12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது! இந்த வருடமும் மாணவிகளே அதிக அளவில் முதலிடம்..

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது! இந்த வருடமும் மாணவிகளே அதிக அளவில்  முதலிடம்.. தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டார்; tnresults.nic.in, dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக தேர்வு முடிவுகளை அறியலாம். மாணவர்கள் பதிவு செய்துள்ள மொபைல் எண்களுக்கும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படுகிறது 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட்டார் அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குநர் சேதுராமன் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி மூலமாகவும் வெளியிடப்படுகிறது அரசு பள்ளிகளில் தேர்ச்சி விதிகம் […]

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்..

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்! தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை வசதி மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதனிடையே பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு […]

ராமநாதபுரத்தில் கொளுத்தும் வெயிலில் நீண்ட வரிசையில் நீட் தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் ! நடுரோட்டில் அமர்ந்திருந்த பெற்றோர்கள்!!   

ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 நீட் தேர்வு மையங்களில் சுமார் 2229 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர் இந்த நிலையில் ராமநாதபுரம் சையது அம்மாள் பொறியியல் கல்லூரி மையத்தில் சுமார் 900 பேர் மையத்தில் தேர்வு எழுதுகின்றனர் . தற்போது கொளுத்துகின்ற அக்னி நட்சத்திரம் வெயில் நீண்ட வரிசையில் காத்திருந்து மாணவ மாணவிகள் பலத்த சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். தேர்வு மையத்தின் வெளிப்பகுதியில் சாமியானா பந்தல் போதுமான அளவுக்கு போடப்படவில்லை அதனால் மாணவ மாணவிகள் வெயிலில் நீண்ட […]

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணியளவில் வெளியாகிறது‌! முடிவுகளை இணையதளங்களில் பார்வையிடலாம்..

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணியளவில் வெளியாகிறது‌! முடிவுகளை இணையதளங்களில் பார்வையிடலாம்.. மாணவர்கள் dge.tn.gov.in மற்றும் tnresults.nic.in ஆகிய இணையதளங்களில் தங்களின் தேர்வு முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம்; EMIS இணையதளத்தில் பதிவு செய்த தொலைபேசி எண்ணுக்கும் மாணவர்களின் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்

நிலக்கோட்டை அருகே நான்கு வயது சிறுமியை பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர்! போக்சோ சட்டத்தில் கைது..

நிலக்கோட்டை அருகே நான்கு வயது சிறுமியை பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர்! போக்சோ சட்டத்தில் கைது.. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள நான்கு வயது சிறுமியை பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்தனர் இதில் விருவீடு பகுதியைச் சேர்ந்த சீனித்தேவர் மகன் பிச்சை […]

கைகளை இழந்தும் நம்பிக்கையை இழக்காத  வாலிபர், தன் விடாமுயற்சியால், தமிழகத்தின் முதல் நபராக கார் ஓட்டுவதற்கான லைசென்ஸ் பெற்றுள்ளார்..

கைகளை இழந்தும் நம்பிக்கையை இழக்காத  வாலிபர், தன் விடாமுயற்சியால், தமிழகத்தின் முதல் நபராக கார் ஓட்டுவதற்கான லைசென்ஸ் பெற்றுள்ளார்.. சென்னை வியாசர்பாடி பெரியார் நகரைச் சேர்ந்தவர் தான்சென், 31. இவர், 10 வயதை நெருங்கிய போது, மின்சார விபத்தில் சிக்கி, மூட்டுக்கு கீழ் தன் இரண்டு கைகளையும் இழந்தார். தொடர் முயற்சியால், இன்ஜினியரிங் முடித்தார். தொடர்ந்து பி.எல்., முடித்து எம்.எல்., படித்து வருகிறார். தற்போது திருமணமாகி ஒன்றரை வயதில் மகள் உள்ளார். பிறரை சார்ந்து வாழ விரும்பாத […]

கடையம் அருகே கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு; மர்ம நபர்கள் கைவரிசை..

கடையம் அருகே கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு; மர்ம நபர்கள் கைவரிசை.. தென்காசி மாவட்டம் கடையம் அருகிலுள்ள, முதலியார்பட்டி பிரதான சாலையில், பக்கீர் மைதீன் (56) என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். அதே சாலையில் மஸ்த் செப்பல் என்ற பெயரில் தமீம் அன்சாரி என்பவர் செருப்பு கடை வைத்துள்ளார். இந்த இரண்டு கடைகளையும் வழக்கம்போல் காலையில் திறக்கும் போது பூட்டு இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது கல்லாவில் இருந்த பணம், செல்போன் […]

நெல்லையில் மமக சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு..

நெல்லையில் மமக சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு.. நெல்லையில் ரயில்வே மேம்பாலத்தை திறக்கக்கோரி மமக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மஹாராஜா நகர் உழவர் சந்தைப் பகுதி சாலையில், தினந்தோறும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதனை குறைப்பதற்காக நெடுஞ்சாலைத் துறையும் ரயில்வே துறையும் இணைந்து சுமார் 26 கோடியே 30 லட்சத்தில் நெல்லை திருச்செந்தூர் ரயில்வே மார்க்கத்தில் கடந்த 2016 ல் […]

கோனேரி கிராமத்தில் காட்டு மாடுகளை கட்டுப்படுத்தும் முறை ! வேளாண் கல்லூரி மாணவி செய்முறை விளக்கம் !!

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோனேரி கிராமத்தில் விவசாய நிலங்களைச் சேதப்படுத்திக் கொண்டிருக்கும் காட்டுமாடுகளைக் கட்டுப்படுத்தும் முறையை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை இறுதியாண்டு படிக்கும் மாணவி வீ. தாமரைச்செல்வி தலைமையில் ஹெர்போலிவ் என்னும் மருந்து குறித்த செய்முறை விளக்கம் நடைபெற்றது. மேலும் மாணவி தாமரைச்செல்வி கூறுகையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் சான்றிதழ் அளிக்கப்பட்ட ஹெர்போலிவ் என்னும் மருந்தினை தெளிப்பதினால் காட்டு விலங்குகளான காட்டு மாடு எருமை காட்டுப்பன்றி போன்ற விலங்குகள் […]

இராமேஸ்வரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு !

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொதுமக்களுக்காக நீர், மோர், தர்பூசனி பழம் உட்பட தாகம் தீர்க்கும் வகையில் பந்தல் திறக்கப்பட்டு வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி தலைவர் தளபதி தமீம், பரமக்குடி நகர் நிர்வாகிகள் அர்ஜீன், துரை மருது, பார்த்திபன், சுரேஷ், இராமேஸ்வரம் நகர்தலைவர் கோவிந்தராஜ் நகர்செயலாளர் கோபிசாரதி நகர் பொருளாளர் கோபிகிருஷ்ணா இளைஞரணி பொருளாளர் ஸ்டீபன் , நகர் இளைஞரணி செயலாளர் ராஜிவ்(எ)நாகேஸ்வரன் நகர் இணை […]

திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு !

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நகர திமுக சார்பில் நீர் மோர் பந்தலை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் பங்கேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர் தர்பூசணி வெள்ளரி மற்றும் பழரசம்,மோர் பானங்களை வழங்கினார்.இதில் முன்னாள் அமைச்சர் மு. தென்னவன் மாவட்ட கவுன்சிலர் நாகனி செந்தில்குமார் மாவட்ட துணைச் செயலாளர் ஜோன்ஸ் ரூசோ நகரச் செயலாளர் பெரி பாலமுருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இலங்கைக்கு கடத்த இருந்த 12  லட்சம் மதிப்பிலான வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் ஒருவர் கைது !

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியை அடுத்த பெரியபட்டினம் கடல் பகுதியில் இருந்து வலி நிவாரணி மாத்திரைகள் இலங்கைக்கு கடத்துவதற்கு வாகனத்தில் கொண்டு செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் OCIU பிரிவினர் திருப்புல்லாணியை அடுத்த ஆனைகுடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டபோது அவ்வழியே வந்த TATA AC  வாகனத்தை சோதனை செய்தனர் சோதனையில்  11,88,000  லட்சம் மதிப்பிலான PREGAP Capusules எனும் வலி நிவாரணி மாத்திரைகள் இருப்பதை கண்டதும் அதனை பறிமுதல் செய்த போலீசார் வாகன ஓட்டுனரான  திருப்புல்லாணி […]

இன்று முதல் ஆரம்பம் அக்னி நட்சத்திரம்! கொளுத்த போகும் வெயிலும், “கீழை நியூஸ்” வழங்கும் ஆலோசனைகளும்..

தமிழ் பஞ்சாங்கம் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் அக்னி நட்சத்திரம் (கத்தரி வெயில்) கணக்கிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டு கத்தரி வெயில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. இந்த கத்தரி வெயில் வருகிற 28-ம் தேதி வரை அதாவது, 25 நாட்கள் தொடர்ந்து வாட்டி வதைக்க காத்திருக்கிறது.பொதுவாக கத்தரி வெயில் காலத்தில்தான் வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு அப்படி இல்லை. கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்தே வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதிலும் […]

பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் தேனியில் அதிரடி கைது! கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை! கோவை அழைத்து வரும்போது விபத்தில் சிக்கிய போலீஸ் வாகனம்..

பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் தேனியில் அதிரடி கைது! கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை! கோவை அழைத்து வரும்போது விபத்தில் சிக்கிய போலீஸ் வாகனம்.. யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சவுக்கு சங்கருக்கு என்று ரசிகர் பட்டாளேமே இருந்து வருகிறது. அரசியல் விமர்சகரான இவர் தொடர்ந்து ஆளுங்கட்சியான திமுகவை கடுமையாக தாக்கி பேசிவந்தார். கடந்த ஆண்டு நீதிபதியை விமர்சனம் செய்த காரணத்தால் சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சுமார் 10 மாதத்திற்கு […]

மேட்டுப்பாளையம் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 32பேர் படுகாயம் ! சிறுவன் பலி !!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்-கோத்தகிரி மலைச்சாலையில் குஞ்ச பண்ணை அருகே உதகைக்கு சுற்றுலா சென்று விட்டு திரும்பிய சுற்றுலா வாகனம் கவிழ்ந்த விபத்துக்குள்ளானது . இந்த விபத்தில் முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தததாகவும் சிறுவன் பலியானதாகவும் தகவல் கிடைத்துள்ளது. சென்னை வியாசர்பாடி பெரம்பூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஒரு குழுவாக 16 பெரியவர்கள் 15 குழந்தைகள் மற்றும் என 31 பேர் கடந்த 30 ஆம் தேதி நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் புறப்பட்டு 1 ம் தேதி மேட்டுப்பாளையம் […]

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சிறைச்சாலைகளில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு ! 

இராமநாதபுரம் மாவட்ட சிறைச்சாலை, பரமக்குடி மகளிர் தனிச்சிறைச்சாலை மற்றும் முதுகுளத்தூர் சிறைச்சாலையில் கைதிகள் அறை, சமையல் கூடம், குளியல் அறை, குடிநீர், நூலகம், பார்வையாளர் அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து முதன்மை மாவட்ட நீதிபதி எஸ்.குமரகுரு, மாவட்ட ஆட்சித்தலைவர் பா விஷ்ணு சந்திரன்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்திஷ் ஆகியோர் இன்று (03.052024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் சிறைகளிலுள்ள கைதிகளின் எண்ணிக்கை, குற்றங்களுக்கான காரணங்கள், பார்வையாளர்கள் அனுமதிக்கப்படும் நேரம், […]

கோவில் திருவிழா நடத்துவதை தடுத்து நிறுத்த கோரி கிராம மக்கள் மாவட்ட எஸ்பியிடம் கோரிக்கை !

இராமநாதபுரம் அருகே உள்ள தேர்போகி கிராமத்தில் 150 குடும்பங்கள் இருந்து வருவதாகவும் இந்த நிலையில் இவர்களுக்கு சொந்தமாக சுடலைமாடசாமி என்ற ஆலயம் ஒன்று அமைத்து காலங்காலமாக வழிபட்டு வந்துள்ளனர் . இந்த சூழ்நிலையில் அங்கு பூசாரியாக இருந்தவரை பணி நீக்கம் செய்ததை தொடர்ந்து அவர் கிராமத்திற்கு எதிராக தனியாக ஊருக்கு வெளியே இந்தக் கோயில் போன்று சிலைகள் அமைத்து கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்த சென்றதாகவும் அதனை கிராம மக்கள் தடுத்து நிறுத்தியதால் இருதரப்புக்கும் இடையே தகராறு […]

பழனியில் நேதாஜி நற்பணி மன்றம் சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது! 15 நாட்களுக்கு பொதுமக்களுக்கு மோர் வழங்க திட்டம்..

பழனியில் நேதாஜி நற்பணி மன்றம் சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது! 15 நாட்களுக்கு பொதுமக்களுக்கு மோர் வழங்க திட்டம்.. பழனி காந்தி மார்க்கெட்டில் நேதாஜி நற்பணி மன்றம் சார்பில் தண்ணீர் பந்தல் இன்று திறக்கப்பட்டது. கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் வெப்பத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். காந்தி மார்க்கெட் வழியாக தினமும் வரக்கூடிய மக்களுக்கு மோர் வழங்கும் வகையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. திறப்பு விழா நிகழ்ச்சியில் முன்னாள் நகர் மன்ற […]

கண்டித்த தாத்தாவை பூச்சி மருந்து கலந்த சிக்கன் கொடுத்து கொன்று நாடகமாடிய பேரன் கைது..

கண்டித்த தாத்தாவை பூச்சி மருந்து கலந்த சிக்கன் கொடுத்து கொன்று நாடகமாடிய பேரன் கைது.. நாமக்கல்லில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு முதியவர் உயிரிழந்த |வழக்கில் திடீர் திருப்பமாக அவரது பேரன் பகவதி கைது. நடத்தையை கண்டித்ததால் தாய் மற்றும் தாத்தாவுக்கு பூச்சி மருந்து கலந்து சிக்கன் ரைஸ் தந்தது அம்பலம். சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் தாய், தாத்தாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக மாவட்ட ஆட்சியரிடம் பகவதி புகார் அளித்த நிலையில், போலீசார் விசாரணையில் உண்மை வெளியே வந்துள்ளது. தாய் […]

விருத்தாசலம் அருகே கொல்லம் விரைவு ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பெண் சடலமாக மீட்பு..

விருத்தாசலம் அருகே கொல்லம் விரைவு ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பெண் சடலமாக மீட்பு.. கஸ்தூரி தவறி விழுந்ததும் உறவினர்கள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்த முயற்சித்தபோது அபாய சங்கிலி வேலை செய்யாததால் 8 கி.மீ. தள்ளி ரயில் நின்ற இடத்தில் கர்ப்பிணியை தேடினர் சுமார் 10 நிமிடங்கள் ரயில் நிறுத்தப்பட்டு தவறி விழுந்த கஸ்தூரியை தேடிய நிலையில் அவர் கிடைக்கவில்லை. 2 மணி நேர தேடலுக்குப் பின் உளுந்தூர்பேட்டை அருகே கர்ப்பிணி […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!