*மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாதம் தோறும் உண்டியல் என்னும் பணி நடைபெறும் அதேபோல் ஒன்பதாம் தேதி கோயில் உள்ள 40 உண்டியல்களும் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது இதில் சுவாரசியமாக மூன்று சிறிய பேப்பர் கிடைக்கப்பெற்றது இதில் முதலாவதாக வந்த பேப்பரில் ஓம் கந்தா கடம்பா இன்று எனக்கு ரூ 20,000 வேண்டும் விரைவாக தருக ஜி ஜி ரன் என சிவப்பு மையில் எழுதப்பட்டிருந்தது அதேபோல் இரண்டாவது வந்த பேப்பரில் ஓம் முருகா […]
Category: செய்திகள்
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை 14 வயது சிறுமிக்கு மேம்பட்ட சிகிச்சை முறை
மீனாட்சி மருத்துவமனையில் அளிக்கப்பட்ட மேம்பட்ட சிகிச்சை. எலிக்கொல்லி விஷத்தில் இருந்து 14 வயது சிறுமியை காப்பாற்றியுள்ளது பல்துறை சார்ந்த முக்கிய சிகிச்சை மற்றும் பிளாஸ்மாஃபெரிசிஸ் எனப்படும் மேம்பட்ட சிகிச்சை முறையின் வருகையால், டெல்டா பகுதியில் கடந்த 15 முதல் 2 ஆண்டுகளாக எலிக்கொல்லி விஷத்தால் ஏற்படும் இறப்பு விகிதம் மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது. தஞ்சாவூர் தமிழ்நாட்டின் டெல்டா பகுதியில் பலதுறை முக்கிய சிகிச்சை பிரிவைக் கொண்ட முதல் மருத்துவமனையான தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை, மிகவும் கொடிய எலிக்கொல்லிய […]
தஞ்சாவூர் கூத்தூர் கிராமத்தில் ஆஸ்மா விழிப்புணர் நிகழ்ச்சி !
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஒன்றியத்திற்குட்பட்ட கூத்தூர் கிராமத்தில் உள்ள எச்எஸ்சி யில் உலக ஆஸ்மா தினத்தை முன்னிட்டு ஆஸ்மா நோய் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றிய விழிப்புணர் நிகழ்ச்சி சில்டரன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கிராம சுகாதார செவிலியர் சந்தோஷ் மேரி கலந்து கொண்டு ஆஸ்துமா நோய் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து தெளிவாக எடுத்துக் கூறினார். இடைநிலை சுகாதாரப் பணியாளர் மீனா கற்பகம் ஆஸ்மாவால் பாதிக்கப்பட்டவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய சத்தான உணவு முறையில் […]
கஞ்சா கடத்தல் வழக்கில் மே 22 ஆம் தேதி வரை சவுக்கு சங்கரை நீதிமன்ற காவலில் வைக்க மதுரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.
கஞ்சா கடத்தல் வழக்கில் மே 22 ஆம் தேதி வரை சவுக்கு சங்கரை நீதிமன்ற காவலில் வைக்க மதுரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு. பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள், பெண் போலீசார் குறித்துஅவதூறாக பேசிய வழக்கில் கடந்த 4-ஆம் தேதி தேனி மாவட்டத்தில் கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அந்த கைது நடவடிக்கையின் போது கஞ்சா வைத்திருந்ததாக […]
திருப்புல்லாணி அருகே அரசு பேருந்து நிலை தடுமாறி தலை குப்புற கவிழ்ந்து விபத்து ! கீழக்கரை தாசில்தார் விரைந்து வந்து உதவி !!
ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை நோக்கிச் சென்ற ஒன்றாம் நம்பர் அரசு பேருந்து திருப்புல்லாணி அருகே சென்று கொண்டிருந்தபோது டிராக்டர் ஒன்று சைடு கொடுக்காமல் சென்றதால் அதனை முந்த முற்பட்ட அரசு பேருந்து சருக்கலில் நிலை தடுமாறி தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கீழக்கரை வட்டாட்சியர் பழனி தலைமையிலான அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் ஒன்றிணைந்து கவிழ்ந்த பேருந்தில் இடுபாடுகளுக்குள் சிக்கி இருந்த பொதுமக்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ்க்காக காத்திருக்காமல் வட்டாட்சியர் வாகனத்தில் […]
கீழக்கரையில் தொடர் குற்றச்செயலில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தின் கைது !
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிழக்கு தெருவை சேர்ந்தவர் சீனி முகம்மது என்பவரின் மகன் கை என்ற முகமதுகான் (வயது 32) இவரும் கீழக்கரை புது கிழக்கு தெரு பகுதியை சேர்ந்த ஜாகிர் உசேன் மகன் சதாம் என்ற சதாம் உசேன் (34) என்பவரும் தொடர்ந்து கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் மேற்கண்ட இருவர் மீதும் வழக்குப்பதிவு […]
வாக்கு எண்ணும் மையத்திற்கு மேல் டிரோன்கள் விமானங்கள் பறக்க தடை; தென்காசி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு..
வாக்கு எண்ணும் மையத்திற்கு மேல் டிரோன்கள் விமானங்கள் பறக்க தடை; தென்காசி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு.. தென்காசி மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளும் முடிவடையும் வரை வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கொடிக்குறிச்சி USP கல்லூரி குழும வளாகத்திலிருந்து 2 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு தடை செய்யப்பட்ட பகுதியாக (Drones No Fly Zone) அறிவிக்கப்பட்டுள்ளதால் ட்ரோன்கள் (Drones), ஆளில்லாத விமானங்கள் (Remotely Piloted Aircraft System RPAS) பறக்க தடைவிதிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் […]
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை காயகல்ப் விருதில் முதலிடம் பெற்று சாதனை..
தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு ரூ.50 லட்சத்திற்கான விருது; ஒன்றிய அரசின் காயகல்ப் மதிப்பீட்டில் முதலிடம்.. தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை காயகல்ப் விருதில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. 2023 24 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு வழங்கும் மாநில அளவிலான அனைத்து மருத்துவமனைகளின் காயகல்ப் மதிப்பீட்டில் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முதலிடம் பெற்று ரூபாய் 50 லட்சத்திற்கான விருதினை தட்டிச் சென்றுள்ளது. ஒன்றிய அரசானது மாநில அளவில் அரசு மருத்துவமனைகளின் […]
அமுல் வந்தால் வரவேற்க தயாராக இருக்கிறோம்!-பால் முகவர்கள் சங்கம் அதிரடி..
அமுல் வந்தால் வரவேற்க தயாராக இருக்கிறோம்!-பால் முகவர்கள் சங்கம் அதிரடி.. கூட்டுறவு பால் நிறுவனங்களுக்கெல்லாம் முன்னோடி நிறுவனமாக திகழ்ந்து இந்தியாவில் தொடர்ந்து முதலிடம் பிடித்து செயல்பட்டு வரும் அமுல் நிறுவனம் அதன் பால் மற்றும் பால் பொருட்களை தமிழகத்தில் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சந்தைப்படுத்த ஏதுவாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மிகப்பெரிய அளவில் பால் பண்ணை அமைத்து வருவதாக ஒருசில ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி தவறானதாகும். அமுல் நிறுவனத்தைப் பொறுத்தவரை பால் […]
நாளை மறுநாள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!- தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு..
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26-ல் தொடங்கி ஏப்ரல் 8-ந்தேதி வரை நிறைவடைந்தது.இந்த தேர்வை 12,616 பள்ளிகளில் இருந்து 9.10 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர்.இதற்காக, மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் 48,700 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். ஏப்ரல் 12-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது. இந்நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே10ம் தேதி வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் […]
ஸ்ரீ அழகுபார்வதி அம்மன் கோயில் சித்திரை தேர் திரு விழா..
சுரண்டை ஸ்ரீ அழகுபார்வதி அம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழா.. தென்காசி மாவட்டம் சுரண்டையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அழகுபார்வதி அம்மன் கோவில் திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடந்தது. இந்த ஆண்டு திருவிழா கடந்த 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் மண்டகப்படி ஜமீன்தாரால் நடத்தப்பட்டது. 2ஆம் நாள் மண்டகப்படி தேவர் சமுதாயத்திற்கும், 3ஆம் நாள் மண்டகப்படி செட்டியார், பிள்ளைமார் சமூகத்தினர் சார்பிலும், 4ஆம் நாள் மண்டகப்படி நாடார் சமுதாயமும், 5ஆம் நாள் மண்டகப்படி […]
வீடியோ வெளியிட்ட யூட்யூபர் சாட்டை துரைமுருகன் – ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நவாஸ் கனி நோட்டீஸ்..
கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் போட்டியிட்ட நவாஸ் கனி, வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தாண்டு நடைபெறும் மக்களவை தேர்தலிலும் அதே தொகுதியில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் நவாஸ் கனி போட்டியிட்டார். தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்த நிலையில், ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் நவாஸ் […]
நிலக்கோட்டை அருகே நடுப்பட்டியில் கூலி தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம்! பிரேதத்தை வாங்க மறுத்து இரண்டாவது நாளாக உறவினர்கள் போராட்டம்!-விசிக மாநில நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல்;கரியாம்பட்டி, நடுப்பட்டி கிராமங்களில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு..
நிலக்கோட்டை அருகே நடுப்பட்டியில் கூலி தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம்! பிரேதத்தை வாங்க மறுத்து இரண்டாவது நாளாக உறவினர்கள் போராட்டம்!-விசிக மாநில நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல்;கரியாம்பட்டி, நடுப்பட்டி கிராமங்களில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு.. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே நடுப்பட்டியில் வீட்டின் முன்பு படுத்து உறங்கிய கூலி தொழிலாளியை மர்ம கும்ப கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டி சாய்த்தது. இந்த சம்பவம் தொடர்பாக நிலக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வரும் நிலையில் […]
ஏர் இந்தியா ஊழியர்கள் திடீர் போராட்டம்! உள் நாடு, வெளிநாடு விமான சேவைகள் கடும் பாதிப்பு! பரிதவிக்கும் பயணிகள்..
மத்திய அரசுக்கு சொந்தமாக இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கியது. இந்த நடவடிக்கையின் போது ஏற்கனவே பணியில் இருந்த ஊழியர்களுக்கும் புதிய ஊழியர்களுக்கும் இடையே பாகுபாடு காட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. நேர்காணலில் நன்றாக செயல்பட்டபோதும் குறைவான நிலையில் ஊதியம் உள்ள பணியில் அமர்த்தப்படுவதாகவும், போனஸ் உள்ளிட்டவற்றில் பாகுபாடு காட்டப்படுவதாகவும் ஊழியர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், ஏர் இந்தியா ஊழியர்கள் 300க்கும் மேற்பட்டோர் இன்று ஒரேநாளில் மருத்துவ விடுப்பு எடுத்துள்ளனர். இதனால் ஏர் இந்தியா விமான […]
மதுரை வெளக்கல் குப்பை கிடங்கில் திடீரென பற்றி எரியும் தீ! சாலையெங்கும் புகைமண்டலமாக காட்சி அளிப்பதால் விபத்து ஏற்படும் அபாயம்..
மதுரை வெளக்கல் குப்பை கிடங்கில் திடீரென பற்றி எரியும் தீ! சாலையெங்கும் புகைமண்டலமாக காட்சி அளிப்பதால் விபத்து ஏற்படும் அபாயம்.. மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான வெளக்கல் குப்பை கிடங்கு பகுதியில் சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதியில் இருந்து கொண்டுவரப்படும் குப்பைகள் கொட்டப் பட்டு வருகிறது. அவற்றிலிருந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து எடுக்கப்படுகிறது. மக்காத குப்பைகளை மதுரை மாநகராட்சி குழிதோண்டி அதன் மேல் மண் போட்டு மூடி […]
சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்து பாயும் வழக்குகள்!குண்டாஸ் வழக்கு போடப்படுமா..??
தமிழகத்தின் பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அதில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.இதையடுத்து கோவை சைபர் கிரைம் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து தேனி விடுதியில் தங்கி இருந்த சவுக்கு சங்கரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்துள்ளனர்.மேலும் சவுக்கு சங்கரின் அவதூறு கருத்துக்கள் அடங்கிய பேட்டி தொடர்பான […]
பனையடியேந்தல் கிராமத்தில் வேளாண்மை கல்லூரி மாணவி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி !
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பனையடியேந்தல் கிராமத்தில் பருத்தி விளைவிக்கும் விவசாயிகளுக்கு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இளங்கலை இறுதி ஆண்டு மாணவி மூ.சூரிய லட்சுமி தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.மாணவி மூ.சூரிய லட்சுமி தெரிவிக்கையில் :- விவசாயிகள் நெல் அறுவடைக்கு பிறகு கண்மாய், குளம், ஊரணிகளில் தேங்கி உள்ள தண்ணீரை பயன்படுத்தி பருத்தி நடவு செய்து விவசாயம் செய்து வருகின்றனர் . பருத்தி செடியை பொறுத்தவரை லேசான ஈரப்பதத்திலும், கடும் வறட்சி […]
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இரும்பாலான மேம்பாலத்தின் மேல் திடீர் பள்ளம் – விஜய் வசந்த் எம்.பி ஆய்வு..
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இரும்பாலான மேம்பாலத்தின் மேல் திடீர் பள்ளம் – விஜய் வசந்த் எம்.பி ஆய்வு.. குமரி மாவட்டம் மார்த்தாண்டம் வழியாக செல்லும் திருவனந்தபுரம் நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்திற்கு தீர்வு காணும் வகையில் குழித்துறையிலிருந்து பம்மம் வரை 2018 – ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்க்காக ரூ.222 கோடி செலவில் மேம்பாலம் அமைக்கப்பட்டது. தற்போது வரை இந்த பாலத்தை மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பாலத்தின் […]
கொளுத்தும் கோடை வெயில்! மக்களே குடை எடுத்துட்டு போங்க! 14 மாவட்டங்களில் கொட்டப் போகும் மழை..
கோடை வெயில் துவங்கியதிலிருந்து தமிழகத்திலிருந்து கடந்த சில தினங்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. கல் நேரங்களில் வெப்ப அலை வீசுவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் மகிழ்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் […]
பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஒரே திருநங்கையான மாணவி நிவேதா மற்றும் நாங்குநேரி மாணவர் சின்னதுரை ஆகியோரை முதலமைச்சர் நேரில் அழைத்து பாராட்டு..
பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஒரே திருநங்கையான மாணவி நிவேதா மற்றும் நாங்குநேரி மாணவர் சின்னதுரை ஆகியோரை முதலமைச்சர் நேரில் அழைத்து பாராட்டு.. தங்கள் உயர்கல்வி செலவை முழுமையாக அரசே ஏற்றுக்கொள்ளும் என முதலமைச்சர் உறுதி அளித்துள்ளதாக முதலமைச்சரை சந்தித்த பின் மாணவர்கள் பேட்டி. பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரே திருநங்கையான மாணவி நிவேதா மற்றும் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் சக மாணவர்களால் வெட்டுப்பட்ட மாணவர் சின்னதுரை ஆகியோர் முதலமைச்சரை தலைமை செயலகத்தில் […]