மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று முன்தினம் கால் தடுமாறி விழுந்ததில் இடது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை அறிந்த, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னை தொலைபேசியில் அழைத்து வைகோ உடல்நிலை குறித்து விசாரித்தார்கள். நாளை வைகோவை அறுவை சிகிச்சைக்குத் தயார்படுத்த இருப்பதால் அறுவை சிகிச்சை முடிந்து மூன்று நாள் கழித்து வீடு திரும்பிய பிறகு வந்து சந்திப்பதாக முதல்-அமைச்சர் […]
Category: செய்திகள்
உசிலம்பட்டி அருகே நள்ளிரவில் மின் கசிவு ஏற்பட்டதில் கார் பழுது பார்க்கும் கடை தீப்பிடித்து எரிந்து நாசம். ,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பொட்டல்பட்டி கிராமத்தில் சங்கம்பட்டியைச் சேர்ந்த மலைராஜன் என்பவர் கார் மெக்கானிக் கடை வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு மின்தடை ஏற்பட்ட நிலையில் நள்ளிரவு மின்சாரம் வந்த நிலையில் பவர் அதிகம் வந்ததால் கடையில் இருக்கும் வயர் ஸ்டார்ட் ஆகி கடையில் தீ பரவியது.இதில் கடைக்குள் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.காலையில் வழக்கம் போல் கடையைத்திறந்த மலைராஜன் பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி நாசமானதைக்கண்டு திடுக்கிட்டார் .இது குறித்து […]
லேப்டாப்புக்கு சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கி பயிற்சி பெண் மருத்துவர் பரிதாபமாக உயிரிழந்தார்..
லேப்டாப்புக்கு சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கி பயிற்சி பெண் மருத்துவர் பரிதாபமாக உயிரிழந்தார்.. நாமக்கல் மாவட்டம் கீழ்வேளூர் பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் சரணிதா (32). கடந்த 2016 ஆம் ஆண்டு டாக்டர் உதயகுமார் என்பவரிடம் திருமணம் ஆகி 5 வயதில் குழந்தை உள்ளது. உதயகுமார் கோயம்புத்தூரில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சரணிதா மேற்படிப்பு (எம்.டி) இறுதி ஆண்டை முடித்து 25 நாட்கள் பயிற்சிக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மனநல ஆஸ்பத்திரியில் பயிற்சி […]
உக்கடம் மீன் மார்க்கெட்டில் பெண்ணிடம் சங்கிலி பறிப்பு : சி.சி.டி.வி. காட்சிகளைக் கொண்டு கொள்ளையனுக்கு வலைவீச்சு..
உக்கடம் மீன் மார்க்கெட்டில் பெண்ணிடம் சங்கிலி பறிப்பு : சி.சி.டி.வி. காட்சிகளைக் கொண்டு கொள்ளையனுக்கு வலைவீச்சு.. கோவை உக்கடம் அருகே உள்ள லாரி பேட்டையில் ஒருங்கிணைந்த மீன் மார்க்கெட் உள்ளது. இந்த மீன் மார்க்கெட்டிற்கு கோவையில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பம் குடும்பமாக மீன்கள் வாங்க வருவது வழக்கம். குறிப்பாக, ஞாயிற்றுக் கிழமைகளில் அதிகாலை முதல் மதியம் வரை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த மீன் மார்க்கெட்டிற்கு வருவர். இந்த நிலையில், ராமநாதபுரம் பகுதியில் வசித்து வரும் […]
தஞ்சையில் தானியங்கி சானிடரி நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் வழங்கும் விழா !
தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் திருச்சி மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் , திருச்சி கே கே நகரில் உள்ள மாநகர ஆயுதப்படை அலுவலகம் , கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளிட்ட இடங்களில் முதல்கட்டமாக தானியங்கி சானிடரி நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன . இதற்கான தொடக்க விழா திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது . இதில் திருச்சி மாநகர காவல் ஆணையர் ந. காமினி, ரிப்பன் வெட்டி சானிடரி நாப்கின் […]
தஞ்சையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி !
தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் தஞ்சை மீனாட்சி மருத்துவமனையைச் சார்பாக 50-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பொதுமக்களுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை உணர்த்தவும் உயிர் காக்கும் முதலுதவி பற்றியும் விழிப்புணர்வை. திடீர் குழு பிளாஸ் மாப் நடனமாடி விளக்கமளித்தனர். மேலும் இந்நிகழ்ச்சியை கிளீன் தஞ்சை இயக்கத்தின் தலைவர் டாக்டர் ராதிகா மைக்கேல் தொடங்கி வைத்தார். மாலையில் பொது மக்களுக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் கருவிகள் காட்சிப்படுத்தி விளக்கமளித்தனர். இந்த […]
சரத்குமார் நடித்த மாயி, திவான் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சூர்ய பிரகாஷ் மறைவு! சரத்குமார் சார்பாக நிர்வாகிகள் மலரஞ்சலி..
சரத்குமார் நடித்த மாயி, திவான் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சூர்ய பிரகாஷ் மறைவு! சரத்குமார் சார்பாக நிர்வாகிகள் மலரஞ்சலி.. நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியாகி கவனம் ஈர்த்த ‘மாயி’ படத்தின் இயக்குநர் சூர்ய பிரகாஷ் மாரடைப்பால் காலமானார். 1996-ஆம் ஆண்டு ராஜ்கிரண் நடிப்பில் வெளியான ‘மாணிக்கம்’ படத்தை இயக்கி திரையுலகில் அறிமுகமான சூர்ய பிரகாஷ், பெண் ஒன்று கண்டேன், திவான், அதிபர், வருஷ நாடு ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவரது மரணத்திற்கு சரத்குமார் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் […]
ஆந்திர மாநிலத்தில் இரு வேறு கொடூர விபத்து: தமிழ்நாட்டை சேர்ந்த 8 பேர் பலி..
ஆந்திராவில் நடந்த இருவேறு விபத்துகளில் தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேர் உள்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சுவாமிநாதன் என்பவர் தனது குடும்பத்துடன் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் திண்டுக்கல் திரும்பிய போது கிருஷ்ணா மாவட்டம் பாபுலபாடு மண்டலம் கொடுருபாடு என்ற இடத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதியது. இந்த விபத்தில் காரில் பயணித்த சுவாமிநாதன்(40), ராஜேஷ் (12), […]
நடிகர் சரத்குமார் நடித்த மாயி, திவான் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சூர்ய பிரகாஷ் காலமானார்: இறுதி சடங்கு அவரது சொந்த ஊரான நிலக்கோட்டை அருகே நடைபெற உள்ளது!-சரத்குமார் வேதனை..
நடிகர் சரத்குமார் நடித்த மாயி, திவான் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சூர்ய பிரகாஷ் காலமானார்: இறுதி சடங்கு அவரது சொந்த ஊரான நிலக்கோட்டை அருகே நடைபெற உள்ளது!-சரத்குமார் வேதனை.. நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியாகி கவனம் ஈர்த்த ‘மாயி’ படத்தின் இயக்குநர் சூர்ய பிரகாஷ் மாரடைப்பால் காலமானார். 1996-ஆம் ஆண்டு ராஜ்கிரண் நடிப்பில் வெளியான ‘மாணிக்கம்’ படத்தை இயக்கி திரையுலகில் அறிமுகமான சூர்ய பிரகாஷ், பெண் ஒன்று கண்டேன், திவான், அதிபர், வருஷ நாடு ஆகிய […]
மேலகரம் அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி; சங்கரன்கோவில் எம்எல்ஏ பங்கேற்பு..
மேலகரம் அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி: சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா பங்கேற்பு.. தென்காசி மாவட்டம் மேலகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மயிலேரி தலைமையில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் இப்பள்ளியின் முன்னாள் மாணவரும், தற்போதைய சங்கரன்கோவில் சட்ட மன்ற உறுப்பினருமான ராஜா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜகோபால், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் வள்ளியம்மாள் முன்னாள் தலைமை ஆசிரியர் ஸ்ரீநிவாசன் மற்றும் முன்னாள் பள்ளி […]
நெல்லை-கடையம் பேருந்துகள் சரியாக இயக்கப்பட வேண்டும்; சமூக நல்லிணக்க கூட்டமைப்பு வலியுறுத்தல்..
நெல்லை – கடையம் பேருந்துகள் சரியாக இயக்கப்பட வேண்டும்; சமூக நல்லிணக்க கூட்டமைப்பு வலியுறுத்தல்.. நெல்லை-கடையம் பேருந்துகள் சரியாக இயக்கப்பட வேண்டும் என சமூக நல்லிணக்க கூட்டமைப்பின் பேருந்து மற்றும் பயணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் கடையம் அருகிலுள்ள முதலியார் பட்டியில், சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில், பேருந்துகள் மற்றும் பயணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நெல்லை முதல் கடையம் வரையிலான பேருந்துகள் முறையாக இயக்கப்படவில்லை என்று தொடர் […]
பார்ட் கல்வி மையத்தில் கோடைகால பயிற்சி வகுப்பு நிறைவு; சிறப்பு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கல்..
புளியங்குடி பார்ட் கல்வி மையத்தில் கோடைகால பயிற்சி வகுப்பு நிறைவு; சிறப்பு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கல்.. தென்காசி மாவட்டம் புளியங்குடி பார்ட் பயிற்சி மையத்தின் சார்பாக நடத்தப்பட்ட கோடைகால சிறப்பாக பயிற்சி நிறைவடைந்து மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் சிறப்பு பரிசு அத்துடன் நினைவு பரிசும் வழங்கப்பட்டது. 6 பள்ளிகளில் படித்து கொண்டிருக்கும் 70 மாணவ மாணவியர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு ஒருமாத காலம் ஆங்கிலம் பேசுதல், ஆங்கில இலக்கணம் மற்றும் அடிப்படை உரிமையியல் […]
தென்காசி மாவட்டத்தில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் குழந்தைகள் சேர்க்கை; மாவட்ட கலெக்டர் தகவல்..
தென்காசி மாவட்டத்தில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை; மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு.. தென்காசி மாவட்டத்தில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவு நிலை வகுப்பில் (LKG/1Std) சேர்க்கை நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் அறிவித்துள்ளார். இது குறித்த செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் வரும் 28.05.2024 அன்று முற்பகல் 09.00 மணிமுதல் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டம் […]
ஐதராபாத்தை வீழ்த்தி ஐபிஎல் கோப்பையை தட்டி தூக்கியது கொல்கத்தா..
17-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன் ரைசர்ஸ் ஐதராபாத் மோதின. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, அந்த அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா களமிறங்கினர். முதல் ஓவரில் ஸ்டார்க் பந்து வீச்சில் 2 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அபிஷேக் சர்மா போல்ட் முறையில் அவுட் ஆனார். அடுத்த ஓவரை வைபவ் அரோரா வீசிய நிலையில் மற்றொரு […]
பருத்தியில் விதை நேர்த்தி குறித்த விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி !
இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியத்திற்குட்பட்ட பெருங்குளம் கிராமத்தில் கிராமப்புற வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பருத்தியில் விதை நேர்த்தி குறித்து அதன் செயல்முறை விளக்கத்தை மதுரை வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவி சு.ஆர்த்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார். மேலும் பருத்தி விதைகளின் முளைக்கும் திறனை அதிகரிக்கவும், விதைகளை பிரிக்கவும் விதை நேர்த்தி செய்யப்படுவது பற்றியும் செயல்முறை விளக்கம் அளித்தார்.
குயவன்குடியில் விவசாயிகளுக்கான கண்காட்சி !
ராமநாதபுரம் அருகே குயவன்குடியில் வேளாண் அறிவியல் மையத்தில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை என்ற தலைப்பில் விவசாயிகளுக்கான கண்காட்சி ராமநாதபுரம் வேளாண்மை இணை இயக்குனர் கண்ணையா, தோட்டக்கலை உதவி இயக்குனர் ஆறுமுகம் மற்றும் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் தலைவர் வள்ளல் கண்ணன் ஆகியோர் தலைமையில் துவங்கி வைக்கப்பட்டு கண்காட்சி நடைபெற்றது . இதில் திருப்புல்லாணி வட்டாரத்தில் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள மதுரை வேளாண்மைக் கல்லூரி இளங்கலை இறுதியாண்டு மாணவிகளான சூரியலட்சுமி. சுவாதி. தாமரைச்செல்வி. சிந்து […]
ஜூன் முதல் வாரம் தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படுமா..?
ஜூன் முதல் வாரம் தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படுமா..? தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதியே முடிந்து விட்டாலும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக வாக்குப் பதிவுகள் நடைபெற்று வருகிறது.இதில் தமிழ்நாட்டில் தி.மு.க., காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியே அதிக தொகுதிகளை கைப்பற்றும் என தெரிகிறது. ஆனால் பிரமாண்ட்ட வெற்றிக்கான வாய்ப்புகள் இருந்தும் சில தொகுதிகளில் முக்கிய தி.மு.க. நிர்வாகிகளே சரியாக வேலை செய்யாமல் உள்ளடி வேலை செய்ததாக கட்சி மேலிடத்துக்கு புகார்கள் சென்றுள்ளது.இதனால் தி.மு.க. […]
ஏர்வாடி தர்காவில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு !
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு என்னும் மத நல்லிணக்க திருவிழாவை முன்னிட்டு வெளி மாநிலங்களிலிருந்தும் மாவட்டங்களிலிருந்தும் யாத்திரைகள் வருகை புரிவதால் அங்கு விற்பனை செய்யக்கூடிய உணவுக் கடைகள் தின்பண்டம் கடைகள் டீக்கடைகள் உட்பட அனைத்து கடைகளையும் உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில் ராஜ்குமார், ராமநாதபுரம் உணவு பாதுகாப்பு அலுவலர் தர்மர் ,கீழக்கரை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ் ஆகியோர் இணைந்து ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து விற்பனையாளர்களிடம் தினமும் கடைகள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள […]
உலக சாதனை விருது பெற்ற 4 வயது சிறுமி; யூனியன் சேர்மன் பரிசுகள் வழங்கி பாராட்டு..
உலக சாதனை விருது பெற்ற 4 வயது சிறுமி; ஆலங்குளம் யூனியன் சேர்மன் பரிசுகள் வழங்கி பாராட்டு.. தென்காசி மாவட்டத்தில் உலக சாதனை விருதுகள் பெற்று தமிழ்மொழிக்கும் பெருமை சேர்த்த 4 வயது சிறுமியை ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் நேரில் அழைத்து பரிசுகள் வழங்கி பாராட்டினார். தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள மாறாந்தை கிராமத்தை சேர்ந்த மகாராஜா சுபா தம்பதியினர் மகள் அபர்ணா. 4 வயதான இந்த சிறுமிக்கு, பெற்றோர் சிறு வயது முதல் […]
விசாரணைக்கு வந்தவரிடம் 95 பவுன் நகையை பெற்று அடகு வைத்த விவகாரம்:திருமங்கலம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்!டி.ஐ.ஜி.ரம்யாபாரதி அதிரடி..
விசாரணைக்கு வந்தவரிடம் 95 பவுன் நகையை பெற்று அடகு வைத்த விவகாரம்:திருமங்கலம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்!டி.ஐ.ஜி.ரம்யாபாரதி அதிரடி.. திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் கீதா (வயது 50). திருமங்கலத்தை சேர்ந்த ராஜேஷ் (33) இவரது மனைவி அபினயா. இவர்களுக்கு திருமணம் ஆகி ஓராண்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வழக்கு விசாரணை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடைபெற்று வருகிறது. இன்ஸ்பெக்டர் கீதா, ராஜேஷ்-அபினயா தம்பதியிடம் விசாரணை நடத்தி […]