டெல்லியில் 18 வயது நிரம்பிய பெண்கள் அனைவருக்கும் மாதம் ₹1,000 உதவித்தொகை வழங்கப்படும் என அம்மாநில பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.2024-25 நிதியாண்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், இதற்காக பட்ஜெட்டில் 2000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று சட்டசபையில் டெல்லி நிதியமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார்.முக்யமந்திரி மகிளா சம்மன் யோஜனா என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தில், 18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் பயனடைவர்.அதே சமயம், ஓய்வூதியம் மற்றும் டெல்லி அரசின் வேறு திட்டங்களில் பலனடைபவர்கள், அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்களுக்கு இத்திட்டத்தின்மூலம் […]
Category: செய்திகள்
காஸாவில் மக்கள் மோசமான துன்பத்தை அனுபவித்து வருகின்றனர். உடனடி சண்டை நிறுத்தம் அவசியம!-கமலா ஹாரிஸ்..
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஆறு வாரகால போர் நிறுத்தத்திற்கு பாலஸ்தீன போராளி அமைப்பான ஹமாஸ் உடனடியாக ஒப்புக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அதே சமயத்தில் காஸாவில் மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் தவிக்கும் அப்பாவி மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் விநியோகத்தை அதிகரிக்க வேண்டும் என்று இஸ்ரேலை அவர் கட்டாயப்படுத்தியுள்ளார். இஸ்ரேல்-காஸா பிரச்சினையில் இதுவரை எந்தவொரு அமெரிக்க தலைவரும் வலுவாகக் கருத்துரைக்கவில்லை. தற்போது திருமதி கமலா ஹாரிஸ், இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்துள்ளதோடு மக்கள் […]
கை நழுவியது கரும்பு விவசாய சின்னம்; ஏன், எப்படி, எதற்காக!- என்ன செய்ய போகிறார் சீமான்.?
தமிழ்நாட்டில் கடந்த தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட கரும்பு விவசாயி சின்னம், பாரதிய பிரஜா அய்க்யாதா கட்சி (BPA) என்ற கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இதனால், கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் அக்கட்சி சார்பில் முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் போது, நாம் தமிழர் கட்சி தரப்பில், பல ஆண்டுகளாக பல தேர்தலில் கரும்பு […]
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -3 கப்ளிசேட் உஸ்மானிய பேரரசு -4 ( கி.பி 1299-1922) மன்னர் உஸ்மானின் எளிய மாளிகையில் மருத்துவர்கள் சூழ்ந்து இருந்தனர். நாடித் துடிப்பு குறைந்து கொண்டே வந்தது. நினைவுகள் விட்டு விட்டு வந்தது. மன்னருக்கு காதுகளில் சில ஒலிகள் ரிங்காரமிட்டது. அரசை, மக்களை நேசித்த ஒரு ஆட்சிதலைவருக்கு இறுதிநிலையிலும் அதே மனநிலையே இருந்தது.அவரின் பேரரசின் துவக்க காலங்களும் தனது தாத்தா தனக்கு சிறுவயதில் கூறிய நிகழ்வுகளும் மனதில் கண்ணாடி போல் ஜொலித்தன. தனது […]
முதலியார் பட்டி அரசு மேல் நிலை பள்ளிக்கு புதிய இருக்கைகள் அன்பளிப்பு..
சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் முதலியார் பட்டி அரசு மேல் நிலைப் பள்ளிக்கு இருக்கைகள் வழங்கல்.. தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள முதலியார் பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில்,, சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் புதிய இருக்கைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அலாவுதீன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு, துணைத் தலைவர் பாசுல் அஷ்ரப், எஸ்எம்சி தலைவி ஜன்னத், விஜயலஷ்மி, வார்டு உறுப்பினர் காலித் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் முத்துராஜா […]
விஜயகாந்த் நினைவிடத்தை காண வருவோருக்கு சமபந்தி விருந்து!-இறந்தும் பசியாற்றும் கேப்டன் என தொண்டர்கள் நெகிழ்ச்சி..
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனர், முன்னாள் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து விஜயகாந்த் உடல் அக்கட்சி தலைமையகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது. இவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு பொது மக்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். விஜயகாந்த் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே அவருக்கு மணி மண்டம் கட்ட வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில், […]
தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் நாளை (திங்கட்கிழமை) கண்டன ஆர்பாட்டம்!-எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறிய விடியா திமுக அரசைக் கண்டித்தும் நாளை (திங்கட்கிழமை) அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் அ.தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். நாளைய போராட்டத்தோடு நிச்சயமாக இது நின்றுவிடப்போவதில்லை. தமிழ்நாட்டில் கடைசி துளி போதைப்பொருள் ஒழியும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும். பெற்றோர்களே- இந்த தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக […]
இங்கு போட்டியே திமுக vs அதிமுக தான் களத்தில் இல்லாத பாஜக பற்றி பேச்சே இல்லை!-அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சுளீர் பேச்சு..
இங்கு போட்டியே திமுக vs அதிமுக தான் களத்தில் இல்லாத பாஜக பற்றி பேச்சே இல்லை!-அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சுளீர் பேச்சு.. தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாளையொட்டி, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது; முதன்முதலில் சவுண்ட் இன்ஜினியர் போஸ்டிங் கிடைத்து இருந்தால், இப்போது ரிட்டயர்ட் ஆகி இருப்பேன். அப்படி இருந்தால் உங்களை எல்லாம் பார்த்திருக்க முடியாது. […]
காதல் மனைவியுடன் பா.ஜ.க. பிரமுகர் தற்கொலை- வத்தலக்குண்டு அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருணாசலபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). இவர் பா.ஜ.க. கட்சியின் மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர். மேலும் இவர், வத்தலக்குண்டுவில் செல்போன் கடை நடத்தி வந்தார். அவருடைய மனைவி சிவதர்ஷினி (29). ஈரோட்டை சேர்ந்த இவரை, காதலித்து மணிகண்டன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு சாய்சைலேஷன் (10) என்ற மகனும், சாய்சிரஞ்சி (4) என்ற மகளும் உள்ளனர். தற்போது மணிகண்டன், பட்டிவீரன்பட்டி அருகே உள்ள எம்.வாடிப்பட்டியில் சொந்தமாக வீடு கட்டி குடும்பத்துடன் […]
தமிழ்நாட்டில் இன்று 56.34 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது..
போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தமிழகம் முழுவதும் நடைபெறறது. தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என 43,051 மையங்களில் சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது.இந்த மையங்களில் 57 லட்சத்து 84 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.அதன்படி, சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் […]
இராஜபாளையம் திமுக இளைஞர் அணி சார்பில் இரத்த தானம்..
முதல்வர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இராஜபாளையத்தில் திமுக இளைஞர் அணியினர் இரத்த தானம் செய்தனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் திமுகவினர் ஏழை எளிய மக்களுக்கு வேஷ்டி, சேலை, அன்னதானம் வழங்குதல், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்குதல், மேல் நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குதல் என பல்வேறு வகைகளில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ராஜபாளையம் நகர திமுக இளைஞர் அணி சார்பில், தமிழக முதல்வர் […]
சமத்துவ எழுச்சி விரதம் என்ற பெயரில் உசிலம்பட்டியின் 3 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் 3 பிரச்சனைகளை முன்வைத்து சமத்துவ எழுச்சி விரதம் என்ற பெயரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதில் தேவர் சிலை அருகே இடிக்கப்பட்ட பேருந்து நிலையம்; கட்டிமுடிக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டுக் கொண்டு வர வேண்டும் மற்றும் அரசுக்கு சொந்தமான வணிக வளாக கடைகளை இடித்துவிட்டு புதிய வணிக வளாகம் கட்டும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மார்க்கெட் கடை வியாபாரிகள் அதனை சார்ந்த தொழிலாளர்கள் 5200 குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கு […]
திருப்பாலைக்குடியில் பேலியோ சொட்டு மருந்து முகாம் !
ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட திருப்பாலைக்குடி கிழக்குத் தெருவில் அமைந்துள்ள சத்துணவு மையத்தில் 28 வது ஆண்டு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆர்எஸ் மங்கலம் அதிமுக சிறுபான்மை நலபிரிவு ஒன்றிய செயலாளர் பஜருல் ஹக் கலந்து கொண்டு தன் பிள்ளைக்கு போலியோ சொட்டு மருந்து ஊற்றினார் . மேலும் போலியோ நோயை இந்தியாவிலிருந்து முழுமையாக ஒழிப்பதற்கு ஆண்டுதோறும் தீவிரமான செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இம்முகாமில் அமைப்பாளர் நிர்மலா உதவியாளர் […]
மதுரை மீனாட்சி பஜார் பகுதியில் கார் மோதிய விபத்து; பெண் சம்பவ இடத்தில் உயிரிழந்த சோகம்..
மதுரை மீனாட்சி பஜார் பகுதியில் கார் மோதிய விபத்து; பெண் சம்பவ இடத்தில் உயிரிழந்த சோகம்.. மதுரை கரிமேடு பகுதியில் உள்ள மோதிலால் மெயின் ரோடு பகுதியில் வசித்து வருகிறார் பாத்திமா மேரி. அண்ணன் அந்தோணி செல்வராஜ் உடன் ரேஷன் கடையில் பொருள்கள் வாங்க கைரேகை வைப்பதற்காக வந்துள்ளார். அப்போது பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள மீனாட்சி பஜார் பகுதியில் சாலையை கடக்கும் பொழுது நான்கு சக்கர வாகனத்தில் ராஜசேகர் என்பவர் தனக்கன்குளம் பகுதியில் இருந்து […]
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் அவசர மத்திய செயற்குழு கூட்டம் ! அனைத்து மாவட்ட தலைநகரில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு !!
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் திருவள்ளூரில் அவசர மத்திய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்று வரும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை மேலும் எழுச்சியாகத் தொடர்வது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஐந்து நாட்களாக காலவரையற்ற போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் அநேக கோரிக்கைகள் மீது தீர்வு காணப்படாததால், வருகின்ற திங்கள் கிழமை (04.03.2024) மாலை 5.00 மணிக்கு அனைத்து மாவட்டத் தலைநகரில் கண்டன ஆர்ப்பாட்டம் […]
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -3 கப்ளிசேட் உஸ்மானிய பேரரசு -3 ( கி.பி 1299-1922) மங்கோலிய படைவீரர்கள் கொடூரமான வர்களாக இருந்தார்கள். மங்கோலிய படைகள் புகும் எல்லா நாடுகளும் நாசப்படுத்தபட்டன. பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். முதியவர்கள், குழந்தைகள் என எந்த இரக்கமும் இல்லாமல் மக்களை கொன்று குவித்துவிடுவார்கள். சொத்துக்களை தீவைத்து கொளுத்திவிடுவர். இதுபோன்ற கொடுமைகளை செய்துவிட்டு அந்த பகுதியில் எந்த நிர்வாகமோ, ஆட்சிகளோ அமைக்காமல் விட்டு விட்டு அடுத்த பிரதேசத்திற்கு நகர்ந்து விடுவர். மங்கோலிய படைகள், ஓடுகிற மக்களை […]
மதுரையில் நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் தீவிபத்து; இருசக்கர வாகனங்கள் சேதம்..
மதுரையில் நள்ளிரவில் தீவிபத்து; சாலையில் நின்று கொண்டிருந்த 6 இருசக்கர வாகனம் தீயில் கருகி சேதமடைந்தன; போலீசார் விசாரணை மதுரை எல்லீஸ் நகர் போடி லைன் பகுதியில் உள்ள சூர்யா அப்பார்ட்மெண்ட்டில் வசிக்கும் மணி என்பவரின் மகன் முத்துராஜ் (வயது 26) லோடுமேன் ஆக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் நேற்று இரவு மணி மற்றும் முத்துராஜ் ஆகிய இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் முத்து ராஜ் தந்தையிடம் கோபித்துக் கொண்டு வீட்டின் அருகே நின்று சிகிரெட் குடித்து […]
மதுரை விமான நிலையம் சுற்று வட்டார பகுதிகளில் தேசிய போலியோ தடுப்பு சிறப்பு முகாம்..
மதுரை விமான நிலையம் சுற்று வட்டார பகுதிகளில் தேசிய போலியோ தடுப்பு சிறப்பு முகாம்.. மதுரை திருப்பரங்குன்றம் மதுரை விமான நிலையம் வட்டார பகுதிகளில் “தேசிய போலியோ” தடுப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. திருப்பரங்குன்றம் பகுதிகளில் 107 போலியோ சொட்டு மருந்து முகாமில் 472 களப்பணியாளர்கள் மூலம் பகல் 12 மணி வரை 8637 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. மதுரை மாவட்டம் திருப்பங்குன்றம் பகுதிகளில் தேசிய போலியோ சிறப்பு முகாம் மதுரை மாவட்ட சுகாதார அலுவலர் குமரகுருபரன் அறிவுறுத்தலின் […]
நூலக துறையில் சாதனை புரிந்த தென்காசி நூலகர் பிரமநாயகம் நூலகப் பணி நிறைவு; பொது மக்கள் வாழ்த்து..
நூலக துறையில் சாதனை புரிந்த தென்காசி நூலகர் பிரமநாயகம் நூலகப் பணி நிறைவு; பொது மக்கள் வாழ்த்து.. நூலக துறையில் அளப்பரிய சாதனை புரிந்த தென்காசி நூலகர் பிரமநாயகம் பணி நிறைவு பெற்றார். அவரது பணி நிறைவு விழாவில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டு பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர். தென்காசி மாவட்டத்தில் நூலகர் பிரமநாயகம், நூலகத்துறை அரசு போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் என மேற்கொண்ட முன்னெடுப்புகள் பணிகள் மிகவும் சிறப்பானவை. தென்காசி நூலகர் […]
தென்காசி நகர திமுக சார்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த தின விழா; 10 குழந்தை செல்வங்களுக்கு தங்க மோதிரம்..
தென்காசியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த தின விழா; அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கல்.. தென்காசியில் நடந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த தின விழாவில், மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது. தென்காசியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 71-வது பிறந்தநாள் விழா தென்காசி நகர திமுக செயலாளரும், நகர்மன்ற தலைவருமான ஆர். சாதிர் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில், தென்காசி […]
You must be logged in to post a comment.