இராமநாதபுரத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி முடித்து வீடு திரும்பிய மருத்துவர் வசந்த கிருஷ்ணன் என்பவர் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஏர்வாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த வசந்த கிருஷ்ணனின் மனைவி மூன்று மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், அவரது இழப்பு குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Category: செய்திகள்
பழனியில் முருகன் கோவிலில் பராமரிப்பு பணி காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் ரோப் சேவை நிறுத்தம்! கோவில் நிர்வாகம் அறிவிப்பு..
பழனியில் முருகன் கோவிலில் பராமரிப்பு பணி காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் ரோப் சேவை நிறுத்தம்! கோவில் நிர்வாகம் அறிவிப்பு.. அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் படி பாதை ,மின் இழுவை ரயில், ரோப்கார் சேவை மூலமாக மலை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் ரோப்கார் சேவை மாதத்திற்கு ஒரு நாளும் ,ஆண்டிற்கு ஒரு மாதமும், பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டு பராமரிப்பு […]
இராமநாதபுரத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி ! மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு !!
இராமநாதபுரம் தனியார் பொறியியல் கல்லூரி கூட்டரங்கில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் பள்ளி கல்வித்துறை இணைந்து உயர்கல்வி வழிகாட்டல் -2024-க்கான “என் கல்லூரி கனவு” நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தலைமையேற்று உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசுகையில். உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி என்பது 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மிக முக்கியமான ஒன்றாகும். ஒவ்வொரு மாணவரின் எதிர்காலத்தை நிர்ணயிக்க தேவையான கல்வியை தேர்வு செய்ய வேண்டும் என்பதே இந்த […]
கனரக வாகனங்களை மாற்றுப் பாதையில் இயக்க வேண்டும்; தென் பொதிகை வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல்..
கேரளாவிற்கு கனிமங்களை கொண்டு செல்லும் கனரக வாகனங்களை மாற்றுப்பாதையில் இயக்க வேண்டும்; தென்பொதிகை வியாபாரிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்.. கேரள மாநிலத்திற்கு கனிமங்களை கொண்டு செல்லும் கனரக வாகனங்களை மாற்றுப்பாதையில் இயக்க வேண்டும் என தென்பொதிகை வியாபாரிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்க ஆலோசனைக் கூட்டம் சங்க தலைவர் கட்டி அப்துல் காதர் தலைமையில், கடையம் அருகேஉள்ள முதலியார் பட்டியில் வைத்து நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சங்க துணைத்தலைவர் பழக்கடை சுலைமான், […]
தென்காசியில் கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம்; மாவட்ட கலெக்டர் தகவல்..
தென்காசியில் கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம்; மாவட்ட கலெக்டர் தகவல்.. தென்காசி மாவட்டத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் 15 நாட்கள் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் கோடை கால பயிற்சி முகாமானது தென்காசி இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 29.04.2024 இன்று முதல் 13.05.2024 வரை 15 நாட்கள் தடகளம், கால்பந்து, கையுந்துப்பந்து, கபடி […]
ராமேஸ்வரம் அருகே சட்ட விரோதமான மதுபாட்டில் கடத்தல் ! மாவட்ட எஸ்பி எச்சரிக்கை !!
இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் பகுதிகளில் வெளி மாவட்டங்களிலிருந்து வரும் தனியார் பயணிகள் பேருந்துகளில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வந்த புகார் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க கோரி இராமேஸ்வரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்பொழுது கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த தனியார் பேருந்தை சோதனை செய்த போது அதிலிருந்து 144 மதுபான பாக்கெட்கள் கைப்பற்றப்பட்டது குற்ற செயலில் ஈடுபட்ட சிவகங்கையை சார்ந்த வாகன ஓட்டுநர் சக்தி […]
திருப்பாலைக்குடியில் தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த புள்ளிமான் ! பொதுமக்கள் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைப்பு !!
ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் வறட்சியின் காரணமாக கண்மாய், குளம், குட்டைகளில் தண்ணீர் வற்றி வருவதால் குடிப்பதற்காக தண்ணி தேடி நேற்று அதிகாலை 11 வயது உள்ள ஒரு புள்ளிமான் திருப்பாலைக்குடி கடற்கரைக்கு தண்ணீர் தேடி வந்துள்ளது. மானை கண்ட சமூக ஆர்வலர் பஸருல் ஹக் மற்றும் நண்பர்கள் மானை பத்திரமாக மீட்டு வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர். ஊருக்குள் வந்த மானை சிறுவர்களும் பாெதுமக்களும் ஆர்வமாக பார்த்து சென்றனர்.
ராமநாதபுரத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகார்கள் ஆய்வு !
ராமநாதபுரம் அரண்மனை சுற்றியுள்ள கடைகள் மற்றும் பவுண்ட் கடை தெரு இடங்களில் உள்ள மாம்பழகுடன்கள் போன்றவைகளை மாவட்ட நியமன அலுவலர் விஜயகுமார் தலைமையில் உணவு பாதுகாப்ப அலுவலர் ஜெயராஜ் முன்னிலையில் ஆய்வு நடைபெற்றது. ஆய்வின்போது செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் உள்ளதா என்று சோதனை செய்யப்பட்டது. இதில் சந்தேகத்தின் அடிப்படையில் இருந்த மாம்பழங்களையும் வாழைப்பழங்களையும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மாதிரிக்காக எடுத்து பகுப்பாய்வுக்கு அனுப்பினர். அதனை தொடர்ந்து அதிகாரிகள் கூறுகையில் :நுகர்வோர்கள் மாம்பழங்களை வாங்கும் போது […]
வேளாண் கல்லூரி மாணவிகளால் நடத்தப்பட்ட பள்ளி மாணாக்கர்களின் பேரணி !
இராமநாதபுர மாவட்டம் உச்சிபுளி அருகிலுள்ள இரட்டையூரணி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் உழைப்பாளர் தினத்தை (மே 1) முன்னிட்டு “நாளைய சமுதாயம் விண்தொடும் விவசாயம்” என்னும் தலைப்பில் பள்ளி மாணவர்களோடு இணைந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.. இப்பேரணியில் பாரம்பரிய விவசாயத்தில் நவீன தொழில்நுட்பத்தைக் கையாண்டு விவசாயத்தை மேம்படுத்த தொழில்நுட்பத்தை துணையெடு என்னும் கரகோசம் எழுப்பப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.. மதுரை வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகளான அபிநயா , ஐஸ்வர்யா, ஆனி ஹிங்கிஸ், ஆர்த்தி ஸ்ரீ, ஆஷிகா,தனுஷ்யா, திவ்யதர்ஷினி, எழிலரசி […]
பட்டையை கிளப்பிய சென்னை அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்றைய இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய சென்னை அணிக்கு துவக்க வீரரான ரஹானே 9 ரன்களை எடுத்து ஆரம்பத்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய டேரில் மிட்செல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவருடன் ஆடிய கேப்டன் […]
உங்க வாகனங்களில் இந்த ஸ்டிக்கர் இருக்கா.? வெளியான புதிய சட்டம்!போலீசார் எச்சரிக்கை..
உங்க வாகனங்களில் இந்த ஸ்டிக்கர் இருக்கா.? வெளியான புதிய சட்டம்!போலீசார் எச்சரிக்கை.. அரசு அலுவலக ஊழியர்கள் சிலர் தங்களுடைய சொந்த வாகனங்களின் நம்பர் பிளேட்டில் , பணியாற்றும் துறையின் பெயரை ஸ்டிக்கராக ஒட்டியிருப்பதை பார்க்க முடிகிறது. இந்த நிலையில் தனியார் வாகனங்களில் அத்தகைய ‘ஸ்டிக்கர்’களை ஒட்டுவதற்கு போலீசார் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ‘சொந்த வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்கள் அல்லது வேறு ஏதேனும் சின்னங்கள் வடிவில் தங்களது துறை […]
வரியை மட்டும் வரிந்து கட்டிக் கொண்டு வாங்கும் ஆபீசர்ஸ் இதிலேயும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்! பராமரிக்கப்படாத சாலை! தலை குப்புற கவிழ்ந்த தாய் மற்றும் மகள்..
மதுரை வில்லாபுரம் வீட்டு வழிவாரிய குடியிருப்பு பகுதியில் சரியாக மூடாத கழிவுநீர் மூடியால் தாய் மகள் சென்ற இருசக்கர வாகன விபத்து – தாய் மகள் சென்று விபத்துகுள்ளாகும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு.. மதுரை மாநகராட்சி உட்பட 84 வது வார்டு வில்லாபுரம் குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்காகவும் கழிவுநீர் செல்வதற்காகவும் பாதாள சாக்கடை வேலைகள் நடைபெற்றது. இந்த நிலையில் வில்லாபுரம் வீட்டு வசதி குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு சாலையில் கழிவு […]
மதுரையில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முயன்ற இளைஞர்களால் பரபரப்பு; காவல் துறையினர் விசாரணை..
மதுரையில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முயன்ற இளைஞர்களால் பரபரப்பு; காவல் துறையினர் விசாரணை.. உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரையில் அவனியாபுரம் பாலமேடு அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தை திருநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கோவில் திருவிழாக்கள் சமயங்களில் ஜல்லிக்கட்டு போட்டியினை முறையாக காவல்துறையினரிடம் அனுமதி பெற்று நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த சூர்யா என்பவர் நினைவாக ஜல்லிக்கட்டு […]
திக்.. திக்.. நிமிடங்கள்- அடுத்து என்ன நடக்கும்? பதட்டமும் பரபரப்பும் நிறைந்த நிகழ்வு..
திக்.. திக்.. நிமிடங்கள்- அடுத்து என்ன நடக்கும்? பதட்டமும் பரபரப்பும் நிறைந்த நிகழ்வு.. சென்னை – அடுக்குமாடி குடியிருப்பில் பால்கனியிலிருந்து தவறி விழுந்த குழந்தையை பொதுமக்கள் பத்திரமாக மீட்ட பொதுமக்கள்..
முகநூல் காதல் விபரீதம்! முகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த கொடூரன். ராஜபாளையத்தில் பரபரப்பு..
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் முத்துக்கொத்தனார் தெருவை சேர்ந்தவர்கள் பெருமாள்சாமி- ஜோதி தம்பதியினர், இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் பாண்டிச்செல்வி தனியார் ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார் இவருக்கும் மதுரையைச் சேர்ந்த குணசேகர் என்பவருக்கும் முகநூல் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு காதலாக மாறி இருவரும் தொலைபேசி மூலமாகவும் அவ்வப்போது நேரிலும் சந்திப்பதுமாக இருந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 20 தினங்களுக்கு முன்பு குணசேகரன் பாண்டிச்செல்வியை சந்தித்து திருமணம் செய்ய வற்புறுத்தியதாகவும் அதற்கு […]
முழுசாக சந்திரமுகியாக மாறிய நபர்! நீதிபதி எனக் கூறி கோவில் கோவிலாக சென்ற நபர் கையும் களவுமாக பிடித்து கொடுத்த பழநி முருகன்..
பழனி முருகன் கோவிலுக்கு மாவட்ட நீதிபதி என கூறி சாமி தரிசனம் செய்ய வந்த போலி நீதிபதியை பழனி நீதிமன்ற ஊழியர்கள் புகாரின் அடிப்படையில் அடிவாரம் போலீசார் கைது செய்தனர். அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். இதில் மாவட்ட ஆட்சியர்கள் காவல்துறையினர் முக்கிய அரசியல் பிரமுகர்கள் அமைச்சர்கள் இவர்களுக்கு […]
கோடை விடுமுறை, பயணிகளுக்கு வசதியாக சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில் நீட்டிப்பு..
பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் தெற்கு ரெயில்வே சார்பில் பல்வேறு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், வந்தே பாரத் சிறப்பு ரெயில்கள் பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது. எனவே, பல்வேறு வந்தே பாரத் சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.அந்த வகையில், சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே வாரந்திர வந்தே பாரத் சிறப்பு ரெயில்கள் மற்றும் வாரத்தில் 3 நாள் மட்டும் இயக்கும் வகையில் வந்தே பாரத் […]
கோடைகால பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..
‘கோடை காலத்தில் தண்ணீரின் தேவையும் அதிகம். கோடையில் தண்ணீர் கிடைப்பதும் குறைவு. இதனை மனதில் வைத்து மக்களுக்காக அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்’ ‘அனைத்துத் துறை அலுவலர்களும் கவனமாக செயல்பட்டு குடிநீர் பிரச்சனை நிலவக்கூடிய அனைத்து பகுதிகளுக்கும் சென்று, பிரச்சனைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும்’ தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்..
பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்டிபிஐ கட்சி முற்றுகை -500க்கும் மேற்பட்டோர் கைது!
இராஜஸ்தானில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி அவர்கள், மக்களிடையே மதவெறுப்பைத் தூண்டும் வகையில் பேசினார். தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய இந்திய தேர்தல் ஆணையம், உரிய நடவடிக்கை எடுக்காமல் அமைதி காத்து வருகின்றது. ஆகவே, தேர்தல் ஆணையம் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க கோரியும், பிரதமர் மோடி பதவி விலகக் கோரியும், சென்னையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் இன்று (ஏப்.27) இந்திய தேர்தல் […]
சுட்டெரிக்கும் கோடை வெயில் -இளநீர் விலை ரூ.90 வரை உயர்வு! நடுத்தர மக்கள் கடும் அவதி..
சுட்டெரிக்கும் கோடை வெயில் -இளநீர் விலை ரூ.90 வரை உயர்வு! நடுத்தர மக்கள் கடும் அவதி.. தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பானங்கள், இளநீர் உள்ளிட்டவற்றை அதிக அளவில் வாங்கி குடித்து வருகிறார்கள். இந்த நிலையில் சென்னையில் இளநீர் விலை ரூ.90 ஆக உயர்ந்துள்ளது. ரூ.60-க்கு விற்பனையான பெரிய இளநீர் மற்றும் செவ்விளநீர் ஆகியவற்றின் விலையே அதிரடியாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் இவற்றின் விலை ரூ.60-ல் இருந்து 70 […]