எங்களை ஒன்றரை ஆண்டுகள் சிறையில் அடைத்தது உங்கள் பாட்டி- ராகுல் காந்திக்கு பினராயி விஜயன் காட்டமான பதில்.. கோழிக்கோட்டில் நடைபெற்ற தேர்தல் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஜயன், கேரள முதல்வரை ஏன் விசாரிக்கவில்லை, ஏன் அவரைக் காவலில் எடுக்கவில்லை என்று ராகுல் கவலைப்படுகிறார். உங்கள் பாட்டி இந்திரா காந்தி நாடு முழுவதையும் அடக்கிய எமர்ஜென்சியின் போது, எங்களை ஒன்றரை ஆண்டுகள் சிறையில் அடைத்தார், என்றார். வியாழக்கிழமை, கண்ணூரில் நடந்த பேரணியில் பேசிய ராகுல், இரண்டு முதல்வர்கள் சிறையில் […]
Category: செய்திகள்
தோல்விக்கு முன்னுரை பாடத் தொடங்கிவிட்டார்கள் பா.ஜ.க. வேட்பாளர்கள்- திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை..
தோல்விக்கு முன்னுரை பாடத் தொடங்கிவிட்டார்கள் பா.ஜ.க. வேட்பாளர்கள்- திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை.. தங்களுக்குத் தோல்வி உறுதி என்றவுடன், வாய்ப்பறை கொட்டிய கோவை பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை, தென்சென்னை பா.ஜ.க. வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராசன், மத்திய சென்னை பா.ஜ.க. வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் போன்றவர்கள் புதுப்புது வாதங்களைக் கூறி, ‘ஒப்பாரி’ வைத்துப் பேட்டி தந்ததைப் பார்த்தபோது, எப்படி சிரிப்பது என்றே தெரியவில்லை. குற்றம் சுமத்தி, தோல்விக்கு இப்போதே அச்சார சமாதானங்கள் சொல்லக் கிளம்பியுள்ள காவிகளே, […]
தூர்தர்ஷன் லோகோ காவி நிறத்தில் மாற்றம்! கடுமையாக விமர்சித்து பேசிய முன்னாள் பிரசார் பாரதி முன்னாள் தலைவர்..
மத்திய அரசின் ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தனது இந்தி செய்தி சேனலான தூர்தர்ஷன் நியூஸ் லோகோவை சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறுத்துக்கு மாற்றியுள்ளது.மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி வருவதற்கு ஏற்கனவே எதிர்க்கட்சிகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.இது தொடர்பாக திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.யும், பிரசார் பாரதி முன்னாள் தலைவருமான ஜவகர் சிர்கார் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பிரசார் பாரதியின் முன்னாள் […]
தமிழகத்தில் 69.46 சதவீத வாக்குப்பதிவு: மாவட்ட வாரியாக எவ்வளவு சதவீதம், தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை தோராயமான வாக்குப்பதிவு தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.இந்த நிலையில் தற்போது இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் 69.46 சதவீத வாக்குகள் பதிவானதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.அதன் முழு விவரம் வருமாறு:-1. தருமபுரி- 81.482. நாமக்கல்- 78.163. கள்ளக்குறிச்சி- 79.254. ஆரணி- 75.655. கரூர் – 78.616. பெரம்பலூர்- 77.377. சேலம்- 78.138. சிதம்பரம்- 75.329. விழுப்புரம்- 76.4710. ஈரோடு- 70.54 […]
வாக்குப்பதிவு இயந்திரங்கள் அண்ணா பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பு அறையில் சீல் வைப்பு !
இராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றதையொட்டி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் மற்றும் இராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தல் பார்வையாளர் (பொது) பண்டாரி யாதவ் ஆகியோர் தலைமையில் வேட்பாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட பிரமுகர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அண்ணா பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கும் பணி இன்று (20.04.2024) நடைபெற்றது. இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட இராமநாதபுரம்- 338, பரமக்குடி (தனி) -303, முதுகுளத்தூர்- 386, திருவாடானை -347, திருச்சுழி- 276, அறந்தாங்கி-284 என மொத்தம் […]
ஓட்டுபோட சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப சிறப்பு பஸ் மற்றும் ரெயில்கள் இன்று முதல் இயக்கம்..
பாராளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக நேற்று அரசு பொது விடுமுறை அறிவித்து இருந்தது. தனியார் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு கட்டாயம் விடுப்பு அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தததால் சொந்த ஊர்களுக்கு 17, 18 ஆகிய தேதிகளில் புறப்பட்டு சென்றனர்.சென்னை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தங்கி வேலை செய்து வந்த கூலி தொழிலாளர்கள், ஊழியர்கள் ஓட்டு போடுவதற்காக சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். இதற்காக அரசு சிறப்பு பஸ்கள் இயக்கின. தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில்களை […]
கே.எல். ராகுல் அதிரடியால் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணிக்கு எதிராக லக்னோ அணி அபார வெற்றி..
17-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 34-வது லீக் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் ஆடின. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரகானே மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் களம் இறங்கினர். ரச்சின் ரவீந்திரா ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் கெய்க்வாட் […]
மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்காக சென்னையில் இருந்து பேருந்துகள் மூலம் மட்டும் ஏப்.17, 18-ல் 4,03,800 பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதாக தகவல்..
2024 மக்களவை தேர்தலை முன்னிட்டு, சென்னையிலிருந்து இயக்கப்பட்ட 7299 பேருந்துகளில் 4,03,800 பயணிகள் பயணித்துள்ளதாக போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி தெரிவித்துள்ளார். இந்தியாவின் 18வது நாடாளுமன்ற தேர்தல் இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்டமாக இந்தியாவில் 102 தொகுதிகளில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக இன்று காலை தொடங்கி நடைபெற்றது. இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு சென்னையிலிருந்து இயக்கப்பட்ட 7299 […]
தமிழ்நாட்டில் தேர்தல் சுமூகமாக நடைபெற்றது! தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்..
தமிழ்நாட்டில் தேர்தல் சுமூகமாக நடைபெற்றது! தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்.. இந்தியாவின் 18வது நாடாளுமன்ற தேர்தல் இன்று தொடங்கியது. மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் முதற்கட்டமாக நாட்டில் உள்ள 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் இன்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. மக்கள் பலர் தங்கள் ஜனநாயக கடமையை தவறாமல் ஆற்றியுள்ளனர். சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 […]
தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குப்பதிவு! மாவட்ட வாரியாக எத்தனை சதவிகிதம்..!
தமிழகத்தில் 39 தொகுதிகளில் இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காக கொண்டுள்ள தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டனர்.காலை முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்தனர். நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாக்குப்பதிவில் சற்று மந்தம் ஏற்பட்டது. அதன்பின் வாக்குப்பதிவு செய்ய மக்கள் அதிக அளவில் திரண்ட வண்ணம் உள்ளனர்.இந்நிலையில், இரவு 7 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 72.09 […]
மாநில வாரியாக பதிவாகியுள்ள வாக்குகள் நிலவரம்..
மாநில வாரியாக பதிவாகியுள்ள வாக்குகள் நிலவரம்.. நாடாளுமன்ற தேர்தலில் முதல் கட்டமாக இன்று 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 102 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தல் நிறைவு பெற்றது. இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் தொடங்கிவிட்டது. நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி (இன்று) தொடங்குகிறது. இறுதி மற்றும் 7ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி நடைபெறும் […]
பரந்தூரில் தொடரும் தேர்தல் புறக்கணிப்பால் பரபரப்பு..
பரந்தூரில் தொடரும் தேர்தல் புறக்கணிப்பால் பரபரப்பு.. காஞ்சிபுரம் அருகே பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரும் தேர்தல் புறக்கணிப்பு ஸ்ரீ பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஏகனாபுரம், நாகப்பட்டு கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், இதுவரை அரசு ஊழியர்கள் 13 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். ஏகனாபுரம் கிராமத்தில் 1400 வாக்காளர்கள் உள்ள நிலையில், இதுவரை ஒரு வாக்காளர் கூட வாக்களிக்கவில்லை. பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு […]
இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி வாக்குபதிவு! சட்டமன்ற தொகுதி வாரியாக பிற்பகல் 03: மணி நிலவரம்..
இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி வாக்குபதிவு சட்டமன்ற தொகுதி வாரியாக பிற்பகல் 03: மணி நிலவரம்.. அறந்தாங்கி : 53.35 சதவீதம். பரமக்குடி (தனி ) : 53.29 சதவீதம். திருவாடனை : 51.37 சதவீதம். இராமநாதபுரம் : 48.35 சதவீதம். முதுகுளத்தூர் : 51.28 சதவீதம். திருச்சுழி : 59.94 சதவீதம். சராசரி : 52.46 சதவீதம்
அரியலூர் மாவட்டம் நரசிங்க பாளையம் வாக்குச்சாவடி அருகே, விசிக – பாஜகவினர் மோதலால் பரபரப்பு..
அரியலூர் மாவட்டம் நரசிங்க பாளையம் வாக்குச்சாவடி அருகே, விசிக – பாஜகவினர் மோதலால் பரபரப்பு.. இருகட்சி நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட மோதலில் இருவரின் மண்டை உடைப்பு. மோதல் காரணமாக 2 மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நிறுத்தம் – போலீஸ் குவிப்பு. பதற்றமான வாக்குச்சாவடி என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு. வாக்குப்பதிவு மையத்திற்குள் பிரசாரம் செய்ததாக இரு தரப்பினரும் மாறி மாறி குற்றச்சாட்டு.
பாராளுமன்ற தேர்தல்: 102 தொகுதிகளில் 3 மணி நிலவரப்படி 49.9 சதவீத வாக்குகள் பதிவு..
மக்களவை தேர்தல் இன்று நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.நாடு முழுவதும் 21 மாநிலங்களில் இதுவரை பதிவாகியுள்ள வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.அதன்படி, 21 தொகுதிகளில் 9 மணி நிலவரப்படி 9.7 சதவீதமும், 11 மணி நிலவரப்படி 24.5 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி 39.9 சதவீதம் வாக்குகள் பதிவாகின.இந்நிலையில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி […]
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் 25 வாக்கு சதவீதம் பதிவு ! வாக்குச்சாவடி மையத்தில் வேட்பாளர் ஜெயபெருமாள் ! !
ராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தலில் நடைபெறுவதையொட்டி அதிகாலை முதல் வாக்காளர் தங்கள் வாக்குகளை செலுத்துவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். அதன்படி இந்த நிலையில் 12 மணி நிலவரப்படி 25% வாக்கு பதிவாகியுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அதிமுகவின் பாராளுமன்ற வேட்பாளர் ஜெயபெருமாள் ராமநாதபுரம் நகர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்டார் மேலும் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெண்கள் வாக்குச்சாவடி மையத்தை […]
சென்னை எழும்பூர் – திருச்சி இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் இயக்கம்..
பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கான தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஆயிரக்கணக்கான பேருந்துகளை போக்குவரத்துத்துறை இயக்கி வருகிறது.இந்நிலையில், தேர்தலை […]
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை: 11,000 பேர் வெளியேற்றம்..
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை: 11,000 பேர் வெளியேற்றம்.. கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்தோனேசியாவின் சுலவெசி தீவில் உள்ள டானா டோராஜா என்ற இடத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 18 பேர் உயிரிழந்தனர். இந்த சூழலில் நேற்று (ஏப்.17) சுலவெசி தீவில் உள்ள ருவாங் என்ற எரிமலை ஐந்து முறை வெடித்துச் சிதறியதாக இந்தோனேசியாவின் எரிமலை மற்றும் புவியியல் பேரிடர் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. மேலும் எரிமலையை சுற்றி ஆறு கி.மீ […]
நாளை (19/04/2024) மக்களவைத் தேர்தலில் பொதுமக்கள் வரிசை நிலையை அறிந்து கொள்ளும் வகையில் தேர்தல் ஆணையம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது..
நாளை மக்களவைத் தேர்தலில் பொதுமக்கள் வரிசை நிலையை அறிந்து கொள்ளும் வகையில் தேர்தல் ஆணையம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.. வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வருவதற்கு முன்பே வாக்குச்சாவடியின் வரிசை நிலையை https://erolls.tn.gov.in/Queue/ என்ற இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம்