இன்று தொடங்குகிறது, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளில் வேட்புமனு தாக்கல்..

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 19-ந் தேதி நடக்கிறது. தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா தலைமையிலான கூட்டணியில் அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றது. எனவே, அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் தீவிரம் காட்டி உள்ளன. விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, நாம் தமிழர் உள்ளிட்ட ஒருசில கட்சிகள் மட்டுமே தற்போது வேட்பாளர்களை அறிவித்துள்ளன. மற்ற கட்சிகள் ஓரிரு நாட்களில் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட உள்ளது. இந்த நிலையில், […]

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மாற்றம்: டாக்டர். கையிலைராசன் அறிவிப்பு..

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மாற்றம்: டாக்டர். கையிலைராசன் அறிவிப்பு.. நடைபெறவுள்ள 2024 பாராளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் நாம் தமிழர் கட்சி திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக நிரஞ்சனா அறிவிக்க பட்டிருந்த நிலையில் அவரை நீக்கம் செய்து தற்போது திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக டாக்டர். துரை கையிலைராசன் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேட்டுப்பாளையம் ஐக்கிய ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பாக காவல் நிலையத்தில் புகார் மனு..

மேட்டுப்பாளையம் ஐக்கிய ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பாக காவல் நிலையத்தில் புகார் மனு.. சென்னை மாம்பழம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ Tv என்கிற YOUTUBE CHANNEL கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம் பற்றிய செய்தி ஒன்று வெளியிட்டு இருக்கிறார்கள் . மேட்டுப்பாளையத்தில் இந்து மற்றும் முஸ்லிம் மக்களிடையே மத கலவரத்தை ஏற்படுத்தும் விதமாகவும் , இஸ்லாமிய மக்களை தீவிரவாதிகளாக சித்தரிக்க வேண்டும் என்கின்ற கெட்ட எண்ணத்திலும்,மேட்டுப்பாளையத்தில் வசிக்கும் இஸ்லாமிய மக்கள் நக்சலைட்டுகளோடு தொடர்புடையவர்கள் என்றும் […]

பாஜக உடன் பாமக கூட்டணி: கட்சியில் இருந்து வரிசையாக விலகும் பாமக தொண்டர்கள்.! இணையதளத்தில் ஆவேசம்..

பாஜக உடன் பாமக கூட்டணி: கட்சியில் இருந்து வரிசையாக விலகும் பாமக தொண்டர்கள்.! இணையதளத்தில் ஆவேசம்.. நேற்று மாலை வரை அதிமுக-பாமக கூட்டணி உறுதி என இருந்த நிலையில் நேற்று மாலை திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்த உயர்மட்டக் குழு, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தல் பாஜக கூட்டணியில் போட்டியிடுவதாக முடிவெடுக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி, பாஜக […]

கீழக்கரை வடக்கு தெரு மற்றும் பிற பகுதிகளில் நோன்பு கஞ்சி விநியோகம்..

இன்று கீழக்கரையில் முதல் நோன்பு திறக்கும் நேரம் நெருங்கி விட்டது. நோன்பை எந்த அளவு ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருப்போமோ அதுபோல் கீழக்கரை பள்ளி வாசல்களில் அசர் நேரத் தொழுகைக்குப் பிறகு ஊற்றப்படும் நோன்பு கஞ்சிக்கு காத்திருக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இந்த நோன்பு கஞ்சி பெரியவர் முதல் சிறியவர் வரை, செல்வந்தர் முதல் வறியவர்கள் வரை எந்த பாகுபாடின்றி வாங்கி செல்லும் காட்சியை நோன்பு காலங்களில் காண முடியும். பள்ளிகளில் ஊற்றப்படும் கஞ்சிக்கு நிகர் எதுவும் கிடையாது. […]

திமுக தலைமையிலான INDIA கூட்டணிக்கு ஆதரவு! மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவிப்பு..

திமுக தலைமையிலான INDIA கூட்டணிக்கு ஆதரவு! மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவிப்பு.. நடைபெறவுள்ள 2024- நாடாளுமன்ற தேர்தலில் மனிதநேய ஜனநாயக கட்சி I.N.D.I.A கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக முடிவு செய்திருக்கிறது. இந்த தேர்தல் களத்தை ஜனநாயக சக்திகளுக்கும், ஃபாசிச சக்திகளுக்கும் இடையிலான சித்தாந்த போராட்டமாக மனிதநேய ஜனநாயக கட்சி கருதுகிறது. நாட்டின் பன்மை கலாச்சாரத்தையும், ஜனநாயக மாண்புகளையும் பாதுகாப்பது அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனையாக மாறியுள்ளதை கவனத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேர்தலில் […]

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் அதிரடி சோதனை !திருவாடனை அருகே சிக்கிய பணம் !!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கருமொழி செக்போஸ்டில் நாடாளுமன்றத் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்த நிலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி கோட்டைராஜா தலைமையிலான குழுவினர் அதிரடியாக வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த பௌசுல்லா என்பவர் காரில் உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ.80 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் மற்றொரு காரில் கண்ணன் என்பவர் எடுத்து வந்த மு க ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் புகைப்படங்கள் அச்சிடப்பட்ட 5 டீசர்ட் பண்டில்களை […]

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வங்கியாளர்களுடனான ஆலோசனை கூட்டம் !

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வங்கியாளர்கள் உடன் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், நாடாளுமன்ற பொதுத்தேர்தல்- 2024க்காண தேர்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்ததையொட்டி வங்கியாளர்கள் பண பரிவர்த்தனைகள் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணைய வழிகாட்டுதலை பின்பற்றி செயல்பட வேண்டும்.ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கும் அதே போல் ஏடிஎம் இயந்திரங்களுக்கு பணம் எடுத்துச் செல்லும் […]

தமிழ்நாட்டில் உள்ள எம்பிகள் தான் இந்தியாவை காப்பாற்றுகின்ற பெருமையை செய்தார்கள்- எம்.பி. சு.வெங்கடேசன் பேச்சு

மதுரை பசுமலையில் தனியார் மண்டபத்தில் திமுக சார்பில் மதுரை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.இதில் மதுரை பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட போகும் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் கலந்து கொண்டு உரையாற்றினார் இந்த நிகழ்ச்சியை திமுக மதுரை மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏ வும் மான கோ தளபதி ஏற்பாடு செய்திருந்தார் இந்த நிகழ்ச்சியில் திமுக மாமன்ற உறுப்பினர்கள் மாவட்ட நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து பேசிய எம்.பி சு.வெங்கடேசன் […]

பா.ஜ.க.-பா.ம.க. கூட்டணி-தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து..

தமிழகத்தில் மக்களை தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகளில் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. திமுக அதன் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பங்கீடு செய்துள்ளது.அதிமுக, பா.ஜனதா கூட்டணி இன்னும் முடிவாகவில்லை. அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி சேர இருப்பதாக தகவல் வெளியானது. அதற்கு ஏற்ப இரு கட்சி பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தன. நேற்று வரை அதிமுக கூட்டணியில்தான் பாமக இணையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாமக மாநிலங்களவை எம்.பி. பதவி கேட்டதால் இழுபறி நீடித்து வந்தது.இந்த நிலையில் யாருடன் […]

பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுப்பதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்..

பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கும்படி முதல்வரின் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரான பொன்முக்கு மாநில அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்ற முதல்வரின் கோரிக்கைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்திருக்கிறார். சட்ட ரீதியான தடைகள் ஏதும் இல்லாத போது மாநில அரசின் பரிந்துரையை நிறைவேற்றுவது தான் […]

பல தொகுதிகள் சில மாற்றங்களுடன் திமுகவின் கூட்டணி பலப்பரீட்சை..

திமுக கடந்த 2019 லோக்சபா தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக, இம்முறை 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதில், ஈரோடு, பெரம்பலூர், தேனி, கோவை, ஆரணி ஆகிய 5 தொகுதிகளை கூட்டணி கட்சிகளிடம் கைப்பற்றி தானே போட்டியிடுகிறது திமுக. அதற்கு பதிலாக கடந்த முறை போட்டியிட்ட திண்டுக்கல் தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், கடலூர், மயிலாடுதுறை, திருநெல்வேலி தொகுதிகளை காங்கிரசுக்கும் விட்டுக்கொடுத்துள்ளது. காங்கிரஸ் காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை ஆரணி, தேனி தொகுதிகளை திமுக.,வுக்கும், திருச்சியை மதிமுக.,வுக்கும் விட்டுக்கொடுத்து, […]

மக்களவைத் தேர்தல் 2024: திமுக கூட்டணி கட்சிகள் களமிறங்கும் தொகுதிகள் ஓர் பார்வை..

மக்களவைத் தேர்தல் 2024: திமுக கூட்டணி கட்சிகள் களமிறங்கும் தொகுதிகள் ஓர் பார்வை.. ✦ சென்னை வடக்கு✦ சென்னை தெற்கு✦ மத்திய சென்னை✦ காஞ்சிபுரம் ( தனி)✦ அரக்கோணம்✦ வேலூர்✦ தருமபுரி✦ திருவண்ணாமலை✦ சேலம்✦ கள்ளக்குறிச்சி ✦ நீலகிரி (தனி) ✦ பொள்ளாச்சி✦ கோவை ✦ தஞ்சாவூர்✦ தூத்துக்குடி✦ தென்காசி (தனி)✦ ஸ்ரீபெரம்புதூர்✦ பெரம்பலூர்✦ தேனி✦ ஈரோடு✦ ஆரணி ✦ திருவள்ளூர் (தனி) (காங்)✦ கடலூர் (காங்)✦ மயிலாடுதுறை (காங்)✦ சிவகங்கை (காங்)✦ திருநெல்வேலி (காங்)✦ கிருஷ்ணகிரி […]

பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்த பாமக..

பாராளுமன்ற தேர்தலை சந்திக்க கூட்டணியை உறுதிப்படுத்துவதில் பா.ஜ.க தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு முயற்சித்தனர். ஆனால் அ.தி.மு.க. ஏற்கவில்லை. இதனால் பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா., அ.ம.மு.க., ஓ.பன்னீர்செல்வம், புதிய நீதிக்கட்சி, ஐ.ஜே.கே. ஆகிய கட்சிகளை ஒருங்கிணைத்து புதிய கூட்டணியை உருவாக்க முயன்று வருகிறது. இதில் பா.ம.க., தே.மு.தி.க.வை தவிர மற்ற கட்சிகள் பா.ஜ.க கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்துவிட்டன.பா.ம.க.வையும், தே.மு.தி.க.வையும் இழுப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடந்து வந்தது. அ.தி.மு.க.வுடனும் பேசிக் கொண்டிருப்பதால் இரு கட்சிகளும் எந்த அணியில் சேருவது […]

பாவூர் சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க தலைவர்கள் தேர்வு..

பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க தலைவர்கள் தேர்வு.. பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் முத்தலைவர்கள் தேர்வு பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆலமரம் வட்டாரத் தலைவர் இளங்கோ தலைமை தாங்கினார். செயலாளர் சசி ஞானசேகரன், முன்னாள் செயலாளர் R.கலைச்செல்வன் மற்றும் உறுப்பினர் R.அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் முன்னாள் தலைவர் பொன் அறிவழகன் வரவேற்றார். […]

மக்களவைத் தேர்தல் 2024: திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் களமிறங்கும் தொகுதிகள்..!

மக்களவைத் தேர்தல் 2024: திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் களமிறங்கும் தொகுதிகள்..! திமுக!  சென்னை வடக்கு சென்னை தெற்கு மத்திய சென்னை காஞ்சிபுரம் ( தனி) அரக்கோணம் வேலூர் தருமபுரி திருவண்ணாமலை சேலம் கள்ளக்குறிச்சி நீலகிரி (தனி) பொள்ளாச்சி கோவை தஞ்சாவூர் தூத்துக்குடி தென்காசி (தனி) ஸ்ரீபெரம்புதூர் பெரம்பலூர் தேனி ஈரோடு ஆரணி காங்கிரஸ்!  திருவள்ளூர் (தனி) கடலூர் மயிலாடுதுறை சிவகங்கை திருநெல்வேலி கிருஷ்ணகிரி கரூர் விருதுநகர் கன்னியாகுமரி புதுச்சேரி  சிதம்பரம் (விசிக) விழுப்புரம் (விசிக) மதுரை […]

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -3 கப்ளிசேட் உஸ்மானிய பேரரசு -18 (கி.பி 1299-1922) உஸ்மானிய பேரரசர் பயாசித் சிற்றரசுகளை வெற்றி கொள்ளும்போது அதன் படைப்பிரிவுகளையும் தனது படைப்பிரிவுகளோடு இணைத்து இருந்தார். சிற்றரசுகளின் படைவீரர்களுக்கு சம்பளங்கள் கிடைத்ததால், உஸ்மானிய படையில் பணிபுரிந்தனர். தைமூரின் படையோடு இணைந்திருந்த சிற்றரசர்கள், தைமூரின் படையில் முன் அணியில் வந்தபோது, அதனை கண்ட பயாசித்தின் படையில் இணைந்திருந்த சிற்றரசுகளின் வீரர்கள் தங்கள் மன்னர்கள் மீது உள்ள பிரியத்தால் பிரிந்து சென்று தங்கள் மன்னர்களோடு சேர்ந்து […]

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கோவையில் திங்கட்கிழமை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக மாநகர போலீசார் அறிவிப்பு..

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கோவையில்  போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக மாநகர போலீசார் அறிவித்துள்ளனர். கோவை மாநகருக்கு பிரதமர் வருகையை முன்னிட்டு 18.03.24 திங்கட்கிழமை பிற்பகல் 2:00 மணி முதல் கீழ்கண்டவாறு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. கனரக வாகனங்கள்.. காலை 6 மணி முதல் மற்றும் 19ம் தேதி காலை 11 மணி வரை இரண்டு நாட்கள் நகர எல்லைக்குள் வர அனுமதி இல்லை. அவிநாசி சாலை வழியாக மாநகருக்குள் வந்து சத்தி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு. […]

தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால், ஆவணமின்றி கையில் எவ்வளவு பணம் எடுத்து செல்லலாம்..?

தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால், ஆவணமின்றி கையில் எவ்வளவு பணம் எடுத்து செல்லலாம்..? நாடளுமன்ற தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால் எவ்வளவு பணம் கையில் எடுத்து செல்லலாம் என பலரும் குழம்பி உள்ளனர். இனி குழப்பம் வேண்டாம். அதாவது நடத்தை விதி அமலில் இருந்தாலும் கூட பொதுமக்கள் ரூ.50 ஆயிரத்துக்குள்ளான ரொக்கப்பணத்தை தாராளமாக எடுத்து செல்லாம். பறக்கும்படையினர் மறித்தால் பணத்துக்கான உரிய காரணத்தை கூறிவிட்டு செல்லலாம். மாறாக ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமான பணத்தை கையிலோ, […]

ஏப்ரல் 19, 26 ஆகிய தேர்தல் தேதிகள் வெள்ளிக்கிழமை வருவதால் அவைகளை மாற்ற வேண்டும்!-தேர்தல் ஆணையத்துக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்..

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான அறிவிப்புகள் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 7 கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதன்படி முதல் கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதேப்போல் ஏப்ரல் 26ம் தேதி கேரளா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் இரண்டாம் கட்ட தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஏப்ரல் 19 மற்றும் ஏப்ரல் 26 […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!