மதுரை அமிக்கா ஹோட்டலில் “சீன டிராகன் உணவு திருவிழா ” நேற்று முதல் துவங்கி 24 ம் தேதி வரை நடைபெறுகிறது.

மதுரை சுற்றுச்சாலையில் அமைந்துள்ள அமிக்கா ஹோட்டலில் “சீன உணவு திருவிழா ” துவங்கியது.11நாட்கள் நடைபெறும் விழாவில் முழுக்க முழுக்க சீன உணவுகளே சமைக்கும் விழா.சீனாவின் புத்தாண்டு பிப்ரவரி மாததில் துவங்கும். அதனை சிறப்பிக்கும் வகையில் சீன “டிராகன் உணவுத் திருவிழா. “மதுரை அமிக்கா ஹோட்டலில் நடைபெறுகிறது.கடந்த 14ம் தேதி துவங்கி 24ம் தேதிவரை 11 நாட்கள் நடைபெறும்.சீன உணவுத்திரு விழாவில் சைவ, அசைவ உணவுகளில் 50 வகைகளும் மற்றும் திம் ஷம், சூப், மூன் கேக் வகைகள் […]

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -3 கப்ளிசேட் உஸ்மானிய பேரரசு -17 ( கி.பி 1299-1922) உஸ்மானிய பேரரசர் பயாசித் தங்களது நாடுகளை அபகரித்துக் கொண்டதாக முஸ்லீம் சிற்றரசர்கள் தைமூரிடம் விண்ணப்பித்தார்கள் தைமூர் தனது பிரமாண்டமான ஏழு லட்சம் வீரர்கள் கொண்ட படையுடன் பயாசித் மீது படை எடுத்தார். தைமூரின் படைகளோடு முஸ்லீம் சிற்றரசர்களும் படையோடு வந்தனர். துருக்கியை நோக்கி தைமூரின் படைகள் நகர தலைநகரிலிருந்து தனது 3 1/2 லட்சம் வீரர்களுடன் பயாசித் படையை நடத்திவந்தார். தைமூரின் […]

பெட்ரோல்,டீசல் விலை அதிரடியாக ரூ.15.30 குறைப்பு! ஆச்சரியத்தில் வாகன ஓட்டிகள்..

அட இங்கே இல்லைங்க! லட்சத்தீவுகளில் பெட்ரோல், டீசல் விலை ரூ15.30 குறைப்பு.. லட்சத்தீவுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.15.3 வரை குறைக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு குறைத்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை ரூ.2 குறைக்கப்படுவதாக ஒன்றிய அரசு கடந்த 14ம் தேதி அறிவித்தது. இந்நிலையில் தற்போது லட்சத்தீவுகளில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.15.30 குறைத்து அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. இந்த விலை […]

CAA வை கண்டித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆலந்தூரில்   கண்டன ஆர்ப்பாட்டம்..

CAA வை கண்டித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆலந்தூரில்   கண்டன ஆர்ப்பாட்டம்.. இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம் சார்பாக ஆலந்தூரில் மக்களை மத ரீதியாக பிளவு படுத்தும் வகையில் அமல்படுத்த பட்ட CAA வை கண்டித்தும் பாஜக ஒன்றிய அரசை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் முஹம்மது யூசுப்  தலைமையில் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு துவங்கி நடைபெற்றது. இதில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பொது செயலாளர் முஹம்மது சித்திக் பேசும்போது, […]

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக 44 மின்சார ரெயில்கள் ரத்து!பயணிகளின் வசதிக்காக இன்று மெட்ரோ ரெயில் சேவை கூடுதலாக இயக்கப்படும் என தகவல்..

சென்னை கடற்கரை – தாம்பரம் ரெயில் நிலையங்களுக்கு இடையே இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக 44 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகளின் வசதிக்காக இன்று மெட்ரோ ரெயில் சேவை கூடுதலாக இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில், “தெற்கு ரெயில்வேயில் கடற்கரை மற்றும் தாம்பரம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இன்று மெட்ரோவில் […]

ராமநாதபுரத்தில் தேர்தல் விதிமுறைகளை கடைபிடிக்க பொதுமக்களுக்கு வேண்டுகோள் ! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !!

இராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர்/ மாவட்ட தேர்தல் அலுவலர் பா.விஷ்ணு சந்திரன் தலைமையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்/ மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவிக்கையில் :- இந்திய தேர்தல் ஆணையம் அறிவுரைப்படி 2024 நாடாளுமன்ற பொது தேர்தல் அறிவிக்கப்பட்டு தமிழகத்தில் 20.03.2024 அன்று வேட்புமனு தாக்கல் தொடங்கவும், 27.03.2024 அன்று வேட்புமனு கடைசி நாளாகவும், 28.03.2024 அன்று வேட்புமனு பரிசீலனையும் மேற்கொள்ளப்பட்டு 19.04.2024 வாக்குப்பதிவும், 04.06.2024 அன்று வாக்கு எண்ணிக்கையும் […]

தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது, என்னென்ன கட்டுப்பாடுகள்! எதற்கு அனுமதி! எதற்கு அனுமதி இல்லை!-தேர்தல் ஆணையம் அறிவித்த முழுமையான தகவல்கள்..

543 தொகுதிகளை கொண்ட நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி, முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. ஒட்டுமொத்தமாக முதற்கட்ட தேர்தலில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் மத்திய, […]

85 வயதிற்கும் மேற்பட்டவர்கள், 40% மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்து வாக்களிக்கலாம்- ராஜீவ்குமார் அறிவிப்பு..

100 வயதைக் கடந்த 2.18 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் 85 வயதிற்கும் மேற்பட்டவர்கள் வீட்டில் இருந்தே வாக்களிக்க ஏற்பாடு முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் ஏற்பாடு 85 வயதிற்கும் மேற்பட்டவர்கள், 40% மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்து வாக்களிக்கலாம் – ராஜீவ்குமார் லோக்சபா தேர்தலில் தகுதியானவர்களை தேர்வு செய்யுங்கள் குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை நாளிதழ்களில் வெளியிட வேண்டும் – ராஜீவ் குமார் பண பலம், ஆள் பலம், விதிமீறல் போன்றவை தேர்தல் ஆணையம் முன் உள்ள சவால்கள் […]

இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு குறித்த முதல்வரின் அறிவிப்பு; கவிஞர் பேரா வரவேற்பு..

இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு குறித்த முதல்வரின் அறிவிப்பு; பொதிகை தமிழ்ச்சங்க தலைவர் கவிஞர் பேரா வரவேற்பு.. சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பை நெல்லை பொதிகை தமிழ்ச்சங்கம் வரவேற்றுள்ளது. இது குறித்து பொதிகை தமிழ்ச்சங்க நிறுவனர் கவிஞர் பேரா வெளியிட்டுள்ள அறிக்கையில், “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்பான் […]

நெடுஞ்சாலை துறையினரால் தோண்டப்பட்ட 20 அடி பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு…

மதுரை நகரில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப சாலையை நான்கு வழி பாதையாக விரிவுபடுத்தும் பணி நெடுஞ்சாலைத்துறை என்றால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் பழகானந்தத்தில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலையை நான்கு வழியாக கட்டமைக்கும் பணியை கடந்த சில மாதங்களாக நெடுஞ்சாலை துறை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த பணியின் பொழுது மழைநீர் வடிகாலுக்கு உண்டான பணி சேர்த்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக சுமார் 20 அடி பள்ளம் தோண்டப்பட்டு பைப்லைன் […]

திமுக- காங்கிரஸ் கூட்டணியில் நீடித்து வரும் தொகுதி பங்கீடு இழுபறி! திங்கட்கிழமை முடிவுக்கு வருகிறதா..?

தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை விரைந்து முடித்தாலும் காங்கிரஸ், ம.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுக்கு மட்டும் தொகுதிகளை ஒதுக்குவதில் இழுபறி நீடித்து வருகிறது.தமிழகத்தில் காங்கிரசுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் கடந்த முறை ஒதுக்கிய தொகுதிகளை இந்த முறை கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது.தி.மு.க.வும், ம.தி.மு.க.வும் சில தொகுதிகளை பிடிவாதமாக கேட்பதால் தொகுதிகளை பிரிப்பதில் சிக்கல் நீடித்தது.இதனால் ம.தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் தொகுதிகளை ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டது.திருச்சி, ஆரணி தொகுதிகளை தவிர பிற தொகுதி கள் […]

லஞ்சம் பெறுவதையும் தடுக்க வேண்டிய வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற துறைகளில் லஞ்சம் ஊடுருவி உள்ளது என்பதைச் சகித்துக்கொள்ள முடியாது, மதுரை உயர்நீதிமன்றம் காட்டம்..

லஞ்சம் பெறுவதையும் தடுக்க வேண்டிய வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற துறைகளில் லஞ்சம் ஊடுருவி உள்ளது என்பதைச் சகித்துக்கொள்ள முடியாது, மதுரை உயர்நீதிமன்றம் காட்டம்.. லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் மனுவை 2-வது முறையாகத் தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற மதுரைகிளை, லஞ்சம் பெறுவதைத் தடுக்க வேண்டிய அமலாக்கத்துறையிலேயே லஞ்சம் ஊடுருவி உள்ளதை சகித்துக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளது. திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவர் சுரேஷ்பாபு மீது சொத்துக்குவிப்பு […]

துபாயில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த பயணி சார்ஜிங் பிளக்கிற்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூபாய் 6 1/2 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்.

துபாயிலிருந்து மதுரை விமான நிலையம் வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் தங்கம் கடத்துவதாக வந்த தகவலையடுத்து பயணிகளை சுங்க இலாக்கா நுண்ணறிவு பிரிவினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.அப்போது பயணி ஒருவர் கொண்டு வந்த இரண்டு சார்ஜிங் பிளக்கிற்குள் 6 லட்சத்து 60 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான 100 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது.சுங்க இலாக நுண்ணறிவு பிரிவினர் நடத்திய விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டணம் பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து மகன் விஜய் ஆனந்த் […]

சோழவந்தான் அருகே குளிக்கச் சென்ற 9 வயது சிறுமி நீரில் மூழ்கி பலி.

சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் அடுத்துள்ள குளத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளமகாதேவன் ரஷ்யா ஆகியோரின் மகள் யாழிசை வயது 9. இவர் விக்கிரமங்கலம் அருகே உள்ள வி. கோவில்பட்டி கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் இருந்து இங்குள்ள அரசு பள்ளியில் நான்காவது படித்து வருகிறார். நேற்று மாலை பாட்டி வீட்டுக்குஅருகே உள்ள கால்வாயில் பாட்டி அமுதாவும் யாழிசையும் குளிக்க சென்றுள்ளனர். குளித்துக் கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக கால்வாயில் யாழிசை தண்ணீரில் மூழ்கினார். பாட்டி கண்ணெதிரே பேத்தி […]

நோயாளிகளை காக்க வைத்து விட்டு மருத்துவமனையின் ஒரு அறையில் நடைபெற்ற சேலை விற்பனையை பார்க்க சென்ற செவிலியர்கள். வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் சந்தைமேடு பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்காமல் காக்க வைக்கப்பட்டு செவிலியர்கள் ஒரு அறையில் ஒருங்கிணைந்து சேலை விற்பனை நடைபெற்றதை பார்த்து விற்பனையில் ஈடுபட்ட பெண்களிடம் செவிலியர்கள் மும்முரமாக பேசிய வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை […]

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -3 கப்ளிசேட் உஸ்மானிய பேரரசு -16 ( கி.பி 1299-1922) டெல்லியிற்க்குள் தைமூரின் முழுப்படைகளும் நுழைந்தன. கட்டிடங்களில் தளபதிகள் தங்கிக்கொண்டனர். மேலும் வீரர்களுக்கு தங்க கூடாரங்களும் அமைக்கப்பட்டன. தைமூரின் பயத்தால் டெல்லி சுல்தான் முஹம்மதுஷாவும் தளபதி மல்லுகானும் தப்பி ஓடிவிட்டனர். அரசவை கூட்டப்பட்டது. டெல்லியின் முக்கிய அமைச்சர்கள் அதிகாரிகள் வந்து தைமூருக்கு பணிந்து சென்றார்கள். தைமூருக்கு யானையை கண்டாலே பயம்.100 க்கு மேற்பட்ட யானைகள் தைமூரின் முன்பு வந்து மண்டியிட்டன. தைமூருக்கு யானைகளை […]

தென்காசி மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி; நலத்திட்ட உதவிகள் வழங்கல்..

தென்காசி மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி; நலத்திட்ட உதவிகள் வழங்கல்.. தென்காசி மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ரூ.3 கோடியே 74 இலட்சத்து 16 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து 485 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 3 இலட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட […]

தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் தாமரை மலர வேண்டும்!- சரத்குமார் ஆசை..

தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் தாமரை மலர வேண்டும்!- சரத்குமார் ஆசை.. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்தப் பொதுக்கூட்டத்தில் நடிகர் சரத் குமாரும் கலந்துகொண்டார். முன்னதாக, பிரதமர் மோடி திருவனந்தபுரம் வரை விமானத்தில் வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரி வந்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய சரத்குமார், சமத்துவ மக்கள் கட்சியை பாரதிய ஜனதா உடன் இணைத்த பின்னர் இது எனது கன்னி பேச்சு. […]

பாஜக வேண்டவே வேண்டாம் அடம் பிடிக்கும் கட்சியினர்; கூட்டணி குழப்பத்தில் பாமக..

பாஜவுடன் பாமக கூட்டணி வைப்பது தொடர்பாக தைலாபுரம் தோட்டத்தில்  நடக்க இருந்த மாவட்ட செயலாளர்கள் அவசர கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. பாஜவுடன் கூட்டணி வைக்க பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மக்களவை தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்க உள்ள நிலையில் தமிழகத்தில் திமுக தோழமை கட்சிகளுடன் தொகுதி பங்கீடு சுமூகமாக நடந்து முடிந்துள்ளது. பிரதான கட்சியாக உள்ள பாமக, தேமுதிகவிடம் அதிமுக தரப்பில் கூட்டணி தொடர்பாக […]

மன்சூர் அலிகானை அவரது கட்சியில் இருந்தே தலைவர் பதவியில் இருந்து அவரை அதிரடியாக நீக்கிய நிர்வாகிகள்..

இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகானை நீக்கி அவசர செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம். தலைவருக்கு இருந்த அதிகாரங்கள் அனைத்தும் பொதுச்செயலாளர் கண்ணதாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இனி மன்சூர் அலிகான் உறுப்பினராக மட்டுமே இருக்க முடியும். தன்னிச்சையாக செயல்பட்டதாலும், நிர்வாகிகள் இடையே எந்தவித ஆலோசனையையும் மேற்கொள்ளாததாலும் செயற்குழுவைக் கூட்டி இவ்வாறு செய்ததாக பொதுச்செயலாளர் கண்ணதாசன் பேட்டி.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!