மகப்பேறு காலத்தில் மரணம் அடைந்த மருத்துவர் அஞ்சுதாவின் குடும்பத்திற்கு நிதி உதவி !

. புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியைச் சேர்ந்த மருத்துவர் அஞ்சுதா கடந்த 30.04.2024 அன்று மகப்பேறு காலத்தில் துயர மரணம் அடைந்தார். அதனை தொடர்ந்து இன்று அவரது இல்லத்திற்கு சென்று தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் சார்பாக திரட்டப்பட்ட ரூபாய் 7,25,000/- ஏழு இலடத்து இருபத்தி ஐந்தாயிரம் காசோலையை மருத்துவர் அஞ்சுதாவின் தாயார் தமிழரசி, கணவர் கார்த்திக் மற்றும் அவர்களுடைய குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் புதுக்கோட்டை, அறந்தாங்கி சுகாதார மாவட்டம் […]

சோழவந்தான் அருகே குண்டும் குழியுமான சாலை; பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதி..

சோழவந்தான் அருகே குண்டும் குழியுமான சாலை; பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதி.. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தச்சம்பத்து முதல் திருவேடகம் வரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டிய பள்ளத்தை சரிவர மூடாததால் தற்போது பெய்து வரும் மழைக்கு சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக தச்சம்பத்து திருவேடகம் பகுதியில் அதிக அளவில் பள்ளங்கள் இருப்பதால் அடிக்கடி விபத்து […]

குற்றாலம் மற்றும் இதர சுற்றுலா பகுதிகளில் குளிக்க தடை; மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் அறிவிப்பு..

கனமழை எச்சரிக்கை எதிரொலி: குற்றாலம் மற்றும் இதர சுற்றுலா பகுதிகளில் குளிக்க தடை; மாவட்ட கலெக்டர் அறிவிப்பு.. தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவி மற்றும் இதர சுற்றுலா பகுதிகளில் மறு உத்தரவு வரும் வரை குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என தென்காசி மாவட்ட கலெக்டர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், சென்னை வானிலை மையம் தென்காசி மாவட்டத்திற்கு 17.05.2024, 18.05.2024, 19.04.2024, 20.05.2024 மற்றும் 21.05.2024 ஆகிய தினங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் (Orange […]

மேட்டுப்பாளையம் பள்ளிகளில் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் திடீர் ஆய்வு !

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பள்ளிகளில் இன்று 17-05-2024 வெள்ளியன்று தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டார். அதன் ஒரு பகுதியாக, மேட்டுப்பாளையம் நகரவை பெண்கள் மேல் நிலைப் பள்ளிக்கு , தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர். முனைவர். எஸ்.கண்ணப்பன் அவர்களும், பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் பிரிவு) த. ராஜேந்திரன் அவர்களும், கல்வி சார்ந்த பல்வேறு பணிகளை ஆய்வு செய்தனர் . அப்போது மேல்நிலை வகுப்புக்கான சேர்க்கையை முனைவர் எஸ்.கண்ணப்பன் அவர்கள் துவக்கி வைத்ததுடன் […]

குற்றால வெள்ளப் பெருக்கில் சிக்கிக் கொண்ட நெல்லை சிறுவன் சடலமாக மீட்பு..

குற்றால வெள்ளப் பெருக்கில் சிக்கிக் கொண்ட நெல்லை சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சோகம்.. பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட நெல்லை சிறுவன் அஸ்வினை தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் […]

பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு..

பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு.. பழைய குற்றால அருவியில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக திருநெல்வேலியை சேர்ந்த அஸ்வின் என்ற 16 வயது சிறுவன் அடித்துச் செல்லப்பட்டார். […]

மக்களே கவனம்! தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் மழைக்கான மஞ்சள் அலர்ட்..

மக்களே கவனம் தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் மழைக்கான மஞ்சள் அலர்ட்.. கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, தேனி மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு. விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு. புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று மழை பெய்யும். திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட்டில் இன்று மழைக்கு வாய்ப்பு என தகவல். மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் 64.5 மி.மீ முதல் 115. […]

திருவாடானை அருகே வழக்கு பதியாமல் இருக்க லஞ்சம் வாங்கிய சிறப்பு சார்பு ஆய்வாளர் கைது !

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா பெருமாநேந்தல் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கும் அவரது உறவினர்கள் சிலருடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறு சம்பந்தமாக இருதரப்பினரும் கொடுத்த புகார்களுக்கு தொண்டி காவல் நிலையத்தில் வழக்கு மற்றும் எதிர் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இதே சம்பவம் தொடர்பாக வேல்முருகன் மீது மற்றொரு புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. மேற்படி வழக்கில் புகார் தாரரை ஜாமீனில் விடுவித்ததற்கும் மற்றொரு புகாருக்கு வழக்கு பதிவு செய்யாமல் இருப்பதற்கும் தொண்டி காவல் நிலையத்தில் […]

“ஞானவாபி மசூதி” இருக்கும் இடத்தில் கோயிலை கட்டுவோம்:-அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்ச்சை பேச்சு..

நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்.19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை நாடு முழுவதும் 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், மீதமிருக்கும் தொகுதிகளுக்கு அனைத்து கட்சியினரும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் தேர்தல் விதிகளை மீறி பிரதமர் மோடி வெறுப்பு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக மேற்கொள்ளும் பிரசாரத்தில் தேர்தல் விதிகளை மீறி மதம் சார்ந்து பேச்சுகள் பேசப்பட்டு வருகிறது. மேலும் இந்து – முஸ்லீம் […]

சரமாரி கேள்வி எழுப்பிய பங்குச் சந்தை முதலீட்டாளர்; பதிலளிக்க முடியாமல் நழுவிய நிர்மலா சீதாராமன்..

சரமாரி கேள்வி எழுப்பிய பங்குச் சந்தை முதலீட்டாளர்; பதிலளிக்க முடியாமல் நழுவிய நிர்மலா சீதாராமன்.. மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில், ‘இந்திய நிதிச்சந்தையின் பார்வை’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு, முதலீட்டாளர்களுடன் உரையாற்றினார். இதனையடுத்து, இதில் கலந்துக்கொண்ட முதலீட்டாளர்கள் மற்றும் புரோக்கர்கள் உட்பட அனைவரும் நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பி பதில் பெற்று வந்தனர். அதில் முதலீட்டாளர் ஒருவர் நிர்மலா சீதாராமனிடம், ‘ஜி.எஸ்.டி, ஜி.ஜி.எஸ்.டி, முத்திரை வரி, […]

தன்னை பற்றி அவதூறாக பேசிய திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராதிகா சரத்குமார் தரப்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்..

திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை ராதிகா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சென்னை கொடுங்கையூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக மேடை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அவருடைய இந்த பேச்சு இணையதளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேச்சுக்கு […]

உசிலம்பட்டி அருகே நடைபெற்ற கிடாய் முட்டு போட்டி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாலாந்தூர் அங்காள பரமேஸ்வரி கோவில் முன்பு கிராம மக்கள் சார்பில் மாபெரும் கிடா முட்டு போட்டி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவோடு கிடா முட்டு போட்டி இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.,இந்த போட்டியில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து குரும்பை, சின்னகருப்பு, வெள்ளைமறை, கண் செவலை, சீனு குரும்பை, பால்டப்பா பருமறை என பல்வேறு வகையான 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாய்கள் கொண்டு வரப்பட்டு […]

செவ்வூர் அருகே தனியார் பள்ளி விண்வெளி கண்காட்சி திறப்பு விழா !

சிவகங்கை மாவட்டம் செவ்வூர் அருகே சிவன் ஊர் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் ஸ்பேஸ் எக்ஸ்போ டி 24 நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் கலந்துகொண்டு அறிவியல் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். பூமிகோள்களில் இருந்து விண்வெளியை பார்க்கும் விதமாகவும், செவ்வாய் மற்றும் சந்திரன் நிலப்பரப்பிலிருந்து பூமியை பார்க்கும் விதமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. தொடர்ந்து மாணவ மாணவிகள் பொதுமக்கள் டெலஸ்கோப் மூலம் விண்வெளியில் கோள்கள் எவ்வாறு உள்ளது என செயல்முறை […]

கமுதக்குடியில் தனியார் மேல்நிலைப் பள்ளியில் முதலிடம் பிடித்த மூன்று மாணவர்களுக்கு பாரட்டு விழா !

ராமநாதபுரம் மாவட்டம் தமிழகத்திலேயே தேர்ச்சி சதவீதத்தில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது இந்த நிலையில் பரமக்குடி அருகே உள்ள கமுதக்குடி மவுண்ட் லிட்ரா தனியார் மேல்நிலை பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர் தற்போது நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில் முதலிடம் பிடித்த மூன்று மாணவர்களுக்கு பொன்னாடை போற்றி நினைவு பரிசுகளை பள்ளி நிர்வாகிகள் வழங்கி கௌரவித்தனர் முன்னதாக பள்ளிநிர்வாக செயலாளர் நாகரெத்தினம் பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை பார்த்து உணர்ச்சி பொங்க […]

உயிருக்கு போராடிய கர்ப்பிணி பெண்ணை காப்பாற்றிய அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ! கண்ணீர் மல்க உறவினர்கள் நன்றி தெரிவித்த நிகழ்வு !!

ராமநாதபுரம் மாவட்டம் பாண்டியூர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் மனைவி சாரதி இந்த தம்பதியருக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவது பிரசவத்திற்காக கடந்த 30-ம் தேதி என்று ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகப்பிரசவம் மூலம் ஆண் குழந்தை பிறந்த நிலையில் பிரசவத்திற்கு பின்னர் இயல்பாக சுருங்க வேண்டிய கர்ப்பப்பை சுருங்காததன் காரணமாக அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது இதன் காரணமாக உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கர்ப்பிணி தாயை […]

ராமநாதபுரம் மீன் மார்க்கெட் திடீர் ஆய்வு ! கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் !! 

ராமநாதபுரத்தில் நேற்று ஒரே நாளில் அரசால் தடை செய்யப்பட்ட 800 கிலோ தேளி மீன்களை பறிமுதல் செய்து அதை அளித்த நிலையில் இன்று ராமநாதபுரம் மீன் மார்க்கெட்டில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி விஜயகுமார்  திடீர் சோதனை நடத்தினர். அப்போது சில வியாபாரிகள் லாப நோக்கில் நீண்ட நாட்களாக கெட்டுப்போன 20 கிலோ மீன்கள் விற்பனைக்கு இருப்பு வைத்திருந்தது தெரியவந்தது. அந்த மீன்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் வியாபாரிகள் முன்னிலையில் அவற்றை பினாயில் ஊற்றி அளித்தனர். […]

நீதிமன்ற அனுமதி இன்றி சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் யாரையும் கைது செய்யக்கூடாது – உச்ச நீதிமன்றம் அதிரடி..

 நீதிமன்ற அனுமதி இன்றி சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் யாரையும் கைது செய்யக்கூடாது – உச்ச நீதிமன்றம் அதிரடி.. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகு சிறப்பு நீதிமன்ற அனுமதியின்றி யாரையும் கைது செய்யக்கூடாது. குற்றம்சாட்டப்பட்டவரை காவலில் எடுக்க விரும்பினால் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ED மனு தாக்கல் செய்ய வேண்டும். குற்றம்சட்டப்பட்டவரை ED காவலுக்கு அனுப்ப வேண்டுமா? வேண்டாமா? என சிறப்பு நீதிமன்றம் முடிவு செய்யும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தென்காசி நகராட்சிக்கு அஞ்சல் மூலம் கோரிக்கை; நகராட்சி தலைவருக்கு பாராட்டு..

தென்காசி நகராட்சிக்கு அஞ்சலில் வந்த மக்கள் கோரிக்கை; நடவடிக்கை மேற்கொண்ட நகராட்சி தலைவருக்கு பொதுமக்கள் பாராட்டு.. தென்காசி நகராட்சிக்கு அஞ்சல் அட்டை மூலம் வந்த மக்கள் கோரிக்கையின் மீது துரித நடவடிக்கை மேற்கொண்ட நகராட்சி தலைவரை பாராட்டி பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தென்காசி நகராட்சி தலைவராக ஆர். சாதிர் இருந்து வருகிறார். தென்காசி கன்னிமாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த வெற்றிவேல் என்பவர் வாறுகால்களை தூய்மைப்படுத்தி சுகாதார சீர்கேட்டை தடுக்க வேண்டும் என அஞ்சல் அட்டை மூலம் தென்காசி […]

தமிழகத்தில் கொட்டப் போகும் கனமழை! 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு அவசர உத்தரவு..

தமிழ்நாட்டில் கோடை மழை பரவலாக பெய்யத் தொடங்கி இருக்கிறது. அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், இன்று (வியாழக்கிழமை) முதல் 19-ந்தேதி வரை 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல், பலத்த காற்றுடன், அதாவது […]

ராமநாதபுரம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் தேலி மீன் பறிமுதல் !

ராமநாதபுரம் பட்டினம்காத்தான் ஈசிஆர் சாலையில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி விஜயகுமார் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி லிங்கவேல் மற்றும் ஜெயராஜ் முன்னிலையில் நேற்று நள்ளிரவு வாகன சோதனை நடைபெற்றது . அப்போது அவ்வழியாக உச்சிப்புளி நோக்கி சந்தேகப்படும்படி சென்ற சரக்கு வாகனத்தை உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் லிங்கவேல் நிறுத்தியுள்ளார். ஆனால் அந்த வாகனம் நிற்காமல் சென்றதால் உச்சிப்புளி காவல் நிலையத்திற்கு லிங்க வேல் தகவல் அளித்தார். அதன் அடிப்படையில் உச்சிப்புளி ஆய்வாளர் தலைமையிலான […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!