களத்தில் நின்று இருந்து பணியாற்ற வேண்டும் என்ற சீரிய வீரிய சிந்தனையோடு நான் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன்!- தனது பதவியை ராஜினாமா செய்ததற்கான விளக்கம் அளித்த தமிழிசை சவுந்தர்ராஜன்..

  நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பாக தமிழிசை சவுந்திரராஜன் வேட்பாளராக அறிவித்துள்ளார். இந்தநிலையில், ஏன் இரண்டு மாநில ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியல் களத்திற்கு வந்துள்ளேன் என்பதை தமிழிசை அறிக்கையாக வெளியிட்டுள்ளார். அதில், தென்சென்னை மக்களுக்கு உங்கள் அன்புச் சகோதரி டாக்டர்.தமிழிசை சௌந்தர்ராஜன் மனம் திறந்த மடல்… நான் ஏன் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன் என்ற கேள்வி என்னை தொடர்ந்து துரத்திக் கொண்டே இருக்கிறது. என்னை சந்திக்க வரும் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் […]

மேனகா காந்தி, கங்கனா ரணாவத் உட்பட 111 பாஜக வேட்பாளர் அடங்கிய 5-வது பட்டியல் வெளியீடு..

மேனகா காந்தி, கங்கனா ரணாவத் உட்பட 111 பாஜக வேட்பாளர் அடங்கிய 5-வது பட்டியல் வெளியீடு.. மக்களவைத் தேர்தலில் போட்டி யிடும் 5-வது கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது. இதில் மேனகா காந்தி, கங்கனா ரணாவத் உட்பட 111 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்காக பாஜக இதுவரை 4 கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. […]

ஐ.பி.எல். தொடரில், மும்பை அணியை வீழ்த்தியது குஜராத் அணி..

17-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் கடந்த 22-ம் தேதி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற 2வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் மற்றும் சஹா ஆகியோர் களம் இறங்கினர். இதில் சஹா 19 ரன்னில் பும்ரா பந்துவீச்சில் […]

ராமநாதபுரம் மாவட்டத்தில் அஇஅதிமுக கழகத்தில் மாற்று கட்சியினர் இணைந்தனர் !

ராமநாதபுரம் மாவட்டத்தில் அஇஅதிமுக கழக அமைப்பு செயலாளர் அ அன்வர் ராஜா மாவட்ட கழக செயலாளர் MA முனியசாமி ஆர் எஸ் மங்களம் ஒன்றிய செயலாளர் SRG திருமலை ஆர் எஸ் மங்களம் ஒன்றிய சிறுபாண்மை நலப்பிரிவு செயலாளர் P பசுருருல் ஹக் ஆகியோர் முன்னிலையில் 50க்கும் மேற்பட்டோர் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி அஇஅதிமுக கழகத்தின் இணைந்தனர். இந்நிகழ்வில் மாற்று கட்சி நிர்வாகிகளான EX. MP. ரித்தீஸ் PA டூயட் பாபு (எ) முகமது ரிலுவான் […]

திருச்சியில் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்!- திமுகவை சில்லு சில்லாக உடைத்த எடப்பாடி பழனிச்சாமி..

திருச்சி – திண்டுக்கல் நெடுஞ்சாலையில் வண்ணாங்கோவில் அருகே, அதிமுக சார்பில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொள்ளும் பிரச்சார பொதுக்கூட்டம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை எடப்பாடி பழனிசாமி ஒரே மேடையில் அறிமுகம் செய்து வைத்தார். இந்தக் கூட்டத்தில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக், புதிய […]

மோடி மீண்டும் பிரதமராக வரக்கூடாது;அவர் தோற்கடிக்கப்பட வேண்டும்!-பகீர் கிளப்பிய சுப்பிரமணிய சுவாமி..

மதுரை மாவட்ட பா.ஜ.க. நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சி மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் எம்.பியுமான சுப்பிரமணியன் சுவாமி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது:- எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் பா.ஜ.க. வேட்பாளர்களில் நயினார் நாகேந்திரன் வெற்றி பெறுவார். மற்றவர்கள் பற்றி எனக்கு தெரியாது. கனவு எல்லாருக்கும் இருக்கிறது. அது நடக்குமா என்பதை பொறுத்திருந்து […]

துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று சென்று விட்டனர்!-பாமக வை பங்கமாய் கலாய்த்த பிரேமலதா விஜயகாந்த்..

திருச்சியில் அ.தி.மு.கவின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்தினார்.இந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்பட அதிமுக கூட்டணி தலைவர்களும் பங்கேற்றனர்.அப்போது, விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார்.அப்போது, கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-அ.தி.மு.க. – தே.மு.தி.க. கூட்டணி என்பது வெற்றிக் கூட்டணி. அ.தி.மு.க. […]

உ.பி. மாநிலம் பிஜ்னோர் பகுதியில் பைக்கில் சென்ற இஸ்லாமியர்களை வழிமறித்து வலுக்கட்டாயமாக ஹோலி கலர் பொடி தூவியும், தண்ணீர் ஊற்றியும், ஜெய் ஸ்ரீராம் கூறி அட்டகாசம்..

உ.பி. மாநிலம் பிஜ்னோர் பகுதியில் பைக்கில் சென்ற இஸ்லாமியர்களை வழிமறித்து வலுக்கட்டாயமாக ஹோலி கலர் பொடி தூவியும், தண்ணீர் ஊற்றியும், ஜெய் ஸ்ரீராம் கூறி அட்டகாசம்.. ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடுவது வழக்கம். வட இந்தியர்கள் வெகு விமர்சையாக கொண்டாடும் இந்த பண்டிகையானது வண்ணப்பொடிகளை தூவியும், வண்ணம் கலந்த தண்ணீரை ஊற்றியும் கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த மார்ச் 24,25 ஆகிய தேதிகளில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை […]

கெஜ்ரிவால் கைதை கண்டித்து ‘இந்தியா’ கூட்டணி சார்பில் டெல்லியில் பேரணி அறிவிப்பு..

டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து ‘இந்தியா’ கூட்டணி சார்பில் மார்ச் 31-ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் மாபெரும் பேரணி நடத்த இருப்பதாக ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் அறிவித்துள்ளது.எதிர்க்கட்சிகள் மீதான ஒன்றிய அரசின் அடக்குமுறையை கண்டித்தும், நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும்’ என்ற கருப்பொருளில் எதிர்க்கட்சிகளின் பேரணி நடக்கிறது. இந்த பேரணியில் திமுக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கவுள்ளனடெல்லி மதுபான கொள்கையில் ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை, டெல்லி முதல்வர் அரவிந்த் […]

இதுக்காத்தான் தான் டிவி ரிமோட் உடைத்தேன்!-புது விளக்கம் கொடுத்த மநீம தலைவர் கமல்ஹாசன்..

தமிழ்நாட்டில் வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஆதரவு அளித்துள்ளது. இதனால் மக்கள் நீதி மய்யத்திற்கு திமுக ஒரு மாநிலங்களவை தொகுதி கொடுக்கப்பட உள்ளது. ஆனால், மக்களவை தொகுதி எதுவும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, வரும் 29-ந்தேதி முதல் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்ய உள்ளார்.அவர் வரும் 29-ந்தேதி முதல் ஏப். 16-ந்தேதி வரை பிரசாரம் செய்ய உள்ளார். ஈரோட்டில் […]

சின்னம் பிரச்சினை நிலுவையில் இருப்பதால் வருகிற 27-ந்தேதி கன்னியாகுமரியில் இருந்து தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் சீமான்.

பாராளுமன்ற தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. தமிழகம், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் 20 பெண் வேட்பாளர்கள், 20 ஆண் வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர்.தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி, பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி என 3 அணிகளையும் எதிர்த்து சீமான் ஆண்களுக்கு பாதி, பெண்களுக்கு பாதி என சரிசமமாக பிரித்து வேட்பாளர்களை நிறுத்தி உள்ளார்.இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சிக்கு […]

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -3 கப்ளிசேட் உஸ்மானிய பேரரசு -24 ( கி.பி 1299-1922) பேரரசர் முஹம்மது தரைப்படையை தலைமைதாங்கி‌ மதிலின் முன்பகுதியான மேற்குப் பகுதியில்கோட்டை வாயிலுக்கு எதிரே முகாமிட்டு இருந்தார். ஹங்கேரியிலிருந்துஒரு பொறியாளரை வரவழைத்து புதிய புதிய ஆயுதங்களை மன்னர் முஹம்மது வடிவமைக்க செய்தார். புதிய புதிய ஆயுதங்களை வடிவமைத்து பயன்படுத்துவதில்மன்னர் முஹம்மதிற்கு அலாதிப்பிரியம். ஹங்கேரி பொறியாளர் வடிவமைத்த ஒரு மிகப்பெரிய பீரங்கி அப்போது உலகிலேயே பெரியதாக கருதப்பட்டது. 120 காளை மாடுகள்அந்த ஒற்றை பீரங்கிகியை […]

3 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம்..

  3 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம்.. வரும் கல்வியாண்டில், 3 மற்றும் 6ம் வகுப்பு களுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. மற்ற வகுப்பினருக்கான பாடத்திட்டங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் ஏராளமான பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான பாடத்திட்டங்களை, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் அமைப்பு வடிவமைத்து வருகிறது. […]

சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு! அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்..

அரியலூர், திருச்சி, வேலூர், திருண்ணாமலை, விழுப்புரம் என 5 சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை வரும் ஏப்.1ம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 55 சுங்கச்சாவடிகள் உள்ளன. அதன்படி, ஆண்டுதோறும் ஏப்.1ம் தேதி சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை மாற்றி அமைப்பது வழக்கம். இந்தநிலையில், போக்குவரத்து அமைச்சகத்தின் ஒப்புதலின்படி, தமிழகத்தில் உள்ள 5 சுங்கச்சாவடிகளின் கட்டணங்களை உயர்த்த உள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. […]

இன்று முதல் சில ரெயில்கள் ரத்து!சில ரெயில்கள் மாற்று பாதையில் செல்லும்! தெற்கு ரெயில்வே அறிவிப்பு..

நாகர்கோவில் – கன்னியாகுமரி ரெயில் நிலையங்கள் இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி நடைபெறுவதால் சில ரெயில்கள் ரத்துசெய்யப்பட்டுவதாகவும், சில ரெயில்கள் மாற்று இடத்தில் இருந்தும் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவத்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாகர்கோவிலில் இருந்து காலை 7.50 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (வண்டி எண்.16321), மறுமார்க்கமாக, கோவையில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16322) இன்று […]

ராமநாதபுரம் செய்தியாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு ! மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்பி சந்தித்து வாழ்த்து !!

ராமநாதபுரம் செய்தியாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம் இன்று (23.03.2024 ) நடைபெற்றது . இக்கூட்டத்தில் சங்கத்தின் புதிய தலைவராக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தியாளர் கே.தனபாலன், செயலாளராக நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர் கே கே. குமார், பொருளாளராக சத்தியம் டிவி செய்தியாளர் பி. மகேஸ்வரன், கௌரவ தலைவராக தினமலர் நாளிதழ் உதவி ஆசிரியர் பழனிச்சாமி, துணைத் தலைவராக வசந்த் தொலைக்காட்சி செய்தியாளர் ஜி இளங்கோவன் ,இணைச்செயலாளராக தினபூமி […]

ஹைதரபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி..

ஹைதரபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி.. 17வது ஐபிஎல் லீக் தொடர் நேற்று அதாவது மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் லீக் கிரிக்கெட்டில் இன்று முன்னாள் சாம்பியன்கள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிக்கொண்டது. இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்து வீச […]

குழப்பம் தீர்ந்தது, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு..

காங்கிரஸ் கட்சி மக்களவை தேர்தலுக்கான தேசிய அளவிலான 4-வது கட்ட வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 46 பேர் இடம் பெற்றுள்ளது.தமிழகத்தில் 9 இடங்களில் ஏழு இடங்களுக்கான வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. 1. திருவள்ளூர் (தனி)- சசிகாந்த் செந்தில் 2. கிருஷ்ணகிரி- கே. கோபிநாத் 3. கரூர்- ஜோதிமணி 4. கடலூர்- எம்.கே. விஷ்னு பிரசாத் 5. சிவகங்கை- கார்த்தி சிதம்பரம் 6. விருதுநகர்- மாணிக்கம் தாகூர் 7. கன்னியாகுமரி- விஜய் வசந்த். திருநெல்வேலி மற்றும் மயிலாடுதுறை […]

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் சீமான்..

நாதக சார்பில் தமிழ்நாட்டில் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்கள் பின்வருமாறு:  திருவள்ளூர் – மு.ஜெகதீஷ் சந்தர்  வடசென்னை – மருத்துவர் அமுதினி  தென் சென்னை – முனைவர் சு.தமிழ்ச்செல்வி  மத்திய சென்னை – முனைவர் இரா.கார்த்திகேயன்  திருப்பெரும்புதூர் – மருத்துவர் வெ.ரவிச்சந்திரன்  காஞ்சிபுரம் (தனி) – வி.சந்தோஷ்குமார்  அரக்கோணம் – பேராசிரியர் அப்சியா நஸ்ரின்  வேலூர் – தி.மகேஷ் ஆனந்த்  தருமபுரி – மருத்துவர் கா.அபிநயா  திருவண்ணாமலை – மருத்துவர் ரா.ரமேஷ்பாபு  ஆரணி […]

மதுரையில் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் “வணிகர் விடுதலை முழக்க மாநாடு” குறித்த ஆலோசனை கூட்டம்; செய்தியாளர் சந்திப்பு..

மதுரையில் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் “வணிகர் விடுதலை முழக்க மாநாடு” குறித்த ஆலோசனை கூட்டம்.. மதுரை அவனியாபுரத்தில் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் “வணிகர் விடுதலை முழக்க மாநாடு” குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மதுரை மாவட்ட பேரமைப்பு தலைவர் அழகேசன் முன்னிலை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு வரவேற்புரை கூறினார் மாநில பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா தலைமை உரை ஏற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பாக […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!