பால் தினகரனின் மனைவி இவாஞ்சிலின் பேச்சுக்கு எதிராக ஜேம்ஸ் வசந்தன் எழுப்பிய அடுக்கடுக்கான கேள்வி.. சமீபத்தில் பால் தினகரனின் மனைவியான இவாஞ்சலினின் பேச்சு கேலிக்கு உள்ளான நிலையில் இது குறித்து ஜேம்ஸ் வசந்தன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார். இவாஞ்சலின் பால் தினகரன் ஒரு வீடியோவில், தங்கள் குடும்பம் கனடாவில் இருக்கும் போது அதிகமாக கஷ்டப்பட்டதாகவும் அந்த நேரத்தில் சொந்த வீடு இல்லாமல் அங்கு ஒரு ஹோட்டலில் வாடகைக்கு ரூம் எடுத்து தங்கி […]
Category: செய்திகள்
71 ஆவது உலக அழகியாக மகுடம் சூடினார் செக் குடியரசை சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா..
71 ஆவது உலக அழகியாக மகுடம் சூடினார் செக் குடியரசை சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா.. இந்தியாவில் கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் இந்த அழகி போட்டி தொடங்கி நடைபெற்று வந்தது. 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்த அழகி போட்டி இந்தியாவில் மீண்டும் நடைபெற்றது. மும்பையில் உலக அழகி போட்டியின் இறுதி போட்டி நேற்று (மார்ச் 9) நடந்தது. 71ஆவது உலக அழகியாக செக் குடியரசு நாட்டை சேர்ந்த பெண் தேர்வு. கிறிஸ்டினா பிஸ்கோவா உலக அழகியானார். […]
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -3 கப்ளிசேட் உஸ்மானிய பேரரசு -10 (கி.பி.1299-1922) கிறிஸ்தவ ஐரோப்பிய நாடுகளில் யூதர்கள் கொடுமைப் படுத்தப்பட்டனர். ஆகவே யூதர்கள் உஸ்மானிய கிலாபத் பகுதிகளில் வந்து தஞ்சம் அடைந்தனர். உஸ்மானிய முஸ்லீம் அரசு யூதர்களை அரவணைத்தது. யூதர்களுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தது. யூதர்களுக்கு நிறைய சலுகைகளை செய்து கொடுத்தது. கிறிஸ்தவ தேவாலயங்கள் பாதுகாக்கப்பட்டன. பாதிரியார்களுக்கு அரசாங்கத்தின் சலுகைகள் வழங்கப்பட்டன. ஐரோப்பிய கிறித்தவ மன்னர்களின் பகுதிகளில் ஏராளமான வரிகள் வசூலிக்கப்பட்டன. உஸ்மானிய இஸ்லாமிய ஆட்சியில் […]
ஈஷாவில் பண்பாட்டை பறைச்சாற்றும் ‘தமிழ் தெம்பு’ திருவிழா..
ஈஷாவில் பல்லாயிரம் ஆண்டு பண்பாட்டை பறைச்சாற்றும்‘தமிழ் தெம்பு’ திருவிழா; ஆதியோகி முன்பு மார்ச் 17-ன் தேதி வரை தினமும் நடைபெறும் உலகின் தொன்மையான ஆன்மீக கலாச்சாரமான தமிழ் கலாச்சாரத்தின் பல்வேறு அம்சங்களை கொண்டாடி மகிழும் விதமாக ‘தமிழ் தெம்பு’ என்னும் மண் சார்ந்த பண்பாட்டு கலை திருவிழா கோவை ஈஷா யோக மையத்தில் மார்ச் 17-ம் தேதி வரை தினமும் நடைபெற உள்ளது. மஹாசிவராத்திரி விழாவை தொடர்ந்து 9 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தமிழர்களின் ஆன்மீகம், அறிவியல், […]
மதுரையில் அதிநவீன ஏசி பேருந்து; வியர்வையில் குளித்த பயணிகள்..
மதுரையில் அதிநவீன ஏசி பேருந்து; வியர்வையில் குளித்த பயணிகள்.. மதுரை பயணி ஒருவரின் ஏசி அனுபவம்: மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து திருமங்கலம் நோக்கி TN58N2568 என்கின்ற அரசு பேருந்து நேற்று காலை 9.50 மணி அளவில் பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பியது. திருமங்கலத்திற்கு ரூபாய் 40 கட்டணம் செலுத்தினோம். பேருந்து ஏறிய பிறகு தான் தெரிய வருகிறது இது செயற்கையான ஏசி பேருந்து இல்லை எனவும், கதவை திறந்து வைத்து ஏசி போடும் பேருந்து என […]
கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் 44-வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு பரிசளிப்பு விழா !
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் 44-வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஏ.சேக்தாவூது தலைமையில் முகமது சதக் அறக்கட்டளையின் தலைவர் முகமது யூசுப், செயலாளர் ஹாஜியாணி ஷர்மிளா, செயல் இயக்குனர் ஹமீது இப்ராஹிம், ஹபீப் முஹம்மது ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மின்னியல் துறையின் தலைவர் எஸ்.பி.நாகராஜன் வரவேர்ப்புரை வழங்கினார். இவ்விழாவில் பாலிடெக்னிக் கல்லூரியின் முன்னாள் மாணவரும், ராமநாதபுரம் ஸ்ரீ ரமணா கட்டட கட்டுமான தனியார் […]
முடிவுக்கு வந்தது இழுபறி; திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கீடு..
தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகளுக்கு முடிந்துவிட்டன. இன்று மாலையில் காங்கிரஸ் மேலிட நிர்வாகிகள் தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவை சந்தித்து உள்ளனர். அதன்படி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தித்துள்ளனர்.கே.சி.வேணுகோபால், அஜோய்குமார், முகுல் வாஸ்னிக், செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் அண்ணா அறிவாலயம் வந்தனர்.தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் அறிவாலயம் வந்துள்ளனர்.இதற்கிடையில் காங்கிரஸ் கேட்கும் மொத்த தொகுதிகள் குறித்தும், எந்தெந்த […]
தமிழ்நாட்டில் எங்களுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் தான் வாக்கு வங்கி அதிகம்!- ஜி.கே.வாசன் நம்பிக்கை..
தமிழ்நாட்டில் எங்களுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் தான் வாக்கு வங்கி அதிகம் இருப்பதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் எம்பி தெரிவித்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குழு தொடர்பான தேர்தல் குழு கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் தமாகா தலைவர் ஜிகே வாசன் பங்கேற்றார் ஆலோசனை கூட்டம் நிறைவுற்ற பின்னர், ஜிகே வாசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது; இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் […]
128 ஆண்டுகள் பழமையான திருநெல்வேலி ஊழியஸ்தானம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சார்பில் மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது..
128 ஆண்டுகள் பழமையான திருநெல்வேலி ஊழியஸ்தானம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சார்பில் மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.. திருநெல்வேலி ஊழியஸ்தானம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சார்பில் சர்வதேச மகளிர் தினம் மற்றும் மான்புறு மங்கை விருதுகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. ஆசிரியர் பயிற்சி முதல்வர் முனைவர் ஜெயமேரி தலைமை தாங்கினார். முனைவர்.ஃபிரியா வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி மாவட்ட இளைஞர் நீதிக் குழுமம் உறுப்பினர் வழ. ஆரோக்கிய மேரி.எம்.எல். கலந்து கொண்டு சமூகத்தில் பெண்களின் […]
உடல்களை தேடும் ஆரோக்கியம்; ரமலான் ஒரு ஆன்மீக பயிற்சி களம்! அழகான ஆலோசனைகள் வழங்கும், கவிஞர் கப்ளிசேட்..
ரமலான் ஆன்மாவை வலுப்படுத்துகிறது. கட்டுப்பாட்டுடன் வாழ்க்கையை போதிக்கிறது. ரமலான் ஒரு ஆன்மீக பயிற்சிகளம். ரமலான் வழங்கும் ஆரோக்கியங்கள் நம்மை ஆச்சரியப் படுத்துகிறது. நாம்தான் கண்டு கொள்வதே இல்லை. சஹர் உணவை முடிந்தவரை பிற்படுத்தியும், நோன்பு திறப்பதை முடிந்தவரை முற்படுத்தியும், இஸ்லாமிய வழிகாட்டல் நமக்கு சொல்லித் தருகிறது. இன்றைய மருத்துவ உலகம் அதையே வழிமொழிகிறது. சூரிய உதயத்திற்கு நெருக்கமாக உண்பதையும், சூரியன் மறைந்தவுடன் உண்பதையும் (இஃப்தார் நேரம்) ஆரோக்கியம் என்கிறது மருத்துவ உலகம். நமது சஹர் உணவாக Protein […]
மதுரையில் உலக மகளிர் தின விழா; முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் பங்கேற்று சிறப்புரை..
ஆண்கள் நேரத்துக்கு தகுந்த மாதிரி சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி மாறி கொள்வார்கள். பெண்கள் அப்படி மாற்றிக் கொள்ள மாட்டார்கள் என மதுரையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் ஆர்பி. உதயகுமார் பேச்சு மதுரை காந்தி மியூசியம் அருகே உள்ள யூனியன் கிளப் கூட்டரங்கில் வைத்து உலக மகளிர் தின விழா பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார், சரவணா பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை […]
தங்கத்துக்கு என்ன ஆச்சு.? ஏன் இப்படி பறக்குது..
ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 49 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனை, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.360 அதிகரிப்பு. ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 49,200 ரூபாய்க்கு விற்பனை. கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.6,150க்கு தங்கம் விற்பனை. கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,760 அதிகரிப்பு.
பத்மஸ்ரீ சின்னப் பிள்ளைக்கு வீடு!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..
பத்மஸ்ரீ சின்னப் பிள்ளை அவர்களுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் உடனடியாக வீடு வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு: முன்னாள் இந்திய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயி அவர்களிடம் கடந்த 2000-ஆம் ஆண்டில் “ஸ்த்ரிசக்தி” புரஸ்கார் விருது பெற்றவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பத்மஸ்ரீ சின்னப் பிள்ளை அவர்கள். அவர் சமீபத்தில் செய்தி ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் தனக்கு வீடு வழங்கப்படும் […]
தமிழக காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்படும் என தகவல்.!? முடிவுக்கு வருகிறதா கூட்டணி இழுபறி..!?
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் என்பதில் நீண்ட இழுபறிக்கு பிறகு இப்போது உடன்பாடு ஏற்பட்டுள்ளது.கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு தமிழகத்தில் கன்னியாகுமரி, விருதுநகர், திருச்சி, ஆரணி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, கரூர், தேனி, சிவகங்கை ஆகிய 9 தொகுதிகளும் புதுவை ஒரு தொகுதியும் சேர்த்து 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.அதில் தேனியை தவிர அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது.இந்த தேர்தலில் கூடுதலாக 2 தொகுதி சேர்த்து 12 தொகுதிகள் தர வேண்டும் என்று கோரிக்கை […]
கூகுள் (Google) நிறுவனத்தின் புதிய கொள்கையின் கீழ் மின்னஞ்சலுக்கு (Gmail) புதிய கட்டுப்பாடுகள்; கூகுள் நிறுவனம் அதிரடி..
கூகுள் (Google) நிறுவனத்தின் புதிய கொள்கையின் கீழ் மின்னஞ்சலுக்கு (Gmail) புதிய கட்டுப்பாடுகள் வர இருப்பதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வர இருக்கும் இந்த கட்டுப்பாடுகள் மூலம் மொத்தமாக 5,000 மின்னஞ்சல்களுக்கு செக் வைக்கப்பட்டுள்ளது. யூடியூப் (YouTube), கூகுள் குரோம் (Google Chrome), கூகுள் மேப் (Google Maps) போன்ற கோடிக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்வில் இருந்து பிரிக்க முடியாத ஆப்கள் மட்டுமல்லாமல், அடையாள அட்டை ,வங்கி கணக்கு போன்றவற்றுக்கும் மின்னஞ்சல் […]
தென்காசி மாவட்டத்தில் நடந்த மகளிர் தின விழா; பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுத்திட விழிப்புணர்வு..
தென்காசி மாவட்டத்தில் நடந்த மகளிர் தின விழா; பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுத்திட விழிப்புணர்வு.. தென்காசி மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மகளிர் தின விழா மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. தென்காசி மாவட்டம், கொடிகுறிச்சி, USP தனியார் கல்லூரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மகளிர் தின விழா (08.03.2024) அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பெண்களுக்கு […]
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -3 கப்ளிசேட் உஸ்மானிய பேரரசு -9 ( கி.பி.1299-1922) அன்றைய வாடிகன்நகரில் இருந்த கிறிஸ்தவர்களின் மதத்தலைவரான போப் ஐந்தாவது அர்பன் அவர்களிடம் உதவி கேட்க ஐரோப்பிய நாடுகள் முடிவு செய்தன. போப்பிடம் ஆலோசனையையும், உதவிகளையும், பால்கன் நாடுகளின் அரசர்கள் கேட்டனர். போப் ஐரோப்பிய நாடுகளின் எல்லா மன்னர்களும் ஒன்றிணைந்து உஸ்மானிய படைகளை எதிர்க்க கடிதம் எழுதினார். சிலுவைப்போரை துவக்க கடிதம் எழுதினார். இருப்பினும் உஸ்மானிய படைகளின் அதிவேக பரவல்களை, முன்னேற்றங்களை, பால்கன் படைகளால் […]
தொழுகையில் ஈடுபட்டிருந்த நபர்களை எட்டி உதைத்த காவல் அதிகாரி!-உடனடியாக நடவடிக்கை எடுத்த டெல்லி காவல்துறை..
வடக்கு டெல்லியில் சாலையோரம் வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம் ஆண்கள் இருவரை உதைத்து, தாக்கிய காவல்துறை துணைக் கண்காணிப்பாளரை டெல்லி காவல்துறை பணியிடைநீக்கம் செய்துள்ளது. தொழுகையில் ஈடுபட்டிருந்த இருவரை அந்த அதிகாரி தாக்குவதைக் காட்டும் காணொளி இணையத்தில் வலம் வந்தது. இரண்டாவது நபரைஅந்த அதிகாரி தலையில் தாக்கியதைத் தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் தலையிட்டு அவரைத் தடுத்து நிறுத்தி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இண்டர்லோக் மெட்ரோ நிலையத்துக்கு அருகே வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்தது. தொழுகையாளிகளால் அங்குள்ள […]
இளைஞர்களை ஈர்க்கும் ஈஷா மஹா சிவராத்திரி விழா: குடியரசு துணைத் தலைவர் பெருமிதம்
இளைஞர்களை ஈர்க்கும் ஈஷா மஹா சிவராத்திரி விழா: குடியரசு துணைத் தலைவர் பெருமிதம் “ஈஷா யோக மையத்தில் நடத்தப்படும் மஹா சிவராத்திரி விழா உலகம் முழுவதும் உள்ள நவீன கால இளைஞர்களை ஈர்க்கும் வகையில் மிகப் பிரம்மாண்டமாக நடத்தப்படுவது பாராட்டுக்குரியது” என குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் அவர்கள் பெருமிதத்துடன் கூறினார். கோவை ஈஷா யோக மையத்தில் 30ஆவது ஆண்டு மஹா சிவராத்திரி விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற குடியரசு […]
மேட்டுப்பாளையம் துவக்கப் பள்ளியைநடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்த தீர்மானம்!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் நகர மன்ற தலைவர் மெஹரிபா பர்வீன் அஷ்ரப் அலி தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் முக்கிய தீர்மானமாகசிறுமுகை சாலையில் அமைந்துள்ளவள்ளுவர் நகர துவக்கப் பள்ளியில் சுமார்400 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வரும் நிலையில் துவக்க பள்ளியாக செயல்பட்டு வரும் வள்ளுவர் துவக்கப் பள்ளியை நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தகுழந்தைகள் கல்வி கற்க புதிய வகுப்பறைகளை கட்டுவதற்கும்ரூபாய்12 லட்சம் நிதியைஒதுக்கீடு செய்யஇன்று நடைபெற்ற நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது