வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு..

தென்காசி மாவட்டத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் காவல் நிலைய வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட குற்றவாளியான கீழப்பாவூர் தமிழர் தெருவை சேர்ந்த நடராஜன் என்பவரின் மகனான ராமலிங்கம் @ முத்துராஜ் (35) மீது பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் பரிந்துரையின் […]

சங்கரன்கோவில் பகுதியில் நடந்த மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்..

சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் திட்ட முகாம் மற்றும் பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதை நேரில் பார்வையிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் தருமபுரி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் முகாமினை துவக்கி வைத்ததைத் தொடர்ந்து தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாமில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் திட்ட […]

கனிம வள வாகனங்களால் தொடரும் விபத்துகள்; மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முன்னாள் எம்எல்ஏ வலியுறுத்தல்..

தென்காசி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கொண்டு செல்லும் கனரக வாகனங்களால் தொடர் விபத்துகள் நிகழ்ந்து வருவதாகவும், இதனை தடுத்து மக்களின் பாதுகாப்பை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் எனவும் முன்னாள் எம்எல்ஏ ரவி அருணன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவிற்கு கனிம வளங்கள் கொண்டு செல்லும் கனரக வாகனங்களால் தென்காசி மாவட்டத்தில் தொடர்ச்சியாக விபத்துக்கள் நடந்து வருவது கவலை அளிக்கிறது. இந்த கனிமவள வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டுனர்கள் […]

தென்காசியில் மின்வாரிய களப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு வகுப்பு மற்றும் தலைக்கவசம் வழங்கல்..

தென்காசி மற்றும் கடையநல்லூர் கோட்டத்தில், பணிபுரியும் மின்வாரிய களப்பணியாளர்களுக்கான பாதுகாப்பு வகுப்பு மற்றும் தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி தென்காசி தனியார் பள்ளியில் வைத்து நடைபெற்றது. திருநெல்வேலி மண்டல தலைமை பொறியாளர், டேவிட்ஜெபசிங், பாதுகாப்பு வகுப்பிற்கு தலைமை தாங்கி பேசுகையில், விநியோகத்தில் பணிகள் மேற்கொள்ளும் போதும் இயற்கை இடர்பாடுகளான சூறைக்காற்று, இடி, மின்னல், தீடிர் மழை, நேரங்களில் பாதுகாப்புடன் பணிபுரிவதற்கான பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விளக்கிக் கூறினார். மேலும் விநியோகத்தில் பணி புரியும் பொழுது பாதுகாப்புக்காக உபயோகப்படுத்த […]

முதலியார்பட்டி அரசு பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்..

தென்காசி மாவட்டம் கடையம் அருகிலுள்ள முதலியார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்புக்குழு சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் அலாவுதீன் தலைமையில் நடைபெற்ற இம்முகாமிற்கு பள்ளி மேலாண்மைக்குழு தலைவி ஜன்னத், உறுப்பினர் சுலைஹாள் பீமா, கல்விக்குழு உறுப்பினர்கள் ராஜா, துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை முத்துச்செல்வி நாச்சியார் வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர் மாரிமுத்து நன்றி கூறினார்.  நிகழ்ச்சியில் போதை பொருட்களின் தீமைகள் பற்றியும், […]

சாட்டை துரைமுருகன் கைது: கடுமையான கண்டனம் தெரிவித்து இபிஎஸ் அறிக்கை..

சாட்டை துரைமுருகன் கைது: கடுமையான கண்டனம் தெரிவித்து இபிஎஸ் அறிக்கை.. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:- கடந்த மூன்றாண்டு விடியா திமுக ஆட்சியில் கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், கடத்தல்காரர்கள், பாலியல் வன்கொடுமையாளர்கள் போன்றோர் சுதந்திரமாக நடமாடி வரும் நிலையில், ஆட்சியாளர்களின் தவறுகளை சுட்டிக்காட்டும் சமூக செயல்பாட்டாளர்கள் மீதும், அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் மீதும் சர்வாதிகார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது. தன் கையில் இருக்கும் அதிகாரம், நிரந்தரமானது என்ற இருமாப்போடு, ‘இம்’ என்றால் […]

வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்; தென்காசி மாவட்ட எஸ்.பி அறிவுறுத்தல்..

தென்காசி மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர கூட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என தென்காசி மாவட்ட எஸ்.பி சுரேஷ்குமார் அறிவுறுத்தினார். தென்காசி மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.    முன்னதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்டத்தில் இயங்கி வரும் காவல் வாகனங்களை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் விரைந்து முடிக்கப்பட வேண்டிய வழக்குகள் குறித்தும் […]

சென்னையில் 6000 ரவுடிகளுக்கு செக்.! பட்டியல் தயார்!- அதிரடி காட்டும் ஆணையர்..

சென்னையில் 6000 ரவுடிகளுக்கு செக்.! பட்டியல் தயார்!- அதிரடி காட்டும் ஆணையர்.. தமிழகத்தில் தொடர் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்திருப்பதாக எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. போதை பொருட்கள் விநியோகமும் அதிகமாக இருப்பதால் இது போன்ற குற்ற சம்பவங்களில் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் ஈடுபடுவதாக குற்றச்சாட்டப்பட்டு வருகிறது. மேலும் திமுக அரசு சட்டம் ஒழுங்கை சரிவர கையாலவில்லையென விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேசிய கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். […]

தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களுக்கு கனமழை- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..

தமிழ்நாடு, புதுச்சேரியில் ஜூலை 17ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் நாளை கனமழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.சென்னையில் ஒரு சில இடங்களில் மாலை, இரவில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் பதிவாகும் எனவும் தெரிவித்துள்ளது.தென் தமிழக கடலோரம், தெற்கு வங்கக்கடல், அரபிகடல் பகுதிகளில் ஜூலை 15ம் தேதிவரை 55 […]

தெற்கு ரயில்வே மண்டல ஆலோசனை கூட்டம் முறைப்படி நடத்தப்பட வேண்டும்; பாண்டியராஜா வலியுறுத்தல்..

தெற்கு ரயில்வே மண்டல ஆலோசனை குழு கூட்டம் முறைப்படி நடத்த வேண்டும் என்றும், ஒன்றிய ரயில்வே அமைச்சர் இந்த விஷயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் தெற்கு ரயில்வே மண்டல ஆலோசனைக்குழு உறுப்பினர் பாண்டியராஜா வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பாண்டியராஜா கூறுகையில், “ரயில்வே துறைக்கான வளர்ச்சி, அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துதல், பயணிகளுக்கான தேவைகள் குறித்து விவாதிப்பதற்கான மிக முக்கியமான குழுவாக மண்டல ரயில்வே ஆலோசனைக் குழு உள்ளது. தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட சென்னை, திருச்சி, […]

மதுரையில் சாதிச்சான்று வழங்கக்கோரி பள்ளி மாணவ மாணவிகள் போராட்டம்..

பரவை சத்தியமூர்த்தி நகரில் சாதி சான்றிதழ் வழங்க கோரி 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பள்ளிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சிக்கு உட்பட்ட 3 மற்றும் 4வது வார்டு பகுதிக்கு உட்பட்ட சத்தியமூர்த்தி நகர் பகுதியில் காட்டுநாயக்கர் சமுதாயத்தை சேர்ந்த 700 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் குழந்தைகள் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பரவை சமயநல்லூர் சத்தியமூர்த்தி நகர் ஆகிய அரசு பள்ளிகளில் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் […]

மருத்துவ மேற்படிப்பு: 50 சதவீத அரசு மருத்துவர் இட ஒதுக்கீட்டுக்கு முடிவு கட்ட சதியா? – அன்புமணி ராமதாஸ் கேள்வி..

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு அரசு மருத்துவக்கல்லூரிகளின் முதுநிலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவீத இட ஒதுக்கீடு, 15 வகையான படிப்புகளுக்கு நடப்பாண்டில் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. போராடிப் பெற்ற அரசு மருத்துவர் இட ஒதுக்கீட்டுக்கு ஓசையின்றி முடிவு கட்ட தி.மு.க. அரசு சதித் திட்டம் தீட்டுகிறதோ என்ற ஐயம் எழுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ […]

சாட்டை துரைமுருகன் கைது!ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் சாதி வெறுப்புடன் செயல்படுகிறார்- சீமான்..

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசார மேடையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தேவர், நாடார், கோனார், தேவேந்திரர் மீது வருணுக்கு பிறப்பு வெறுப்பு. அதனால் அவர்களுக்கு எதிராக செயல்படுகிறார். ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் சாதி வெறுப்புடன் செயல்படுகிறார் என்பதற்கு ஆதாரம் உள்ளது. […]

மதுரை ஆசிரியர் வீட்டில் 20 பவுன் நகை மற்றும் 4 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை..

மதுரை மாவட்டம் பெருங்குடி மண்டேலா நகர் பகுதியில் ஆசிரியர் வீட்டில் 20 பவுன் நகை மற்றும் 4 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளை நடந்த இடத்தை அவனியாபுரம் காவல் உதவி ஆணையர் செல்வகுமார் மற்றும் போலீஸார் ஆய்வு செய்தனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பெருங்குடி மண்டலே நகர் பகுதியில் வசித்து ஒருவர் கார்த்திகேயன். (வயது 50) இவர் செம்பட்டில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இதே போல் இவரது […]

நாம் தமிழர் கட்சி பிரமுகர் சாட்டை துரைமுருகன் குற்றாலத்தில் கைது..

நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் அவதூறு வழக்கில் குற்றாலத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம், வீராணம் பகுதியில் கட்டப்படும் தனது வீட்டினை பார்த்துவிட்டு தனியார் விடுதியில் தங்கி இருந்துள்ள நிலையில், இன்று (ஜூலை 11) திருச்சி சைபர் கிரைம் போலீசாரால் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தின் போது நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து சாட்டை துரைமுருகன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது திமுக தலைவர்கள் […]

தென்காசியில் ரூ. 3.21 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்; மாவட்ட கலெக்டர் வழங்கினார்..

மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் ரூ.3.21 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்; தென்காசி மாவட்ட கலெக்டர் வழங்கினார்.. தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.3,21,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் பயனாளிகளுக்கு வழங்கினார். தென்காசி மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் திங்கள் கிழமையன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட […]

தமிழகத்தில் 18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்; தமிழ்நாடு அரசு உத்தரவு..

தமிழகத்தில் 18 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலர் பி.அமுதா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவின் படி, தாம்பரம் காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் அமலாக்கப் பணியகம் சிஐடி, ஏடிஜிபியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி அபின் தினேஷ் மோதக் தாம்பரம் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி எச்.எம். ஜெயராம் மாநில குற்ற ஆவணப்பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி மகேஷ் குமார் அகர்வால் ஆயுதப்படை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி […]

பத்ராதரவா கிராமத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி !

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே பத்ராதரவா கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் தென்னை நார் கழிவு உரம், மற்றும் மண் புழு உரம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உதவி வேளாண்மை இயக்குநர் செல்வம் கலந்து கொண்டு தென்னை நார் கழிவு தயாரிக்கும் முறையும் அதன் பயன்பாடுகளை பற்றியும் , தென்னை நார் கழிவு உரக்குவியல் அமைக்கும் முறைகளை பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். தொடந்து தென்னையில் தாக்கம் காண்டாமிருகவண்டு கட்டுபடுத்தும் முறைகள் […]

பார்வையற்ற கர்ப்பிணி பெண் மர்ம மரணத்தில் பெண்ணின் கணவன் குடும்பத்தாரை கைது செய்யக்கோரி பெண்ணின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் உசிலம்பட்டி ஆர்டிஒ அலுவலகத்தை முற்றுகை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியை அடுத்துள்ள புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சின்னராஜ்(40) மனைவி ரவீனா(27). பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக உள்ளார்.இவர்களுக்கு ஏற்கனவே 2 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் இரண்டாவதாக ரவீனா கருத்தரித்து தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்., திருமணம் முடிந்த காலம் முதல் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தாகவும், செக்காணூரணி – உசிலம்பட்டி மகளீர் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டு விசாரணைக்கு பின் சமரசம் ஏற்பட்டு சமீப […]

மேட்டுப்பாளையத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கல்லூரி மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட, நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மணிநகரில் நகராட்சிக்கு சொந்தமான பூங்கா உரிய பராமரிப்பு இல்லாமல் புதர்மண்டி கிடந்தது. இதனால் புழு, பூச்சிகள், பாம்புகள் இருக்கும் என அருகில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்துடன், மேலும் விளையாடுவதற்கு இடமில்லாமல் குழந்தைகள் வேதனையில் இப்பூங்காவை பயன்படுத்தாமல் இருந்தனர்.மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளர் அமுதா அவர்களின் பரிந்துரையின் படி, பெரியநாயக்கன்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், நம்ம மேட்டுப்பாளையம் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!