மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திண்டுக்கல் மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம், யார் இவர் ஓர் பார்வை..

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திண்டுக்கல் மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம், யார் இவர் ஓர் பார்வை.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு உறுப்பினரும், திண்டுக்கல் மாவட்ட செயலாளருமான தோழர் ஆர்.சச்சிதானந்தம் (வயது 53) திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார். பி.எஸ்.சி. பட்டதாரியாவார். 37 ஆண்டுகளாக கட்சியில் உறுப்பினராகவும், 30 ஆண்டுகளாக கட்சியின் முழுநேர ஊழியராகவும் பணியாற்றி வருகிறார். 1987ம் ஆண்டு இந்திய மாணவர் சங்கத்தில் மாவட்ட துணை செயலாளராகவும், திண்டுக்கல் நகர தலைவராகவும் பணியாற்றியவர். […]

தேர்தல் பத்திரங்கள் மூலம் மாநிலக் கட்சிகள் திரட்டிய நிதிகள் இவ்வளவா.!! 

தேர்தல் பத்திரங்கள் மூலம் மாநிலக் கட்சிகள் திரட்டிய நிதிகள் இவ்வளவா.!! அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்காக விற்பனை செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்கள் மற்றும் அந்த பத்திரங்களை பணமாக மாற்றிய கட்சிகள் தொடர்பான விவரங்களை பாரத ஸ்டேட் வங்கி ஒப்படைத்தது. இந்த விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த புள்ளிவிவரத்தின்படி, 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான காலகட்டத்தில் அதிகபட்சமாக தேசிய கட்சியான பா.ஜ.க. ரூ.6,060.51 கோடி நிதி திரட்டியிருப்பது தெரியவந்துள்ளது. […]

தென்காசி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்; உபகரணங்கள் வழங்கல்..

தென்காசி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்; உபகரணங்கள் வழங்கல்.. தென்காசி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமையில் நடந்தது. தென்காசி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்று (15.03.2024) நடைபெற்றது. தென்காசி மாவட்டத்தில் 2023 – 2024 ஆம் ஆண்டில் சாகுபடி செய்யப்பட்ட நெல் – 38604 ஹெக்டேர், சிறுதானியங்கள்- […]

மதுரை தொகுதியில் சு.வெங்கடேசனும், திண்டுக்கல் தொகுதியில், சச்சிதானந்தம்போட்டி!- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு..

லோக்சபா மதுரை தொகுதியில் சு.வெங்கடேசனும், திண்டுக்கல் தொகுதியில், சச்சிதானந்தமும் போட்டியிடுவார்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்து உள்ளது. தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கட்சிக்கு மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் வேட்பாளர்கள் குறித்து முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்திற்கு பிறகு அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், மதுரை தொகுதியில் மீண்டும் சு.வெங்கடேசனும், திண்டுக்கல் தொகுதியில் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தமும் […]

ராமநாதபுரத்தில் நர்சிங்காலேஜ் மாணவிகளுக்கு முதலுதவி பயிற்சி முகாம் !

ராமநாதபுரம் மாவட்டம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பாக பயோனியர் மருத்துவமனையில் நர்சிங்காலேஜ் மாணவிகளுக்கு முதலுதவி பயிற்சி முகாம் தொடங்கியுள்ளனர்.. இதில் இரண்டு பிரிவுகளாக வெள்ளி சனி ஞாயிறு மூன்று நாட்கள் நடைபெறுகின்றது. மாநில முதலுதவி பயிற்சியாளர் அலெக்ஸ் பயிற்சி முகாம் நடத்தினார் . கல்லூரியின் முதல்வர் கல்லூரி பயிற்றுநர்கள் பசுமை ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் மலைக்கள்ளன் , இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட செயலாளர் ரமேஷ் ஆகியோர் பயிற்சி முகாமை தொடக்கி வைத்தனர்.

ராமநாதபுரத்தில்சிஏஏ திருத்த சட்டத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் !

சிஏஏ திருத்த சட்டத்திற்கு எதிராக. சிஏஏ திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்திலும் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர் அதனின் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் ராமநாதபுரம் கீழக்கரை வேதாளை பாம்பன் மண்டபம் மறைக்கப்பட்டினம் பெரிய பட்டினம் உட்பட அனைத்து ஊர்களிலும் இஸ்லாமியர்களின் ஜும்மா தொழுகையான சிறப்பு தொழுகை முடிந்த பின்பு பள்ளியின் வெளிப்பகுதியில் சிஏஏ திருத்த சட்டத்திற்கு எதிராக ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் […]

அலங்காநல்லூர் ஒன்றிய பகுதியில், பல்வேறு திட்டப் பணிகளை பூமி பூஜை செய்து சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்:

மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ள பாறைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சரந்தாங்கி கிராமத்தில், அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் ஒரு கோடியே 40 லட்சத்து செலவில் தானியக்களம் இதே போன்று சேந்தமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பொந்துகம்பட்டி கிராமத்தில் தானியக்களம் ராஜாக்கல்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மறவபட்டி கிராமத்தில் மந்தைகுளம் ஊரணி சுற்றுச்சுவர், கீழசின்ணனம்பட்டி ஊராட்சியில், பஞ்சாயத்து அலுவலக கட்டிடம் மற்றும் தானிய களத்திற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், சோழவந்தான் தொகுதி வெங்கடேசன், எம்.எல்.ஏ.கலந்து கொண்டு […]

குவைத் சிறையில் உள்ள நான்கு மீனவர்களை  விடுதலை செய்யக்கோரி கடல் தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் !

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நுழைவாயிலில் கடல் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பாக குவைத்தில் மீன்பிடி தொழிலுக்காக சென்ற இடத்தில் போதைப் பொருள் கடத்தியதாக பொய்யான வழக்கு போட்டு சிறையில் வாடும் அய்யர்(எ)சேசு, கார்த்திக், சந்துரு, வினோத் குமார் ஆகிய நான்கு மீனவர்களை உடனே மீட்டு தர கோரியும், சிறையில் வாடும் ஏழை மீனவர் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் வழங்க கோரியும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கடல் தொழிலாளர் சங்கம் மாவட்ட செயலாளர் […]

பாராளுமன்ற தேர்தலில் திமுக அதிமுகவுக்கு ஓட்டு போட மாட்டோம் கோவிலில் சத்தியம் செய்த டி என் டியினர்

தமிழ்நாட்டில் சீர் மரபினர் 68 சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 2 கோடி பேர் உள்ளதாக கூறப்படுகிறது இவர்கள் சுமார் பத்து ஆண்டு காலமாக டி என் டி ஒற்றை ஜாதி சான்றிதழ் வழங்கக்கோரி அதிமுக ஆட்சி காலத்திலும் தற்போது திமுக ஆட்சி காலத்திலும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டங்கள் நடத்தி வந்தனர் அரசு அவ்வப்போது போராட்ட குழுவினரை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக தேர்தல் நேரங்களில் வாக்குறுதி கொடுத்து வந்தனர் தேர்தல் முடிந்தவுடன் அந்த […]

சோழவந்தானில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக தேர்தல்அறிக்கை பெட்டிவைத்து பொதுமக்களிடம் கோரிக்கை

சோழவந்தான் வட்ட பிள்ளையார் கோவில் அருகில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை பெட்டி வைத்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு சோழவந்தான் சட்டமன்றதொகுதி அமைப்பாளர் கோவிந்தமூர்த்தி தலைமை தாங்கினார் தேனிபாராளுமன்ற தொகுதிபொறுப்பாளர் ரவிபாலா தேர்தல் அறிக்கை மனுக்களை பெற்றார் உடன் சோழவந்தான் மண்டல்தலைவர் கதிர்வேல் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய தலைவர் அழகர்சாமிஅலங்கை தெற்கு தலைவர் இருளப்பன்சமயநல்லூர் மண்டல் தலைவர் முத்துப்பாண்டி வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய தலைவர் சேதுராமன் மாவட்ட செயலாளர் ரவிசங்கர் மற்றும் […]

சிவகாசியில், மகளிர் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், சர்வதேச மகளிர் தின சிறப்பு நடைபயிற்சி மற்றும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரி மற்றும் ஜே.சி.ஐ. கிளப் இணைந்து, சர்வதேச மகளிர் தின சிறப்பு நடைபயிற்சி மற்றும் தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர். விழிப்புணர்வு ஊர்வலத்தை, சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் துவக்கி வைத்தார். எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரியில் இருந்து, திருத்தங்கல் சாலை, மாநகராட்சி காமராஜர் பூங்கா, தேவர் சிலை, […]

ED, IT, CBI ரெய்டு போன்ற சிக்கல்களை எதிர்கொண்ட நிறுவனங்கள் அடுத்த சில நாட்களில் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள் கொடுத்துள்ளன என்பது தெரியவந்துள்ளது..!

ED, IT, CBI ரெய்டு போன்ற சிக்கல்களை எதிர்கொண்ட நிறுவனங்கள் அடுத்த சில நாட்களில் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள் கொடுத்துள்ளன என்பது தெரியவந்துள்ளது..! Future Gaming and Hotel Services நிறுவனத்திற்கு எதிரான பணமோசடி புகாரில் 2022 ஏப்ரல் 2 அன்று ED சோதனை நடத்திய நிலையில், அடுத்த சில நாட்களில் (7 ஏப்ரல், 2022) தேர்தல் பத்திரங்களை வாங்கி இருக்கிறது. டெல்லி மதுபான வழக்கில் Aurobindo Pharma நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் […]

பாஜக பிரமுகர் நடிகை குஷ்புவை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..

பாஜக பிரமுகர் நடிகை குஷ்புவை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.. தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசிய பாஜக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்புவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில், தென்காசி தெற்கு மாவட்ட திமுக மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் மகளிர் உரிமைத் தொகை குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசிய பாஜக […]

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -3 கப்ளிசேட் உஸ்மானிய பேரரசு -15 ( கி.பி 1299-1922) தைமூர் தங்கள் படைகளுக்கு முன்னாள் ஆழமான குழி தோண்ட உத்தரவிட்டார். குழிகளுக்கு முன்னே எருதுகளின் கழுத்திலும், கால்களிலும் தோல்பட்டைகளை கட்டி நிற்க வைக்க உத்தரவிட்டார். பின்னர் ஒட்டகங்களின் முதுகில் மரங்களையும் காய்ந்த புல்லையும் ஏற்றி அவற்றையும் ஒன்றாக கட்டி வைக்கவும் ஏற்பாடு செய்தார். முதலில் யானைப் பாகர்களை குறிவைத்து அம்பு எய்ய வில்படை வீரர்களுக்கு தைமூர் உத்தரவிட்டு இருந்தார். ஓரிரு நாட்கள் […]

தேர்தல் பத்திர எண்களை உட்பட அனைத்து விவரங்களையும் வெளியிட SBI-க்கு உச்சநீதிமன்றம் ஆணை..

தேர்தல் பத்திர எண்களை உட்பட அனைத்து விவரங்களையும் வெளியிட SBI-க்கு உச்சநீதிமன்றம் ஆணை.. தேர்தல் பத்திரங்கள் எந்த தேதியில் வழங்கப்பட்டது? யாரால் வழங்கப்பட்டது? யாரால் பணமாக்கப்பட்டது? பத்திர எண் ஆகிய அனைத்தையும் வரும் திங்கள் அன்று வெளியிட SBI வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு! “தேர்தல் பத்திர எண்களை வெளியிடாததால் எந்த நிறுவனம் எந்த கட்சிக்கு நன்கொடை கொடுத்துள்ளது என்பது தெரியவில்லை” என நீதிபதிகள் கருத்து..

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி துவங்கியது தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் நடைபெறும் வழக்கம்.கோடை வசந்த விழாவை முன்னிட்டு கொண்டாடப்படும் பகுகுனித் திருவிழா நிகழ்ச்சியில் உற்சவர் தினமும் காலையிலும், மாலையிலும் சிம்ம வாகனம் , தங்கமயில் வாகனம், தங்க பல்லாக்கு, தங்க குதிரை வாகனம், நந்தி வாகனம், […]

மதுரை பழங்காநத்தம் பகுதியில் தனது மனைவி பிறந்த நாளை முன்னிட்டு மனைவியின் வீட்டு முன்பு திரைக்கட்டி பிறந்த நாளை கொண்டாடிய கணவர்

மதுரை பழங்காநத்தம் பகுதியில் வசித்து வருபவர் சந்தானபாரதி லட்சுமிபிரியா இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் மனைவியின் பிறந்தநாளை சர்ப்ரைஸ் பண்ண வேண்டும் என்று மனைவியின் வீட்டின் முன்பாக இரவு 12 மணிக்கு கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார் அதனை தொடர்ந்து மனைவியின் வீட்டுக்கு முன்பாக திரைகட்டி சிறுவர்கள் வாழ்த்துக்கள் சொல்லுவது போலும் மனைவி செய்தி வாசிப்பது போலும் இருவரும் காதலித்தபோது எடுத்த புகைப்படத்தையும் திருமணம் முடிந்த பின்பு எடுத்த புகைப்படத்தையும் வைத்து கணவன் எழுதிய வாசகத்துடன் […]

தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 23 கல்லூரிகளுக்கு 14.70 லட்சம் மதிப்பிலான போட்டித்தேர்வு நூல்களை வழங்கிய மதுரை எம்.பி சு.வெங்கடேசன்.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 14.70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மதுரை தொகுதிக்கு உட்பட்ட 23 கல்லூரிகளுக்கு போட்டி தேர்வு எழுதுகிற மாணவர்களுக்காக கருவி நூல்கள் 191 நூற்களும், அதனை வைப்பதற்கான புத்தக அடுக்குகளும் வழங்கும் விழா மேலூர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது.மதுரைத் தொகுதிக்குட்பட்ட 23 கல்லூரிகளுக்கி சுமார் 5730 நூல்களை வழங்கி விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எம் பி விழா சிறப்புரையாற்றினார்.போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்காக… அது குடிமைப் […]

கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், மதுரையின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்களை ஆய்வு

கர்நாடக ஆளுநர் ஸ்ரீ தாவர்சந்த் கெலாட், அவரது பேரன் நவீன் கெலாட்டுடன், தமிழ்நாட்டில் உள்ள மதுரையின் புகழ்பெற்ற கோயில்களில் ஆழமான கலாச்சார ஆய்வுகளை மேற்கொண்டார்.ஆன்மீகப் பயணத்தைத் தொடங்கிய அவர்கள் முதலில் மதுரையின் அமைதியான சுற்றுப்புறங்களுக்கு மத்தியில் அமைந்துள்ள அமைதியான மற்றும் பழமையான அழகர் கோயிலுக்குச் சென்றனர். இங்கு, கவர்னர் புனிதமான சூழலில் மூழ்கி, பிரார்த்தனை செய்து, கோவிலில் வழிபட்ட தெய்வீக தெய்வத்திற்கு மரியாதை செலுத்தினார்.அழகர் கோயிலுக்குச் சென்றதைத் தொடர்ந்து, மதுரை மீனாட்சி கோயிலுக்குச் சென்றனர், இது அதன் […]

கோடிக்கணக்கில் நன்கொடை: பகீர் கிளப்பிய தேர்தல் பத்திர விவரங்கள் வெளியீடு..

கோடிக்கணக்கில் நன்கொடை: பகீர் கிளப்பிய தேர்தல் பத்திர விவரங்கள் வெளியீடு.. தேர்தல் பத்திரங்கள் மூலம் ₹6,060 கோடியை நன்கொடையாக பெற்று பாஜக முதலிடம். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ₹1,609 கோடி நன்கொடை பெற்று 2வது இடத்திலும், காங்கிரஸ் ₹1,421 கோடி பெற்று 3வது இடத்திலும் உள்ளன. அதிகபட்சமாக ₹1,368 கோடி நன்கொடை வழங்கி ஃபியூச்சர் கேமிங், ஓட்டல் சர்வீசஸ் நிறுவனம் முதலிடம். மேகா இன்ஜினியரிங் மற்றும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் நிறுவனம் ₹966 கோடியும், க்விக் சப்ளை செயின் நிறுவனம் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!