கல்வி வளர்ச்சி நாள் விழிப்புணர்வு பேரணி

உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி தொடக்கப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் காமராஜரின் வேடம் அணிந்து வந்திருந்தனர். பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள காமராஜரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அதன் பின்னர் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் அஜித் பாண்டி அவர்கள் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். காமராஜர் பிறந்த நாள் விழா விழிப்புணர்வு ஊர்வலத்தில் 500-க்கும் மேற்பட்டமாணவர்கள் முக்கிய தெருக்களில் வழியாக ஊர்வலமாக சென்றனர்.பள்ளி தலைமை ஆசிரியர் மதன் பிரபு […]

உசிலம்பட்டியில் காமராஜர் பிறந்தநாள் விழா நடைபெற்றது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி புனிதன் காமராஜ் நற்பணி மன்றம் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் காமராஜர் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு உபகரணங்கள் வழங்கி இனிப்புகள் வழங்கினர். புனிதன் காமராஜ் நற்பணி மன்றம் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் டி. சரவணக்குமார் தலைமையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் உசிலை எம். மகேந்திரன் முன்னாள் மாவட்ட செயலாளர் […]

ஆன்லைனில் டாஸ்க் மோசடி; சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை..

ஆன்லைனில் மோசடிகள் பெருகி வரும் நிலையில், வாட்ஸப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் உள்ளிட்ட அனைத்து சமூக வலை தளங்கள் மூலமாக தற்போது review task fraud எனும் ஆன்லைன் மோசடிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருவதாக திருநெல்வேலி சைபர் கிரைம் காவல் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது பற்றிய காவல் துறையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, Telegram/WhatsApp வாயிலாக அறிமுகம் இல்லாத எண்களிலிருந்து வீட்டில் இருந்த படியே மொபைல் போன் மூலமாக online part […]

இலஞ்சி பி.எட் கல்லூரிக்கு பள்ளி கல்வித் துறை அலுவலர் பாராட்டு..

தென்காசி மாவட்டத்தில் ஆசிரியர் கல்வி கற்பிப்பதில் சிறப்பிடம் பெற்றுள்ள இலஞ்சி டி.எஸ்.டேனியல் பிஎட் கல்லூரியை பள்ளி கல்வித் துறை மாவட்ட திட்ட அலுவலர் பாராட்டினார். தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில் விளையாட்டு விழா, இளைஞர் தின விழா மற்றும் உணவுத் திருவிழா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்வில், கல்லூரி தாளாளர் ராஜகுமார் தலைமை வகித்தார். முதல்வர் முனைவர் கலா வின்சிலா முன்னிலை வகித்தார். உதவி பேராசிரியர் ஷீலா நவரோசி […]

திமுக வழக்கறிஞர் அணி உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்கும் விழா

உசிலம்பட்டி நீதிமன்ற வளாகத்தில் தி மு க கட்சியின் வழக்கறிஞர் அணி வழக்கறிஞருக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. திமுக வழக்கறிஞர் அணி உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் மதுரை தெற்கு மாவட்டம் வழக்கறிஞர் அணி அமைப்பாளர் எஸ் சிவனேசன் தலைமையில். மதுரை வழக்கறிஞர் அணி தலைவர் ஓ. செல்வராஜ அரசு வழக்கறிஞர் ராஜ சேகர் உசிலம்பட்டி வழக்கறிஞர்கள் அணி அமைப்பாளர் பி. கனி ராஜன் மற்றும் தலைவர் கரிகாலன் மற்றும் வழக்கறிஞர் கலந்து […]

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்..

இந்திய திரையுலக வரலாற்றில் மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவராக போற்றப்படுபவர் சரோஜா தேவி உடல்நல குறைவால் இன்று (14.7.2025) பெங்களூருவில் காலமானார். தமிழ் , தெலுங்கு , கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சரோஜா தேவி. 17 வயதில் கன்னட படமான மகாகவி காளிதாசா (1955) எனும் திரைப்படம் மூலம் அறிமுகமான இவர், 1958ல் தமிழில் வெளியான நாடோடி மன்னன் திரைப்படத்தில் எம்.ஜி.ஆர்-க்கு ஜோடியாக நடித்து பெரும் புகழ் பெற்றார். […]

விக்கிரமங்கலம் அருகே இளம்பெண் மாயம்

சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட நரியம்பட்டி கிராமத்தைசேர்ந்த ஜெயபாண்டி மனைவி பவித்திரா வயது 23. இவர் கடந்த 10ம் தேதி வத்தலக்குண்டுக்கு வேலைக்கு செல்வதாக சென்றவர் வீடு திரும்பவில்லை பவித்ராவை உறவினர் மற்றும் நண்பர்கள் உட்பட அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தனர் பவித்திராவை காணவில்லை. இது குறித்து விக்கிரமங்கலம் போலீசில் பவித்ரா தந்தை முத்தையா தனது மகளைக் காணவில்லை என்று புகார் கொடுத்துள்ளார். இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை வழக்கு பதிவு செய்து காணாமல் […]

சோழவந்தானில் பேரூராட்சி கவுன்சிலர் இல்ல விழா தொழிலதிபர்கள் அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில்வார்டு கவுன்சிலராக உள்ள ரேகா ராமச்சந்திரன் இல்ல விழாவில் தொழிலதிபர்கள் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் ,பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், தொழிலதிபர் முள்ளிப்பள்ளம் ஜீவபாரதி, வார்டு கவுன்சிலர்கள் கொத்தளம் செந்தில், குருசாமி, பிற்படுத்தப்பட்டோர் நல உறுப்பினர் பேட்டை பெரியசாமி, தகவல் தொழில்நுட்ப அணி பார்த்திபன் மற்றும் திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

சோழவந்தான் அருகே முள்ளி பள்ளம் இளங்காளியம்மன் கோவில் ஆனி பெருந்திருவிழா

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு இளங்காளியம்மன் கோவில் ஆனி பெருந்திருவிழா கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு பால் தயிர் நெய் வெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து இன்று ஆறாம் நாள் மண்டபடியாக வி. கீரை கண்ணன் குடும்பத்தார் சார்பாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு தீபாராதனை […]

கச்சா எண்ணெய் ஏற்றி வந்த டேங்கர் ரயில் விபத்து! கொழுந்து விட்டு எரியும் தீ! பல்வேறு முக்கிய ரயில்கள் நிறுத்தி வைப்பு..

திருவள்ளூர் அருகே எண்ணெய் ஏற்றிவந்த டேங்கர் ரயில் தீப்பற்றி எரிந்த விபத்தினால், சென்னை ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரத்து செய்யப்படும் ரயில்கள் என தெற்கு ரயில்வே குறிப்பிட்டவை சென்னை – மைசூரு வந்தே பாரத் (20607) சென்னை – மைசூரு சதாப்தி (12007) சென்னை – கோவை இன்டர்சிட்டி (12675) சென்னை – கோவை சதாப்தி (12243) சென்னை – திருப்பதி சப்தகிரி (16057) சென்னை – பெங்களூரு செல்லும் ரயில்கள் (22625, […]

உத்தரவு பிறப்பித்த அதே நாளிலேயே பள்ளிகளில் ‘ப’ வடிவில் மாற்றி அமைக்கும் திட்டத்தை நிறுத்தி வைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..

பள்ளிகளில் மாணவர் இருக்கை வரிசையை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்கும் திட்டத்தை நிறுத்தி வைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் சமீபத்தில் வெளியான, ‘ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்’ என்ற திரைப்படம், கடைசி வரிசை இருக்கையில் அமர்வதால், கிராமப்புற மாணவர்களின் நலன் பாதிக்கப்படுகிறது என்பதை காட்சிப்படுத்தி இருந்தது. அரை வட்ட வடிவில் மாணவர்களின் இருக்கை மாற்றி அமைக்கப்பட்டால், கடைசி பெஞ்ச் என்பதே இருக்காது என்றும் அந்தப் படத்தில் வலியுறுத்தப்பட்டு இருந்தது. இந்தப் படத்தின் எதிரொளியாக, அம்மாநிலத்தில், ஒரு சில பள்ளிகளில் ‘ப’ […]

வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் இருக்கைகள்!- இனி கடைசி பென்ச் கிடையாது: தமிழகத்திலும் அமல்படுத்த உத்தரவு..

கேரளத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளிலும் மாணவர்களின் ‘ப’ வடிவில் உட்கார வைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்துப் பள்ளிகளுக்கும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். பள்ளிகளில் இனி கடைசி பெஞ்ச் என்பது கிடையாது. மாணவர்களை ‘ப’ வடிவில் அமர வைப்பதன் மூலமாக அனைவருக்கும் முன்னுரிமை அளிக்கும் வகையில் இருக்கும், மாணவர்கள் ஒருவரையொருவர் பார்க்க, ஆசிரியரைக் கவனிக்க வசதியாக இருக்கும் எனவும் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் […]

வத்தல குண்டுவில் மதுரை ரவுடி  கழுத்தறுத்து கொலை.! பதுங்கி இருந்த,  கூட்டாளிகள் 5 பேர் கைது! சினிமா பாணியில் நடைப்பெற்ற பரபரப்பு சம்பவம்..

வத்தலகுண்டுவில் மதுரை ரவுடி  கழுத்தறுத்து கொலை. கொடைக்கானல் செல்லும் வழியில் பதுங்கி இருந்த,  கூட்டாளிகள் 5 பேர் சிக்கினர். கார், கத்தி,  மொபைல் போன்கள்  பறிமுதல்.. பரபரப்பு.. வத்தலகுண்டுவில் மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி சிவமணி கழுத்தறுத்து  கொலை செய்யப்பட்ட வழக்கில்,  கொடைக்கானல் செல்லும் வழியில் பதுங்கி இருந்த,  கூட்டாளிகள் 5 பேர் சனிக்கிழமை  சிக்கினர். அவர்களிடமிருந்து கார், கத்தி,  மொபைல் போன்கள்  பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்தவர் செல்வம் […]

கீழக்கரையில் போதை பொருள் வைத்திருந்தவர் கைது.! சட்டவிரோதமாக செயல்படும் நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எஸ்பி அறிவிப்பு.!!

இராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக நடைபெறும் கடத்தல்கள் குறித்து தீவிர நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல்துறையினருக்கு  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. சந்தீஷ் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் 11.07.2025-ம் தேதி அன்று சட்டவிரோத போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக கீழக்கரை சார்பு ஆய்வாளர் தலைமையில் குழு ரோந்து மேற்கொண்டபோது கீழக்கரை தாசிம்பீவி மகளிர் கல்லூரி அருகே சங்குளிகார தெருவை சார்ந்த செய்யது கருணை மகன் முகைதீன் ராசிக் அலி என்பவர் சந்தேகிக்கும்படி நின்று கொண்டிருந்த அவரை சோதனை செய்தபோது அவரிடமிருந்து சுமார் […]

மேட்டுப்பாளையம் சி ஐ டி யு பொதுத் தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை மனு

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தை ஆய்வு  மேற்கொண்ட ரயில்வே கோட்ட மேலாளரிடம் சி ஐ டி யு பொதுத் தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளராக ஸ்ரீபன்னா லால் ஆய்வில் ஈடுபட்டார். இவரிடம், ரயில்வே சம்பந்தமான கோரிக்கைகளை சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை மனுவில் மேட்டுப்பாளையம்- கோவை இடையேயான பய ணிகள் ரயில் சேவையினை தினமும் ஏழு முறை இயக்க வேண்டும், கூட்ட நெரிசலை […]

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தை ஆய்வு மேற்கொண்டரயில்வே கோட்ட மேலாளரிடம் சி ஐ டி யு பொதுத் தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை மனு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளராக ஸ்ரீபன்னா லால் ஆய்வில் ஈடுபட்டார். இவரிடம்,ரயில்வே சம்பந்தமான கோரிக்கைகளை சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர் அவர்கள் அளித்த மனுவில் , மேட்டுப்பாளையம்-கோவை இடையேயான பய ணிகள் ரயில் சேவையினை தினமும் ஏழு முறை இயக்க வேண்டும், கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும், மேட்டுப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலி தூத்துக்குடி சேவையினை தினசரி ரயில் சேவையாக மாற்ற வேண்டும் […]

கொண்டையம்பட்டியில் அதிமுக சார்பில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அன்னதானம் ஆர்.பி உதயகுமார் வழங்கினார்

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் கொண்டையம்பட்டியில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சிக்கு அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கலந்துகொண்டு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அன்னதானம் வழங்கி சிறப்புரையாற்றினார் முன்னாள் எம்எல்ஏக்கள் எம் வி கருப்பையா மாணிக்கம் எஸ் எஸ் சரவணன் வாடிப்பட்டி யூனியன் முன்னாள் சேர்மன் ராஜேஷ் கண்ணா வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன், மதுரை […]

உசிலம்பட்டியில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி

மதுரை நாடார் மகாஜன சங்கம் சார்பில் காமராஜரின் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு பேச்சு போட்டிகள் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. உசிலம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 45க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பேச்சு போட்டியில் கலந்து கொண்டனர். பின்னர் பரிசளிப்பு பரிசளிப்பு விழா மதியம் பள்ளி அருகிலுள்ள குருசாமி கோவில் மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பரமசிவம் […]

திண்டுக்கல் அருகே லாரியில் ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது, 14 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி, லாரி பறிமுதல்..

திண்டுக்கல் அருகே லாரியில் ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது, 14 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி, லாரி பறிமுதல்.. திண்டுக்கல் குடிமைப்பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத்துறை DSP.செந்தில் இளந்திரையன் உத்தரவின் பேரில் ஆய்வாளர் சுகுணா தலைமையில் காவலர்கள் கணேசன், கணேஷ், காளிமுத்து,தினேஷ் ஆகியோர் கொடைரோடு டோல்கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்த போது அதில் ரேஷன் அரிசி கடத்தி செல்வது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து […]

தமிழ்நாடு முழுவதும் 3,935 காலிப்பணியிடங்களுக்கு இன்று TNPSC குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது..!

தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமை இன்று (ஜூலை 12) நடைபெறும் குரூப் 4 தோ்வை 13.89 லட்சம் போ் எழுதவுள்ளனா். மொத்தமுள்ள 3,935 காலிப் பணியிடங்களுக்கு நடைபெறவுள்ள தோ்வைக் கண்காணிக்கும் முதன்மை கண்காணிப்பாளா் பணியில் 4,922 போ் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். கிராம நிா்வாக அலுவலா்கள், இளநிலை உதவியாளா்கள், தட்டச்சா் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சா்கள், உதவியாளா்கள், வனக் காவலா், வனக் காப்பாளா்கள் உள்ளிட்ட 3,935 காலிப் பணியிடங்கள் குரூப் 4 பிரிவில் உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான தோ்வு அறிவிக்கையை தமிழ்நாடு […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!