தஞ்சாவூர், கீழவாசல் பகுதியில் உள்ள டாஸ்மார்க் கடையை அகற்ற கோரி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் தஞ்சை மாநகர குழு சார்பில் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் மக்கள் அதிகம் நடமாட்டமுள்ள , வியாபார நிறுவனங்கள், சிறு வியாபாரிகள் அதிகம் உள்ள தஞ்சாவூர் கீழவாசல் காமராஜர் அருகில் டாஸ்மார்க் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையினால் ,இந்த பகுதி பொதுமக்களுக்கும் , வியாபாரிகளுக்கும் இடையூறாக இருப்பதோடு மக்கள் நெரிசல் மிகுந்த பகுதி என்பதால் போக்குவரத்திற்கு […]
Category: செய்திகள்
கீழக்கரையில் நுகர்வோர் நலச்சங்கம் பொதுக்குழு கூட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நுகர்வோர் நல சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் தனியார் மகாலில் நடைபெற்றது இக்கூட்டத்தில் முதல் தீரமானமாக 2023 2024வது ஆண்டு தணிக்கை அறிக்கை ஏக மனதாக தீர்மானிக்கப்பட்டது . தொடர்ந்து தலைவர் எம் சையது இப்ராஹிம் உப தலைவர் பிலால் அப்துல்லா உப தலைவர் கோவிந்தராஜ் செயலாளராக பாக்கர் அலி இணை செயலாளர் ஜாகிர் உசேன் பொருளாளராக விஜயராமு நிர்வாக செயற்குழு உறுப்பினர்கள் முகமது யூசுப். முத்துசாமி. மலராஜ். லெமன் ராஜ் அமிதா பேகம். […]
புதுமடம் பூன் நர்சரி பிரைமரி பள்ளி மாணாக்கர்கள் சாதனை .
ராமநாதபுரம் அருகே உள்ள புதுமடம் பூன் நர்சரி பிரைமரி பள்ளி சார்பாக மதுரை ஊமச்சிகுளம் தனியார் மஹாலில் இரண்டாவது தென்னிந்திய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப்-2024 போட்டியில் 10 வயதுக்குட்பட்ட கட்டா கராத்தே பிரிவில் மாணாக்கர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளன. முன்னதாக போட்டியினை, முன்னாள் ஏடிஎஸ்பிக்கள் குமாரவேல், சந்தானம் ஆகியோர் துவக்கி வைத்தனர். போட்டியில்,52 க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டனர். சாதனை படைத்த புதுமடம் பூன் நர்சரி பிரைமரி பள்ளி மாணவர் – மாணவியர்கள் ஆபிக்கா […]
கீழக்கரையில் மின் கட்டணத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இந்து பஜார் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட்) சார்பில் மின்கட்டண உயர்வை வாபஸ் பெறவும் தமிழ்நாடு மின்சார வாரியத்தை தனியார் வசம் ஒப்படைப்பதை நிறுத்தவும் , புதிய மின் உற்பத்தி திட்டங்களை அரசே தொடர்ந்து நடத்தவும் , ஒன்றிய பி.ஜே.பி அரசு மின் கட்டணத்தை உயர்த்த மாநில அரசுகளை நிர்பந்திப்பதை கைவிடவும் , தி.மு.க தேர்தல் வாக்குறுதி அடிப்படையில் மாதந்தோறும் மின் அளவு கணக்கிடும் முறையை நடைமுறைப்படுத்திடவும் , கீழக்கரையில் […]
திருட வந்த ஓட்டலில் எதுவும் கிடைக்காததால் 20 ரூபாயை வைத்து சென்ற வினோத திருடன்..
திருட வந்த ஓட்டலில் எதுவும் கிடைக்காததால் 20 ரூபாயை வைத்து சென்ற வினோத திருடன்.. தெலுங்கானா மாநிலத்தில் திருட வந்த ஓட்டலில் திருடுவதற்கு எதுவும் இல்லாததால் விரக்தியடைந்த திருடன் இரக்கப்பட்டு 20 ரூபாயை அங்கு வைத்து சென்ற சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், முகத்தை துணியால் மறைந்துள்ள திருடன் திருடுவதற்கு எந்த மதிப்புமிக்க பொருளும் கிடைக்காமல் விரக்தியடைந்து 20 ரூபாய் நோட்டை அங்கு […]
நிதி ஆயோக் கூட்டம் புறக்கணிப்பு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ வெளியீடு..
நிதி ஆயோக் கூட்டம் புறக்கணிப்பு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ வெளியீடு: மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை கொண்ட நிதிநிலை அறிக்கையால் நீதி கேட்டு, மக்கள் மன்றமான உங்கள் முன் பேச வேண்டிய கட்டாயம். திராவிட மாடல் அரசு, கடந்த மூன்றாண்டு காலமாக எத்தகைய முற்போக்கு மற்றும் தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டு வருவது தெரியும். தமிழக அரசின் எண்ணங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்களை மத்திய அரசு தொடர்ந்து செய்து கொண்டு வருகிறது-முதலமைச்சர் ஸ்டாலின். ஒரு அரசு […]
மண்டபம் அருகே வேளாண்மைத் துறையின் கலந்துரையாடல் கூட்டம்
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே குயவன்குடி கிராமத்தில் வேளாண்மைத் துறையின் தொழில் நுட்ப மேலாண்மை முகமை மூலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் சார்பில் விவசாயிகள் விஞ்ஞானிகள் என்ற தலைப்பில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ராமநாதபுரம் வேளாண்மை இணை இயக்குனர் கண்ணையா தலைமை தாங்கினார். வேளாண்மை துணை இயக்குனர் மாநிலத் திட்டம் எம்.கே.அமர்லால் முன்னிலை வகித்தனர். திருப்புல்லாணி வேளாண்மை உதவி இயக்குனர் செல்வம் அனைவரையும் வரவேற்றார். இக்கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் கண்ணையா பேசுகையில் தென்னையில் குரும்பைகள் […]
மாலங்குடி கிராமத்தில் விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கும் விழா
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே மாலங்குடி கிராமத்தில் ரிலையன்ஸ் அறக்கட்டளை மற்றும் வேளாண்மை துறை இணைந்து டிஜிட்டல் பண்ணைப்பள்ளி விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கும் விழா வேளாண் இணை இயக்குனர் ச.கண்ணையா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ம.தி.பாஸ்கரமணியன், மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் பேசினார். வேளாண்மை துணை இயக்குனர் மாநிலத் திட்டம் எம். கே. அமர்லால் மாநில அரசின் திட்டங்கள் குறித்தும், மண்வளங்களை பாதுகாப்பது குறித்தும் பேசினார். உதவி வேளாண் […]
தென்காசியில் நடந்த மாற்றுத் திறனாளிகள் கடனுதவி முகாம்..
தென்காசி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் வங்கி கடன் மேளா மற்றும் தேசிய மாற்றுத்திறனாளிகள் நிதி வளர்ச்சி கழகத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு கட்ட கடன் பெறும் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வதாரத்தை மேம்படுத்த வங்கிகடன் மானியம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தல் தொடர்பாக வங்கி கடன் மேளா மற்றும் தேசிய மாற்றுத்திறனாளிகள் நிதி வளர்ச்சி கழகத்தின் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு கட்ட கடன் பெறும் முகாமில் 25.07.2024 அன்று […]
மின் கட்டண உயர்வை கண்டித்து,திருவாடானையில் தேமுதிகவினர் ஆர்பாட்டம்..!
திருவாடானையில் தேமுதிக சார்பில் மின் கட்டணத்தை உயர்த்தியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை நான்கு ரோடு சந்திப்பு சாலை பகுதியில் தேமுதிக சார்பில் அதன் மாவட்டச் செயலாளர் சிங்கை ஜின்னா தலைமையில தமிழக அரசு மின்சார கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்தும், மின் கட்டணத்தை குறைக்க கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். பெண்கள் கையில் மண்ணெண்ணெயில் எரியும் விளக்குகளை […]
உத்தரகோசமங்கையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: கீழக்கரை வட்டாட்சியர் பங்கேற்பு.!
பொதுமக்கள் இணையவழி வாயிலாக தற்போது பெற்று வரும் சேவைகளை விரைவாகவும் பல்வேறு துறைகள் மூலம் பெற்றுவரும் வெவ்வேறு சேவைகளை ஒரே இடத்திலும் பெறுவதற்கு தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி “மக்களுடன் முதல்வர்” திட்டம் தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட ‘உத்தரகோசமங்கை’ யில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்ற ஊரக பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் கீழக்கரை வட்டாட்சியர் ஜமால் முகமது வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரி ஆகியோர் […]
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்.!
ராமநாதபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் ராமநாதபுரம் தாலுகா குழு சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தினர். எளிய மக்களை பாதிக்கும் மின் கட்டண உயர்வை கைவிடு, மின்சாரத் துறையை அரசே தொடர்ந்து நடத்திடுக, தேர்தல் வாக்குறுதி அடிப்படையில் மாதம்தோறும் மின் அளவு கணக்கிடும் முறையை நடைமுறைபடுத்திடுக’ என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டது. இதில் ராமநாதபுரம் தாலுகா குழு பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
உசிலம்பட்டியில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் ,மதுரை மாவட்ட ஊனத் தடுப்பு சார்பில் செல்லம்பட்டி ,எழுமலை, தொட்டப்ப நாயக்கனூர் பகுதியில் இருக்கும் தொழு நோயாளிகளுக்கான சிறப்பு சிகிச்சை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன் தொழு நோயாளிகளின் அன்றாட வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்யும் வகையில் ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி ,பருப்பு, சீனி ,எண்ணெய் ஆகியவற்றை நலத்திட்ட […]
போலீசார் அபராதத்திற்கு பயந்து ஹெல்மெட் திருடி சென்ற இளைஞர்கள்; சிசிடிவி காட்சி..
மதுரையில் போலீசார் அபராதத்திற்கு பயந்து ஹெல்மெட்டை திருடி சென்ற இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. மதுரை மாநகர் பகுதிகளில் சாலை விபத்துகளின் போது உயிரிழப்பை தவிர்க்கும் பொருட்டு வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என போக்குவரத்து காவலர்கள் சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தலைக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பது நடைமுறையில் இருப்பதால் பெரும்பாலானோர் முறையாக தலைக்கவசம் அணிந்து பயணம் மேற்கொள்கின்றனர். இந்த நிலையில் […]
நெல்லையில் இந்தோ-தைமூர் சிறப்பு விருது வழங்கும் விழா; தைமூர் நாட்டின் துணை பிரதமர் பங்கேற்பு..
நெல்லையில் இந்தோ-தைமூர் சிறப்பு விருதுகள் வழங்கும் விழா நடந்தது. இதில் தைமூர் நாட்டின் துணை பிரதமர் மரியானோ அசானமி சாபினோ பங்கேற்று, தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தின் இராமகிருஷ்ணன் உள்ளிட்ட 100 சாதனையாளர்களுக்கு சிறப்பு விருதுகளை வழங்கினார். தமிழ்நாடு, புதுவை மாநிலங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 100 சாதனையாளர்களுக்கு சிறப்பு விருது வழங்கும் நிகழ்ச்சி நெல்லை ஸ்ரீராம் கிராண்ட் இன் ஹோட்டலில் திங்கள் கிழமையன்று நடைபெற்றது. இந்த விருது நிகழ்ச்சியில் தைமூர் நாட்டின் துணை பிரதமர் மரியானோ […]
தென்காசியில் நடந்த மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்..
தென்காசி மாவட்டத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.3,28,404 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் பயனாளிகளுக்கு வழங்கினார். தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் (22.07.2024) திங்கள் கிழமை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக் கொண்டார். தென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையில் இயற்கை மரணம் […]
இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் கல்லூரியில் மாணவ ஆசிரியர்களுக்கு வரவேற்பு..
தென்காசி மாவட்டம் இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் கடந்த 19 ஆம் தேதியன்று புதிய கல்வியாண்டு துவங்கியதை முன்னிட்டு 22-ஆம் தேதி மாணவ ஆசிரியர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கரவொலி எழுப்பி இனிப்பு மற்றும் பரிசுகள் வழங்கி மாணவ ஆசிரியர்கள் அனைவரும் வரவேற்கப்பட்டனர். நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் ராஜகுமார் தலைமை வகித்தார். முதல்வர் (பொ) ஷீலா வரவேற்றார். ஒய்எப்சி ஊழியர் பிச்சையா வாழ்த்துரை வழங்கினார். சுரண்டை பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத் […]
பாசிப்பட்டினம் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா.!
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா பாசிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற மகான் சர்தார் நைனா முகமது ஒலியுல்லா தர்கா உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த தர்காவின் 313 ஆம் ஆண்டு சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா இன்று நடைபெற்றது. இதனையொட்டி ஸ்தானிகன் வயல் மாணவநகரி கிராமத்தில் இருந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு வாணவேடிக்கை, மேளதாளங்களுடன் சுமார் […]
வாகன காப்பகத்தில் அடாவடி வசூல் செய்வதாக புகார்: முறைப்படுத்த கோரிக்கை..!
.. வாகன காப்பகத்தில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு 24 மணி நேரத்துக்கு கட்டணமாக பத்து ரூபாய் வாடகை என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் 12 மணி நேரத்திற்கு பத்து ரூபாய் என அடாபடியாக வசூல் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் வாகன காப்பகத்தில் 12 மணி நேரத்துக்கு மட்டும் பத்து ரூபாய் என அடாவடியாக வசூல் செய்வதால், பயணிகள் வரும் இரு சக்கர வாகனங்களை வெளியே நிறுத்த வேண்டிய அவலநிலையில் உள்ளனர். இதுகுறித்து இன்று […]
மின்கட்டணம் மற்றும் வரி உயர்வு – ராமநாதபுரத்தில் அமமுக கண்டன ஆர்பாட்டம்.!
அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், திமுக அரசு ஆட்சிப்பொறுப்பேற்று 3 ஆண்டு காலத்தில் ஏற்பட்ட நிர்வாக தோல்விகளை மறைக்க மின்கட்டணத்தை அடிக்கடி உயர்த்தியும், சொத்துவரி, குடிநீர்வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளையும், கட்டணங்களையும் உயர்த்தி மக்கள் மீது சுமைகளை ஏற்றும் திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து இன்றையதினம் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் கண்டண ஆர்பாட்டம் நடத்தப்படும் என்று கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்திருந்தார். அதன்படி, ராமநாதபுரம் மாவட்ட அமமுக சார்பில், […]