வருமான வரி கணக்கீடு, குழப்பங்களை தீர்க்க தமிழக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்.. IFHRMS மென்பொருளில் வருமான வரி பிடித்ததில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதை தாங்கள் அனைவரும் அறிவீர்கள் இது நிதித்துறை மற்றும் கருவூலக் கணக்கு துறையின் கவனத்திற்கு மாநில அமைப்பின் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. பழைய முறையில் வருமான வரி செலுத்துபவர்களுக்கு 20% தானாக ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. அவர்களுடைய வீட்டு கடன், ஆயுள் காப்பீடு ,இதர சேமிப்புகள் கணக்கில் கொள்ளப்படாமல் உள்ளன . […]
Category: செய்திகள்
இந்துஸ்தானிகளின்’ வலிக்கு மருந்தாக வேண்டிய பல லட்சம் கோடி பணம், ‘அதானி’களுக்காகச் செலவு செய்யப்பட்டது!- ராகுல் காந்தி கடும் விமர்சனம்..
நரேந்திர மோடி தனது பில்லியனர் நண்பர்களின் ரூ.1,60,00,00,00,00,000 அதாவது ரூ.16 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்தார்! இவ்வளவு பணத்துடன்: 16 கோடி இளைஞர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் மதிப்புள்ள வேலை கிடைத்திருக்கும் 16 கோடி பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்குவதன் மூலம் அவர்களின் குடும்பங்களின் வாழ்க்கையை மாற்றியிருக்கலாம். 10 கோடி விவசாயக் குடும்பங்களின் கடன்களை தள்ளுபடி செய்வதன் மூலம் எண்ணற்ற தற்கொலைகளைத் தடுத்திருக்கலாம். 20 ஆண்டுகளுக்கு வெறும் 400 ரூபாய்க்கு நாடு முழுவதும் எரிவாயு […]
நரேந்திர மோடி போட்டியிட தேர்தல் ஆணையம் உடனடியாக தடை விதித்து அவரை தகுதியிழப்பு செய்து இந்திய இறையாண்மையை காத்திட வேண்டும்!-சு.ஆ.பொன்னுசாமி காட்டம்..
தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கீழ்கண்டவாறு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பல்வேறு மொழிகள், ஜாதி, மதங்கள் கொண்ட உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான நம் தேசத்தில் அவற்றின் பெயரால் வெறுப்புணர்வை விதைத்து, பிரிவினையை தூண்டி, அமைதியை சீர்குலைத்து அதில் குளிர்காய நினைக்கும் எவராயினும் அவர்கள் இந்திய அரசியலமைப்பு தண்டனைச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும், அந்த வகையில் 18வது மக்களவைக்கான பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் கடவுளின் பெயராலும், மதத்தின் பெயராலும் பிரிவினைவாதத்தை […]
தமிழகத்தின் பல்வேறு ரயில் நிலையங்களில் புதிய வசதி!இனி வீட்டில் இருந்து இத எடுத்துட்டு போகாதீங்க! தெற்கு ரயில்வேயின் அசத்தல் ஏற்பாடு..
தமிழகத்தின் பல்வேறு ரயில் நிலையங்களில் புதிய வசதி!இனி வீட்டில் இருந்து இத எடுத்துட்டு போகாதீங்க! தெற்கு ரயில்வேயின் அசத்தல் ஏற்பாடு.. தமிழகத்தின் பல்வேறு ரயில் நிலையங்களில் புதிய வசதியை தெற்கு ரயில்வே சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ரயிலில் பயணம் செய்வது என்றால் மக்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதுவும் இரவு நேரங்களில் ரயில் பயணம் என்பது அனைத்து மக்களும் விரும்பக் கூடியது. பொதுவாக ரயிலில் பயணம் […]
பா.ஜனதா தனக்கு எதிராக பேசுபவர்களை கொலை செய்யவோ அல்லது சிறையில் அடைக்கவோ விரும்புகிறது. அவர்களை இந்த உலகத்தை விட்டே அப்புறப்படுத்த நினைக்கிறது! மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு..
மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, தன் மீதும், தன் மருமகன் அபிஷேக் பானர்ஜி மீதும் பா.ஜனதா குறி வைத்திருப்பதாக சமீபத்தில் குற்றம் சாட்டினார். இதற்கிடையே, அபிஷேக் பானர்ஜியின் வீட்டையும், அலுவலகத்தையும் உளவு பார்த்ததாக, மும்பையை சேர்ந்த ராஜாராம் ரிஜ் என்பவரை கொல்கத்தா போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர், மும்பை தாக்குதல் குற்றவாளி டேவிட் ஹெட்லியை ஏற்கனவே சந்தித்தவர் என்றும் போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில், இச்சம்பவத்தை சுட்டிக்காட்டி, மம்தா பானர்ஜி பேசினார். ஹசன் […]
பத்தாண்டு கால பிரதமர் மோடியின் சிறப்பான ஆட்சியில் சிறுபான்மையினர் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை-ஓபிஎஸ் பேட்டி.
பத்தாண்டு கால பிரதமர் மோடியின் சிறப்பான ஆட்சியில் சிறுபான்மையினர் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை-ஓபிஎஸ் பேட்டி. மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். மனம் உருகி சுவாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் கூறுகையில்: சுயேச்சையாக போட்டியிட்டு உள்ளீர்கள் வெற்றி வாய்ப்புகள் எப்படி உள்ளது என்ற கேள்விக்கு: நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் அனைத்து பிரிவை சேர்ந்த […]
மறுபடியும் மறுபடியும் தோற்கும் சிஎஸ்கே! அசத்திய லக்னோ..
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 39வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதியது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது. ரஹானே, டேரில் மிட்செல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் […]
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்வது எப்படி! மருத்துவர்கள் கூறுவது என்ன..
இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, காலை 8 மணிக்கே வெயில் சுட்டெரிப்பதால், வீடுகளில் இருந்து வெளியே செல்வதற்கு அனைவரும் அச்சப்படுகின்றனர். மதிய நேரங்களில் அனல் காற்று வீசுவதால், இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்துடன் செல்கின்றனர். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்வது குறித்தும், ஆரோக்கியமாக பராமரிப்பது குறித்தும் மருத்துவர்கள் கூறியதாவது: புவி வெப்பமடைதல் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு பருவநிலை […]
தமிழகம் முழுவதும் 15 இடங்களில் சதம் அடித்த வெயில்! சென்னையில் இன்று 100 டிகிரி வெயில் கொளுத்தியது…
தமிழகம் முழுவதும் இன்று 15 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக சேலத்தில் 107 டிகிரி வெயில் கொளுத்தியது. சென்னையில் 100 டிகிரி வெப்பமும், கோவையில் 102 டிகிரி வெப்பமும் பதிவானதுவேலூர், காஞ்சிபுரத்தில் நாளை பகல் 12 முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார் இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.வெயிலின் […]
நிலக்கோட்டையில் சொத்தை எழுதி வாங்கிவிட்டு தந்தையை ஏமாற்றி நடுத்தெருவில் விட்ட மகன்! சொத்தை மீட்டு தரக்கோரி முதியவர் தாசில்தாரிடம் புகார்..
நிலக்கோட்டையில் சொத்தை எழுதி வாங்கிவிட்டு தந்தையை ஏமாற்றி நடுத்தெருவில் விட்ட மகன்! சொத்தை மீட்டு தரக்கோரி முதியவர் தாசில்தாரிடம் புகார்.. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை முதல் வார்டு பகுதியை சேர்ந்தவர் மலைச்சாமி ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலைச்சாமி தனக்கு சொந்தமான வீட்டை தனது மகன் விஜய கண்ணனுக்கு தானமாக கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனிடையே பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு ஆடு மேய்ப்பு தொழிலுக்கும் செல்ல முடியாத மலைச்சாமி வீட்டிலேயே […]
தமிழக கேரள எல்லைப் பகுதியில் தென்காசி மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு..
தமிழக கேரள எல்லைப் பகுதியில் தென்காசி மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு.. தமிழக கேரள எல்லைப் பகுதியில் தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் திடீரென நேரில் சென்று ஆய்வு செய்தார். தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில், தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவலை தடுக்கும் விதமாக தென்காசி மாவட்டம் தமிழக-கேரள எல்லை பகுதியான புளியரை சோதனை சாவடியில் கண்காணிப்பு மற்றும் தடுப்பு பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் […]
வானத்தில் பயங்கரமாக மோதிக்கொண்ட இரண்டு ஹெலிகாப்டர்கள்- 10 பேர் பரிதாபமாக பலி..
வானத்தில் பயங்கரமாக மோதிக்கொண்ட இரண்டு ஹெலிகாப்டர்கள்- 10 பேர் பரிதாபமாக பலி.. மலேசியாவின் பெரக் பகுதியில் கடற்படை ஒத்திகையின்போது இரு ஹெலிகாப்டர்கள் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு. மலேசிய கடற்படை தினத்தின் 90ஆம் ஆண்டு நிகழ்ச்சிக்காக நடந்த ஒத்திகையின்போது கோர விபத்து.
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை: ராஜேஷ் தாஸுக்கு சிறை தண்டனை உறுதி..
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை: ராஜேஷ் தாஸுக்கு சிறை தண்டனை உறுதி.. பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு: 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய ராஜேஷ் தாஸ் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்.. பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கீழமை நீதிமன்றம் ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. சிறை தண்டனையை நிறுத்திவைக்கக் கோரியும் சரணடைவதில் இருந்து விலக்குகோரியும் ராஜேஷ் தாஸ் மனு தாக்கல் செய்திருந்தார் […]
கள்ள ரூபாய் நோட்டு வழக்கு; 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு..
கள்ள ரூபாய் நோட்டு வழக்கு; குற்றவாளிகளுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு.. வீ.கே.புதூரில் கள்ள ரூபாய் நோட்டு வழக்கின் 6 குற்றவாளிக்கு தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தென்காசி கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தென்காசி மாவட்டம், வீ.கே.புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு காவல் துறையினர் வாகன சோதனையின் போது கள்ள ரூபாய் நோட்டு வைத்திருத்த வழக்கில் பின்வரும் 06 நபர்களை அப்போதைய […]
குளத்தூரில் பச்சைப் பட்டுடுத்தி ஆற்றில் இறங்கிய கள்ளழகர் !
இராமநாதபுரம் அருகே உள்ள குளத்தூரில் மிகவும் பழமையான புனிதம் வாய்ந்த ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் ஆலயத்தில் கடந்த 9 நாளுக்கு முன்பு, காப்பு கட்டுதல் மற்றும் கொடி ஏற்றத்துடன் சித்திரை திருவிழா துவங்கியது. அதனைத் தொடர்ந்து, ஆலயத்தில் பல்வேறு தீபாராதனைகள் விசேஷ பூஜைகள் நடைபெற்று வந்தன. இன்று அதிகாலை கோயிலில் இருந்து புறப்பட்ட ஸ்ரீலட்சுமி நாராயண பெருமாள் குதிரை வாகனத்தில் பச்சை பட்டுடுத்தி நகரின் முக்கிய வீதி வழியாக வலம் வந்து வைகை ஆற்றில் சரியாக […]
பழனியில் மாங்காய் விளைச்சல் கடுமையாக பாதிப்பு! வாட்டி வதைக்கும் வெயில்!மரத்திலேயே வதங்கி உதிர்வதால் விவசாயிகள் கவலை..
பழனியில் மாங்காய் விளைச்சல் கடுமையாக பாதிப்பு! வெயிலின் தாக்கத்தால் மரத்திலேயே காய்ந்து உதிர்வதால் விவசாயிகள் கவலை.. திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான ஆயக்குடி, கோம்பைபட்டி, கணக்கண்பட்டி, பாலசமுத்திரம் உள்ளிட்ட பல கிராமங்களில் விவசாயிகள் மாங்காய் விவசாயத்தில்.ஈடுபட்டு வருகின்றனர. வருடத்திற்க்கு ஒருமுறை பங்குனி, சித்திரை மாதங்களில் மாங்காய் விளைச்சல் கிடைக்கும். இந்த ஆண்டு பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான வெயில் வாட்டிவதைத்து வருகிறது. வெயிலின் தாக்கத்தால் பழனியில் மாங்காய் விளைச்சல் முற்றிலுமாக பாதித்துள்ளது. மாமரங்களில் […]
தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஒடிசா, உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய 5 மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை தென்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..
தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஒடிசா, உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய 5 மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை தென்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.. இதுவே தமிழ்நாட்டில் குறிப்பாக வட தமிழக மாவட்டங்களில் இந்த வெப்ப அலை தாக்கம் அதிகரித்திருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட இன்னொரு தகவல் தெரிவிக்கிறது. இதன்படி ஏப்ரல் 22 முதல் 26 வரையிலான 5 தினங்களுக்கு தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இயல்பைவிட ஓரிரு டிகிரி வெப்பநிலை […]
8 திருடர்களும்! மதுரை சித்திரைத் திருவிழாவும்! ரூம் போட்டு யோசித்தும் பிரயோஜனம் இல்லை! அலேக்காக அமுக்கிய போலீசார்..
மதுரை சித்திரைத் திருவிழா கூட்ட நெரிசலில் பக்தர்களிடம் கொள்ளையடிப்பதற்காக திட்டமிட்ட மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து பெண்கள் உட்பட 8 பேர் கைது.. மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள கட்ராபாளையத்தில் தனியார் விடுதியில் சுற்றுலா வந்ததாக கூறி மத்திய பிரதேசத்தை சேர்ந்த எட்டு பேர் கொண்ட கும்பல் கடந்த 20ஆம் தேதி 2 அறை எடுத்து தங்கி இருந்தனர். இந்த நிலையில் நேற்று காலை அவர்கள் தங்கி இருந்த அறையிலிருந்து தண்ணீர் கேட்டதாகவும் அந்த நேரத்தில் ரூம்பாய் […]
வேளாண் கல்லூரி மாணவிகளின் காலநிலை மாற்றத்தை எதிர்க்கும் விவசாய முறைகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் !
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலமடை ஊராட்சி கருக்காத்தி கிராமத்தில் உலக புவி தினத்தை முன்னிட்டு கிராம மக்களிடத்தில் மதுரை வேளாண் கல்லூரி மாணவிகள் நடத்திய கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரை வேளாண்மை கல்லூரி மாணவிகள் தாமரைச்செல்வி, சிந்துபிரியா, சுகந்தி, சுமதி, தமிழ்ச்செல்வி, சூரியலட்சுமி, சுவாதி, வைஷ்ணவி ஆகியோர் கலந்து கொண்டு பருவநிலை மாற்றத்தை எதிர்க்கும் விவசாய முறைகள் பற்றி கிராம விவசாயிகளிடம் எடுத்துக் கூறியது பின்வருமாறு: காலநிலை அழுத்தத்தை சமாளிக்க சகிப்புத்தன்மை கொண்ட […]
You must be logged in to post a comment.