டாஸ்மாக் கடையை அடியோடு அகற்ற பொதுமக்கள் கோரிக்கை.!

ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் ஊராட்சியில் இயங்கி வரும் அரசு மதுபான கடையால் பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுவதாக புகார் கூறிய பொதுமக்கள் அந்த மதுபான கடையை முற்றிலுமாக அகற்றி தர வேண்டும் என, இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர் கூட்டத்தில் ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அழகன்குளம் ஊராட்சி ‘நாடார் வலசை’ பகுதியில் கடை எண் 7003 என்ற டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அங்கு மது அருந்த வருபவர்களால் பல இன்னல்களை […]

ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.!

ராமநாதபுரத்தில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் சார்பாக இன்று மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையில், ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து இன்று ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தினர் ஏராளமானோர் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இவர்கள், குறைந்தபட்ச கூலி சட்டத்தின் படி வெளியிட்ட அரசாணை படியும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படியும், ஆபரேட்டர்களுக்கு மாதம் […]

மதுரையில் வாலிபர் கொலை; போலீசார் விசாரணை..

மதுரை வில்லாபுரம் பராசக்தி நகர், சிந்தாமணி வயல் வெளி பகுதியில் வாலிபர் கொலை. அவனியாபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மதுரை அவனியாபுரம் வில்லாபுரம் பராசக்தி நகர் வயல் வெளி பகுதியில் பகுதியில் வாலிபர் தலை சிதைந்த நிலையில் காணப்பட்டது. அருகில் உள்ளவர்கள் அவனியாபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.  இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு அவனியாபுரம் போலீசார் சென்று பார்த்தபோது தலை நசுங்கி கைதுண்டான நிலையில் உடலை கைப்பற்றினர். இறந்த வாலிபரின் செல்போனில் வந்த அழைப்பை […]

தமிழ்நாட்டில் பூரண மது விலக்கு; தவ்ஹீத் ஜமாத் மாநில செயற்குழுவில் தீர்மானம்..

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் அப்துல் கரீம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு மற்றும் போதைப் பொருட்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மாநில பொருளாளர் காஞ்சி இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற்குழு கூட்டத்தின் துவக்க உரையாக மாநில செயலாளர் காரைக்கால் யூசுப் இறையச்சம் குறித்து பேசினார். […]

வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் தமிழ் வாசிப்பு பயிற்சி புத்தகங்கள் வழங்கல்..

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் சேவாலயம் மாணவர் விடுதியில் தமிழ் மொழி வாசித்தல் பயிற்சி மற்றும் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை வகித்து புத்தகங்கள் வழங்கிய அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் பேசுகையில், மாணவர்கள் அறிவு மேம்பட அதிகமாக புத்தகங்கள் வாசித்தல் மிகவும் அவசியம். பள்ளி பாடங்களோடு நூலக புத்தகங்களை தொடர்ந்து வாசிப்பது எதிர்கால முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்றார். நிகழ்ச்சியில் ஹைக்கூ கவிஞர் இரா.இரவி, தமிழ்நாடு அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்றதை வாழ்த்தி […]

உசிலம்பட்டியில் போதைப்பொருளின் தீமை குறித்து தத்ரூபமாக நாடகம் மூலம் நடித்துக்காட்டிய பள்ளிக்குழந்தைகள்.

தமிழகத்தில் போதைப்பொருட்களின் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைதத் தொடர்ந்து போதைப் பொருட்களின் ஒழிப்பது குறித்து அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பள்ளி மாணவ மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அவர்கள் மூலம் பொதுமக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள நாடார் சரஸ்வதி தொடக்கப் பள்ளியில் பள்ளி மாணவ மாணவர்களின் போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.முன்னதாக போதைப் பொருட்களினால் […]

தமிழ்ச்செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்; தென்காசி மாவட்ட ஆட்சியர் தகவல்..

தென்காசி மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான “தமிழ்ச்செம்மல்” விருதிற்கு தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்தில் விண்ணப்பங்கள் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களைக் கண்டறிந்து அவர்களின் தமிழ்த்தொண்டினைப் பெருமைப்படுத்தி ஊக்கப்படுத்தும் வகையில் “தமிழ்ச்செம்மல்” என்னும் பெயரில் மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் இவ்விருது வழங்கப்பெறுகிறது. இவ்விருதுக்கு தெரிவு செய்யப்படுவோர் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ரூ.25,000 (ரூபாய் இருபத்து ஐந்தாயிரம் மட்டும்) தகுதியுரையும் வழங்கப்பெறும். இவ்வகையில் […]

சமூகங்களிடயே நல்லிணக்கம் ஏற்படுத்துவோம்; பன்னாட்டு மத சுதந்திர கூட்டமைப்பு தீர்மானம்..

சமூகங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவோம் என பன்னாட்டு மத சுதந்திர கூட்டமைப்பு நிகழ்ச்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகில் உள்ள இருதயகுளத்தில் வைத்து, சமய உணர்வுகளின் பரிமாற்றம் நிகழ்ச்சி நடந்தது. இயேசுவின் புனித இருதய சகோதரர்கள் சபை, காசனல் சபை, இணைந்து, ஏற்பாடு செய்த (ஐ.ஏ.ஆர்.எஃப்) பன்னாட்டு மத சுதந்திர அமைப்பின், சமய உணர்வுகளின் பரிமாற்றம் கலந்துரையாடல் நிகழ்ச்சி, காசனல் சபை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. இந்தியப் பிரிவின் முன்னாள் தலைவர் சுப்பிரமணிய ராஜா தலைமையில் […]

நெல்லையில் ஜூலை 23 (நாளை) மின்தடை..

நெல்லையில், 110/33-11KV மேலப்பாளையம் துணை மின் நிலையம், 33/11 KV புதிய பஸ் நிலையம் மற்றும் 33/11 KV ரொட்டியார்பட்டி உப மின் நிலையங்களில் 23.07.2024 (நாளை) மாதாந்திர பணி மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளதால் கீழ்காணும் பகுதிகளில் காலை 9.00 முதல் மதியம் 5.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் (நகர்ப்புற கோட்டம் திருநெல்வேலி) செ. முருகன் அறிவித்துள்ளார். மேலப்பாளையம், கொட்டிகுளம் பஜார், அம்பை மெயின் ரோடு, சந்தை பகுதிகள், குல வணிகர் புரம், மத்திய […]

வேளாண்மைத்துறையில் பட்டதாரி இளைஞர்களை தொழில் முனைவோர் ஆக்க நிதி உதவி

வேளாண்மைத்துறையில் மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டம் 2024-25 ல் பட்டதாரி இளைஞர்களை தொழில் முனைவோர் ஆக்கும் விதமாக வங்கி கடன் உதவியுடன் கூடிய வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு பட்டதாரி ஒருவருக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கிட திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கு கீழ்க்கண்ட தகுதிகள் இருக்க வேண்டும் அவை வயது 21 முதல் 40 க்குள் இருக்கவேண்டும் , கல்வித்தகுதி இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் , அரசு மற்றும் தனியார் […]

ராமநாதபுரத்தில் காங்கிரஸ் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்

ராமநாதபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை கலந்து கொண்டு உரையாற்றினார் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் மற்றும் காங்கிரஸ் கட்சியினுடைய சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை யுபிஎஸ்சி தலைவர் எதற்காக ராஜினாமா செய்திருக்கிறார் அவர் பதவியேற்று ஓராண்டு கூட ஆகவில்லை அவர் பதவியை ராஜினாமா செய்ததற்கான […]

மேட்டுப்பாளையத்தில் மத்திய இணை அமைச்சரிடம் ரயில்வே மேம்பாடு சம்பந்தமாக சி ஐ டி யு தொழிற்சங்கத்தினர் கோரிக்கை மனு

 கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ரயில் நிலையத்தில் இன்று தூத்துக்குடி வாராந்திர ரயில் மேட்டுப்பாளையம் போத்தனூர் புதிய ரயில்கள் சேவை துவக்கம் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த மத்திய இணை அமைச்சர் எல் முருகன் அவர்களிடம் மேட்டுப்பாளையம் தாலுக்கா சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மேட்டுப்பாளையம் கோவை ரயில்வே பாதையை இருவழிப் பாதையாக அமைக்க வேண்டும் மேட்டுப்பாளையம் கோவை பாசஞ்சர் ரயிலை மேலும் இரண்டு முறை நீட்டிக்க வேண்டும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து கேரளா உள்ளிட்ட வட […]

அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற தஞ்சை மாநகர பேரவை

அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற தஞ்சை மாநகர பேரவை அலுவலக கட்டடத்தில் நடைபெற்றது . இந்த பேரவைக்கு யூ. காதர் உசேன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் காரல் மார்க்ஸ் பேரவையை துவக்கி வைத்து உரையாற்றினார். மாவட்ட தலைவர் சுதந்திர பாரதி நிறைவுறையாற்றினார். மாநில தலைவர் இப்ராஹிம் சிறப்புரை வழங்கினார். மாவட்டத் துணைத் தலைவர் பிரபாகர் ,பேராசிரியர் பாஸ்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணை செயலாளர் சக்திவேல். விஜய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் முத்துக்குமரன் ஆகியோர் […]

உசிலம்பட்டியில் இருதயம் காப்போம் இலவச பரிசோதனை முகாம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன் அலுவலகத்தில் பாண்டியன் ஸ்பெஷலிஸ்ட் கிளினிக் இணைந்து இருதயம் காப்போம் இலவச பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் இருதய ஆலோசனை இசிஇ ரத்தத்தில் சர்க்கரை அளவு ரத்தம் அழுத்தம் உடல் பருமன் ரத்தத்தில் ஆக்சன் இருதய உணவு ஆலோசனை ஆகியவை வழங்கப்பட்டது. இதில் சிறப்பு இருதய சிகிச்சை நிபுணர் பிரசன்னா கலந்து கொண்டு: பொதுமக்களுக்கு பரிசோதனை முகாமை தொடங்கி வைத்தார். இந்நிகழ்சி ஏற்ப்பாட்டை திமுக தலைமை செயற்குழு […]

அடவிநயினார் அணையிலிருந்து கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு..

தென்காசி மாவட்டம் செங்கோட்டை மற்றும் கடையநல்லூர் வட்டங்களுக்கு உட்பட்ட அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கத்தில் இருந்து கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தமிழக முதல்வரின் ஆணையின்படி தென்காசி மாவட்டம் செங்கோட்டை மற்றும் கடையநல்லூர் வட்டங்களுக்கு உட்பட்ட அடவிநயினார் அணையில் இருந்து கார் பருவ சாகுபடிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) அமிர்தலிங்கம் 19.07.2024 இன்று தண்ணீர் திறந்து வைத்தார். அடவிநயினார் பாசன திட்டத்தின் கீழுள்ள மேட்டுக்கால், கரிசல்கால், பண்பொழிகால், வல்லாக்குளம் கால், இலத்தூர் கால், நயினாகரம் கால், […]

மதுரையில் எய்ம்ஸ் நிர்வாக குழு முக்கிய ஆலோசனை; விருதுநகர் எம்பி பங்கேற்பு..

எய்ம்ஸ் நிர்வாக இயக்குனர் அனுமந்த்ராவ் உள்ளிட்ட டெல்லி எய்ம்ஸ் அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் பொதுக்குழு மற்றும் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இதில் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாக்கூர் பங்கேற்றார். இது குறித்து விருதுநகர் எம்.பி தெரிவித்ததாவது, இக்கூட்டத்தில் ராமநாதபுரத்தில் எய்ம்ஸ் வகுப்புகள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நியமனம் பற்றி விவாதிக்கப்பட்டது. எய்ம்ஸ் கட்டுமான பணி 33 மாதங்களில் இரண்டு கட்டங்களாக கட்டிடங்கள் கட்டப்படும் என திட்டமிடப்பட்டுள்ளது. 2026 அக்டோபர் 19-க்குள் அனைத்து விதமான கட்டிடங்களும் […]

தென்காசி ஆக்ஸ்ஃபோர்டு பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்..

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்ஃபோர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த தினவிழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. ஆக்ஸ்ஃபோர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த காமராஜர் திருவுருவப்படத்திற்கு பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கே.திருமலை தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான தி.மிராக்கின் பால் சுசி, உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள் ஆகியோர் […]

தென்காசி மாவட்டத்தில் இரண்டு குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு..

தென்காசி மாவட்டத்தில், ஒரே நாளில் இரண்டு குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் முழுவதும் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்கள் அடையாளம் காணப்பட்டு மாவட்ட எஸ்.பி. சுரேஷ்குமார் பரிந்துரையின் பேரில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருட்டு, வழிப்பறி, போக்சோ தொடர்புடைய பின்வரும் இரண்டு குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.  தென்காசி மாவட்டம், கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலைய போக்சோ வழக்கின் குற்றவாளியான கரிவலம்வந்தநல்லூர் பெரியூர் […]

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை தேதி நீட்டிப்பு; தென்காசி மாவட்ட கலெக்டர் தகவல்..

தென்காசி, கடையநல்லூர் மற்றும் வீரகேரளம்புதூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024 ஆம் கல்வி ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை (Spot Admission) 31.07.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், தென்காசி, கடையநல்லூர் மற்றும் வீரகேரளம்புதூர் அரசுதொழிற்பயிற்சி நிலையங்களில் 2024-ம் கல்வி ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கைக்கு (Spot Admission) 31.07.2024 வரை இணையதளம் (www.skilltraining.tn.gov.in) வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்நிலையங்களில் ஈராண்டு தொழிற்பிரிவுகளான Fitter (பொருத்துநர்), Electrician (மின்சாரப்பணியாளர்), […]

திருப்புல்லாணி வேளாண்மை துறையின் விழிப்புணர்வு நிகழ்ச்சி

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே நல்லிருக்கை கிராமத்தில் வேளாண்மை துறையின் சார்பில் கலைஞர் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை திட்டத்தின் மூலம் ரசாயன உரங்களின் பயன்பாட்டினை குறைப்பது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி இராமநாதபுரம் வேளாண்மை துணை இயக்குநர் மாநில திட்டம் எம். கே. அமர்லால் மற்றும் வேளாண்மை துணை இயக்குநர் உழவர் பயிற்சி நிலையம் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. மாட்டு சாணம், மாட்டு சிறுநீர், கழிவு வைக்கோல் மற்றும் இதர பால் கழிவுகளைப் பயன்படுத்தி […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!