கோடை விடுமுறையையொட்டி நெல்லை-பெங்களூரு இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கம்..

தமிழகத்தில் கோடை விடுமுறையையொட்டி பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு விடுமுறையை கழிப்பதற்காக சென்று வருகின்றனர்.இதனையொட்டி அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் தென்னக ரெயில்வே சார்பிலும் பல்வேறு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் நெல்லையில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு வாராந்திர சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது. 06045 மற்றும் 06046 ஆகிய எண்களுடன் இயங்கும் இந்த சிறப்பு ரெயில் 2 ஏசி பெட்டிகள், 10 பொதுப் பெட்டிகள் உள்பட 18 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.வாரந்தோறும் […]

தமிழ்நாட்டு மக்களை நேர்மையற்றவர்கள் என்று கூறுவது, தமிழ்நாட்டை அவமதிப்பது அல்லவா?. தமிழர்கள் மீது மோடிக்கு இத்தனை காழ்ப்பும் வெறுப்பும் ஏன்?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி..

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தேர்தல் பரப்புரையில் நாகரிக வரம்புகளை மீறாமல், கொள்கை, கோட்பாடுகள், செயல்திட்டங்கள் மீது ஆக்கப்பூர்வமான விமர்சனங்களையும் தங்களது ஆட்சியின் சாதனைகளையும் முன்வைத்து வாக்கு சேகரிப்பதில் முன்னுதாரணமாகத் திகழ வேண்டிய பிரதமர் நரேந்திர மோடி, வெறுப்புப் பேச்சுகளின் மூலம் மக்களிடையே பகை உணர்வையும் மாநிலங்களுக்கு இடையே குரோதத்தையும் தூண்டி வருவது நாட்டுக்கு நல்லதல்ல. முன்னதாக, உத்தரபிரதேச மக்களை இழித்தும், பழித்தும் தென்னிந்தியர்கள் பேசுவதாகத் தமிழ்நாட்டு மக்கள் மீது அபாண்டமான பழியைச் சுமத்தி இருந்தார். […]

கீழக்கரை நகராட்சி நிர்வாகத்திற்கும் , பொதுமக்களுக்கும் எஸ்டிபிஐ கட்சி முன்னாள் தொகுதி பொருளாளர் வேண்டுகோள் !

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி நிர்வாகத்திற்கு எஸ்டிபிஐ கட்சியின் ராமநாதபுரம் முன்னாள் தொகுதி பொருளாளர் கீழை அஸ்ரப் வேண்டுகோள் விடுத்துள்ளார் அவர் கூறியதாவது : கடந்த சில நாட்களுக்கு முன்பாக கீழக்கரை நகராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வீடியோ காட்சிகள் வெளியிட்டது. அதனை கீழக்கரை மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வாழ்த்துக்களையும் வரவேற்பையும் தெரிவித்தனர். அதேபோல் வீடியோ காட்சியாக மட்டும் இல்லாமல் தினந்தோறும் கீழக்கரை நகராட்சி நிர்வாக அதிகாரிகள் நேரடியாக கடைகளுக்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும் […]

ஈரான் அதிபர் மறைவையொட்டி இந்தியா முழுவதும் துக்கம் அனுசரிப்பு! அரைக்கம்பத்தில் பறக்கும் தேசிய கொடிகள்..

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, அஜர்பைஜான் எல்லை அருகே உள்ள அணைகள் திறப்பு விழா நிகழ்வுக்கு சென்றிருந்தார். இந்த நிகழ்வுகளில் பங்கேற்றுவிட்டு திரும்பும் போது ரைசியின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.ஈரான் அதிபர் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் என்ன ஆனது என பல மணிநேரம் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் ஆளில்லா டிரோன்கள் மூலம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது உறுதி செய்யப்பட்டது. பின்னர் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஹுசைன் அமீர்-அப்துல்லாஹியான் உள்ளிட்ட […]

படுகொலை செய்யப்பட்ட தீபக் ராஜா! கொலையாளிகளை பிடிக்க தனிப்படை தீவிரம்..

படுகொலை செய்யப்பட்ட தீபக் ராஜா! கொலையாளிகளை பிடிக்க தனிப்படை தீவிரம்.. ஆறு பேர் கொண்ட கும்பலால் பட்டப்பகலில் அறிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட தீபக் ராஜா வை கொலை செய்த கொலையாளிகளை பிடிப்பதற்காக திருநெல்வேலி மாநகர காவல் துறை சார்பில் 4 தனிப்படையும் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் ஒரு தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளதாக திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாநகர பாளையங்கோட்டை உதவி ஆணையர் பிரதீப் தலைமையில் கொலையாளிகள் பற்றிய விசாரணையும் கொலையாளிகளை […]

ஈரான் நாட்டின் இடைக்கால அதிபராக முகமது மொக்பர் நியமனம்..

ஈரான் நாட்டின் இடைக்கால அதிபராக முகமது மொக்பர் நியமனம்.. மேற்காசிய நாடான ஈரானின் அதிபர் இப்ராஹிம் ரைசி, அஜர்பைஜான் நாட்டின் ஹராஸ் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையை திறக்கும் நிகழ்ச்சிக்காக நேற்று ஹெலிகாப்டரில் சென்றார். அந்நாட்டு பயணத்தை முடித்துவிட்டு இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் மூலம் ஈரான் திரும்பிக்கொண்டிருந்தார். அவருடன் ஈரான் வெளியுறவு அமைச்சா் ஹொசைன் அமிரப்டோலாஹியன், மாகாண ஆளுநா் மற்றும் அதிகாரிகளும் உடன் பயணித்தனர். அப்போது, அசர்பைஜானை ஒட்டியுள்ள ஈரானின் ஜல்பா நகரில் அவர் பயணித்த ஹெலிகாப்டர் […]

கேரள மாநிலத்தை ஆளும் கம்யூனிஸ்ட் அரசு தமிழ்நாடு அரசின் ஒப்புதலின்றி முறைகேடாகத் தடுப்பணைகளைக் கட்டிவருவது அப்பட்டமான நதிநீர் சட்ட விதிமீறலாகும்!- சீமான் ‘சீற்றம்’..

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள சிலந்தி ஆற்றின் குறுக்கே அம்மாநில அரசு தடுப்பணை கட்டிவருகின்ற செய்தியறிந்து தமிழக வேளாண் பெருங்குடி மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டி அமராவதி அணைக்கு வரும் நீரைத் தடுக்க கேரள அரசு முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது.தமிழ்நாட்டின் கரூர், திருப்பூர் மாவட்டங்களின் நீர்த்தேவையை நிறைவு செய்யும் அமராவதி ஆறு, காவிரி ஆற்றின் நீர் வரத்தை அதிகரிக்கும் முக்கிய […]

கள்ள மவுனம் எடப்பாடி பழனிசாமிக்கு கைவந்த கலை!- அமைச்சர் துரை முருகன் அறிக்கை..

கேரள, கர்நாடக அரசுகள் காவிரி வடிநிலத்தில் மேற்கொள்ளும் சிறுபாசனம் பற்றிய விவரங்களைக் கண்காணிக்க வேண்டும் எனக் காவிரி நீர்மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் ஏற்கனவே தமிழ்நாடு அரசு வலியுறுத்தியிருக்கிறது நீர்வளத்துறை அமைச்சரும் கழகப் பொதுச்செயலாளருமான துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:- கேரள அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதன் மூலம் அமராவதி அணைக்கு வரும் நீரைத் தடுக்கும் முயற்சி பற்றி  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி  பழனிசாமி  தெரிவித்துள்ளார். “கள்ள மவுனம்” எதிர்க்கட்சித் தலைவருக்குக் கைவந்த […]

‘கோகைன்’ போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் நடிகர் விஜய் , தனுஷ் , நடிகை திரிஷா , ஆண்ட்ரியா ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி வீரலட்சுமி புகார்..

கோகைன்’ போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் நடிகர் விஜய் , தனுஷ் , நடிகை திரிஷா , ஆண்ட்ரியா உள்ளிட்ட திரைப் பிரபலங்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தி கைது செய்ய வேண்டுமென உள்துறை செயலாளர் அலுவலகத்தில் தமிழர் முன்னேற்றப்படை வீரலட்சுமி புகார்.. நடிகர் விஜய் நடத்திய கேளிக்கை நிகழ்ச்சியில் போதைப் பொருளான ‘கோக்கைன் ‘ பரிமாறப்பட்டு அவற்றை தனுஷ் , த்ரிஷா , ஆண்ட்ரியா உள்ளிட்டோர் அருந்தியாதாக பின்னணிப் பாடகி சுசித்ரா கூறிய குற்றச்சாட்டு குறித்து விசாரணை […]

திண்டுக்கல் அருகே ஆட்டோவில் 30 கிலோ கஞ்சா கடத்திய 6 வாலிபர்களை அதிரடியாக கைது செய்த மது விலக்கு போலீசார்..

திண்டுக்கல் அருகே ஆட்டோவில் 30 கிலோ கஞ்சா கடத்திய 6 வாலிபர்களை அதிரடியாக கைது செய்த மது விலக்கு போலீசார்.. திண்டுக்கல் மதுவிலக்கு போலீஸ் டி.எஸ்.பி.சுந்தரபாண்டியன் மேற்பார்வையில் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் திண்டுக்கல் வடமதுரையை அடுத்த அய்யலூர் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்த திண்டுக்கல் பாறை மேட்டு தெருவை சேர்ந்த சுப்பிரமணி(48) மதுபாலன்(31), நாகல் நகர் மதன்குமார்(31), ரவுண்ட் ரோடு விநாயகர் […]

விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு முறை பற்றிய நிகழ்ச்சி !  

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே மண்டபம் ஊராட்சி  ஒன்றியத்திற்கு உட்பட்ட சாலை வலசை கிராமத்தில் தேனீ வளர்ப்பு முறைகள் பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் மதுரை வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவி அ. ஆஷிகா விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார். இதில் தேனீ வளர்ப்பிற்கு குறைந்த நேரம், குறைந்த பணம் மற்றும் கட்டமைப்பு போன்றவை மூலதனமாக தேவைப்படுகிறது. குறைந்த மதிப்புள்ள விவசாய நிலங்களில் தேன் மற்றும் மெழுகினை தயாரிப்பது எளிதாகும். தேனீ வளர்ப்பதால் தென்னை, பாக்கு […]

5ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்- வாக்குப்பதிவு நிறைவு..

பாராளுமன்ற தேர்தலில் 5-ம் கட்ட வாக்குப்பதிவு 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது.5-ம் கட்டமாக இன்று நடைபெற்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் 14, மகாராஷ்டிராவில் 13, மேற்கு வங்கத்தில் 7, பீகாா், ஒடிசாவில் தலா 5, ஜார்க்கண்டில் 3, ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் தலா ஒரு தொகுதி அடங்கி உள்ளன. இந்த தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு […]

மதுரையில் தலைகுப்புற கவிழ்ந்த கார்..

மதுரையில் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த கார் சென்டர் மீடியத்தில் மோதி தலை குப்புற கவிழுந்து விபத்து.. மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் செல்லும் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த கார், சென்டர் மீடியத்தில் மோதி தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மதுரை பொன்மேனி பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர் தனியார் டாக்ஸி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல் பணி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது ஆரப்பாளையம் பேருந்து நிலையம் சாலையில் […]

வைகை ஆற்றில் ஆபத்தை அறியாமல் குளிக்கும் பொதுமக்கள்..

சோழவந்தான் அருகே வைகை ஆற்றில் ஆபத்தான நிலையில் குளிக்கும் பொதுமக்கள்.. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் சாய்பாபா கோவில் பகுதியில் வைகை ஆற்றில் ஆபத்தான நிலையில் குளித்து வருகின்றனர். தமிழகத்தில் கனமழை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் நிலையில் ஆங்காங்கே உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் பெருகி வருகிறது. இந்த நிலையில் விவசாயத்திற்காக வைகை அணையில் திறந்து நீரானது ஆற்றில் வெள்ளம் போல் வந்து கொண்டுள்ளது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள திருவேடகம் […]

மண் லாரியை மறித்து பிரச்சனையில் ஈடுபட்ட வழக்கு: லாரி ஓட்டுனர் உட்பட 5 நபர்கள் மீது வழக்கு பதிவு; 3 பேர் கைது..

மண் லாரியை மறித்து பிரச்சனையில் ஈடுபட்ட வழக்கு: லாரி ஓட்டுனர் உட்பட 5 நபர்கள் மீது வழக்கு பதிவு; 3 பேர் கைது.. கடையம் அருகே மண் லாரியை மறித்து பிரச்சனையில் ஈடுபட்ட வழக்கில் லாரி ஓட்டுனர் உட்பட 5 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 3 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். கடையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாலங்கட்டளை அருகே அமைந்துள்ள குவாரியில் இருந்து டிப்பர் லாரிகளில் மண் லோடு ஏற்றி கொண்டு […]

தோனியை ஆர்சிபி அவமதித்துவிட்டது! விராட் கோலி செய்த மெகா தவறு!இங்கிலாந்து வீரர் குற்றச்சாட்டு..

தோனியை ஆர்சிபி அவமதித்துவிட்டது! விராட் கோலி செய்த மெகா தவறு!இங்கிலாந்து வீரர் குற்றச்சாட்டு.. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய கடைசி லீக் ஆட்டத்தில் ஆர்சிபியிடம் தோல்வியை தழுவியது. இந்த போட்டி முடிவடைந்த பிறகு ஆர் சி பி அணியினருக்கு, தோனி கை கொடுக்கவில்லை என்று ஒரு புகார் எழுந்தது. ஆனால் உண்மை என்னவென்று தற்போது வெளியாகி இருக்கிறது. சிஎஸ்கே அணி தங்களுடைய கடைசி ஆட்டத்தில் தோல்வியை தழுவியதன் மூலம் பிளே ஆப் […]

அம்மைய நாயக்கணூர் பயணிகள் நிழற்குடை: இப்ப விழுமோ.? எப்ப விழுமோ.? அச்சத்தில் பயணிகள்! அலட்சியத்தில் அதிகாரிகள்..

அம்மைய நாயக்கணூர் பயணிகள் நிழற்குடை: இப்ப விழுமோ.? எப்ப விழுமோ.? அச்சத்தில் பயணிகள்! அலட்சியத்தில் அதிகாரிகள்.. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே அம்மையநாயக்கனூர் பேருந்து நிறுத்தத்தில் இடிந்துவிழும் நிலையில் உள்ள பயணிகள் நிழற்குடையை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை. நிலக்கோட்டை அருகே அம்மையநாயக்கனூர் வழியாக வத்தலகுண்டு , கொடைக்கானல், மதுரை, திண்டுக்கல் ,தேனி, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் செல்கின்றன. அதுமட்டுமின்றி அம்மையநாயக்கனூர் பேரூராட்சியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்கும் இங்கிருந்து பேருந்துகள் சென்று […]

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் உடல் மீட்பு..

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் உடல் மீட்பு.. இப்ராஹிம் ரைசியுடன் பயணம் செய்த வெளியுறவு அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் உடல்களும் மீட்பு. விபத்து நடந்த அசர்பைஜானை ஒட்டியுள்ள ஜல்பா நகர் மலைப்பகுதியில் இருந்து உடல்கள் மீட்பு. ஹெலிகாப்டரில் பயணம் செய்த அனைவரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டதாக ஈரான் அறிவிப்பு. ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் அசர்பைஜானை ஒட்டியுள்ள ஜல்பா நகரில் நேற்று விபத்துக்குள்ளானது. முற்றிலும் உருக்குலைந்த நிலையில் ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டது.

கோடை வெயிலை அடித்து நொறுக்கிய தொடர் கன மழை! அவதியும் மகிழ்ச்சியும் கலந்து அனுபவிக்கும் தமிழ்நாடு மக்கள்..

தென்தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதனால், இன்று முதல் (வியாழக்கிழமை) 23-ந்தேதி வரை தமிழகத்தில் தென் மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.இதில் குறிப்பாக இன்று விருதுநகர், திருப்பூர், கோவை, நீலகிரி மற்றும் திண்டுக்கல் […]

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்து: முற்றிலும் எரிந்த நிலையில் உடல்கள்: அடையாளம் காண்பதில் சிக்கல்..

விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணம் செய்த ஹெலிகாப்டர் முற்றிலும் எரிந்து சேதம். பயணம் செய்த அனைவரின் உடல்களும் கரிக்கட்டை போல முழுவதுமாக எரிந்து போய் இருப்பதால் உடல்நிலை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!