்தான விழிப்புணர்வு வாரவிழா..
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் 40-வது கண்தான விழிப்புணர்வு வாரவிழா நடந்தது. இவ்விழாவின் ஒரு பகுதியாக கண் பிரிவு வெளி நோயாளிகள் பகுதியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் இரா.ஜெஸ்லின் மற்றும் உறைவிட மருத்துவர் மரு.செல்வ பாலா ஆகியோர் தலைமையில், கண் மருத்துவர் ராஜலட்சுமி கண்தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முன்னதாக மருத்துவ மனை கண்காணிப்பாளர் மருத்துவர் இரா.ஜெஸ்லின் தலைமையில், மூத்த கண் மருத்துவர் மரு.ராஜலட்சுமி, மருத்துவ மனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் […]
உசிலம்பட்டியில் கோவில் உண்டியலில் கை வைத்த இரண்டு பேருக்கு காப்பு
உசிலம்பட்டி கிராம பகுதிகளில் தொடர்ந்து கோயிலை உடைத்து உண்டியல் திருடிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். உசிலம்பட்டி தாலுகா போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி பகுதியில் உள்ள ஆரியபட்டி கற்குவேல் அய்யனார் கோவில், கல்யாண கருப்பு கோவில் உண்டியல், குப்பணம் பட்டி கருப்பு கோவில் மணிகள் என கடந்த சில தினங்களாக உசிலம்பட்டி பகுதியில் கோவிலின் உண்டியல் மற்றும் கோவில் மணிகள் திருடப்பட்டது. இது திருட்டு […]
அம்மா ஆட்சியை அமைக்க, மீட்டெடுக்க சின்னம்மா தலைமையில் ஒன்றிணைவோம் – என செங்கோட்டையன் படத்துடன் உசிலம்பட்டியில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு .
முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியது, நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது., இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் பகுதி முழுவதும் ஒபிஎஸ், சசிக்கலா, டிடிவி தினகரன் மற்றும் செங்கோட்டையன் படங்களுடன் ஒபிஎஸ் ஆதரவாளர்கள் “தொண்டர்களின் எண்ணங்களை நிறைவேற்ற ஒன்றிணைவோம் – சின்னம்மா தலைமையில் ஒன்றிணைவோம்” என்ற வாசகத்துடனும் 2026 ல் அம்மா ஆட்சியை மீட்டெடுப்போம் என ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது., உசிலம்பட்டியின் முக்கிய வீதிகளான பேரையூர் ரோடு, […]
சோழவந்தான் அருகே கனமழையால்கழிவுநீர்கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் புகுந்த கழிவுநீர் தொற்றுநோய் பரவும் அபாயம்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி கிராமத்தில் மாயாண்டி கோவில் அருகே பொதுமக்கள் பயன்படுத்த முடியாத வகையில் கழிப்பறை நீண்ட நாட்களாக சேதமடைந்து விஷ பூச்சிகள் தங்கும் இடமாக இருந்து வந்தது. இதை இந்தப் பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை எடுத்துக் கூறியும் பயன்படுத்தப்படாத கழிப்பறை கட்டடத்தை அப்புறப்படுத்தவில்லை.இந்த நிலையில்கடந்த வாரம் கழிப்பறை கட்டிடம்இடிந்து கழிவுநீர் சாக்கடையில் விழுந்துவிட்டது.இதன் பின்னரும் ஊராட்சி நிர்வாகம் ஏனோ இதை அப்புறப்படுத்தவில்லை நேற்று பெய்த கனமழையில் கழிவு நீர் வாய்க்காலில் […]
மாநில நல்லாசிரியர் விருது .!மேட்டுப்பாளையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு பாராட்டு விழா.!!
மாநில நல்லாசிரியர் விருது பெற்ற தொழில் கல்வி ஆசிரியர் ஆனந்தகுமாருக்கு மேட்டுப்பாளையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு பாராட்டு விழா கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் – மாநில அளவிலான “நல்லாசிரியர்” விருதைப் பெற்ற தொழில் கல்வி ஆசிரியர் ஆனந்தகுமார் அவர்களுக்கு, இன்று மேட்டுப்பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு பாராட்டு விழா நடைபெற்றது. ஆசிரியர் தினமான செப்டம்பர் 5 அன்று, சென்னை நகரில் நடைபெற்ற மாநில விழாவில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலும், பள்ளிக்கல்வித் துறை […]
You must be logged in to post a comment.