இணைய வழி சூதாட்டத்தை ஊக்குவித்தால் ஒரு ஆண்டு சிறை: தமிழக அரசு கடும் எச்சரிக்கை.. இணையவழி சூதாட்டத்தில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் அல்லது துாண்டும் நபர்கள், நிறுவனங்களுக்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனை அல்லது 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இணைய வழி சூதாட்டத்தால், ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க தமிழக அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு: இணையவழி சூதாட்டம் மற்றும் பந்தயம் போன்றவற்றை விளம்பரப்படுத்தினால் கடும் […]
Category: செய்திகள்
அருப்புக்கோட்டையில், சுட்டரிக்கும் வெயிலில் செய்தி சேகரிக்க சென்ற சன் டிவி செய்தியாளர் உயிரிழப்பு: “கீழை நியூஸ்” மற்றும் “சத்திய பாதை” குழுமத்தின் ஆசிரியர் இரங்கல்.
அருப்புக்கோட்டையில், சுட்டரிக்கும் வெயிலில் செய்தி சேகரிக்க சென்ற சன் டிவி செய்தியாளர் உயிரிழப்பு: “கீழை நியூஸ்” மற்றும் “சத்திய பாதை” குழுமத்தின் ஆசிரியர் இரங்கல். இது சம்பந்தமாக கீழை நியூஸ் மற்றும் சத்திய பாதை குழுமத்தின் ஆசிரியர் சையது ஆப்தீன் கீழ்கண்டவாறு இரங்கல் செய்தி தெரிவித்துள்ளார். அருப்புக்கோட்டை சன் டிவி செய்தியாளர் ராஜா சங்கர் இன்று மே 2 காரியாபட்டி அருகே ஆவியூர் பகுதியில் சுட்டெரிக்கும் கடும் வெயிலில் சென்று செய்தி சேகரித்துவிட்டு உடல் சோர்வடைந்த நிலையில், […]
மதுரை விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு 192 பயணிகளுடன் புறப்பட்ட விமானம்! சுமார் நூறு பயணிகளின் உடைமைகளை விட்டுச் சென்றது..
மதுரை விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு 192 பயணிகளுடன் புறப்பட்ட விமானம்! சுமார் நூறு பயணிகளின் உடைமைகளை விட்டுச் சென்றது.. துபாய் செல்லும் விமானத்தின் மொத்த எடை அளவு அதிகமானதால் பயணிகளின உடமைகள் நாளை கொண்டு செல்லப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். மதுரை விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு செல்ல தினமும் ஸ்பைஸ்ஜெட் விமான சேவை செயல்பட்டு வருகிறது. துபாயிலிருந்து 188 பயணிகளுடன் புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் இன்று பகல் 12:30 மணியளவில் மதுரை விமான […]
திருப்பூர் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் வரக்கூடிய 5 ம் தேதி, வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு தேடியும், மழை வேண்டியும் 3 இடங்களில் சிறப்பு தொழுகை..
திருப்பூர் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் வரக்கூடிய 5 ம் தேதி, வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு தேடியும், மழை வேண்டியும் 3 இடங்களில் சிறப்பு தொழுகை.. தமிழ்நாட்டில் கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும். ஆனால், இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே அதாவது கடந்த 3 மாதங்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வெப்ப அலை வீசிக்கொண்டே இருக்கிறது. சென்ற ஆண்டுகளில் சில நாட்கள் மழை பெய்து வெப்பத்தை தணித்து […]
சேலம் அருகே கோயில் திருவிழாவில் இரு பிரிவினருக்கு இடையே மோதல்: கடைகள், வாகனங்களுக்கு தீ வைப்பு.
சேலம் அருகே கோயில் திருவிழாவில் இரு பிரிவினருக்கு இடையே மோதல்: கடைகள், வாகனங்களுக்கு தீ வைப்பு. சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே நடந்த கோயில் திருவிழாவில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு பிரிவினரை கோயில் திருவிழாவில் அனுமதிக்கவில்லை என குற்றச்சாட்டு. இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம்; கடைகள், வாகனங்களுக்கு தீ வைப்பு. கல்வீச்சு, பெட்ரோல் குண்டு வீச்சு என அடுத்தடுத்து அரங்கேறும் சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் இன்று […]
107 டிகிரி கொளுத்திய வெயில்! சிறிது நேரத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழை! மகிழ்ச்சியில் வேலூர் மக்கள்..
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுற்றுவட்டாரத்தில் ஆலங்கட்டியுடன் பெய்த கோடை மழை பொதுமக்கள் மகிழ்ச்சி. வேலூர் மாவட்டத்தில் இன்று 107 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் பதிவான நிலையில் பேரணாம்பட்டு, குடியாத்தம் சுற்றுவட்டாரங்களில் ஆலங்கட்டியுடன் மழை பெய்து சற்று வெப்பம் தணிந்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கனிமவள வாகனங்களுக்கு இ-பாஸ்; முன்னாள் எம்எல்ஏ ரவி அருணன் வலியுறுத்தல்..
கனிமவள வாகனங்களுக்கு இ-பாஸ்; முன்னாள் எம்எல்ஏ ரவி அருணன் வலியுறுத்தல்.. கனிமவளங்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறையை கொண்டு வர வேண்டும் என அம்பை தொகுதி முன்னாள் எம்எல்ஏ ரவி அருணன் வலியுறுத்தியுள்ளார். இது பற்றிய அவரது அறிக்கையில், ஊட்டி கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களுக்கு வாகனங்களை கட்டுப்படுத்தவும் போக்குவரத்தை முறைப்படுத்தவும் இன்று முதல் தமிழக அரசு இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்தி இருக்கிறது. இது வரவேற்கத்தக்கது. அதேபோல் தமிழகத்தில் இருந்து தென்காசி, நெல்லை, குமரி, கோவை […]
தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வரக்கூடிய நிலையில் இன்று 22 மாவட்டங்களில் 100°F தாண்டி வெப்பம் பதிவாகி உள்ளது..
தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வரக்கூடிய நிலையில் இன்று 22 மாவட்டங்களில் 100°F தாண்டி வெப்பம் பதிவாகி உள்ளது. நாளுக்கு நாள் வெப்பத்தின் அளவு தமிழ்நாடு உள்பட நாட்டின் பல இடங்களில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த வகையில், இந்தியாவில் இன்றைய தினம் பீகார், மேற்குவங்கம் மற்றும் தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் கடுமையான வெப்ப அலை வீசியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஜார்க்கண்ட், ஒடிசா, தெலங்கானா, கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமாவில் […]
அண்டார்டிகாவில் தங்கத்துகள்களை வெளியேற்றும் எரிமலை: தினசரி ரூ.5 லட்சம் தங்கத்துகள்கள் வெளியேற்றம்..
அண்டார்டிகாவில் தங்கத்துகள்களை வெளியேற்றும் எரிமலை: தினசரி ரூ.5 லட்சம் தங்கத்துகள்கள் வெளியேற்றம்.. அண்டார்டிகா: எரிமலைகள் என்றாலே லாவா குழம்புகள் தான் வெளியேறும். ஆனால் எரிமலையில் இருந்து தங்க துகள்கள் வெளியேறுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. முழுக்க பனி பாறைகளால் சூழப்பட்டுள்ள கண்டம் என்றாலும், அண்டார்டிகாவிலும் நெருப்பை கக்கும் 138 எரிமலைகள் இருக்கின்றன. இவற்றுள் 8 எரிமலைகள் அவ்வப்போது லாவா குழம்பை வெளியேற்றி உயிர்ப்புடன் இருப்பவை. அதில் ஒன்றுதான் ரோஸ் தீவில் உள்ள மவுண்ட் எரிமலை. 1972ம் […]
10, பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு..
10, பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு.. தமிழ்நாட்டில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடந்தது. இதில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். அதில் பல்வேறு பாடங்களில் மாணவ, மாணவிகள் தேர்வுக்கு வரவில்லை. அதன்படி மாநிலம் முழுவதும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவில்லை. இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து […]
பாம்பு கடித்தவரை கங்கை நதியில் கட்டி வைத்த கொடூரம்!மூட நம்பிக்கையின் உச்சக்கட்டம்! அநியாயமாக ஓர் உயிர் பலி..
பாம்பு கடித்தவரை கங்கை நதியில் கட்டி வைத்த கொடூரம்!மூட நம்பிக்கையின் உச்சக்கட்டம்! அநியாயமாக ஓர் உயிர் பலி.. உத்தரப் பிரதேசத்இல் மோகித் குமார்(20) என்ற இளைஞரை பாம்பு கடித்துள்ளது. ஓடும் கங்கை நீரில் உடலை வைத்தால் விஷம் நீங்கும் என்று கூறப்பட்டதால் அவரது உடலை 2 நாட்களாக அவரது குடும்பத்தினர் கங்கையில் மிதக்க வைத்திருந்தனர் இறுதியில் அவர் உயிரிழந்துவிட்டார்.
கீழக்கரையில் செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் டோட்டராக்ட்டுடன் இணைந்து மோர் பந்தல்..
செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் டோட்டராக்ட்டுடன் இணைந்து ரோட்டரி சங்கம் கீழக்கரை முக்கு ரோட்டில் மோர்பந்தல் வெயிலுக்கு மே 2,3 மற்றும்4 ம் தேதிகளில் மோர் பந்தல்அமைத்து பிரயாணிகளுக்கு மோர் வழங்கும் நிகழ்வு தொடங்கியது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் டாக்டர் S. ராஜ சேகர் (Rotaract Club of SHASC ), கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் டாக்டர்.சம்சுல் கபீர், மருத்துவர் ராசிக்தீன் , முன்னாள் தலைவர் Dr. சுந்தரம், மிப்தாஹூதீன் மற்றும் முன்னாள் […]
எம்.ஜி.ஆர்.மாதிரி இல்லனாலும்! அம்மா பிறந்தநாளில் “சேவையே கடவுள்” அறக்கட்டளை தொடங்கிய ராகவா லாரன்ஸ் நெகிழ்ச்சி..
எம்.ஜி.ஆர்.மாதிரி இல்லனாலும்! அம்மா பிறந்தநாளில் அறக்கட்டளை தொடங்கிய ராகவா லாரன்ஸ் நெகிழ்ச்சி.. ’சேவையே கடவுள்’ என்கிற அறக்கடளை ஒன்றை நடிகர் ராகவா லாரன்ஸ் தொடங்கியுள்ளார். இந்த அறக்கட்டளையில் லாரன்ஸூடன் நடிகர் எஸ்.ஜே சூர்யா, நடிகர் பாலா மற்றும் அறந்தாங்கி நிஷா உள்ளிட்டவர்களும் செயல்பட இருக்கிறார்கள். சேவையே கடவுள் அறக்கட்டளை சார்பாக மாற்றம் என்கிற செயல்திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளார் லாரன்ஸ். இந்தத் திட்டத்தின் வழியாக பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு சேவைகளை தன்னார்வலர்களின் உதவியோடு செய்ய இருக்கிறார். இதம் முதல் […]
வருவாய் ஈட்டும் முதல் பத்து ரயில் நிலையங்களில் தெற்கு ரயில்வே மண்டலத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது!!
உலகில் மிகப்பெரிய ரயில் வழித்தடங்களை கொண்டுள்ள இந்தியாவில், அதிக வருவாய் ஈட்டும் முதல் பத்து ரயில் நிலையங்களில் தெற்கு ரயில்வே மண்டலத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. நாடு முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் உள்ளன. பயணிகள் ரயில்கள் மூலம் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணங்களும், சரக்கு ரயில்கள் மூலம் கோடிக்கணக்கான சரக்குகளும் அனுப்பப்பட்டு வருமானங்கள் ஈட்டப்பட்டு வருகின்றன. நாட்டில் இருக்கும் துறைகளில் அதிக வருமானம் அளிக்கும் துறையாக ரயில்வே இருந்து வருவதால் ரயில்வேக்கு என […]
ராமேஸ்வரம் திருக்கோயிலில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு !
இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருள்மிகு ஸ்ரீ ராமநாத ஸ்வாமி திருக்கோவில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாத பாக்கெட்டுகளில் காலாவதி தேதி குறிப்பிடாமல் விற்பனை செய்யப்படுவதாக பெறப்பட்ட புகார் அடிப்படையில் இன்று ராமேஸ்வரம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் கு.லிங்கவேல் ஆய்வு செய்தார் . ஆய்வில் முகப்பு சீட்டு இல்லாத பாக்கெட்டுகள் அப்புறபடுத்தப்பட்டது. மேலும் முறையான பேக்கிங் தேதி, காலாவதி தேதி உணவு பாதுகாப்பு உரிமம் கண்டிப்பாக அச்சிடப்பட்டு விற்பனை செய்ய வேண்டும் என்றும், உணவு தயார் செய்யும் இடத்தில் […]
2G அலைக்கற்றை வழக்கின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மத்திய அரசின் மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம்..
2G அலைக்கற்றை வழக்கின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மத்திய அரசின் மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம்.. 2G தீர்ப்பில் தெளிவு தேவை என்ற போர்வையில் தீர்ப்பையே மாற்ற வேண்டும் என மத்திய அரசு கோருவதாகக் கூறி உச்சநீதிமன்ற பதிவாளர் மனுவை நிராகரித்தார். இத்தனை ஆண்டுகள் கழித்து எந்த காரணமும் இன்றி இந்த மனுவை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் உச்சநீதிமன்ற பதிவாளர் கூறியுள்ளார். அலைக்கற்றைகளை ஏலத்திற்கு பதிலாக நிர்வாக உத்தரவு மூலம் ஒதுக்க அனுமதிக்க வேண்டும் […]
ஊடகம், வழக்கறிஞர், மருத்துவர் என துறை சார்ந்தவர்கள் தங்களது வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ள தடையில்லை!- இன்று முதல் அமலுக்கு வருகிறது விதிமுறைகள்..
ஊடகம், வழக்கறிஞர், மருத்துவர் என துறை சார்ந்தவர்கள் தங்களது வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ள தடையில்லை என போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர். அண்மை காலமாக தனியார் வாகனங்களில் பத்திரிகை, தலைமைச் செயலகம், மின்சாரத் துறை, காவல் துறை, மாநகராட்சி, வழக்கறிஞர், உயர் நீதிமன்றம், மருத்துவர், தீயணைப்புதுறை, காவல்துறை, முப்படை போன்ற துறைகள், நிறுவனங்களின் பெயர்கள் எழுதப்பட்டு வருவதுஅதிகரித்து வருகிறது. இதுகுறித்துபோக்குவரத்து போலீஸார் ஆய்வு செய்தபோது பலர் தங்கள்வாகனங்களில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கர்களுக்கும், அவர்களுக்கும் சம்பந்தம் இல்லாமல் இருந்தது தெரியவந்தது. […]
கல்லூரியில் சேர்க்கைக்கு தயாராயிருக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கவனத்திற்கு! “கீழை நியூஸ்” வழங்கும் அழகான ஆலோசனைகள்! “நன்றி”, ஆசிரியர் மூ.சாகுல் ஹமீது ..
இந்த 2024-25 கல்வியாண்டில் கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் சட்டக் கல்லூரிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்று உள்ளவர்கள் கீழ்கண்ட விசயங்களை முதலில் சரிசெய்து வைத்து கொள்வது கடைசி நேர அலைச்சலையும் நேரத்தையும் மிச்சப்படுத்தும். 2024ஆண்டுக்கான +2 தேர்வு முடிவுகள் மே மாதம் 06 ஆம் தேதி வரவுள்ளது என்பதனை அறிவோம். மாணவர்களின் பாஸ்போர்ட் சைஸ் கலர் போட்டோ 10 ம், ஸ்டாம்ப் சைஸ் போட்டோ 4 ம் எடுத்து வைத்துக் கொள்ளவும். மேலும் […]
9 ம் வகுப்பு பாட புத்தகத்தை தொடர்ந்து 10 ம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்திலும் கலைஞர் கருணாநிதி பற்றிய பாடம் அறிமுகம்..
9 ம் வகுப்பு பாட புத்தகத்தை தொடர்ந்து 10 ம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்திலும் கலைஞர் கருணாநிதி பற்றிய பாடம் அறிமுகம்.. வரும் கல்வியாண்டு 10ம் வகுப்பில் கலைஞர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகம் செய்யப்படுகிறது கலைஞர் கருணாநிதியின் சிறப்புகளை 11 தலைப்புகளில் உள்ளடக்கி பாடம் தயாரிக்கப்பட்டுள்ளது. குழந்தை உள்ள கலைஞர், போராட்ட கலைஞர், பேச்சு கலைஞர், நாடக கலைஞர், திரை கலைஞர், இதழியல் கலைஞர், இயற்றமிழ் கலைஞர் என்ற தலைப்புகளில் பாடம். கவிதை கலைஞர், […]
சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் மே தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கல்..
சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் மே தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கல்.. தென்காசியில் சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு உடை மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மே தினத்தை முன்னிட்டு, சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில், நலத்திட்ட உதவிகள், தண்ணீர் பந்தல் திறப்பு மற்றும் இலவச மரக்கன்றுகள் வழங்குதல் உள்ளிட்ட முப்பெரும் நிகழ்ச்சி தென்காசியில் நடைபெற்றது. சமூக நல்லிணக்க கூட்டமைப்பு தென்காசி பொறுப்பாளர் முகமது அலி தலைமையில் […]