CAA சட்டம் அமல் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்.. குடியுரிமை என்ற மனிதநேயக் கொள்கையை மதம், இனத்தால் வேறுபடுத்தும் பிளவுவாதக் கொள்கையாக ஒன்றிய பாஜக அரசு மாற்றியது. இஸ்லாமியர்களையும், இலங்கை தமிழர்களையும் வஞ்சிக்கும் சட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றியது. நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் இதனை எதிர்க்க பாஜகவின் பாதம் தாங்கியான அதிமுக ஆதரித்து வாக்களித்ததாலே இச்சட்டம் நிறைவேறியது. இந்த தேர்தலில் அனைத்து அஸ்திரங்களும் எடுபடாமல் போனதால், CAA சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் கரையேற […]
Category: செய்திகள்
இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்கள் 3.5% இடஒதுக்கீடு பெற பிசிஎம் சான்றிதழ்: அரசாணை வெளியீடு..
இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்கள் 3.5% இடஒதுக்கீடு பெற பிசிஎம் சான்றிதழ்: அரசாணை வெளியீடு.. இஸ்லாம் மதத்திற்கு மாறிய பிசி, எம்பிசி, டிஎன்சி மற்றும் எஸ்சி பிரிவினர் 3.5% இடஒதுக்கீடு பெறும் வகையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த முஸ்லிம் என சாதி சான்றிதழ் வழங்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: இஸ்லாமியர்களாக மதம் மாறிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், அறிவிக்கப்படாத சமூகங்கள் மற்றும் பட்டியல் சமூகத்தை […]
குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்தது! வஞ்சிக்கப்படும் இஸ்லாமியர்கள் மற்றும் இலங்கை தமிழர்கள்..
குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்தது! வஞ்சிக்கப்படும் இஸ்லாமியர்கள் மற்றும் இலங்கை தமிழர்கள்.. நாடு முழுவதும் சி.ஏ.ஏ சட்டம் அமலுக்கு வந்தது தொடர்பான அறிவிப்பாணையை அரசிதழில் வெளியிட்டது மத்திய அரசு. 2019ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் சொல்வதென்ன? அண்டை நாடுகளில் சிறுபான்மையாக உள்ள இந்துக்கள், சீக்கியர், கிறிஸ்தவர்களுக்கு சிஏஏ குடியுரிமை அளிக்கும். 2014 டிசம்பர் 31க்குள் குடியேறிய […]
திருமங்கலத்தில் ஒன்றிய அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..
திருமங்கலத்தில் விவசாயிகள் சங்கம் சார்பில், ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வேளாண் விளைப் பொருட்களுக்கு குறைந்தபட்ச விலை கொடுக்க மறுக்கின்ற மோடி அரசைக் கண்டித்தும், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வரி விலக்கு செய்த மோடி, விவசாயிகள் மற்றும் மாணவ, மாணவிகளின் கடன்களை ரத்து செய்ய மறுப்பதை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. (மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால், ஜனநாயகத்தின் குரல் வலை நெறிக்கப்படும், ஆங்காங்கே பத்திரிகை மற்றும் கேமரா மேன் தாக்கப்படுபவர்கள், சுதந்திரமின்றி நடமாட முடியாத […]
மதுரையில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் 55 வது உதய தினம்..
மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் 55 வது உதய தின விழா.. மதுரை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை முகாமில் 55 வது உதய தினம் கொண்டாடப்பட்டது. மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் விழாவில் கலந்து கொண்டு மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணிக்காக மத்திய தொழில் பாதுகாப்பு படை பணியில் ஈடுபட்டு வருகிறது. […]
அலங்காநல்லூர் அருகே புதிய நியாய விலை கடை அமைக்க பூமி பூஜை வெங்கடேசன் எம். எல். ஏ. பங்கேற்பு :
சோழவந்தான்:வாடிப்பட்டி அருகே, அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அ. கோவில்பட்டி ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2024 – 2025 38.4 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நியாயவிலை கடை கட்டிடம் அமைக்க பூமி பூஜை நடத்தபட்டது. இதில், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.வெங்கடேசன் பூமி பூஜை செய்தார். இவ்விழாவில், திமுக நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர். செய்தியாளர் வி காளமேகம்
சோழவந்தானில் நிறுத்தப்பட்ட ரயில்கள் மீண்டும் நின்று செல்ல வேண்டும் ரயில் பயணிகள் கோரிக்கை !
சோழவந்தான் மார்ச் 11 சோழவந்தான் ரயில் பயணிகள் நல சங்கத்தின் கூட்டம் இங்குள்ள கோவில் வளாகத்தில் நடந்தது கூட்டத்திற்கு சங்கத் தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார் வக்கீல் ராஜேந்திரன் முனியம்மாள் புவனா பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர் சரவணன் வரவேற்றார் கூட்டத்தில் செயலாளர் அய்யனார் தீர்மானங்களை வாசித்தார் சோழவந்தான் விக்கிரமங்கலம்மற்றும் இதனைசுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட ரயில் பயணிகள் கலந்து கொண்டனர். பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. காஜாமைதீன் நன்றி கூறினார்.கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள் சோழவந்தான் ரயில் […]
சோழவந்தானில் நாம் தமிழர் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சிக்குட்பட்ட பேட்டை கிராமத்தில் சோழவந்தான் தொகுதி மேற்கு பகுதியில் நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இம் முகாமிற்கு தொகுதி தலைவர் முத்தீஸ்வரன் தொகுதி செயலாளர் செல்லப்பாண்டி ஆகியோர் தலைமை தாங்கினர் தொகுதி துணைத் தலைவர் தமிழ் முருகன் தொகுதி பொருளாளர் குணசேகர பாண்டியன் நகரத் தலைவர் சங்கர் நகர செயலாளர் கார்த்திகேயன் சோழவந்தான் பொறுப்பாளர் மதுரை வீரன் உள்பட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்து […]
உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஷிப்ரா பதக் கொடுத்த புகார் உண்மைக்கு புறம்பானது ! மாவட்ட காவல்துறை தகவல் !!
இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்த உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஷிப்ரா பதக் அவரது தந்தை மற்றும் சகோதரர் ஆகியோர்கள் வந்த வாகனம் பரமக்குடி அருகே சில நபர்களால் வழிமறித்து தாக்கப்பட்டது தொடர்பாக ஷிப்ரா பதக் கொடுத்த புகாரின் பேரில் பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பாக திருவாடானை காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு பரமக்குடி உட்கோட்டம்) தலைமையில் 3 தனிப்படையினர் அமைக்கப்பட்டு மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் கிடைத்த வெவ்வேறு ஆதாரங்களின் […]
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -3 கப்ளிசேட் உஸ்மானிய பேரரசு -11 (கி.பி.1299-1922) கோசோ போரில் இளவரசர் பயாசித் அதிரடியான வியூகங்களை வகுத்தார். உஸ்மானிய படைகளை பின்புறமாக நகர்த்தியும், இருபக்கவாட்டு பகுதிகளிலும் மிகவேகமாக பின்னடைய வைத்தும் அரை நிலவு போன்ற அமைப்பை ஏற்படுத்தினார். அதனால் நடுப்பகுதியில் திடீரென ஏற்பட்ட வெற்றிடத்தில், இளவரசர் பயாசித்தின் வியூகத்தை அறியாமல் மளமளவென நடுப்பகுதியில் பால்கன் கூட்டணி படை புகுந்தது. உஸ்மானிய ராணுவத்தின் வலுவான ஒவ்வொரு குதிரையின் முன்புறம் ஒரு வீரனும் பின்புறம் ஒரு […]
இலங்கைக்கு கடத்துவதற்காக இறால் பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.60 லட்சம் மதிப்பிலான 400 கிலோ கஞ்சா பறிமுதல் ! திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை !!
இலங்கைக்கு கடத்துவதற்காக இறால் பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.60 லட்சம் மதிப்பிலான 400 கிலோ கஞ்சா பறிமுதல் ! திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை !! ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, எஸ் பி பட்டினம், தேவிபட்டினம், மரைக்காயர்பட்டினம், வேதாளை, தங்கச்சிமடம், மண்டபம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகள் இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் சமீப காலமாக இலங்கைக்கு சட்டவிரோதமாக நாட்டு படகுகளில் கஞ்சா, கடல் அட்டை, சமையல் மஞ்சள், ஏலக்காய், கடல் குதிரை உள்ளிட்ட […]
கீழக்கரையில் அல் – மஸ்ஜிதுர் ரய்யான் பள்ளி திறப்பு விழா ! நடிகர் நிழல்கள் ரவி பங்கேற்பு !!
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வள்ளல் சீதக்காதி சாலை இம்பாலா சுல்த்தான் காம்ப்ளக்ஸ் வளாகத்தில்அல் – மஸ்ஜிதுர் ரய்யான் பள்ளி திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்மாவட்ட அரசு காஜி வி. வி. எ. சலாஹுத்தீன் ஆலிம் உமரி தலைமையில் அனைத்து ஜமாத்துகள் மற்றும் சங்கங்களின் நிர்வாகிகள் முன்னிலையில் பள்ளியை திறந்து வைத்தனர். அல்-மஸ்ஜிதுர் ரய்யான் இமாம் M.பஷீருதீன் ஆலிம் ஹைரி இறைவசனம் ஓதி துவங்கி வைத்தார்.யூசுப் சாகிப் ஆலிம் ஹாமீதி வரவேற்புரை வழங்கினார். கீழக்கரை வட்டாச்சியர் பழனிக்குமார் ,மக்கள் […]
செங்கோட்டை நகராட்சி பகுதியில் 1.59 கோடி மதிப்பில் புணரமைப்பு செய்யப்பட்ட பூங்கா; தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்..
செங்கோட்டை நகராட்சி பகுதியில் 1.59 கோடி மதிப்பில் புணரமைப்பு செய்யப்பட்ட பூங்கா; தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.. செங்கோட்டை நகராட்சியில் 1.59 கோடி மதிப்பீட்டில் புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள பூங்காவினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சியில் ரூ.1.59 கோடி மதிப்பீட்டில் புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள முத்துசாமி பூங்காவினை மார்ச்.08 அன்று காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். செங்கோட்டை நகராட்சி 1921 ஆம் ஆண்டு நிறுவனம் […]
ராமநாதபுரம் அருகே காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை !
ராமநாதபுரம் அருகே உள்ள ரெகுநாதபுரத்தை அடுத்த மங்கம்மா சாலை என்ற ஊரைச் சேர்ந்த கார்த்திக் ராஜாவும் வெள்ளையன் வலசையைச் சேர்ந்த லாவண்யா என்ற இளம் பெண்ணும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் படித்து வரும் மாணவியான லாவண்யா அதே ஊரைச் சேர்ந்த கார்த்திக் ராஜாவை காதலித்து வந்ததாகவும் வீட்டில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த […]
புதுமடம் பூன் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளியில் ஆண்டு விழா மற்றும் களையரங்க திறப்பு விழா !
ராமநாதபுரம் மாவட்டம் புது மடத்தில் பூன் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளியில் 24ஆம் ஆண்டு ஆண்டு விழா மற்றும் களையரங்க திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளியின் நிறுவனர் ஹாஜி N.K நாகூர் இப்ராஹிம் ஆலிம் தலைமை தாங்கினார். கடலாடி சங்கீதா மெட்ரிக் பள்ளி தாளாளர் சேகர் முன்னிலை வகித்தார்.பள்ளி நிறுவனரின் நண்பர் கலிபுல்லாஹ் மற்றும் v-bistro குழும நிறுவனர் ராஜா முகம்மது ஆகியோர் கலை அருங்காத்தை திறந்து வைத்து சிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து பள்ளியின் தலைமை ஆசிரியர் […]
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வீட்டில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை..
சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று 10 இடங்களில் சோதனை நடத்தினர். ரேசன் கடைகளுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை சப்ளை செய்யும் அரசு ஒப்பந்ததாரர் செல்வராஜ் என்பவரது வீடு, வேப்பேரியில் உள்ள தொழில் அதிபர் இரானி உள்பட பலரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.போயஸ்கார்டனில் வசித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜூன் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.மற்ற இடங்களில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றுள்ள நிலையில் போயஸ் கார்டன் கஸ்தூரி […]
தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கத்தின் அனைத்து கோரிக்கைகளும் அரசால் எற்றுக்கொள்ளப்பட்டதால் போராட்டம் வாபஸ் ! வருவாய் துறை அமைச்சர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு !!
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கங்தால் வைக்கப்பட்ட 10 அம்ச கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப் பட்தாகவும் , மேம்படுத்தப்பட்ட ஊதியம் தேர்தலுக்கு முன்னரே 75% நிதி உள்ளிட்ட அணைத்தும் கோரிக்கை களையும் எழுத்துப் பூர்வமாக வழங்கப்படுவதாகவும், எதி்ர்வரும் நாட்களில் அரசாணையாக வெளிவர உள்ளதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில மைய அறிவிப்பின்படி கோரிக்கைகள் அனைத்தும் […]
கீழக்கரை சார்ந்தவருக்கு சவுதி அரேபியாவில் பரிசு விழா !
சவுதி அரேபியா ஜித்தா மாநகரில் தமிழர்கள் அதிகமாக வேலை செய்யும் நிர்வணமன அல் ஃபன்னியா (Alfaneyah) கம்பேனியில் விளையாட்டு பேட்டி நடைபெற்று பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி வருடம்தோறும் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டு கீழக்கரை, காயல்பட்டிணம் கடையநல்லூர், லெப்பைகுடி ஊரை சேர்ந்தவர்கள் 6 அணிகளாக கலந்து கொண்டதுடன். வெற்றி பெற்ற மூன்று அணிகளுக்கு வெற்றி கோப்பை, மொடல்கள், மற்றும் ரொக்க பரிசுகளை கம்பேனியின் இயக்குணர் SAS சதக்கத்துல்லா, மேலாளர்கள் சீனி அலி, மஹ்ரூப் அப்துல் […]
பெங்களூருவில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாடு!-மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு..
பெங்களூருவில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாடு!-மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு.. பெங்களூரில் எப்போதும் இல்லாத வகையில் இவ்வாண்டு கடும் குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. குடிநீர் கிடைக்காமல் மக்கள் பரிதவிப்பதை தவிர்க்க மாநகர குடிநீர் வாரியம், மாவட்ட நிர்வாகம் பல்வேறு வழிகளில் முயற்சி மேற்கொண்டு வருகிறது. குடிநீர் பஞ்சத்தின் தாக்கம் சாமானிய மக்களுக்கு மட்டுமில்லாமல், முதல்வர் சித்தராமையாவின் அரசு அலுவலக இல்லமான கிருஷ்ணா, துணை முதல்வரின் அரசு இல்லம், சில அமைச்சர்களின் வீடுகளுக்கும் காவிரி குடிநீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகும் […]
இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென தனது பதவியை ராஜிநாமா செய்தார்..
இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென தனது பதவியை ராஜிநாமா செய்தார்.. மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிக்கப்படவுள்ள நிலையில் அவர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். அருண் கோயலின் ராஜிநாமாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டார். அருண் கோயல் பதவி விலகியதன் மூலம் தேர்தல் ஆணையர் காலி இடங்களின் எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது.2027ஆம் ஆண்டு வரை பதவிக் காலம் உள்ள நிலையில் தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென ராஜிநாமா செய்துள்ளார். அவரது […]