திண்டுக்கல்லில் வாலிபர் வெட்டி படுகொலை செய்த வழக்கில் 3 பேர் கைது.. திண்டுக்கல் சவேரியார் பாளையம் அருகே உள்ள CKCM-காலனி பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீராகௌதம் என்பவர் வெட்டி படுகொலை செய்தது தொடர்பாக நகரத்திற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து S.P. பிரதீப் உத்தரவின் பேரில் நகர் ASP.சிபின் மேற்பார்வையில் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் மோகன் தலைமையிலான போலீசார் அஜய்குமார், விஜய்ஆதிராஜ், மோகன்சுந்தர் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை […]
Category: செய்திகள்
நிலக்கோட்டை அருகே முறையான ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 57 ஆயிரத்து 570 ரூபாய் பறிமுதல்..
நிலக்கோட்டை அருகே முறையான ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 57 ஆயிரத்து 570 ரூபாய் பறிமுதல்.. நேற்று இரவு (26/03/2024) நிலக்கோட்டை அருகே பறக்கும் படையைச் சேர்ந்த பிரவீன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது வத்தலக்குண்டு -நிலக்கோட்டை வழியாக பெரிய குளத்தைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவர் ஓட்டி வந்த டாட்டா ஏசி வாகனத்தை ஆய்வு செய்தனர். அப்பொழுது முறையான ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 57 ஆயிரத்து 570 ரூபாயை கைப்பற்றி நிலக்கோட்டை வட்டாட்சியர் தனுஷ்கோடி இடத்தில் ஒப்படைத்தனர். இந்நிலையில் […]
பாலியல் வன்கொடுமை கொலை வழக்கு; ராணுவ வீரர் மற்றும் வளர்ப்பு தாய் போக்சோ சட்டத்தின் கீழ் கைது..
மதுரையில் 11 வயது வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் வளர்ப்பு தந்தையான ராணுவ வீரர் மற்றும் வளர்ப்பு தாய் கைது – அப்பாவி போல நாடகமாடிய கொடூர வளர்ப்பு தந்தை. மதுரை மாநகர் கோசாகுளம் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி தாய் உயிரிழந்த நிலையில் தந்தையும் வேறு திருமணம் செய்ததால் சிறுமி மற்றும் அவரது அண்ணன் ஆகிய இருவரும் வளர்ப்பு பெற்றோரான பெரியம்மா, பெரியப்பா ஆகியோரின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். […]
திருமங்கலத்தில் பூட்டிய காருக்குள் அழுகிய ஆண் சடலம் மீட்பு; போலீசார் விசாரணை..
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பூட்டிய காருக்குள் அழுகிய நிலையில், 50 வயது மிக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு – கொலையா? போலீஸ் விசாரணை.. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில், உசிலம்பட்டி அருகே காளப்பன்பட்டியை சேர்ந்தவர் சுகுமாரன். இவர் திருமங்கலம் அரசு போக்குவரத்து பணிமனையில், டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர் சொந்தமாக கார் வைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, இவரது காரை திருமங்கலம் பஸ் டிப்போவின் வெளிப்பகுதியில் பஸ் ஸ்டாப்பிற்கு அருகில் நிறுத்தி வைத்துள்ளார். […]
நாடாளுமன்றத் தேர்தல் இந்திய ஜனநாயகம், அரசியலமைப்பை காப்பாற்றுவதையே கருப்பொருளாக கொண்டுள்ளது; மதுரை சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் பேட்டி
நாடாளுமன்றத் தேர்தல் இந்திய ஜனநாயகம், அரசியலமைப்பை காப்பாற்றுவதே கருப்பொருளாக கொண்டுள்ளது என மதுரை சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் வேட்பு மனு தாக்கலுக்கு பின்னர் பேட்டி மதுரை நாடாளுமன்ற தொகுதியில், திமுக கூட்டணியில் சார்பில் போட்டியிடும் சி.பி.எம் வேட்பாளர் சு.வெங்கடேசன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலருமான சங்கீதாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். நிகழ்வில் திமுக அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினர் தளபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். […]
பாஜகவிடம் இருந்து பொது மக்களை காப்பாற்றுவது நமது கடமை; கனிமொழி கருணாநிதி பேச்சு..
பாஜகவிடம் இருந்து மதத்தையும், மக்களையும் காப்பாற்றுவது நமது கடமை; பிரச்சாரத்தில் கனிமொழி கருணாநிதி பேச்சு.. தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக மீண்டும் போட்டியிடும் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி, திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள திருச்செந்தூர் தேரடித்திடல் நேற்று பிரச்சாரம் செய்தார். தொடர்ந்து, தெற்கு ரதவீதி, தோப்பூர், வீரபாண்டியன்பட்டினம், அம்பேத்கர் சிலை-பிரசாத் நகர், சண்முகபுரம், இராணிமகராஜபுரம்-ஆறுமுகநேரி பேரூராட்சி, அடைக்கலப்புரம், காமராஜபுரம், ஆறுமுகநேரி பஜார், செல்வராஜபுரம், திசைக்காவல் தெரு, மடத்துவிளை, கந்தன் குடியிருப்பு, அம்மன்புரம், […]
நெல்லையில் தேர்தல் திருவிழா; மேலதாளம் முழங்க வாக்களிக்க அழைப்பு..
நெல்லையில் தேர்தல் திருவிழா; மேலதாளம் முழங்க வாக்களிக்க அழைப்பு.. நெல்லையில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் முயற்சியாக வாக்காளர்களை வாக்களிக்க பாரம்பரிய முறைப்படி வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்கள் மற்றும் பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வாக்காளர்களை நேரில் சந்தித்து வாக்கு பதிவு செய்திட வரவேற்கும் வகையில் மேள தாளம் முழங்க பாரம்பரிய முறைப்படி என்.ஜி.ஓ […]
தென்காசி மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வு தூதுவர்கள் நியமனம்..
தென்காசி மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வு தூதுவர்கள் நியமனம்.. தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கான முதல் தேர்தல் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் விழிப்புணர்வு தூதுவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு மற்றும் நேர்மையாக வாக்களித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு பேரணி, கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தேர்தல் விழிப்புணர்வு முகாம், இருசக்கர வாகன பேரணி, முதியோர் இல்லங்களில் முதியோர்களுக்கான விழிப்புணர்வு முகாம், […]
நீங்க மட்டும் இல்லை, நானும் ஓபிஎஸ் தான்! இது ராமநாதபுரம் அட்ராசிட்டி
பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக்கூட்டணியில் அங்கும் வகிக்கும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் ஓ. பன்னீர்செல்வம் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் நடத்து அதிகாரியிடம் வேட்பு மனுவை ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி, அ.தி.மு.க. சார்பில் ஜெயபெருமாள் […]
உங்கள் தொகுதியில் யார் யார் வேட்பாளர்கள்! ஓர் முழு பார்வை..
உங்கள் தொகுதியில் யார் யார் வேட்பாளர்கள்! ஓர் முழு பார்வை.. கன்னியாகுமரி காங்கிரஸ்-விஜய் வசந்த்பாஜக-பொன் ராதாகிருஷ்ணன்அதிமுக-பசிலியான் நசரேத்நாம் தமிழர்-மரிய ஜெனிபர் திருநெல்வேலி காங்கிரஸ்-ராபர்ட் ப்ரூஸ்பாஜக-நயினார் நாகேந்திரன்அதிமுக-ஜான்சி ராணிநாம் தமிழர்-பா.சத்யா தென்காசி திமுக-ராணி ஸ்ரீகுமார்தமமுக-ஜான் பாண்டியன்புதிய தமிழகம்-கிருஷ்ணசாமிநாம் தமிழர்-இசை மதிவாணன் தூத்துக்குடி திமுக-கனிமொழிதமாகா-SDR.விஜயசீலன்அதிமுக-சிவசாமி வேலுமணிநாம் தமிழர்-ரொவினா ருத்ஜேன் இராமநாதபுரம் ஐயுஎம்எல்-நவாஸ்கனிஓபிஎஸ் அணி-ஓ.பன்னீர்செல்வம்அதிமுக-ஜெயபெருமாள்நாம் தமிழர்-சந்திரபிரபா ஜெயபால் விருதுநகர் காங்கிரஸ்-மாணிக்கம் தாக்கூர்பாஜக-ராதிகா சரத்குமார்தேமுதிக-விஜய பிரபாகர்நாம் தமிழர்-கெளசிக் தேனி திமுக-தங்க தமிழ்செல்வன்அமமுக-TTV.தினகரன்அதிமுக-நாராயணசாமிநாம் தமிழர்-மதன் ஜெயபால் மதுரை மா.கம்யூனிஸ்ட்-வெங்கடேசன்பாஜக-ராம சீனிவாசன்அதிமுக-சரவணன்நாம் தமிழர்-சத்யா தேவி சிவகங்கை […]
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், பெங்களூரு அணி நடப்பு தொடரில் தனது முதல் வெற்றியை பதிவுசெய்தது..
நடப்பு ஐ.பி.எல். தொடரின் நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் களமிறங்கினர். இதில் பேர்ஸ்டோ 8 ரன்களில் முகமது சிராஜ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்த பிரப்சிம்ரன் சிங் […]
குடிநீரை வீணாக்கியதால் அபராதம்.. தண்ணீர் தட்டுப்பாட்டால் பெங்களூருவில் கடும் கட்டுப்பாடுகள் அமல்..!
குடிநீரை வீணாக்கியதால் அபராதம்.. தண்ணீர் தட்டுப்பாட்டால் பெங்களூருவில் கடும் கட்டுப்பாடுகள் அமல்..! கர்நாடகாவை வறட்சி வாட்டி வதைத்து வருகிறது. இதனால், தலைநகர் பெங்களூருவிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும்படி பெங்களூர் மக்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், குடிநீரை வீணாக்கியதற்காக 22 குடும்பங்களுக்கு பெங்களூரு குடிநீர் வாரியம் அபராதம் விதித்துள்ளது. காரை கழுவுவதற்கும் தோட்டத்தை பராமரிப்பதற்கும் சிலர் குடிநீரை பயன்படுத்தியுள்ளனர். இதனால், குடிநீரை வீணாக்கியதாகக் கூறி குடும்பத்திற்கு தலா […]
ராமநாதபுரம் அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்.! மாவட்ட எஸ்பியின் சிறப்பு பாதுகாப்பு பணி !!
ராமநாதபுரம் தொகுதி மக்களவைத் தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமையில் ராமேஸ்வரம் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அதிமுக கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் மற்றும் அதிமுக கூட்டணி சார்பில் புதிய தமிழகம், தேமுதிக, எஸ்டிபிஐ ஆகிய கட்சிகளின் தொண்டர்கள் நிர்வாகிகள் இணைந்து ஆயிரக்கணக்கானோர் எழுச்சியுடன் திரண்டு பேரணியாக வெற்றிக் கோசமிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வேட்பாளர் ஜெயபெருமாளை அழைத்து வந்தனர். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தேர்தல் […]
திண்டுக்கல் மாவட்ட பாமக பாராளுமன்ற உறுப்பினர் திலகபாமா வேட்புமனு தாக்கல் செய்தார்..
திண்டுக்கல் மாவட்ட பாமக பாராளுமன்ற உறுப்பினர் திலகபாமா வேட்புமனு தாக்கல் செய்தார்..
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -3 கப்ளிசேட் உஸ்மானிய பேரரசு -25 (கி.பி 1299-1922) காண்ஸ்டாண்டி நோபிள் நகரத்தின் ரோமானிய சக்கரவர்த்தியின் அரண்மனை உலகத்தின் சொர்க்கமாக இருந்தது. அரண்மனையின் பிரமாண்டங்களும்தங்கத்தால் இழைக்கப்பட்ட விதானங்களும்,தூண்களும்,பலவகை கற்கள் புதைக்கப்பட்ட, ஆசனங்களும்,கட்டில்களும்,மெத்தென்ற பல்வகை விரிப்புகளும்,அரண்மணையில்கூண்டுகளில்அடைக்கப்பட்டபுலி,சிங்கங்களும், ஏராளமான பறவைகளும்,நீருற்றுகளும்,நதிகளில் இருந்து வெட்டப்பட்ட கால்வாய்களில்நிறைந்து ஓடும் தண்ணீரும், சுவர்களின் இடையேபதிக்கப்பட்ட கற்குழாயின் வழியாக வழிந்தோடும் நீரினால் ஏற்படும் குளிர்ச்சியும், பிரமாண்டமான அறைகளும்,விதானங்களும்,முற்றங்களும், மன்னரின் உடற்பயிற்சி கூடமும்,அந்தப்புற அழகுகளும்,என ஒரு புதிய உலகமே பூமியில் இருப்பதுபோல அதிசயித்துப் […]
மதுரையில் சிறப்பு கண் மருத்துவமனை திறப்பு..
மதுரையில் சிறப்பு கண் மருத்துவமனை திறப்பு.. மேக்சிவிஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் தொடர்ந்து தமிழகத்தில் மதுரையில் துவக்கியுள்ளது. தமிழக மக்களுக்கு உயர்தர கண் சிகிச்சை அளிக்கும் அதன் 5வது சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை மதுரையில் திறக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் தளபதி எம்.எல்.ஏ மதுரை வடக்கு, டாக்டர் ஜி.எஸ்.கே.வேலு, மேச்சிவிஷனின் தலைவர் ஏ.கணேசன், மேக்சிவிஷன் இயக்குநர் வி.எஸ்.சுதீர், மேக்சிவிஷன் குழுமத்தின் சிஇஓ மற்றும் டாக்டர் ஷிபு வர்க்கி, மேக்சிவிஷன் பிராந்திய […]
மதுரை அவனியாபுரம் மகா காளியம்மன் கோவில் திருவிழா..
மதுரை அவனியாபுரம் மகா காளியம்மன் கோவில் திருவிழா.. மதுரை அவனியாபுரத்தில் மகா காளியம்மன் திருக்கோவிலில் 74 ஆம் ஆண்டு பங்குனி பொங்கல் விழா நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட பால்குடம், அலகு காவடி பறவை காவடி, தீ மிதி திருவிழாவில் பங்கேற்றனர். அவனியாபுரம் பசும்பொன் நகரில் உள்ள அருள்மிகு மகா காளியம்மன் திருக்கோயிலில் 74 ஆம் ஆண்டு பங்குனி பொங்கல் விழா நடைபெற்றது. மகாகாளியம்மன் திருக்கோவில் மறவர் சங்கத் தலைவர் பாலச்சந்திரன், துணைத் தலைவர் வேல்முருகன், செயலாளர் முத்து […]
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடியவர் மு.க.ஸ்டாலின்; கனிமொழி கருணாநிதி புகழாரம்..
ஸ்டெர்லைட் நிர்வாகம் ஆலையை திறக்க உச்சநீதிமன்றத்தில் முயற்சித்த போது மக்களின் பக்கம் நின்று ஆலையை நிரந்தரமாக மூடியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – பிரச்சாரத்தில் கனிமொழி கருணாநிதி புகழாரம் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி கருணாநிதி 24/03/2024 அன்று தூத்துக்குடி கலைஞர் அரங்கம் முன்பு உள்ள முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து பிரச்சாரத்தைத் தொடங்கினர். பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி, தூத்துக்குடி என்பது […]
தென்காசியில் ஹீலியம் பலூன் பறக்க விடப்பட்டு தேர்தல் விழிப்புணர்வு..
தென்காசியில் ஹீலியம் பலூன் பறக்க விடப்பட்டு தேர்தல் விழிப்புணர்வு.. தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஹீலியம் பலூன் பறக்க விடுதல் நிகழ்வு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு மற்றும் நேர்மையாக வாக்களித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு பேரணி, கல்லூரி மாணவர்களுக்கான தேர்தல் விழிப்புணர்வு முகாம், இருசக்கர வாகன […]
தென்காசி தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் ராணி அமோக வெற்றி பெறுவார்; அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர் பேச்சு..
தென்காசி தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் ராணி அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்; செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் பேச்சு.. தென்காசி தொகுதி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் ராணி அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமசந்திரன் பேசினார். தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தென்காசி, கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி திமுக செயல் வீரர்கள் கூட்டம் இலஞ்சி தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு […]
You must be logged in to post a comment.