ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே பல்லபச்சேரியில் ஊராட்சி மன்றத்தில் கிராமங்களில் அடிப்படை தேவைகளை சிறப்பாக பணிகளை செய்ததர்க்கு ஒன்பது விருதுகளை தாதனேந்தல் ஊராட்சிக்கு பெற்றுத் தந்த ஊராட்சி தலைவர் கோகிலா ராஜேந்திரனை பாராட்டி கௌரவிக்கும் விதமாக அனைத்து கிராம பொதுமக்கள் ஒன்றிணைந்து சுமார் 2.50 லட்சம் மதிப்புள்ள குதிரை ஒன்றை வாங்கி ஊராட்சித் தலைவருக்கு வழங்கினர். சுற்றியுள்ள கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். இவ்விழாவை தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகளான கபடி போட்டிகள் […]
Category: செய்திகள்
கீழக்கரையில் பி ஹியூமன் நடத்திய இரத்ததான முகாம் !
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தனியார் மஹாலில் பி ஹியூமன் மற்றும் கிரசண்ட் இரத்த வங்கி மற்றும் விம் பெண்கள் அமைப்பு இணைந்து நடத்தும் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக 18 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் சகினா பேகம் கலந்து கொண்டார். பி ஹியூமன் படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களால் துவங்கப்பட்டு கிடைக்கும் நேரங்களில் பொதுமக்களுக்கு சேவை பணிகளை செய்து வருகின்றனர். இளைஞர்களின் பணிகளை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் எஸ்டிபிஐ கட்சியின் கீழக்கரை […]
ராமநாதபுரத்தில் இரு சக்கர மோட்டார் வாகன பழுது நீக்குவோர்கள் நலச்சங்கத்தின் வெள்ளி விழா !
இராமநாதபுரம் மாவட்டம் தனியார் மஹாலில் இரண்டு சக்கர மோட்டார் வாகன பழுது நீக்குவோர்கள் நலச்சங்கத்தின் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு உறுப்பினர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழா மாவட்ட தலைவர் வரதராஜன் மாநில பொதுச் செயலாளர் குமாரவேலு ஆகியோர் தலைமையில் மாவட்ட பொருளாளர் கூரிதாஸ் மாநில செயற்குழு உறுப்பினர் சுந்தரபாண்டியன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சங்கத்தின் உறுப்பினர்கள் 80க்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இதில் அனைத்து மாவட்டங்களின் உள்ள சங்க நிர்வாகிகள் […]
ராமேஸ்வரம் மீனவர்களின் தொடர் உணரணவிரத்போராட்டம் தற்காலிகமாக வாபஸ் ! விரைவில் மீனவர்கள் தமிழக முதல்வரை சந்திக்க திட்டம் !!
ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்று இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை வெளிக்கடை சிறையில் உள்ள ஐந்து ராமேஸ்வரம் மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி கடந்த 16ஆம் தேதி முதல் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த 21ஆம் தேதி மீனவர்கள் தங்களது அடையாள அட்டை மற்றும் விசைப்படகு உரிமம் உள்ளிட்டவற்றை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரீடம் வழங்குவதற்காக ராமேஸ்வரம் மீன் பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் இருந்து […]
உச்சிப்புளியில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை கூட்டாய்வு !
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி கீழமான்குண்டு கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகள் கூட்டாய்வு நடைபெற்றது. திருப்புல்லாணி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் எம்.கே. அமர்லால் தெரிவித்ததாவது , விவாசாயிகளிடம் பசுந்தாள் உரப்பயிர்களில் ஒன்றான சணப்பையை தென்னையில் ஊடுபயிராக சாகுபடி செய்ய வேண்டும், தக்கைப்பூண்டு, கொழிஞ்சி, சணப்பை போன்ற பசுந்தாள் உரப்பயிர்களை சாகுபடி செய்து பூக்கும் பருவத்தில் மடக்கி உழும் போது உரமாகிறது. இவ்வாறு பூ பூக்கும் சமயத்தில் மடக்கி உழுவதால் காற்றிலுள்ள […]
தேசிய அளவிலான தடகள போட்டியில் தங்க பதக்கம் வென்ற பெண் காவலர்; நெல்லை காவல் ஆணையர் பாராட்டு..
தேசிய அளவிலான மூத்தோர் தடகள போட்டியில் தங்க பதக்கம் வென்ற பெண் காவலர்; நெல்லை காவல் ஆணையர் பாராட்டு.. தேசிய அளவிலான மூத்தோர் தடகள போட்டியில் தங்க பதக்கம் வென்ற பெண் காவலரை நேரில் அழைத்து நெல்லை காவல் ஆணையர் பாராட்டினார். தேசிய அளவில் 44 வது மாநில மூத்தோர் தடகள போட்டிகள் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 13-02-2024 முதல் 17-02-2024 வரை நடைபெற்றது. இதில் நெல்லை மாநகர காவல்துறை சார்பில் முதல் நிலை காவலர் 1515 […]
நெல்லையில் “கலைஞர் கண்ட தமிழ்நாடு” சிறப்பு சொற் பொழிவு; நினைவுப் பரிசு வழங்கல்…
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் கலைஞரும் தமிழும் – கலைஞர் கண்ட தமிழ்நாடு சிறப்பு சொற்பொழிவு; நினைவுப்பரிசு வழங்கல் முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசு அருங்காட்சியகத்தின் சார்பில் நடைபெற்று வரும் தொடர் இலக்கிய கூட்டத்தின் 32வது கூட்டத்தினை அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி தலைமையேற்று தொடங்கி வைத்தார். கலை பதிப்பகத்தின் ஆசிரியர் கவிஞர் பாப்பாக்குடி இரா.செல்வமணி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் ‘கலைஞரும் தமிழும்’ எனும் தலைப்பில் சுப்புலட்சுமியும், ‘கலைஞர் கண்ட தமிழ்நாடு’ எனும் தலைப்பில் […]
கடையநல்லூர் பகுதியில் ஜெயலலிதா 76வது பிறந்த தினவிழா; அதிமுகவினர் உறுதி மொழி ஏற்பு..
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றி பெற செய்வதே இந்நாளின் நோக்கம்; ஜெயலலிதா பிறந்தநாளில் அதிமுகவினர் உறுதி ஏற்பு.. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றி பெற செய்வதே நோக்கம் என்பதை மொழிந்து ஜெயலலிதா பிறந்த தினத்தில் அதிமுக சார்பில் உறுதி ஏற்கப்பட்டது. கடையநல்லூர் நகர அதிமுக 1-வது வார்டு சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாள் விழா குமந்தாபுரம் பகுதியில் கொடியேற்றத்துடன் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு […]
இராமநாதபுரத்தில் இரு சக்கர மோட்டார் வாகன பழுது நீக்குவோர்கள் நலச்சங்கத்தின் வெள்ளி விழா
இராமநாதபுரம் மாவட்டம் தனியார் மகாவில் இரண்டு சக்கர மோட்டார் வாகன பழுது நீக்குவோர்கள் நலச்சங்கத்தின் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு உறுப்பினர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழா மாவட்ட தலைவர் வரதராஜன் மாநில பொதுச் செயலாளர் குமாரவேலு ஆகியோர் தலைமையில் மாவட்ட பொருளாளர் கூரிதாஸ் மாநில செயற்குழு உறுப்பினர் சுந்தரபாண்டியன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சங்கத்தின் உறுப்பினர்கள் 80க்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அனைத்து மாவட்டங்களின் உள்ள சங்க நிர்வாகிகள் மற்றும் […]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த தினவிழா..
ராஜபாளையத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மற்றும் தெற்கு நகர, அதிமுக சார்பில் முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 76வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நகர செயலாளர்கள் முருகேசன், தலைமையில் குமரன் தெரு MGR சிலை அருகில் ஜெயலலிதாவின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்பு மற்றும் பிரியாணி வழங்கி […]
கோவையில் 10 நாட்கள் ஆதியோகி ரத யாத்திரை; 35,000 கி.மீ யாத்திரை மார்ச் 6-ம் தேதி நிறைவு..
மஹா சிவராத்திரியை முன்னிட்டு கோவையில் 10 நாட்கள் ஆதியோகி ரத யாத்திரை; 35,000 கி.மீ யாத்திரை மார்ச் 6-ம் தேதி நிறைவு.. மஹாசிவராத்திரியை முன்னிட்டு தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் பிப்.26-ம் தேதி முதல் மார்ச் 6-ம் தேதி வரை ஆதியோகி ரத யாத்திரை கோவையில் நடைபெற உள்ளது. இந்த யாத்திரையின் மூலம் பக்தர்கள் தங்கள் வீட்டின் அருகிலேயே ஆதியோகியை தரிசித்து அவரின் அருளை பெற முடியும். கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோக […]
3 லட்சம் வயிறுகளின் பசியாற்றிய ‘மதுரையின் அட்சய பாத்திரம்’ நெல்லை பாலு..
மூன்று லட்சம் வயிறுகளின் பசியாற்றிய ‘மதுரையின் அட்சய பாத்திரம்’ நெல்லை பாலு.. இது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மதுரையின் பரபரப்பான பகுதி. அங்கு கார் ஒன்று வருகிறது. அதன் வருகையை வழி மேல் விழி வைத்து காத்திருந்தது போல செல்கிறார்கள் சிலர். அதிலிருந்து இறங்கும் ஒரு நபர் காரில் அடுக்கி வைத்திருக்கும் உணவு டப்பாக்களை கொடுக்கிறார். வாஞ்சையோடும் கண்களில் நன்றியோடும் பசி தீர்ந்த மகிழ்வோடும் வாங்கி செல்கிறார்கள் அந்த மக்கள். உணவைக் கொடுத்த அந்த நபர் […]
பரவையில் தனியாருக்கு சொந்தமான இடத்தை போலி பத்திர பதிவு செய்து மாற்றியதாக பேரூராட்சி நிர்வாகம் மீது புகார்..
பரவையில் தனியாருக்கு சொந்தமான இடத்தை போலியாக பத்திர பதிவு செய்து மாற்றியதாக பேரூராட்சி நிர்வாகம் மீது புகார் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ளது ஆண்டிபட்டி பங்களா. இங்கு செல்லையா மகன் மூர்த்தி என்ற பங்களா C.மூர்த்தி என்பவர் பல்வேறு தொழில் நிறுவனங்கள் வைத்து நடத்தி வருகிறார். மேலும் நிலத்தை வாங்கி விற்கும் தொழிலான ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவர் பரவை பேரூராட்சிக்கு உட்பட்ட அதிசயம் தீம் பார்க் அருகில் மதுரையைச் சேர்ந்த சொக்கலிங்கம் […]
பரவை பேரூராட்சியில் இலவச சணல் பைகள் தயாரிக்கும் பயிற்சி..
பரவை பேரூராட்சியில் இலவச சணல் பைகள் தயாரிக்கும் பயிற்சி.. மதுரை மாவட்டம், பரவை பேரூராட்சி சமுதாய கூடத்தில் ஜி.எச்.சி.எல். பவுண்டேஷன் மீனாட்சி மில்ஸ் பெட்கிராட் இணைந்து பெண்களுக்கு சணல் பைகள் தயாரித்தல் பயிற்சி துவக்க விழா நடந்தது. இந்த விழாவில், பெட்கிராட் நிர்வாக இயக்குனர் சுப்புராம் தலைமை தாங்கினார். தலைவர் கிருஷ்ணவேணி, பொருளாளர் சாராள் ரூபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் அங்குசாமி வரவேற்றார். பரவை பேரூராட்சித் தலைவர் கலா மீனா ராஜா குத்துவிளக்கேற்றி வைத்து […]
வாசன் கண் மருத்துவ மனையில் அதி நவீன வசதிகளுடன் கூடிய அறுவை சிகிச்சை வசதிகள் துவக்கம்..
திருப்பரங்குன்றம் அருகே ஹார்வி பட்டியில் செயல்படும் வாசன் கண் மருத்துவமனையில் அதி நவீன வசதிகளுடன் கூடிய அறுவை சிகிச்சை அரங்கு புதிதாக நிறுவப்பட்டுள்ளது. இங்கு இரத்த அழுத்த நோய், சர்க்கரை நோயாளிகளுக்கு புதிய அதிநவீன லேசர் இயந்திரம் மூலம் 2 மணி நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஹார்வி பட்டி வாசன் ஐ கேர் மருத்துவமனை உள்ளது. இந்த புதிய அதி நவீன லேசர் வசதிகளுடன் கூடிய அறுவை சிகிச்சை அரங்கை […]
மாநில அளவிலான புதிய அறிவியல் கண்டுபிடிப்பு; அரசு பள்ளி மாணவர்கள் சாதனை..
திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் நடந்த மாநில அளவிலான அறிவியல் கண்டுபிடிப்புகளில் விருதுகளை தட்டிச் சென்ற அரசுப் பள்ளி மாணவர்கள்; டெல்லியில் நடைபெறும் தேசிய அளவிலான அறிவியல் போட்டிகளுக்கும் 8 மாணவர்கள் தேர்வு.. மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான மாணவர்களில் அறிவியல் கண்டுபிடிப்புகள் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மைய நிர்வாக இயக்குநர் லெனின் தமிழ்க்கோவன் பரிசுகளை வழங்கினார். உடன் மாநில ஒருங்கிணைப்பாளர் சிதம்பரம், கல்லூரி முதல்வர் […]
நெல்லை தென்காசி உள்ளிட்ட தென் மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.201.67 கோடி நிவாரண நிதி; அரசாணை வெளியீடு..
நெல்லை தென்காசி உள்ளிட்ட தென் மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.201.67 கோடி நிவாரண நிதி; தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.. தென் மாவட்டங்களில் ஏற்பட்ட அதி கனமழையால் பாதிக்கப்பட்ட மொத்தம் 2,60,909 விவசாயிகளுக்கு ரூ.201.67 கோடி நிவாரண நிதி வழங்கிட தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது பற்றிய செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் வரலாறு காணாத அதிகனமழைப் பொழிவு ஏற்பட்டது. தென் மாவட்டங்களின் பல பகுதிகளில் […]
தென்காசி மாவட்டத்தில் ரூ.28 கோடியே 60 இலட்சம் மதிப்பில் கட்டடங்கள் மற்றும் திட்டப் பணிகள்; தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்து அடிக்கல் நாட்டினார்..
தென்காசி மாவட்டத்தில் ரூ.28 கோடியே 60 இலட்சம் மதிப்பில் புதிய கட்டடங்கள் மற்றும் திட்டப் பணிகள்; தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்து அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு முதலமைச்சர் தென்காசி மாவட்டத்தில் ரூ.28 கோடியே 60 இலட்சம் மதிப்பிலான புதிய கட்டடங்கள் மற்றும் புதிய திட்டப்பணிகளை 24.02.2024 அன்று செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரைச் சாலை, நெம்மேலியில் காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்து அடிக்கல் நாட்டினார். தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை நகராட்சியில் […]
மேட்டுப்பாளையத்தில் இலவச பல் சிகிச்சை முகாம் !
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ராமப்பா ரோடு உழைப்பாளர் மார்க்கெட் அருகில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷின் வித்யாலயா பல் மருத்துவமனை மற்றும் கோயம்புத்தூர் CITU பொது தொழிலாளர் சங்கம் இணைந்து இலவச பல் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமில் பல் மருத்துவர்கள் கலந்து கொண்டு நவீனமுறையில் சிகிச்சை அளித்தனர். தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -2 கப்ளிசேட் அப்பாஸிய பேரரசு -21 (கி.பி 750-1258) சிலுவைப் போருக்கான காரணங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும். சிலுவைப்போர் என்பது இரண்டு நூற்றாண்டுகள் நடந்த மிக நெடிய போராகும். கி.பி 1097 துவங்கி 1291 வரை கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் தொடர்ந்து நடந்த நீண்ட நெடிய போராகும். இந்தப் போர்களுக்கு சமூக ரீதியான, சமய ரீதியான, அரசியல் ரீதியான, பொருளாதார ரீதியான, காரணங்கள் இருந்தது. முஸ்லீம்களின் ஆட்சி ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா என்று […]