மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் போதைப்பொருள் புழக்கம் தமிழக முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் – திமுக அரசுக்கு எதிராக நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேச்சு திமுக ஆட்சிப் பொறுப் பேற்றதிலிருந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் போதை பொருள் புழக்கத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலமாக திகழ்ந்து தலைகுனிவை ஏற்படுத்த காரணமாக உள்ள திமுக அரசை கண்டித்து டி.கல்லுப்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் மனித […]
Category: செய்திகள்
தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா !
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே செம்மினிப்பட்டி கிராமத்தில் தனியார் திருமண மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் டி ஆர் தொண்டு நிறுவனம் சார்பில் எல் அண்ட் டி பைனான்ஸ் தனியார் தொண்டு நிறுவனம் மற்றும் கணவன் இழந்த பெண் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் தமிழ்நாடு அரசு சார்பில் மகளிர் தின விழாவை கொண்டாடினார்கள் இந்த டிஜிட்டல் சக்தி மூலம் அனைத்து கிராமப்புற பெண்களுக்கு ஆன்லைன் மூலம் சான்றிதழ் பெறுவது ஆதார் கார்டு […]
வாவிடமருதூர் கிராமத்தில் ஸ்ரீ அம்மச்சி அம்மன் ஆலய 48 வது நாள் மண்டல பூஜை:
அலங்காநல்லூர்,மார்ச்:12.மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள வாவிடமருதூர் கிராமத்தில், ஸ்ரீ அம்மச்சி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழாவையொட்டி, 48 வது நாள் மண்டல பூஜை நடைபெற்றது. முதல் நாள் யாக சாலை பூஜையில், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, மங்கல இசை முழங்க கோபூஜை, கணபதி பூஜை உள்ளிட்ட சிறப்பு அபிஷேக ஆராதனைகள் யாக வேள்விகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, இரண்டாம் நாள் காலை மங்கல இசை முழங்க […]
ராமநாதபுரத்தில் 3 மரநாய் குட்டிகள் மீட்பு !
ராமநாதபுரம் பெரியார் நகர், கரும்பு கொள்ளையில் இந்திரா என்பவர் மகனுடன் வசித்துவருகிறார். இவர் வீட்டில் நேற்றிரவு சமையல் அறை மேல் தட்டில் வினோதமான சத்தம் கேட்டுள்ளது. உடனே சத்தம் கேட்ட மேல்தட்டை எட்டி பார்த்தபோது 3 மரநாய் குட்டிகள் இருந்ததை கண்டதும் வனத்துறையினர், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து தகுந்த பாதுகாப்பு உடைகள் அணிந்து வந்து மரநாய்களை பத்திரமாக மீட்டு கொண்டு சென்றனர்.
CAA குடியுரிமை திருத்தச் சட்டமும்: எதிர்க்கட்சிகளின் ரியாக்ஷனும்..?
CAA குடியுரிமை திருத்தச் சட்டமும்: எதிர்க்கட்சிகளின் ரியாக்ஷனும்..? மக்களவைத் தேர்த்தலுக்கான அறிவிப்பு இன்னும் சில நாள்களில் வெளியாகும் என கூறப்படும் சூழலில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை பா.ஜ.க அரசு இன்று நடைமுறைப்படுத்தியிருக்கிறது. பாஜக-வால் 2019-ல் குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ) அவசர அவசரமாகக் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, 2014, டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து, இந்தியாவுக்குள் நுழைந்த இந்து, பார்சி, பௌத்தம், சமணம், கிறித்தவம் மற்றும் சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்கள், […]
தமிழ்நாட்டில் CAA சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் !- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்..
தமிழ்நாட்டில் CAA சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் !- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்.. மத்திய பா.ஜ.க. அரசு நடைமுறைப்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது, தமிழ்நாட்டில் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது ஒன்றுபட்ட உணர்வுடன் வாழ்ந்துவரும் இந்திய மக்களின் நலனுக்கும், இந்திய தாய்த் திருநாட்டின் பன்முகத் தன்மைக்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும் முற்றிலும் எதிரானதாகும். அதுமட்டுமல்ல சிறுபான்மை சமூகத்தினர் மற்றும் முகாம்வாழ் தமிழர்களின் நலனுக்கும் எதிரானதுதான் இந்தச் சட்டம். கடந்த 8-9-2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் CAA […]
அதிமுக சார்பில் தமிழகத்தில் போதை பொருள் நடமாடத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து மாபெரும் மனித சங்கிலி போராட்டம்..
அதிமுக சார்பில் தமிழகத்தில் போதை பொருள் நடமாடத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து மாபெரும் மனித சங்கிலி போராட்டம்.. திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் சார்பில் பழனி நகர மற்றும் நெய்க்காரப்பட்டி பேரூர் கழகத்தின் சார்பில் தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறிய விடியா திமுக அரசை கண்டித்து மாபெரும் தன் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. பழனி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பழனி நகர அதிமுக கழகம் சார்பில் நகரச் செயலாளர் முருகானந்தம் […]
நெல்லையில் “தீமையை எதிர்த்து போராடு” ஓவியப் போட்டி பரிசளிப்பு விழா..
நெல்லையில் “தீமையை எதிர்த்து போராடு” ஓவியப்போட்டி பரிசளிப்பு விழா.. திருநெல்வேலி அரசு அருங்காட்சியகமும் சென்னை எப்சிபா அறக்கட்டளையின் இணைந்து நடத்திய தீமையை எதிர்த்து போராடு என்கிற ஓவியப் போட்டியின் பரிசளிப்பு விழா பிஷப் சார்ஜன்ட் அன்பில் சிற்றாலயத்தில் வைத்து நடைபெற்றது. நிகழ்வில் வந்துள்ள அனைவரையும் முனைவர் ஜெயராஜ் (நிறுவனர் ஹெப்சிபா அறக்கட்டளை) வரவேற்று நிகழ்வு குறித்த அறிமுக உரை நிகழ்த்தினார். ஆமோஸ் தலைமையுரை வழங்கினார். நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ சத்திய வள்ளி முன்னிலை வகித்தார். தொடர்ந்து […]
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வழக்கு..
கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 11-ந்தேதி குடியுரிமை திருத்த சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.இதன்படி, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், சமணர், பார்சிகள், பவுத்தர்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்க இந்த சட்டம் வகை செய்கிறது.குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதனால் […]
மீண்டும் அதே தவறை செய்யப்போகிறதா திமுக தலைமை.? 2011சட்டப்பேரவை தேர்தலும் அதன்பின் மமகவின் நிலைப்பாடும் அலசுகிறார், வதிலை ரிஜால்..
மீண்டும் அதே தவறை செய்யப்போகிறதா திமுக தலைமை.? 2011சட்டப்பேரவை தேர்தலும் அதன்பின் மமகவின் நிலைப்பாடும் அலசுகிறார், வதிலை ரிஜால்.. 2011 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்த மமகவிற்கு அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இராமநாதபுரம், ஆம்பூர், சேப்பாக்கம் உள்ளிட்ட மூன்று தொகுதிகளை ஒதுக்கினார். தனிச்சின்னத்தில் போட்டியிட்டு அதில் இரண்டு தொகுதியில் வெற்றிவாகை சூடி, 9,203 வாக்குகள் வித்தியாசத்தில் சேப்பாக்கத்தில் மட்டும் வெற்றி வாய்ப்பை இழந்தோம். மமக போட்டியிட்ட மூன்று தொகுதிகளின் மொத்தம் 42.43% விழுக்காடு வாக்குகளை […]
மக்களைவை தேர்தலில் “இந்திய கம்யூனிஸ்ட் கட்சி” நாகை மற்றும் திருப்பூர் ஆகிய தொகுதிகளில் போட்டி..
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரசுக்கு 10, இந்திய கம்யூனிஸ்டுக்கு 2, மதிமுகவுக்கு 1, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு 1, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு 2, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 என தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 21 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுகிறது. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்கு நாடு […]
விதி மீறி இயக்கப்படும் இருசக்கர வாகனங்கள் மீது நடவடிக்கை மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை அதிரடி !
மதுரை மாநகர காவல் ஆணையர் உத்தரவுப்படி தெற்கு போக்குவரத்து உதவி ஆணையர் செல்வின் தலைமையில் மற்றும் தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் செந்தில் குமார் தலைமையில் இன்று குருவிக்காரன் பாலம் சாலை முதல் ராம்நாடு ரிங் ரோடு வரை அதிவேகமாக வந்த இருசக்கர வாகனங்கள் , நம்பர் பிளேட் மாற்றம் செய்துள்ள வாகனங்கள் , குடிபோதையில் வாகனம் இயக்குதல் போன்ற போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபட்ட அனைத்து வாகன ஓட்டுநர்களுக்கும் தக்க அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் வாகனங்களில் […]
மக்களவை தேர்தலில் மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டி..
மக்களவை தேர்தலில் மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டி.. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு, நேர்காணல் என தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்தியது. அதன் விளைவாக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடும் கையெழுத்தானது. அந்த வகையில் ஏற்கனவே ஐயூஎம்எல் கட்சிக்கு […]
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -3 கப்ளிசேட் உதுமானிய பேரரசு -12 ( கி.பி 1299-1922) பேரரசர் முராத் பொறுமையாக நடந்துவந்த போது திடீரென செர்பிய வீரன் ஒருவன் வாளால் பலமாக மன்னரை தலையில் அடித்தான். சாதாரண உடையில் இருந்த மன்னர் கடுமையான அடியால் உடனடியாக மயக்கமுற்றார். மன்னர் முராத்தை மாளிகைக்கு எடுத்து சென்று மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தது. செர்பிய வீரனை கைதுசெய்து நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. நீதிமன்றத்தில் செர்பிய வீரன் தனது நாடு தொடர்ந்து […]
தென்காசியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்; மாவட்ட கலெக்டர் தகவல்..
தென்காசியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்; மாவட்ட கலெக்டர் தகவல்.. தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், கதவு எண்.168, முகமதியா நகர் (எபினேசர் டைல்ஸ் பின்புறம்), குத்துக்கல் வலசை, இலத்தூர் அஞ்சல் என்ற முகவரியில் 30.01.2023 முதல் […]
கலைஞர் பெயரில் புதிய பல்கலைக் கழகம்; தமிழ்ச் சங்க நிகழ்வில் தீர்மானம்..
கலைஞர் பெயரில் புதிய பல்கலைக் கழகம் தொடங்க வேண்டும்; நெல்லையில் நடந்த தமிழ்ச் சங்க நிகழ்வில் தீர்மானம்.. முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் புதிய பல்கலைக் கழகம் தொடங்க வேண்டும் என நெல்லையில் நடந்த தமிழ்ச் சங்க நிகழ்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதிகைத் தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ்ச் சங்கங்களின் கூட்டியக்கம் இணைந்து பாளையங்கோட்டை வ. உ .சி .மைதானம் பின்புறம் உள்ள ஐயம்பெருமாள் அரங்கில் கலைஞர் தமிழ்-100 என்ற தலைப்பில் கவியரங்கமும், உ.வே.சா.விருது பெற்ற எழுத்தாளர் இரா.நாறும்பூநாதனுக்கு […]
வீராசமுத்திரம் பகுதியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை திறப்பு..
வீராசமுத்திரத்தில் 7 லட்சம் மதிப்பில் தார் சாலை; மாவட்ட கவுன்சிலர் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றித்திற்குட்பட்ட வீராசமுத்திரம் ஊராட்சியில், மாவட்ட கவுன்சிலர் மைதீன் பீவி கோதர் மைதீன் நிதி பரிந்துரையின் கீழ் மாலிக் நகர் பஸ் நிறுத்தம் முதல் வீராசமுத்திரம் ஆற்றுப்பாலம் வரை ரூபாய் ஏழு லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலை திறக்கப்பட்டது. 2023-2024 மாநில நிதி குழு மானியம் மூலம், வீரா சமுத்திரத்தில் அமைக்கப்பட்டுள்ள தார் […]
தென்காசி மாவட்டத்தில் பொது மக்கள் குறைதீர் கூட்டம்; நலத்திட்ட உதவிகள் வழங்கல்..
தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் 1 கோடியே 32 லட்சம் லட்சத்து 92 ஆயிரத்து 470 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வழங்கினார்.. தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 11.03.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக் கொண்டார். தென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் […]
சிஏஏ திருத்தச் சட்டத்தை பூர்வ குடிமக்களான இஸ்லாமியர்களுக்கு, ஈழத் தமிழர்களுக்கு எதிராக அமல்படுத்த நினைத்தால் அதிமுக அதனை ஒருபோதும் அனுமதிக்காது!- எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்..
குடியுரிமை திருத்தச் சட்டம் நாட்டில் அமல்படுத்தப்பட்டு உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகள் திங்கள்கிழமை (மார்ச் 11) வெளியானது. இந்நிலையில், இது குறித்து எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளதாவது; பொதுத்தேர்தல் அறிவிக்கை வெளியாகும் சூழலில், மத்தியில் ஆளும் பாஜக அரசு, சிஏஏ சட்டம் 2019 (குடியுரிமை திருத்தச் சட்டம்) மார்ச் 11-ம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதாக அரசிதழில் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இந்த சட்டத்தால் நாட்டில் உள்ள பூர்வகுடி மக்களாக உள்ள எந்த சமூகத்துக்கும் எவ்வித […]
சி.ஏ.ஏ. சட்டம் ஏற்கத்தக்கது அல்ல” – தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்..
நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச்சட்டம் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சி.ஏ.ஏ அமலுக்கு வந்தது தொடர்பான அறிவிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் அரசிதழில் வெளியிட்டது. இந்தசூழலில் குடியுரிமை திருத்தச்சட்டம் அமலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து அரசியல் தலைவர்கள், தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சி.ஏ.ஏ. சட்டம் ஏற்கத்தக்கது அல்ல என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், […]