இந்தியா – ஈரான் இருதரப்பு உறவை வலுப்படுத்த இப்ராஹிம் ரெய்சி மேற்கொண்ட பங்களிப்பு எப்போதும் நினைவு கூறப்படும்!- பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி..

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சியின் மறைவுக்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.  இந்தியா – ஈரான் இருதரப்பு உறவை வலுப்படுத்த இப்ராஹிம் ரெய்சி மேற்கொண்ட பங்களிப்பு எப்போதும் நினைவுகூறப்படும்” என்று தனது இரங்கல் செய்தியில் பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், “ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தலைவர் இப்ராஹிம் ரெய்சியின் துயரமான மறைவு ஆழ்ந்த வருத்தமும், அதிர்ச்சியும் அளிக்கிறது. இந்தியா – ஈரான் இருதரப்பு உறவை வலுப்படுத்த இப்ராஹிம் ரெய்சி மேற்கொண்ட […]

ஈரானின் புதிய அதிபராகிறார் முகமது முக்பர்..

ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் அஜர்பைஜான் நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள ஜோல்பா நகருக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இந்நிலையில் மிக மோசமான நிலையில் ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்திருக்கலாம் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.ஹெலிகாப்டரில் இருந்தவர்கள் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என ஈரான் தொலைக்காட்சி தகவல் தெரிவித்துள்ளது.இந்நிலையில் ஈரான் நாட்டின் புதிய […]

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி ஹெலிகாப்டர் விபத்தில் பலி: அதிகார பூர்வமாக அறிவிப்பு..

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி ஹெலிகாப்டர் விபத்தில் பலி: அதிகார பூர்வமாக அறிவிப்பு.. ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி ஹெலிகாப்டர் விபத்தில் பலியானதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரான்-அஜா்பைஜான் எல்லையில் உள்ள அராஸ் நதியில் இரு நாடுகளும் இணைந்து கட்டிய 3-ஆவது அணையின் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அஜா்பைஜான் அதிபா் இல்ஹாம் அலியெவுடன் ஈரான் அதிபா் இப்ராஹிம் ரய்சி பங்கேற்றாா். இஸ்ரேலுடன் ஈரான் பகைமை கொண்டுள்ள நிலையில் இஸ்ரேலுடனான அஜா்பைஜானின் ராஜீய உறவு, ஈரான் […]

தமிழ்நாட்டில் இன்று கனமழை! 4 மாவட்டங்களுக்கு கன மழைக்கான ரெட் அலர்ட்!  

தமிழ்நாட்டில் இன்று கனமழை! 4 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ரெட் அலர்ட்! தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனிக்கு ரெட் அலர்ட் மதுரை, சிவகங்கை , ராமநாதபுரம், தூத்துக்குடி, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர் , நாகப்பட்டினம் , கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், விருதுநகருக்கு ஆரஞ்ச் அலர்ட். தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தென்காசி, […]

நாடு முழுவதும் 100 இடங்களில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு..

நாடு முழுவதும் 100 இடங்களில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு.. ஓய்வு பெற்ற ஊழியர்களது பணிக்கால பலன்கள், அகவிலைப்படி உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அரசு போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்துள்ளனர். ஜூன் 24 காலை 10 மணி முதல் 25ம் தேதி காலை 10 மணி வரை தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் போராட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்..

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்.. மக்களவை 5-ஆம் கட்டத் தோ்தலையொட்டி, உத்தர பிரதேசம் உள்பட 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் தேர்தல்.. பீகாரில் 5, ஜம்மு காஷ்மீரில் 1, ஜார்க்கண்டில் 3, லடாக்கில் 1, மகாராஷ்டிராவில் 13, ஒடிசாவில் 5, உத்தரப் பிரதேசத்தில் 14, […]

ஏர்வாடி தர்ஹாவில் மத நல்லிணக்கத் திருவிழா !

இராமநாதபுரம் மாவட்டம்  ஏர்வாடி  தர்ஹா அல்குத்புல் அகதாப் சுல்தான் செய்யது இப்ராஹீம் ஷஹீது ஒலியுல்லா பாதுஷா நாயகம்  தர்ஹாவில் மத நல்லிணக்க  850ம் ஆண்டு சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக மவுலீது எனும் பூகழ்மாலை கடந்த மே 9 ல் தொடங்கி நாள்தோறும் இரவு 10 மணி வரை நடந்து வருகிறது. மே 18ம் தேதி மாலை 5:00 மணியளவில் அடிமரம் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று மே 19 மாலை 5:00 மணி அளவில் மேளதாளங்கள் […]

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் ஜோல்பா என்ற இடத்தில் விபத்துக்குள்ளானதால் பரபரப்பு.

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் ஜோல்பா என்ற இடத்தில் விபத்துக்குள்ளானதால் பரபரப்பு. தெஹ்ரானில் இருந்து கிட்டத்தட்ட 600 கி.மீ. தூரத்தில் கிழக்கு அஜர்பைஜானில் உள்ள ஜோல்ஃபாவில் விபத்துக்குள்ளானதாக தகவல். ஈரான் அதிபருடன் அந்நாட்டு அமைச்சர் உசேன் உள்ளிட்டோர் பயணித்ததாக தகவல். அதிபரின் கான்வாயில் சென்ற 2 ஹெலிகாப்டர்களில் பயணித்த 2 அமைச்சர்கள், அதிகாரிகள் பத்திரமாக உள்ளதாக தகவல். மோசமான வானிலையால், விபத்து நடந்த இடத்திற்கு மீட்புப்படையினர் செல்வதில் சிக்கல், டிரோன்கள் மூலம் மீட்புப் பணி […]

சென்னையில் இருந்து மொத்தம் 3,771 பஸ்களில் சுமார் 1 லட்சத்து 76 ஆயிரம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம்..

சுபமுகூர்த்த நாள் மற்றும் வார இறுதி நாளை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு பயணிகள் சிரமமின்றி செல்லும் வகையில் நேற்று முன்தினம் முதல் இன்று வரை வழக்கமான பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.அதன்படி நேற்று முன்தினம் (வெள்ளிக் கிழமை) 1,618 பஸ்களில் 84 ஆயிரத்து 936 பயணிகளும் நேற்று (சனிக்கிழமை) 1,753 பஸ்களில் 91 ஆயிரத்து 156 பயணிகள் என மொத்தம் 3,771 பஸ்களில் சுமார் 1 லட்சத்து 76 ஆயிரம் […]

சவூதி அரேபியா மற்றும் தாய்லாந்துக்கு தமிழகத்தில் இருந்து விமான சேவைகள் அதிகரிப்பு! விமான பயணிகள் மகிழ்ச்சி..

பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தாய்லாந்துக்கும் சவுதி அரேபியாவுக்கும் தமிழகத்தில் இருந்து கூடுதல் விமானங்கள் இயக்கப்பட உள்ளன. முன்னதாக சென்னையில் இருந்து தாய்லாந்து நாட்டு தலைநகர் பேங்காக் நகருக்கும் பின்னர் அங்கிருந்து சென்னைக்கும் இரண்டு விமானச் சேவைகளை புதிதாகத் தொடங்கியது ‘இண்டிகோ ஏர்லைன்ஸ்’ நிறுவனம். கடந்த 15ஆம் தேதி முதல் இப்புதிய சேவை தொடங்கப்பட்ட நிலையில், வாரத்தில் நான்கு நாள்களுக்கு இச்சேவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ நிறுவனம், சென்னையில் […]

ஐபிஎல் கிரிக்கெட்! சென்னை அணியை வெளியேற்றியது பெங்களூரு..

சனிக்கிழமை மாலை பெங்களூருவில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. ஆட்டத்தில் பெங்களூரு அணி 18 ஓட்டங்களுக்கு மேல் வெற்றிபெற்றால் மட்டுமே அடுத்தச் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற சூழலில் முதலில் பந்தடித்தது. தொடக்கம் முதலே அதிரடிகாட்டிய பெங்களூரு விரைவாக ஓட்டங்கள் குவித்தது. இருப்பினும் 3 ஓவர்களுக்குப் பிறகு மழை பெய்ததால் ஆட்டம் தாமதமானது. மழை சிறிது நேரத்தில் ஓய்ந்தது. அதன் பின்னர் ஆட்டம் மீண்டும் தொடங்கியது. விராத் […]

முடக்க முயலும் நெருக்கடிகளால் சவுக்கு ஊடகத்தின் செயல்பாடுகளை இன்றிலிருந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு..

முடக்க முயலும் நெருக்கடிகளால் சவுக்கு ஊடகத்தின் செயல்பாடுகளை இன்றிலிருந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலில் பெண் போலீசார் குறித்து அவதூறு பேசியதாக சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு மே 4ம் தேதி தேனியில் வைத்து கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோல திருச்சி, சென்னையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளிலும் காவல் துறையினர் சவுக்கு சங்கரை கைது செய்தனர். இவர் மீது 7 வழக்குகள் பதிவு […]

கையூட்டு கொடுத்தால் மட்டுமே மக்களுக்கு சான்றிதழ்கள் கிடைக்கின்றன.- டாக்டர் ராமதாஸ் காட்டம்..

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் மக்களுக்குத் தேவையான சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசின் சேவைகளைப் பெற மிக அதிக அளவில் கையூட்டு வழங்க வேண்டியிருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். வாக்களித்த மக்களுக்கு பொதுச்சேவை வழங்கும் அடிப்படைக் கடமையை நிறைவேற்றுவதில் கூட தமிழக அரசு படுதோல்வி அடைந்து விட்டது என்பதைத் தான் பொதுமக்களின் குற்றச்சாட்டு உறுதி செய்திருக்கிறது. தமிழக மக்களுக்குத் தேவையான சாதிச் சான்று, பிறப்புச் சான்று, இறப்புச் சான்று, வசிப்பிட சான்றிதழ், வருவாய் சான்றிதழ், […]

ஜெயக்குமார் வழக்கில் கூடுதல் காவல் துறையை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்!- செல்வப் பெருந்தகை பேட்டி..

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-சாதி, மதம், மொழி அரசியல் செய்யகூடாது என்று சட்டம் சொல்கிறது. ஆனால், மோடி அரசு கல வர அரசியலில் ஈடுபட்டு வருகிறது. அதனை தடுக்கா மல் தேர்தல் ஆணையம் தொடர்ந்து வேடிக்கை பார்ப்பது அச்சத்தை ஏற் படுத்தியுள்ளது.ஒவ்வொரு கட்ட தேர்தலிலும் பா.ஜ.க தலைவர்களுக்கு பயம் வருகிறது. அரசியலுக்காக அயோத்தியில் ராமர் கோவிலை மோடி கட்டினார். எங்களுக்கு எல்லா […]

ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, உட்பட 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம்..

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் வெயில் வாட்டி வதைத்து வந்தது. அதிலும் வெப்பஅலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சுமார் 110 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவானது. ஈரோடு போன்ற மாவட்டங்களில் 112 டிகிரி அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வந்தது. சென்னையில் 105 டிகிரிக்கு உள்ளாகவே வெப்பநிலை பதிவாகி வந்தது. […]

தமிழகம் முழுவதும் கொட்டி தீர்த்த கோடை மழையும், அதனை ஒட்டி உள்ள தகவல்களும்!-ஓர் முழு பார்வை..

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை வெளுத்து வாங்கியுள்ளது. இதனால் பெய்த மழையால் அணைகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாகவே பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் இருந்து மீண்டும் மழை பெய்தது. நள்ளிரவில் 2 மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை கொட்டி தீர்த்தது. பேச்சிப்பாறை அணை பகுதியில் மிக பலத்த மழை பெய்தது. அங்கு 103 மி.மீட்டர் மழை பெய்து உள்ளது. குமரி மாவட்டத்தின் […]

ஆவடி பகுதிகளில் நூதன முறையில் மிரட்டி பணம் பறித்த கும்பல்! கொத்தாக பிடித்து கைது செய்த போலீசார்..

ஆன்லைன் டேட்டிங் செயலில் நூதன முறையில் பணம் பறித்து வந்த ஆவடி சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த லியோதுரை (25), சீனிவாசன் (26), தமிழன் (25), முகமது ரியாஸ் (23), பிரித்திவிராஜ் (28) ஆகிய 5 பேர் கைது. சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த தாமோதர கண்ணன் (24) என்பவருக்கு, அகிலா என்ற பெண் டேட்டிங் செயலில் அறிமுகமாகியுள்ளார். அப்போது அவசர தேவையாகக் கண்ணனிடம்₹500 பெற்ற அகிலா தொடர்பில்லாமல் சென்றுள்ளார். சில நாட்களுக்குப் பிறகு சைபர் கிரைம் போலீஸ் எனக் […]

ஒரே நாளில் இரு வேறு இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று பாஜக பிரமுகர்கள் அதிரடி கைது!- வேலூர் மாவட்டத்தில் பரபரப்பு..

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பகுதியை சேர்ந்தவர் கிளி என்கிற சதீஷ் (34). இவர் வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட இளைஞரணி தலைவராக உள்ளார். இந்நிலையில் இவர் பள்ளிகொண்டா அடுத்த அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டு வழிப்பறியில் ஈடுபட்டதாக விஜய் பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி தலைவர் கிளி என்கிற […]

சுற்றுலா பயணிகள் கவனிக்கவும்! தொடர் மழை எதிரொலி! ஊட்டி மலை ரெயில் சேவை இரண்டு நாட்கள் ரத்து..

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு அழகிய மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலை ரெயிலில் பயணம் செய்யும் போது இயற்கை எழில்மிகு காட்சிகள், வனவிலங்குகள், மலைமுகடுகளை தழுவி செல்லும் மேக கூட்டங்கள், அருவிகள், நீரோடைகள் உள்ளிட்ட பல இயற்கை காட்சிகளை பார்த்து ரசிக்கலாம். மலைப்பாதையில் ஊர்ந்து செல்லும் இந்த ரெயிலில் பயணிக்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோவை, […]

நிலக்கோட்டை அருகே எச்சரிக்கையை மீறி பேரணையில் குளிக்கும் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள்! உயிர் பலிகள் ஏற்படும் முன் தடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..

நிலக்கோட்டை அருகே எச்சரிக்கையை மீறி பேரணையில் குளிக்கும் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள்! உயிர் பலிகள் ஏற்படும் முன் தடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.. தேனி மாவட்டம் வைகை அணையிலிருந்து வினாடிக்கு 1500 கன அடி தண்ணீர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பேரணை வழியாக மதுரைக்கு செல்கிறது. இதனால் நிலக்கோட்டை வட்டார பொதுப்பணித்துறையினர் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் பேரணையில், ஆற்றில், குளிக்கவோ இறங்கவோ தடை விதிக்கப்பட்ட நிலையில் வெளியூரிலிருந்து […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!