இந்தியாவின் மக்கள் தொகை 144 கோடியை தாண்டியது! ஐ.நா., தகவல்.. உலகிலேயே அதிக மக்கள் தொகை உடைய நாடாக இந்தியா விளங்குகிறது எனவும், தற்போது 144 கோடி பேர் வாழ்வதாகவும் ஐ.நா., மக்கள் தொகை நிதியம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது, அடுத்த 77 ஆண்டுகளில் இரு மடங்காகும் எனவும் தெரிவித்துள்ளது. மக்கள் தொகை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில் ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் என்ற அமைப்பு இயங்கி வருகிறது. சமீபத்தில், இந்த அமைப்பு சார்பில் […]
Category: செய்திகள்
தேர்தலில் வாக்களியுங்கள். ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள் – பொது மக்களுக்கு வேண்டுகோள்..
இந்திய நாட்டை மதசாற்பட்ட,ஊழலுக்கு துணை போகாமல், மக்கள் நலனுக்காக, எதிர்கால இந்தியாவின் நலனுக்காக பாடுபடக்கூடிய பாரளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்யக்கூடிய ஜனநாயக வழி தேர்தல் நடைபெற ணஉள்ளது. இந்த நிலையில் தற்போது தோல்வி பயத்தில்,முதுகெலும்பு இல்லாத சில கட்சியினர் ஜனநாயக உரிமையான உங்கள் வாக்குரிமையை விலை பேசும் முகமாக மேன்மை நிறைந்த உங்கள் வாக்கை விலை பேசி அற்ப பணத்தை பல்வேறு புரோக்கர்கள் மூலமாகவும்,தன் கட்சிக்காரர்கள் மூலமாகவும் கொடுப்பதாக அறிய முடிகிறது. அன்பிற்குரிய வாக்காளப்பெருமக்களே! இந்த தேர்தல் […]
மதுரை ஒத்தக்கடையில் போலி மருத்துவர் கைது !
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை காவல் நிலைய சரகம், யா.ஒத்தக்கடை மிராஸ் காம்ப்ளக்ஸில் உள்ள லட்சுமி கிளினிக்கில், சுகாதாரத் துறை இணை இயக்குநர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.இதனைத் தொடர்ந்து அபிஜித் பிஸ்வாஷ் (40)த/பெ அம்பிக் பிசஷ்வாஷ் என்பவர் பன்னிரண்டாம் வகுப்பு மட்டுமே முடித்துவிட்டு எவ்வித கல்வித் தகுதியும் இல்லாமல் ஆங்கில மருத்துவம் செய்ததாக தகவல் தெரிய வந்துள்ளது. இதில், இன்று காலை 12.30 மணிக்கு யா.ஒத்தக்கடை காவல் நிலையத்தில் சுகாதார துறை சார்பில் ஒப்படைத்துள்ளனர். […]
பச்சிளம் குழந்தைகளின் உடல்நலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி !
சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் மதுரை- ஆனையூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து நடத்திய பச்சிளம் குழந்தைகளின் உடல்நலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆனையூரில் உள்ள சுகாதார மையத்தில் நடத்தப்பட்டது இதில் நிகழ்ச்சியின் ஆரம்பமாக மதுரை சில்ட்ரன் டிரஸ்ட் இன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக சாத்தி தொண்டு நிறுவனத்தின் மதுரை மாவட்ட திட்ட அலுவலர் ரமேஷ் தலைமை ஏற்று சிறப்புரையாற்றினார் நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக கர்ப்பிணி பெண்கள் பின்பற்ற […]
போராட்டத்தை கைவிட்ட ஆணைகுடி கிராம மக்கள் ! தேர்தலில் வாக்களிப்பதாக உத்தரவாதம் !!
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் ஆணைகுடி கிராமத்தில் உப்பளம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் கிராம பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் அறிவிப்பு தொடர்ந்து இன்று கீழக்கரை வட்டாட்சியர் பழனி குமார் நேரடியாக கிராமங்களுக்கு சென்று கிராம பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து இருதரப்பின் பேச்சு வார்த்தையில் சுமுகமான தீர்வு ஏற்பட்டதால் போராட்டங்களை கைவிட்டனர். மேலும் பாராளுமன்ற தேர்தலில் அனைவரும் முழுமையாக வாக்களிப்போம் என்று தெரிவித்தனர் […]
உச்சிப்புள்ளியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் நவாஸ் கனி ஆதரித்து ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் தீவிர வாக்கு சேகரிப்பு !
இன்னும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கான கால அவகாசமாக ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சியினரும் அதி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் உச்சிப்புளி பகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார் மேலும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக […]
ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு !
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக போட்டியிடும் ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார். இன்னும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கான கால அவகாசமாக ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சியினரும் அதி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாக மண்டபம் ஒன்றிய செயலாளர் டி ஜி எஸ் அழகர்சாமி பிஜேபி ஆத்மா கார்த்தி பிஜேபி முருகன் […]
கீழக்கரையில் கீழை கிழக்குநகர் பொதுநல சங்கம் புதிய உதயம் !
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடற்கரை பீச் பார்க் லைட்ஹவுஸ் அருகில் கீழக்கரை இளைஞர்கள் ஒன்றிணைந்து போதை புழக்கம் இல்லாத கீழக்கரையை உருவாக்கிட கீழை கிழக்குநகர் பொதுநல சங்கம் என்ற பெயரில் புதிதாக உருவாக்கியுள்ளனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் எம் கே இ உமர் கலந்து கொண்டு பேசுகையில் . இன்றைய காலகட்டத்தில் போதை பொருள் பழக்கம் அதிகரித்து வருவதாகவும் கீழக்கரையில் இதன் மூலம் குற்ற செயல்களில் இளைஞர்கள் ஈடுபடுவதாக தெரிகிறது. கீழக்கரை […]
ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் வீதி வீதியாக சென்று ஏணி சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு !
ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளராக கே.நவாஸ்கனிக்கு ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம் தலைமையில் திமுக கட்சியினர் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்து ஏணி சின்னத்திற்கு ஆதரவு கேட்டு வாக்கு சேகரித்தனர். ராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் பின்புறம் வண்டிக்கார் தெரு , வெத்தல கார தெரு , சவேரியார் தெரு கொண்ட இடங்களில் வாக்கு சேகரித்தனர். அப்பகுதி பொதுமக்கள் ஆதரவை தெரிவித்தனர்.
ஆணைகுடி கிராம பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் !
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் ஆணைகுடி கிராமத்தில் உப்பளம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் கிராம பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் நடக்க இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் கருப்புக் கொடி போராட்டத்தை நடத்தியதால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது . கிராம பொதுமக்கள் தெரிவிக்கையில் உப்பளம் அமைப்பதற்கு பலமுறை போராடியும்அனைத்து பணிகளையும் தொடங்கி வரும் நிலையில் பலமுறை போராட்டம் நடத்தி வருகின்றோம் ஆனால் மாவட்ட ஆட்சியர் எங்கள் கோரிக்கையை ஏற்க வில்லையென்றும் […]
ராமநாதபுரம் அரசு பேருந்தில் பயணம் செய்த பயனிடம் 10 லட்சம் பணம் பறிமுதல்
பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை தடுப்பதற்கு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே குஞ்சார் வலசை சோதனை சாவடியில் பறக்கும் படை அதிகாரி ராமமூர்த்தி தலைமையில் தீவிர சோதனை ஈடுபட்ட போது திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் சென்ற அரசு பேருந்தில் அழகன் குளம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் கணக்கில் வராத 10 […]
இராமநாதபுரத்தில் எஸ்சி, எஸ்டி அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் டாக்டர் அம்பேத்கரின் 134 வது பிறந்தநாள் விழா !
இராமநாதபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அருகே மத்திய, மாநில எஸ்சி.எஸ்டி அரசு ஊழியர்கள் மற்றும் மக்கள் கூட்டமைப்பு சார்பில் இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை பாரதரத்னா பாபாசாகிப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் அவர்களின் 134 வது பிறந்தநாள் விழா மாவட்ட தலைவர் கர்ணன், மாவட்ட செயலாளர் சேக்கிழார் ஆகியோர் தலைமையில் டாக்டர் அம்பேத்கார் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.அதனைத் தொடர்ந்து வருகை புரிந்த பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்.மேலும் இந்நிகழ்ச்சியில் மாநில துணை செயலாளர் பாலச்சந்திரன்,மாவட்ட […]
நம் நாட்டின் பன்முகத்தன்மை குறித்து பிரதமர் மோடி புரிந்துகொள்ளவில்லை: நீலகிரியில் ராகுல் காந்தி பேச்சு..
நம் நாட்டின் பன்முகத்தன்மை குறித்து பிரதமர் மோடி புரிந்துகொள்ளவில்லை: நீலகிரியில் ராகுல் காந்தி பேச்சு.. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தான் போட்டியிடும் வயநாடு தொகுதியில் இன்று தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். மைசூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராகுல் காந்தி பந்தலூர் அருகே தரையிறங்கினார். அப்போது ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனை தொடர்ந்து நீலகிரி தொகுதிக்குட்பட்ட கூடலூரில் தேயிலை தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றிய ராகுல் […]
ஐபிஎல் நேற்றைய கிரிக்கெட் போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி சென்னை அபார வெற்றி..
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்று நடைபெற்ற 29-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ருதுராஜ் 69 ரன்களும் துபே 66 ரன்களும் எடுத்தனர். மும்பை தரப்பில் ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இதனையடுத்து மும்பை […]
நாடாளுமன்ற தேர்தல் 2024: அரசியல் கட்சிகளின் தலைவர்கள் யார் யார் எங்கெங்கு இன்றைய பிரசாரம்..
நாடாளுமன்ற தேர்தல் 2024: அரசியல் கட்சிகளின் தலைவர்கள் யார் யார் எங்கெங்கு இன்றைய பிரசாரம்.. பிரதமர் நரேந்திர மோடி-நெல்லை. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் – திருவள்ளூர், வடசென்னை. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே – புதுச்சேரி, கடலூர். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி -மத்திய சென்னை, தென்சென்னை அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி, தினகரன் -போடி தி.மு.க.இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் – நீலகிரி. தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி.-தூத்துக்குடி. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் […]
லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அபார வெற்றி..
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 17வது சீசனில் இன்று நடைபெற்ற 28வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, லக்னோ தொடக்க வீரர்களாக கேப்டன் கேஎல் ராகுல், குவிண்டன் டிகாக் களமிறங்கினர். டிகாக் 10 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த தீபக் ஹூடா 8 ரன்னிலும், கேப்டன் ராகுல் 39 ரன்னிலும் அவுட் ஆகினர். அடுத்துவந்த […]
ஆவினை குறிப்பிட்ட மதம் சார்ந்த நிறுவனமாக மாற்றத் துடிக்கும் வீணர் கூட்டம்!பால் முகவர்கள் சங்கம் கடும் கண்டனம்..
ஆவினை குறிப்பிட்ட மதம் சார்ந்த நிறுவனமாக மாற்றத் துடிக்கும் வீணர் கூட்டம்! பால் முகவர்கள் சங்கம் கடும் கண்டனம்.. இது சம்பந்தமாக சு.ஆ.பொன்னுசாமி தமது கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது; ஆவின் பால் பாக்கெட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் இஸ்லாமியர்களின் ரம்ஜான் பண்டிகையையொட்டி வாழ்த்துகளை பகிர்ந்து கொண்ட ஆவின் நிர்வாகம் இன்று தமிழ்ப் புத்தாண்டு, சித்திரைத் திருநாளுக்கு வாழ்த்துச் செய்தி வெளியிடாததை வைத்து ஒரு கும்பல் மத ரீதியாக சமூக வலைதளங்களில் தாக்குதல் தொடுத்து வருகிறது. ஆவின் […]
மீன்பிடி தடைக்காலம் நாளை தொடங்குகிறது! மீன், இறால், நண்டு ஆகியவை கணிசமாக விலை உயரும் அபாயம்..
மீன்பிடி தடைக்காலம் நாளை தொடங்குகிறது! மீன், இறால், நண்டு ஆகியவை கணிசமாக விலை உயரும் அபாயம்.. தமிழ்நாட்டில் மீன்கள் இனப்பெருக்கத்துக்காக ஏப்.15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடி தடைக்காலம் கடைபிடிப்பது வழக்கம். மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி ஏப்.15 முதல் ஜூன் 14 வரை 61 நாள்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஆண்டுதோறும் இந்த தடைக்காலத்தில் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிப்பதை நிறுத்திவிடுவா். இவை மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு, படகு, வலைகள் சீரமைக்கும் […]
பாஜகவின் இந்த போலியான வாக்குறுதிகளை நாடு நம்பாது. மோடியும், பாஜகவும் தோல்வியைத் தழுவும்!-ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சர் அதிஷி கடும் விமர்சனம்..
பாஜகவின் போலியான வாக்குறுதிகளை நாடு நம்பாது என்று டெல்லி நிதியமைச்சர் அதிஷி விமர்சித்துள்ளார். இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1 வரை நடக்க உள்ளது. தமிழ்நாட்டில் ஏப். 19 ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பின்னர், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடக்க உள்ளது. இன்னும் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட தேசிய […]
மளமளவென ஏறி வரும் தங்கம் விலை! பரிதவிக்கும் மக்கள்..
இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.600 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.54,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கத்தின் விலை ஏறியும், இறங்கியும் வருவது வழக்கம். ஆனால் இந்தாண்டு ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்து தங்கத்தின் விலை மிகவும் வேகமாக உயர்ந்து வருகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் விலை ,நடுத்தர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.அந்த வகையில், இன்று ஒரு கிராம் தங்கம் ரூ. 6,855-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை […]