ஐ.பி.எல். கிரிக்கெட் நாளை கோலாகலமாக தொடக்கம்: சென்னை, பெங்களூரு அணி வீரர்கள் தீவிர பயிற்சி..

17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நாளை கண்கவர் கலை நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்குகிறது. நாளை இரவு 8 மணிக்கு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் மோதுகின்றன. ஐ.பி.எல். கிரிக்கெட்டின் தொடக்க ஆட்டம் சென்னையில் நடப்பது இது 5-வது முறையாகும். ஏற்கனவே 2011, 2012, 2019, 2021-ம் ஆண்டு சீசனும் சென்னையில் இருந்து தான் […]

தென்காசி மாவட்டத்தில் பேருந்துகளில் தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் பணி; மகளிர் திட்ட இயக்குநர் துவங்கி வைத்தார்..

தென்காசி மாவட்டத்தில் பேருந்துகளில் தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் பணி; மகளிர் திட்ட இயக்குநர் தொடங்கி வைத்தார்.. தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு மற்றும் நேர்மையாக வாக்களித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி பேருந்துகளில் தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டி தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் முகாமினை 20.03.2024 அன்று தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் மகளிர் திட்ட இயக்குநர் இரா.மதி இந்திரா பிரியதர்ஷினி தொடங்கி வைத்தார். ஜனநாயகம், கண்ணியத்துடன் வாக்களியுங்கள், 100% நேர்மையாக வாக்களிப்போம், இந்த மை நமது […]

மூளையில் அறுவை சிகிச்சை: குணமடைந்து வருகிறேன் என வீடியோ வெளியிட்ட சத்குரு..

கோவை ஈஷா மையத்தின் நிறுவனரான சத்குரு கடந்த 4 வாரங்களாக கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். ஆனாலும், மகா சிவராத்திரியிலும் டெல்லியில் நடந்த மற்ற கூட்டங்களிலும் சத்குரு முழுமையாக பங்கேற்றார். இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் சத்குரு அவசர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். தற்போது அவர் நன்றாக குணமடைந்து வருகிறார். கவலைப்பட ஒன்றுமில்லை. சத்குருவின் உடல் நிலையில் முன்னேற்றம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.இதுதொடர்பாக, அப்பல்லோ மருத்துவர் வினித் சூரி கூறுகையில், சத்குரு […]

பாராளுமன்ற தேர்தல்2024: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசார சுற்றுப்பயண விபரங்கள் மற்றும் தேதிகள் அறிவிப்பு..

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளிலும் அடுத்த மாதம் ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையடுத்து நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலை தி.மு.க. கூட்டணி தனது தோழமைக் கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், கொங்கு நாடு […]

அதிமுக வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்; ஆர்.பி உதயகுமார் பேச்சு..

அதிமுக வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்; ஆர்.பி உதயகுமார் பேச்சு.. சோழவந்தானில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ஆர்பி. உதயகுமார் கலந்து கொண்டு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறும் போது, தமிழகத்தில் 2019 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 38 தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக மத்திய […]

மதுரையில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ரூபாய் 78,500 பறிமுதல்..

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சிலைமான் அருகே தேர்தல் பறக்கும்படை சோதனையில் ரூபாய் 78,500 பறிமுதல் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சிலைமான் அருகே தேர்தல் பறக்கும் படை C டீம் , மாநில தணிக்கைத்துறை அலுவலர் தேன் மாரிகனி தலைமையில் சோதனை நடைபெற்றது. அப்போது மதுரை மாவட்டம் சிலைமான் புளியங்குளம் பகுதியை சேர்ந்த முகம்மது ஹனிபா என்பவரின் மகன் அப்துல் பத்தாஹ் (வயது 50) என்பவர் சிலைமான் அருகே தாஜ் பிரிக்ஸ் கோட்ஸ் என்ற பெயரில் செங்கல் தயாரித்து […]

துணை ராணுவப்படை அணிவகுப்பு ! மாவட்ட எஸ் பி பங்கேற்பு !!

ராமநாதபுரம் மாவட்டத்தில் துணை ராணுவ படையினரின் அணிவகுப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ் தலைமையில் பொதுமக்கள் பாராளுமன்ற தேர்தலில் நேர்மையாக அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒத்திகை நடைபெற்றது. குமரய்யா கோயிலில் தொடங்கி நகரின் முக்கிய பகுதியில் வலம் வந்து நிறைவடைந்தது.   ஏப்ரல் 19ஆம் தேதி அன்று பாராளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் முதல் கட்டமாக நடைபெற உள்ளதால் இந்த ஒத்திகை நடைபெற்றது. மேலும்  தேர்தல் ஆணையத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ,தேர்தலில் வாக்களிப்பது […]

அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு திருவள்ளூர், மத்திய சென்னை, கடலூர், தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய 5 தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கீடு!-எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு..

பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை வெளியிட்டு இருந்தார். மேலும் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி (தனி) தொகுதியும், எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தமும் கையெழுத்தானது.இதனிடையே, அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.அதன்படி, திருவள்ளூர், மத்திய சென்னை, கடலூர், தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய […]

நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு ,இந்திய தேசிய லீக் கட்சி தனது ஆதரவு !

இ சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலினை சந்தித்து இந்தியா கூட்டணிக்கு இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் பஷீர் அகமது ஆதரவைத்து தெரிவித்தார்.பொதுச் செயலாளர் கவியருவி பேராசிரியர் தி.மு. அப்துல் காதர், மாநில பொருளாளர் குத்தூஸ் ராஜா, மாநில அமைப்புச் செயலாளர் ஷாஜகான், தென் மண்டல அமைப்புச் செயலாளர் அம்ஜத் கான், உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு இந்திய தேசிய லீக் கட்சியினர் ஆதரவை தெரிவித்தனர்.

திமுகவின் நாடகங்களை நம்ப மக்கள் தயாராக இல்லை: அண்ணாமலை ஆவேசம்..

திமுகவின் நாடகங்களை நம்ப மக்கள் தயாராக இல்லை: அண்ணாமலை ஆவேசம்.. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, திமுக கொடுத்த 99% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக, மேடைக்கு மேடை பொய் கூறிக் கொண்டிருந்த முதலமைச்சர் ஸ்டாலின், அதே தேர்தல் வாக்குறுதிகளை, அப்படியே மறுபடியும் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலுக்கும் கொடுத்திருப்பதிலிருந்தே, எந்தத் தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பது தெரிகிறது. திமுக தனது 2021 தேர்தல் வாக்குறுதிகளில், சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம் […]

தமிழகத்தில் நான்கு முனை போட்டி!-தனித்து களம் இறங்கும் சீமான்! சூடு கிளப்பிய தமிழ்நாடு தேர்தல் களம்..

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்து உள்ளது. தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி களம் காணும் நிலையில் அதனை எதிர்த்து அ.தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், பாரதிய ஜனதா கட்சி தலைமையில் இன்னொரு அணியும் போட்டியிடுகின்றன.இப்படி 3 அணிகள் களம் காணும் நிலையில் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மொத்தம் உள்ள […]

ஒவ்வொரு தேர்தலுக்கும் அணி மாறும் பாமக..

  1991ம் ஆண்டு தனித்துப் போட்டியிட்ட பாமக ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. பண்ருட்டி தொகுதியில் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் வெற்றி பெற்றார். 1996ம் ஆண்டு வாழப்பாடி ராமமூர்த்தி தலைமையிலான என்.டி. திவாரி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு 4 எம்எல்ஏக்களைப் பெற்றது. 2001ம் ஆண்டு அதிமுக கூட்டணியில் நின்று 20 எம்எல்ஏக்களைப் பெற்றது. அதன்பின்னர் 2006ம் ஆண்டு திமுக கூட்டணியில் போட்டியிட்டு 18 எம்எல்ஏக்களை பெற்றது. பின்னர் 2011ல் திமுக கூட்டணியில் 3 […]

தென்காசி மக்களவை தொகுதியின் திமுக வேட்பாளராக டாக்டர் ராணி எம்பிபிஎஸ்..

தென்காசி மக்களவை தொகுதியின் திமுக வேட்பாளராக டாக்டர் ராணி எம்பிபிஎஸ்.. தென்காசி மக்களவை தொகுதியின் திமுக வேட்பாளராக சங்கரன்கோவில் அரசு மருத்துவர் ராணி அறிவிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கான தி.மு.க வேட்பாளர் பட்டியலை தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான […]

கஷ்டமான முடிவு; இஷ்டப்பட்டு எடுத்தேன்-மீண்டும் பாஜகவில் இணைந்த தமிழிசை சௌந்தரராஜன்..

கஷ்டமான முடிவு; இஷ்டப்பட்டு எடுத்தேன்-மீண்டும் பாஜகவில் இணைந்த தமிழிசை சௌந்தரராஜன்.. ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த மருத்துவர் தமிழிசை செளந்தர்ராஜன், மீண்டும் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். அப்போது பாஜக முன்னாள் தலைவர் எல்.முருகன், இந்நாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் உடனிருந்தனர். தெலங்கானா, புதுச்சேரி ஆளுநராக இருந்த தமிழிசை தனது பதவியை நேற்று முன் தினம் (மார்ச் 18) ராஜினாமா செய்தார். தொடர்ந்து சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்துக்கு இன்று வந்த அவர், பாரதிய ஜனதா […]

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -3 கப்ளிசேட் உஸ்மானிய பேரரசு -20 (கி.பி 1299-1922) பயாசித் அவர்களின் மகன் முகம்மது ஆட்சி பொறுப்பு ஏற்றதும் சிதறி இருந்த நிலப்பகுதிகளை ஒன்றாக்கி மீண்டும் உஸ்மானிய சாம்ராஜ்ஜியத்தை கட்டமைத்தார். மூத்த அமைச்சராக தந்தை காலத்தில் பணியாற்றிய மீர்ஜாபரை மீண்டும் முதல் அமைச்சராக மன்னர் முகம்மது நியமித்தார். அமைச்சரின் ஆலோசனைகளை கேட்டு அதை மன்னர் பின்பற்றினார். அப்போது அவர் கூறிய பல செய்திகள் முகம்மதிற்கு ஆச்சரியமாக இருந்தது. உஸ்மானிய மன்னர்கள் பலர் பல […]

2024 பாராளுமன்ற தேர்தல்: திமுகவின் 21 வேட்பாளர் பட்டியல் வெளியீடு..

திமுக வின் 21  வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.. 1,தூத்துக்குடி- கனிமொழி, 2,தென்காசி -டாக்டர்.ராணி ஸ்ரீகுமார். 3,வடசென்னை- டாக்டர் கலாநிதி வீராசாமி, 4,தென்சென்னை- தமிழச்சி தங்கபாண்டியன், 5,மத்தியசென்னை- தயாநிதி மாறன், 6,ஸ்ரீபெரும்புதூர்- டி.ஆர்.பாலு, 7,காஞ்சீபுரம் – ஜி.செல்வம், 8,அரக்கோணம்- எஸ்.ஜெகத்ரட்சகன், 9,திருவண்ணாமலை- அண்ணாதுரை 10,தர்மபுரி- ஆ.மணி 11,ஆரணி-தரணிவேந்தன் 12,வேலூர்- கதிர் ஆனந்த், 13,கள்ளக்குறிச்சி- மலையரசன் 14,சேலம்-செல்வகணபதி 15,கோயம்புத்தூர் – கணபதி ராஜ்குமார். 16,பெரம்பலூர் – அருண் நேரு 17,நீலகிரி – ஆ.ராசா, 18,பொள்ளாச்சி- ஈஸ்வரசாமி 19,தஞ்சாவூர் – முரசொலி […]

தேர்தல் அறிக்கையை வெளியிட்டது தி.மு.க!- அதிரடியாக 36 வாக்குறுதிகளை கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தேர்தல் அறிக்கையை வெளியிட்டது தி.மு.க!- அதிரடியாக 36 வாக்குறுதிகளை கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் 10 ஆண்டுகால பாசிச பாஜக அரசை வீழ்த்த, நாடு […]

தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு..

தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு.. தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் 19.03.2024 அன்று தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு மற்றும் நேர்மையாக வாக்களித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மூன்று இலட்சம் வாக்காளர்களின் கையெழுத்து பெறும் மாபெரும் முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏகே.கமல் கிஷோர் தொடங்கி வைத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் T.P.சுரேஷ் குமார் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் […]

16 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!-தேமுதிக-விற்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு,புதிய தமிழகம், SDPI கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு..

16 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!-தேமுதிக-விற்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு, புதிய தமிழகம், SDPI கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு..  வடசென்னை – ராயபுரம் மனோகரன் தென் சென்னை – ஜெயவர்தன் காஞ்சிபுரம் – ராஜசேகர் அரக்கோணம் – விஜயன் ஆரணி – கஜேந்திரன் கிருஷ்ணகிரி – ஜெயப்பிரகாஷ் விழுப்புரம் – பாக்கியராஜ் சேலம் – விக்னேஷ் நாமக்கல் – தமிழ்மணி ஈரோடு – ஆற்றல் அசோக்குமார் கரூர் – தங்கவேல் சிதம்பரம் […]

தமிழர்களிடம் மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே பகிரங்க மன்னிப்பு கோரினார்..

தமிழர்களிடம் மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே பகிரங்க மன்னிப்பு கோரினார்.. பெங்களூரு குண்டு வெடிப்பு தொடர்பாக தமிழர்களை தொடர்புப்படுத்திப் பேசியதற்கு தமிழ்நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் மத்திய பாஜக இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே. தமிழ்நாட்டு மக்கள் மற்றும் அரசியல் தலைவர்களிடம் இருந்து கண்டனம் வலுத்த நிலையில், தமது கருத்தை திரும்பப்பெறுவதாக X தளத்தில் பதிவு. பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புபடுத்தி மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே சர்ச்சை கருத்தை பதிவிட்டார். இதற்கு […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!