இடிந்துவிழும் நிலையிலுள்ள நீதிமன்ற கட்டிடத்திற்கு பதிலாக உடனடியாக மாற்று கட்டிடம் வழங்க வேண்டும், நிலக்கேட்டை வட்டார வழக்கறிஞர் சங்கத்தினர் கோரிக்கை.. தகுதியற்றதாக சான்றளிக்கப்பட்ட பழுதடைந்து இடிந்துவிழும் நிலையிலுள்ள நீதிமன்ற கட்டிடத்திற்கு பதிலாக உடனடியாக மாற்று கட்டிடம் வழங்க வேண்டும், நிலக்கேட்டை வட்டார வழக்கறிஞர் சங்கத்தினர் கூட்டத்தில் தீர்மானம். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள வட்டார வழக்கறிஞர் சங்க அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் தலைவர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது,கூட்டத்திற்கு பொறுப்பாளர் கணேசன் முன்னிலை வகித்தார்,பொறுப்பாளர் […]
Category: செய்திகள்
தமிழகத்தில் துரோகம் செய்தவர்களுக்கு நோபல் பரிசு கொடுப்பதாக இருந்தால் அது எடப்பாடி பழனிசாமிக்குத்தான்; முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் காட்டம்…
துரோகம் செய்வதில் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருக்கிறார். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள தன்னுடைய கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், அதிமுக வலிமையுடன் இருக்க வேண்டும் என்பதற்காவே, என்னுடைய கருத்தை சொன்னேன. இன்றும், அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென்ற நோக்கத்தில்தான் தேவர் ஜெயந்தியில் பங்கேற்றேன். அதிமுக புத்துயிர் பெற்று தமிழகத்தில் நல்லாட்சி ஏற்படுத்தப்பட வேண்டும். ஜெயலலிதா அவர்கள் தமிழகம் […]
25-26 சட்டமன்ற அறிவிப்பு எண் 41 ன் படி தொடுதிரை வசதியுடன் கூடிய தகவல் பெட்டி திறப்பு..
25-26 சட்டமன்ற அறிவிப்பு எண் 41 ன் படி தொடுதிரை வசதியுடன் கூடிய தகவல் பெட்டி திறப்பு.. திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்கள் அருகாமையில் உள்ள திருக்கோயில்களை அறிந்து கொள்வதற்கு வசதியாக தொடுதிரை வசதியுடன் கூடிய தகவல் பெற்று கீழ்க்கண்ட 10 திருக்கோவில்களில் அமைக்கப்படும்என்ற அறிவிப்பின்படி 10 திருக்கோவில்களில் தொடுதிரை தகவல்பெட்டி வசதி செய்யப்பட்டுள்ளது.இன்று காலை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவிலில் தொடுதிரை வசதியுடன் கூடிய தகவல் பெட்டியை பக்தர்களின் பயன்பாட்டிற்கு […]
நெல்லை, மதுரை, சென்னை உட்பட தமிழகத்தில் வரலாறு காணாத வெப்பநிலை பதிவாக வாய்ப்பு!
நெல்லை, மதுரை, சென்னை உட்பட தமிழகத்தில் வரலாறு காணாத வெப்பநிலை பதிவாக வாய்ப்பு! தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை காலம் ஆனால் கிழக்கு திசை காற்று முற்றிலும் தடைபட்டு மேற்கு திசை காற்று வீசுகிறது. மேலும் வடகிழக்கு பருவமழை தொய்வு நிலையை அடைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் வெப்பநிலை உயர்ந்துள்ளது. பருவமழை காலத்தில் வெப்பநிலை உயர காரணம் என்ன? கிழக்கு திசை காற்று தடைபட்டு தற்போது வறண்ட மேற்கு திசை காற்று வீசுகிறது மேலும் கடல் காற்று உள் […]
ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வாக்குசாவடி நிலை முகவர்களுக்கான (பி.எல்.ஏ-2) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடைபெற்றது..
ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வாக்குசாவடி நிலை முகவர்களுக்கான (பி.எல்.ஏ-2) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம். (எஸ்.ஐ.ஆர்) தொடர்பான பயிற்சி. மாவட்ட ஆட்சித் தலைவர் கலந்து கொண்டார். செம்பட்டி தனியார் திருமண மஹாலில், வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் வாக்குசாவடி நிலை முகவர்களுக்கான (பி.எல்.ஏ-2) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், (எஸ்.ஐ.ஆர்) தொடர்பான பயிற்சி நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, வாக்குசாவடி நிலை முகவர்களுக்கான (பி.எல்.ஏ-2) வாக்காளர் பட்டியல் சிறப்பு […]
தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 1, 2, 2a, 4 உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு சென்னையில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்..
தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 1, 2, 2a, 4 உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு சென்னையில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. 2025 நவம்பர் 2ஆம் தேதி பயிற்சி கட்டணம் ஏதும் இல்லாமல் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புப் பயிற்சி மையத்தில் வகுப்புகள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாரத்தின் இறுதி நாட்களில் நடைபெறும் இப்பயிற்சி வகுப்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏனைய அனைத்துப் பிரிவு மாணவர்களும் கலந்து கொண்டு பயிற்சி […]
சென்னை எண்ணூர் கடற்கரையில் கரை ஒதுங்கிய 4 இளம்பெண்கள் உடல்கள்..
சென்னை எண்ணூர் கடற்கரையில் கரை ஒதுங்கிய 4 இளம்பெண்கள் உடல்கள்.. சென்னை எண்ணூர் கடற்கரையில், கல்லூரி மாணவி உட்பட நான்கு பெண்களின் உடல்கள் ஒரே நேரத்தில், கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. நான்கு உடல்களையும் மீட்ட போலீசார், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். போலீஸாரின் முதற்கட்ட தகவலின்படி, உயிரிழந்தவர்களில் ஷாலினி (வயது -18) என்பவர் தனியார் கல்லூரி மாணவி என்றும், தேவகி பவானி காயத்ரி ஆகிய 3பேரும் ஜவுளிக்கடையில் பணியாற்றுபவர்கள் எனத் […]
சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கான விபத்து காப்பீடு திட்டம் கேரளா முழுவதும் விரிவாக்கம்.!
சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கான விபத்து காப்பீடு திட்டம் கேரளா முழுவதும் விரிவாக்கம்.! திருவாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் இது குறித்து தெரிவித்துள்ளதாவது. மண்டல மகர விளக்கு காலங்களில் சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் விபத்தில் மரணம் அடைந்தால் அவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் விபத்து காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் நடக்கும் விபத்துக்களில் இறக்கும் பக்தர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்ற விதிமுறை இருந்தது. இனி மண்டல […]
பராமரிப்பு பணிகள் காரணமாக மதுரை சென்னை எழும்பூர் தேஜஸ் எக்ஸ்பிரஸ், குருவாயூர் சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ்’ உள்பட 10 எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவையில் மாற்றம்.!
தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக மதுரை சென்னை எழும்பூர் தேஜஸ் எக்ஸ்பிரஸ், குருவாயூர் சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ்’ உள்பட 10 எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கோவை- நாகர்கோவில், நாகர்கோவில் – கோவை, -எக்ஸ்பிரஸ் ரெயில்கள், நாளை (1-ந்தேதி) மற்றும் 6, 8, 11, 13, 15 ஆகிய தேதிகளில் விருதுநகர், காரைக்குடி, திருச்சி, கரூர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதால், திருமங்கலம், மதுரை, கொடைக்கானல் ரோடு, […]
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து அதிரடி நீக்கம்; எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு..
அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை நீக்குவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கட்சியின் கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணாக செங்கோட்டையன் செயல்படுவதாகக் கூறி, அவரை அதிமுகவிலிருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்த அறிவிக்கையில், கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கழகத்தில் இருப்பவர்கள், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பது தெரிந்திருந்தும், அவர்களுடன் ஒன்றிணைந்து, கழகத்தின் […]
உசிலம்பட்டியில் இந்திய ஜனநாயக கட்சியின் ஆலோசனை கூட்டம்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வத்தலகுண்டு ரோட்டில் உள்ள இந்திய ஜனநாயக கட்சி அலுவலகத்தில் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில துணை அமைப்புச் செயலாளரும், மாவட்ட தலைவருமான பிரபுராஜா தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் வினோத் குமார், மாவட்ட துணைத்தலைவர் மகாராஜன் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்தும், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கட்சியின் வெற்றிக்கு பாடுபடுவது குறித்தும்,பூத் கமிட்டி அமைப்பது குறித்தும், தேர்தலில் வெற்றிக்கு எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டு ஆலோசனை […]
உசிலம்பட்டியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சார பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் உசிலம்பட்டி தொகுதி தலைவர் டி. சரவணகுமார் தலைமையில் வட்டார தலைவர்கள் சேடபட்டி புது ராஜா செல்லம் பட்டி செந்தில்குமார் முன்னாள் நகரத் தலைவர் ஓ.காந்தி சரவணன் முன்னாள் மாவட்டச் செயலாளர் எல் விஜய காந்தன் மாநில விஸ்வகர்ம இயக்கம் துணை தலைவர் பிச்சை ஆசாரி […]
பட்டிவீரன்பட்டி அருகே அரசு பேருந்து டயர் பஞ்சர், மாற்று டயர் இல்லாமல் பொதுமக்கள் அவதி!
பட்டிவீரன்பட்டி அருகே அரசு பேருந்து டயர் பஞ்சர், மாற்று டயர் இல்லாமல் பொதுமக்கள் அவதி! திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் இருந்து செம்பட்டிக்கு அரசு பேருந்து 40 பயணிகளுடன் பட்டிவீரன்பட்டி அருகில் சென்று கொண்டிருந்தபோது முன்பக்க டயர் பஞ்சர் ஆகி நடுரோட்டில் நின்றது. மாற்று டயர் இல்லாததால், பேருந்தில் இருந்த பயணிகள் அவ்வழியாக வந்த ஷேர் ஆட்டோ மற்றும் தனியார் பேருந்துகளில் ஏறி ஊர்களுக்கு சென்றனர். கிராமப்புறங்களுக்கு தரமான அரசு பேருந்துகளை வத்தலக்குண்டு பணிமனையில் இருந்து இயக்க சம்பந்தப்பட்ட […]
நிலக்கோட்டையில் கேரளாவைச் சேர்ந்த, பூ ஏற்றுமதியாளர் வீட்டில் கேரளாவைச் சேர்ந்த வருமான வரித்துறையினர் சோதனை.
நிலக்கோட்டையில் கேரளாவைச் சேர்ந்த, பூ ஏற்றுமதியாளர் வீட்டில் கேரளாவைச் சேர்ந்த வருமான வரித்துறையினர் சோதனை. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை மெகாசிட்டியில் வசித்து வருபவர் முகமது அலி (52), கேரளாவைச் சேர்ந்த இவர், கடந்த சில ஆண்டுகளாக நிலக்கோட்டையில் வசித்து வருகிறார். இவர், நிலக்கோட்டையில் இருந்து பூக்களை விலைக்கு வாங்கி, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். இவர், வசிக்கும் நிலக்கோட்டை வீட்டில் கேரளா பதிவு எண் கொண்ட 4-கார்களில் […]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு..
தமிழகம், புதுச்சேரியில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, கோவை மாவட்டம் சின்னக்கல்லார் பகுதியில், 6 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, கோவை மாவட்டம் சோலையார், வால்பாறை, நீலகிரி மாவட்டம் செருமுள்ளி ஆகிய இடங்களில் தலா, 3 செ.மீ., மழை பெய்துள்ளது. மத்திய கிழக்கு அரபிக் கடலில் நிலவிய காற் றழுத்த தாழ்வு மண்டலம், அதே பகுதியில் […]
இவர்கள் எல்லாம் திமுகவின் B டீம்! எடப்பாடி பழனிச்சாமி பேச்சு..
அதிமுகவில் இருந்தபோதே ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன் மூவரும் குழி பறித்ததால்தான் வெற்றிவாய்ப்பை இழந்தோம். இப்படிப்பட்ட துரோகிகளால்தான் 2021ல் எங்களால் ஆட்சிக்கு வரமுடியவில்லை. திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று ஓபிஎஸ் சில தினங்களுக்கு முன்பு கூறினார். உண்மையான அதிமுக தொண்டர் வாயில் இருந்து இப்படியொரு வார்த்தை வருமா? அவருடன் எப்படி சென்று மீண்டும் இணைய முடியும்? இவர்களெல்லாம் திமுகவின் B டீமாக செயல்படுகிறார்கள், என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சசிகலா, செங்கோட்டையன், ஓபிஎஸ் திடீர் சந்திப்பு! நடக்கப் போவதைப் பொருத்திருந்து பாருங்கள்; சசிகலா அதிரடி..
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவையொட்டி அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆகிய இருவரும் மதுரையில் இருந்து பசும்பொன்னுக்கு ஒரே காரில் பயணித்தனர். அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரனும் இவர்களுடன் இணைய உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில் பசும்பொன் செல்லும் வழியில் அபிராமம் பகுதியில் உள்ள சாலையில் மூவரும் […]
சோழவந்தானில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க வெங்கடேசன் எம்எல்ஏவுக்கு கொடிக்கால் விவசாயிகள் கோரிக்கை
மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமப் பகுதிகளான இரும்பாடி கருப்பட்டி தச்சம்பத்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கொடிக்கால் விவசாயம் செய்து வந்த நிலையில் கொடிக்கால் விவசாயிகளுக்கு போதிய வருவாய் கிடைக்காததால் சிறிது சிறிதாக மாற்று விவசாயம் செய்ய தங்களை தயார் செய்து வந்தனர் இந்த நிலையில் சுமார் 1000க்கும் மேற்பட்ட ஏக்கரில் கொடிக்கால் விவசாயம் செய்து வந்த சோழவந்தான் பகுதி விவசாயிகள் தற்போது பத்துக்கும் குறைவான ஏக்கரில் விவசாயம் செய்ய வேண்டிய […]
காலையில் இறங்கி மாலையில் எகிறிய தங்கம்!
தங்கம் விலை கடந்த 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. அதன் பின்னர் விலை குறையத் தொடங்கியது. கடந்த 23-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை சவரனுக்கு ரூ.9 ஆயிரம் சரிந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.89 ஆயிரத்துக்கு கீழ் வந்து அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.தொடர்ந்து குறைந்துவந்த தங்கம் விலைக்கு முற்றுப்புள்ளி வைத்து, நேற்று மீண்டும் ஏற்றம் கண்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 75-க்கும், ஒரு சவரன் ரூ.88 […]
உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு பல்வேறு கட்சியினரும், பல்வேறு அமைப்புகளும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதன் ஒரு பகுதியாகஉசிலம்பட்டி தமிழ் மாநில பிரமலைக் கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவை மாநில தலைவர் இராஜா பாண்டியன் டாக்டர் ஜெபமணி தலைமையில் குருநாதன் வீரணன் பூங்கொடி கள்ளிப்பட்டி தினேஷ் செளந்தரபாண்டி ஆகியோர் கலந்து கொண்டு தேவர் சிலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.
You must be logged in to post a comment.