முதலியார் பட்டி பகுதியில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு.. கடையம் அருகிலுள்ள முதலியார்பட்டியில் காங்கிரஸ், திமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் வீடு வீடாக சென்று கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். திமுக கிளைச் செயலாளர் நவாஸ்கான் தலைமையில் நடைபெற்ற வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு, திமுக கடையம் வடக்கு ஒன்றிய செயலாளரும், கடையம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவருமான மகேஷ் மாயவன், ஒன்றிய கவுன்சிலர் தமிழரசி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழு உறுப்பினர் […]
Category: செய்திகள்
தென்காசியில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மகளிர் கல்லூரி அமைத்திட பாடுபடுவேன்; டாக்டர் ராணி ஸ்ரீகுமார் வாக்குறுதி..
தென்காசியில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மகளிர் கல்லூரி அமைத்திட பாடுபடுவேன்; தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் வாக்குறுதி.. தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் கடையநல்லூர் நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க திமுக முன்னணி தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளுடன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தென்காசியில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் நெல்லை ராணி அண்ணா கல்லூரியை போன்ற மகளிர் […]
புதுக்கோட்டையில் மூதாட்டியை கொன்று நகை கொள்ளை: கொள்ளையர்கள் அட்டூழியம்..
புதுக்கோட்டை அருகே பூங்குடி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் மனைவி 58 வயது பெரியநாயகி இவர் நேற்று மாலை மேய்ச்சலுக்கு சென்ற மாட்டை அழைத்து வருவதற்காக வீட்டில் பின்புறம் உள்ள வயலுக்கு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் பெரிய நாயகி வராததால் சந்தேகம் அடைந்த அவளது மருமகள் 33 வயது முத்துலட்சுமி தேடிச்சென்றுள்ளார் அப்பொழுது வயலில் நெற்றியில் பலத்த காயத்துடன் பெரியநாயகி இறந்து கிடந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார் அவரது கழுத்தில் இருந்த ஐந்து பவுன் தாலிச் செயின் […]
வாகனங்களில் ஸ்டிக்கர்கள் மூலம் தேர்தல் விழிப்புணர்வு
தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டும் நிகழ்ச்சி.. தென்காசி மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. 100 சதவீதம் வாக்களித்தல் மற்றும் நேர்மையாக வாக்களித்தல், ஆகியவற்றை வலியுறுத்தி ஏற்கனவே தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளிலும் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து 09.04.2024 அன்று கீழப்பாவூர் பேருந்து நிலையத்திலும், கீழப்பாவூரில் உள்ள தனியார் பேருந்துகள், கார் மற்றும் தனியார் ஆட்டோக்களில் தேர்தல் திருவிழா-தேசத்தில் […]
ரம்ஜான், வார விடுமுறை தினங்கள்: தமிழகம் முழுவதும் 1,265 சிறப்பு பஸ்கள் இயக்கம்- அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு..
அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ரம்ஜான் பண்டிகை வருகிற 11-ந் தேதி கொண்டாடப்படுவதையொட்டியும், 13, 14-ந் தேதிகள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாட்களை முன்னிட்டும் சென்னையில் இருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை […]
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது ஐதராபாத் அணி..
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் நடைபெற்ற 23-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி, ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 21 ரன்களும், அபிஷேக் சர்மா 16 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய மார்க்ரம் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் வந்த […]
எம்.ஜி.ஆரின் வலது கரம்.. முதுபெரும் அரசியல் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் காலமானார்- தலைவர்கள் இரங்கல்!!
எம்ஜிஆர் கழகத்தின் நிறுவனர் ஆர்.எம்.வீரப்பனின் மறைவையொட்டி முதல்வர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின்: ஆர்.எம்.வீரப்பன் பெரியார், மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதிஎன அனைத்து தலைவர்களுடனும் நெருக்கமும், நட்பும் கொண்டிருந்தவர். கருணாநிதியுடன் அரசியல் ரீதியாக மட்டுமின்றி, தனிப்பட்ட முறையிலும் நல்லுறவையும், நட்பையும் பேணி வந்தார். சிறந்த திரைப்பட தயாரிப்பாளராகவும் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அனைவராலும்விரும்பப்படும் பேராளுமையாகவும் திகழ்ந்தவர். அவரது மறைவு பேரிழப்பாகும். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: எம்ஜிஆர் அதிமுகவைதொடங்கும் […]
கீழக்கரை மூணாவது வார்டு பகுதியில் மின் விளக்கு எரியாமல் பொதுமக்கள் அவதி ! நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் !!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மூணாவது வார்டுக்கு உட்பட்ட சதக்கத்துல் ஜாரியா நடுநிலைப் பள்ளியில் எதிர்ப்புற சந்தில் பொதுமக்கள் மற்றும் பெண்கள் அதிகமாக பயன்படுத்தக்கூடிய பாதை உள்ளது . இப்பாதை இரவு நேரங்களில் இருளடைந்து காணப்படுவதால் பெண்களும் குழந்தைகளும் அவ்வழியில் செல்வதற்கு அச்சப்பட்டு வருகின்றனர். மேலும் வயதானவர்கள் அவ்வழியில் பலமுறை விழுந்ததாகவும் சொல்லப்படுகிறது . நகர்மன்ற உறுப்பினர் கண்டும் காணாமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அப்பகுதியில் நீண்ட காலமாக பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி நிதியிலிருந்து சூரிய […]
காங்கேயம் அருகே பயங்கர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி..
காங்கேயம் அருகே ஓலப்பாளையத்தில் அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சம்பவத்தில் காங்கேயம் அரசு மருத்துவமனையில் இறந்த 5 பேர் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின்பு அவருடைய சொந்த ஊரான திருப்பூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. திருப்பூர், நல்லிக்கவுண்டர் நகர், புது நகர் 7வது வீதியை சேர்ந்த சந்திரசேகரன் சித்ரா தம்பதியினர் தங்களது 60வது திருமண விழவிற்கு மகன்கள் சசிதரன் 30, இளவரசன் 26 மற்றும் மருமகள் […]
கடலூரில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்தவரை வனத்துறையினர் கைது செய்தனர்..
கடலூரில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்தவரை வனத்துறையினர் கைது செய்தனர்.. கிளியை அடைத்து வைத்து ஜோசியம் பார்த்ததாக வனத்துறையினர் நடவடிக்கை. கடலூர் தென்னம்பாக்கம் பகுதியில், 2 நாட்களுக்கு முன் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, தங்கர் பச்சான் கிளி ஜோசியம் பார்த்தார். கிளி ஜோசியத்தில், அழகுமுத்து அய்யனார் படம் வந்ததால், வெற்றி பெறுவீர்கள் என கூறிய கிளி ஜோசியக்காரர். தங்கர் பச்சான் கிளி ஜோசியம் பார்த்த வீடியோ வைரலான நிலையில், ஜோசியரை கைது செய்த […]
அதிகாலையில் கோர விபத்து; பேருந்து லாரி மீது மோதியதில் நடத்துனர் உயிரிழந்த சோகம்..
கடையநல்லூர் அருகே அதிகாலையில் கோர விபத்து; அரசு பேருந்து லாரி மீது மோதி நடத்துனர் உயிரிழந்த சோகம்.. கடையநல்லூர் அருகே அரசு பேருந்து நினாறு கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளாகியது. இதில் நடத்துனர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மற்றும் இடைகால் இடையே சையது காட்டன் மில்ஸ் அருகில் அதிகாலை நின்று கொண்டிருந்த லாரி மீது அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது. திருப்பூரில் […]
புதிய வாக்காளர் பட்டியல்: வயது வாரியாக, வாக்காளர் எண்ணிக்கை! தேர்தல் ஆணையம் அறிவிப்பு..
தமிழகத்தில் நடைபெற இருக்கும் வாக்குப்பதிவில் பங்கேற்கத் தகுதி உடைய புதிய வாக்காளர் பட்டியலை சமீபத்தில் இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட்டது. அதன்படி மொத்தம் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 3 கோடியே 6 லட்சத்து 5 ஆயிரத்து 793 பேர் ஆண்கள்; 3 கோடியே 17 லட்சத்து 19 ஆயிரத்து 665 பேர் பெண்கள்; 8,467 பேர் மூன்றாம் பாலினத்தவர். முதல்முறை வாக்காளர்களின் (18 முதல் 19 வயது […]
நாட்டை காப்பாற்ற ராணுவத்தில் சேர வேண்டாம், பாஜகவிற்கு ஓட்டு போடாமல் இருந்தால் போதும்! சீமான் சீற்றம்..
சேலம் கோட்டை மைதானத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தர்மபுரி, சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்பரையில் ஈடுபட்டார். இந்த கூட்டத்தில் சீமான் பேசியதாவது; கிரகணம் வரும்போது சூரியனை பார்த்தால் கண் கெட்டுப்போகும். சூரியனுக்கு ஓட்டு போட்டால் நாடே கெட்டு போகும்.நாட்டை காப்பாற்ற ராணுவத்தில் சேர வேண்டாம். பாஜகவிற்கு ஓட்டு போடாமல் இருந்தால் போதும்.இந்திய நாட்டை பாஜக தான் ஆள வேண்டும் […]
கீழக்கரையில் ஏழை எளிய மக்களுக்கு உதவி வழங்கும் நிகழ்ச்சி !
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சித்திக் ரினாஃப் ஹஸ்ஸ் ஃபௌண்டேஷன் சார்பாக ரமலான் மாதத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு வீட்டில் உபயோகம் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னால் நகர்மன்ற உறுபினர் மற்றும் தெற்குத்தெரு ஜாமாத் முன்னால் செயலாளர் லாஹிதுகான் , முன்னால் நகர்மன்ற உறுப்பினர் மற்றும் சமூக ஆர்வலருமான ஆனா மூனா காதர் சாகிப் , விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் நெய்னா அசாருதீன் ஹபீப் மரைக்கா ஆகியோர் கலந்து கொண்டு […]
நீட் தேர்வு! விண்ணப்பிக்க 2 நாட்கள் மட்டுமே அவகாசம் – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு..
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு இளநிலை நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) நடத்தி வருகிறது. நடப்பாண்டுக்கான நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு மேற்கொள்ள கடந்த பிப்ரவரி மாதம் 9-ந்தேதி முதல் கடந்த மாதம் (மார்ச்) 16-ந்தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டது. சுமார் 20 லட்சம் பேர் வரை நாடு முழுவதும் விண்ணப்பப் பதிவு மேற்கொண்டுள்ளனர். விண்ணப்பப் பதிவு ஏற்கனவே நிறைவு பெற்ற நிலையில், தற்போது பல்வேறு தரப்பினரிடம் இருந்து விண்ணப்பப் […]
பாலியல் புகார் எதிரொலி; திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக செயலாளர் பொறுப்பில் இருந்து மகுடீஸ்வரன் நீக்கம் செய்து உத்தரவு..
திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக செயலாளர் பொறுப்பில் இருந்து மகுடீஸ்வரன் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாலியல் தொல்லை புகாரில் திண்டுக்கல் மாவட்ட பாஜக செயலாளர் மகுடீஸ்வரனின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. பழனி அருகே சாமிநாதபுரம் கிராமத்தில் அரசுப் பள்ளியில் காலை உணவுத் திட்ட பொறுப்பாளராக உள்ள பெண்ணிடம், மதுபோதையில் பாலியல் தொந்தரவு அளித்ததாக பாஜக திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மகுடீஸ்வரனை போலீசார் தேடி வருகின்றனர். இவரது மனைவி செல்வராணி […]
இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், கொல்கத்தாவை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி..
ஐபிஎல் தொடரின் 22-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.அதன்படி களமிறங்கிய கொல்கத்தா அணியில் சால்ட் முதல் பந்தில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இருந்தாலும் அதன்பிறகு சுனில் நரைன் – அங்கிரிஷ் ரகுவன்ஷி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்தது. அதனை […]
பழனி அருகே பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த பா.ஜ.க மாவட்ட செயலாளர்! பாதிக்கப்பட்ட பெண் கண்ணீருடன் காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
பழனி அருகே பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த பா.ஜ.க மாவட்ட செயலாளர்! பாதிக்கப்பட்ட பெண் கண்ணீருடன் காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சாமிநாதபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலை பள்ளியில் பள்ளியில் 30 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று தமிழக அரசின் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு சமையல் செய்வதற்காக கலை செல்வி (38) என்ற பெண் பணியாற்றி வருகின்றார். […]
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி! சென்னை மற்றும் பிற பகுதிகளில் இருந்து ஏப்ரல் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் 10,214 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது..
பாராளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகிற 19-ந்தேதி நடைபெற இருக்கிறது. சொந்த ஊரில் இருந்து பலர் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் சொந்த ஊர் சென்று வாக்களிக்கவும், வாக்களித்த பின்னர் மீண்டும் வேலை செய்யும் இடத்திற்கு திரும்பவும் சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.அதன்படி சென்னையில் இருந்து 17 மற்றும் 18-ந்தேதிகளில் 2,970 சிறப்பு பேருந்துகள் என 2 நாட்களுக்கு மொத்தம் 7154 பேருந்துகள் இயக்கப்படுகிறது. பிற […]
தென்காசி மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் த.ம. மு.க. தலைவர் ஜான் பாண்டியனை ஆதரித்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரச்சாரம்..
தென்காசி மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் த ம மு க தலைவர் ஜான் பாண்டியனை ஆதரித்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரச்சாரம்.. பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவு ஏற்று ஜான் பாண்டியனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இங்கு வந்துள்ளேன். இப்பகுதியில் முக்கிய தலைவரான ஜான்பாண்டியன் வெற்றி பெற்றால், உங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவார். தேசிய ஜனநாயக கூட்டணி பாரத நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடுகிறது. இண்டியா கூட்டணி, […]