ஒன்றிய அரசின் குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்று இளைஞர்களுக்கு வழிகாட்டிய பீடித் தொழிலாளி மகள் இன்பா.. தென்காசி மாவட்டத்தில் பீடித்தொழிலாளி மகள் இன்பா ஒன்றிய அரசின் குடிமைப் பணி தேர்வில் மூன்றாம் முறையாகக் கலந்து கொண்டு விடாமுயற்சியால் வெற்றி பெற்று, இளைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழ்கிறார். தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 95 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வுகள் அறிவிப்பு கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, விண்ணப்பித்தவர்களுக்கான முதல்நிலைத் […]
Category: செய்திகள்
பேர்ஸ்டோ அதிரடியால் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னைக்கு எதிராக பஞ்சாப் வெற்றி..
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. சென்னை அணிக்கு துவக்க வீரர்களான கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். இவருடன் களமிறங்கிய ரஹானே 29 ரன்களை குவித்தார். அடுத்து வந்த ஷிவம் துபே ரன் ஏதும் அடிக்காமல் அவுட் ஆகி அதிர்ச்சி […]
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் தமது ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பியுள்ளதாக தகவல்..
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் தமது ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பியுள்ளதாக தகவல்.. மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை துணைவேந்தராக இருந்த குமார் தமது பதவியை ராஜினாமா செய்ததாக,கடந்த 29ஆம் தேதி ஆளுநருக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதை ஆளுநர் ஏற்கவில்லை என்றும் ராஜினாமாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக குமார் பொறுப்பேற்ற பின் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன 136 ஊழியர்கள் பணி நீக்கம் […]
தமிழகத்தில் 18 இடங்களில் சதமடித்த வெயில்! மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு..
தமிழகத்தில் 18 இடங்களில் சதமடித்த வெயில்! மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு.. கரூர் பரமத்தி – 111°F வேலூர் – 111°F ஈரோடு – 110°F திருச்சி – 110°F திருத்தணி – 109°F தருமபுரி – 107°F சேலம் – 107°F மதுரை நகரம் – 107°F மதுரை விமான நிலையம் – 107°F திருப்பத்தூர் – 107°F நாமக்கல் – 106°F தஞ்சாவூர் – 106°F மீனம்பாக்கம் – 105°F கடலூர் – […]
ஆசிய நாடுகள் வெப்ப அலையால் கடும் பாதிப்பு! முன்னாள் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கவலை..
ஆசிய நாடுகள் வெப்ப அலையால் கடும் பாதிப்பு! முன்னாள் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கவலை.. வெப்ப அலையால் ஆசிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். உ.பி, மேற்குவங்கம், தமிழகம், பீஹார், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கொளுத்தும் வெயிலால் வெப்ப அலை வீசி வருகிறது. சாலைகளில் வெயில் அனலாக தகித்ததால், எந்நேரமும் பரபரப்பாக காணப்படும் நகரின் பல்வேறு முக்கிய […]
கோவிஷீல்டு தடுப்பூசியால் ஏற்படும் பாதிப்புகளை ஆய்வு செய்ய மருத்துவக் குழு அமைக்க உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்..
கோவிஷீல்டு தடுப்பூசியால் ‘மிக அரிதான’ பக்கவிளைவாக, ’ரத்தம் உறைதல்’ ஏற்படலாம் என்ற தகவல் வெளியாகி, உலகம் முழுவதும் தற்போது பரவலகப் பேசப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, கோவிஷீல்டு செலுத்திக் கொண்ட மக்களிடையே ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியால் ஏற்படும் பாதிப்புகளை ஆய்வு செய்ய மருத்துவக் குழு அமைக்க உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விஷால் திவாரி என்ற வழக்குரைஞர் தாக்கல் செய்துள்ள மனுவில், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி […]
செங்கம் நகர இரண்டு சக்கர வாகன பழுது நீக்குவோர் நல சங்கத்தின் சார்பாக மே தின விழா கொண்டாட்டம்..
செங்கம் நகர இரண்டு சக்கர வாகன பழுது நீக்குவோர் நல சங்கத்தின் சார்பாக மே தின விழா கொண்டாட்டம்.. திருவண்ணாமலை அடுத்த செங்கம் நகர இரண்டு சக்கர வாகன பழுது நீக்குவோர் நல சங்கத்தின் சார்பில் மே தின விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு தலைவர் சையத் பாரூக் தலைமை தாங்கினார் நிகழ்ச்சியின் முன்னதாக செயலாளர் ஜெகதீசன் அனைவரையும் வரவேற்று பேசினார் மே தின விழாவை முன்னிட்டு செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து முக்கிய வீதி […]
சுரண்டையில் பீடி தொழிலாளர் மருத்துவமனை சார்பில் மே தின விழா மற்றும் தூய்மை இயக்க இருவார விழா துவக்க நிகழ்ச்சி..
தென்காசி மாவட்டம் சுரண்டை பீடி தொழிலாளர் நல மருத்துவமனை சார்பில் மே தின விழா மற்றும் தூய்மை இயக்க இருவார விழா துவக்க நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கு சுரண்டை சிவகுருநாதபுரம் இந்து நாடார்கள் உறவின் முறை கமிட்டி நாட்டாமை தங்கையா நாடார் தலைமை வகித்தார். கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எஸ்கேடி ஜெயபால், மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் ஏகேஎஸ்டி சேர்மச்செல்வன், கவுன்சிலர் உஷா பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். உறைவிட மருத்துவர் அஞ்சலி வரவேற்று தொழிலாளர் தினம் […]
தமிழ்நாட்டில் பல்வேறு ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பதை தொழிலாக செய்து வந்த முதியவர் அதிரடி கைது..
தமிழ்நாட்டில் பல்வேறு ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பதை தொழிலாக செய்து வந்த முதியவர் அதிரடி கைது.. சென்னை, மதுரை, இராமநாதபுரம் உள்ளிட்ட தமிழ்நாட்டில் பல்வேறு ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த முதியவரை ரயில்வே காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை பழங்காநத்தத்தை சேர்ந்த 60 வயதுடைய குமரேசன் எனும் முதியவர் கடிதம் வாயிலாக ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து மதுரை ரயில்வே காவல்துறையினர் நடத்திய விசாரணையில் குமரேசன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரிய […]
அமலாக்கத்துறையை கடுமையாக விளாசிய டெல்லி கோர்ட்..
பீகார் முன்னாள் துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவின் நெருங்கிய கூட்டாளியான தொழிலதிபர் அமித் கட்யால் நில மோசடி தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.நில மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட தொழிலதிபர் அமித் கத்யால் இடைக்கால ஜாமீன் கோரி டெல்லி ரோஸ் அவென்யு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதுதொடர்பான விசாரணை நேற்று நடந்தது. அப்போது, டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி விஷால் கோக்னே அமலாக்கத் துறைக்கு கடும் கண்டனம் […]
பழனியில் அதிமுக துணை பொது செயலாளர் நத்தம் விஸ்வநாதன் காரை வழிமறித்து முற்றுகையிட்ட அதிமுக பிரமுகர்கள்!ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு..
பழனியில் அதிமுக துணை பொது செயலாளர் நத்தம் விஸ்வநாதன் காரை வழிமறித்து முற்றுகையிட்ட அதிமுக பிரமுகர்கள்!ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு.. பழனியில் அதிமுக சார்பில் பட்டத்து விநாயகர் கோவில் அருகே நீர்பந்தல் திறக்கும் விழா அதிமுக துணை பொது செயலாளரும் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளருமான நத்தம் விஸ்வநாதன் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு நத்தம் விஸ்வநாதன் தனது காரில் கிளம்பிய போது அதிமுக நகர செயலாளர் முருகானந்தம் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் […]
பொதுமக்களுக்கு சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய தென்காசி மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல்..
தென்காசியில் குடிநீர் வழங்கல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்; சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல்.. தென்காசி மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் குடிநீர் வழங்கல் தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொதுமக்களுக்கு சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் அறிவுறுத்தினார். தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் குடிநீர் வழங்கல் தொடர்பான […]
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரியில் வெடி விபத்து – 4 பேர் உடல் சிதறி உயிரிழப்பு..
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரியில் வெடி விபத்து – 4 பேர் உடல் சிதறி உயிரிழப்பு.. ஆவியூர் – கீழஉப்பிலிக் குண்டு சாலையில் உள்ள தனியார் கல்குவாரியில் வெடி விபத்து. பாறைகளை உடைக்க பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளை, குவாரி அருகே உள்ள அறையில் இறக்கியபோது வெடிமருந்துகள் வெடித்து சிதறின. வெடி விபத்தில் 4 பேர் உடல் சிதறி பலி, 8 பேர் காயம்; 2 வாகனங்கள் முற்றிலும் சேதம். மேலும் மனித உடல்கள் காட்டுப் பகுதியில் […]
தென்காசி வாக்கு எண்ணிக்கை மையத்தில் 93 சிசிடிவி கேமராக்களும் ஒருமித்து பழுதானது எப்படி?; கேள்வி எழுப்பிய டாக்டர் கிருஷ்ணசாமி..
தென்காசி வாக்கு எண்ணிக்கை மையத்தில் 93 சிசிடிவி கேமராக்களும் ஒருமித்து பழுதானது எப்படி?; கேள்வி எழுப்பிய டாக்டர் கிருஷ்ணசாமி.. தென்காசி வாக்கு எண்ணிக்கை மையத்தில் 93 சிசிடிவி கேமராக்களும் ஒருமித்து பழுதானது எப்படி? என புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 19 ஆம் தேதி தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் வாக்குப்பதிவு […]
அச்சு ஊடகம் மற்றும் காட்சி ஊடகங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்கள் பணி பாதுகாப்பு மற்றும் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்து ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்!- மே தின வாழ்த்துச் செய்தியில் WJUT கோரிக்கை..
WJUT WORKING JOURNALISTS UNION OF TAMILNADU உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தின் பணிப்பாதுகாப்பு மற்றும் அவர்களின் உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும்! -WJUT யின் மே தின வாழ்த்துச் செய்தி!!! “தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின்” மாநிலத் தலைவர் அ.ஜெ.சகாயராஜ், மாநிலப் பொதுச்செயலாளர் பா. பிரதீப்குமார், மாநிலப் பொருளாளர் இரா.ராம்ஜி ஆகியோர் வெளியிட்டுள்ள “மே” தின வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது; உலகெங்கும் உள்ள உழைக்கும் தொழிலாளர் அனைவருக்கும் தொழிலாளர் தின (மே தினம்) வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். […]
திண்டுக்கல்லில் பணி நிறைவு பெற்ற காவலர்களுக்கு பாராட்டு விழா!
திண்டுக்கல்லில் பணி நிறைவு பெற்ற காவலர்களுக்கு பாராட்டு விழா! திண்டுக்கல் மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரிந்து இன்று 30-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள கொடைக்கானல் அனைத்து மகளிர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தெய்வவள்ளி,,அம்பாத்துரை காவல் நிலைய SSI.கோவிந்தசாமி,திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய SSI.மணிமுருகேசன்,வேடசந்தூர் போக்குவரத்து காவல் நிலைய SSI.சுப்பிரமணியன்,திண்டுக்கல் நகர் வடக்கு போக்குவரத்து காவல் நிலைய SSI.முத்துசாமி மற்றும் SSI.ராஜா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]
சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பாதையில்தனியார் பேருந்து தலைகீழாக கவிழ்ந்ததில் உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்வு..
தமிழகத்தில் தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் வெயிலில் இருந்து தப்பிக்க ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில், ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் பஸ் மலைப்பாதையின் 11வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி 50 அடி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் ஒரு சிறுவன் உட்பட 6 பேர் […]
நிலக்கோட்டையில் மூத்த வழக்குரைஞர்களுக்கு பாராட்டு விழா! ஓய்வுபெற்ற புதுச்சேரி தலைமை நீதிபதி பங்கேற்பு..
நிலக்கோட்டையில் மூத்த வழக்குரைஞர்களுக்கு பாராட்டு விழா! ஓய்வுபெற்ற புதுச்சேரி தலைமை நீதிபதி பங்கேற்பு.. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் வட்டார வழக்கறிஞர் சங்கம் சார்பாக 30/04/2024 அன்று மாலை மூத்த வழக்கறிஞர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஓய்வுபெற்ற (புதுச்சேரி) தலைமை நீதிபதி டி.கிருஷ்ணராஜா மற்றும் நிலக்கோட்டை அரசு வழக்கறிஞர் கார்த்திகா தர்ஷினி, திமுக ஒன்றியச் செயலாளரும் வழக்கறிஞருமான மணிகண்டன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். முன்னதாக வழக்கறிஞர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு கயிறு இழுக்கும் போட்டி, […]
முதுகுளத்தூரில் மாவட்ட ஊராட்சி செயலரை கண்டித்து ஆர்ப்பாட்டம் !
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் முன்பாக மாவட்ட ஊராட்சி செயலாளர் சந்தோசத்தை கண்டித்து டி என் ஆர் ஓ ஏ சங்க பணியாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முதுகுளத்தூர் வட்ட கிளை தலைவர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஊராட்சி செயலாளரின் தொடர்ச்சியாக ஊழியர்கள் விரோதப் போக்கை கண்டித்தும், மாவட்ட ஊராட்சி அலுவலக பணியாளர் துர்கா மீது துரை ரீதியான நடவடிக்கை எடுக்காமல் அவர் மீது காவல்துறையில் புகார் அளித்ததை திரும்ப பெற […]
பனையடியேந்தல் கிராமத்தில் வேளாண்மை கல்லூரி மாணவி விழிப்புணர்வு நிகழ்ச்சி ! விவசாயிகள் பங்கேற்பு !!
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பனையடியேந்தல் கிராமத்தில் ஒருங்கிணைந்த பண்ணை நிர்வாகம் என்ற தலைப்பில் பாரம்பரியமான விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்பம் மூலம் விவசாயம் செய்வது எப்படி என்று விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை இறுதி ஆண்டு படிக்கும் மாணவி மூ.சூரிய லட்சுமி தலைமையில் நடைபெற்றது. மேலும் ஒருங்கிணைந்த பண்ணை நிர்வாகம் முறையினை எவ்வாறு மானாவாரி நிலங்களில் (1 எக்டர்) அமைப்பது பற்றியும் , ஆடு மாடு வளர்ப்பு […]