மதுரை வெள்ளைக்கல் பகுதியில் திடீரென வானளவிற்கு கிளம்பிய புகையால் பரபரப்பு ஏற்பட்டது. விமான நிலைய சாலை அருகே ஏற்பட்ட இந்த புகையால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். மதுரை அவனியாபுரம் பகுதியை அடுத்துள்ள வெள்ளைக்கல் பகுதியில் மதுரை மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. சமீபத்தில் இந்த குப்பை கிடங்கில் திடீரென தீ பற்றி கிட்டத்தட்ட மூன்று நாட்களுக்கு தீ எரிந்த நிலையில் போராடி தீயணைப்பு துறையினர் அனைத்தனர். இந்த நிலையில் வெள்ளைக்கல் குப்பை கிடங்கு அருகே […]
Category: செய்திகள்
மதுரையில் ஆன்லைனில் மோசடி; வாங்காத லோனிற்கு பணத்தை கட்டக்கூறி இளம் பெண்ணை மிரட்டிய கும்பல்..
மதுரையில் ஆன்லைன் லோன் எனும் பெயரில் வாங்காத லோனிற்கு பணத்தை கட்டகூறி, வாட்ஸ்அப்பில் முகத்தை மார்பிங் செய்து ஆபாசமாக படம் அனுப்பி இளம்பெண்ணை மிரட்டிய கும்பல் மீது சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. 42வயது நிரம்பிய பெண் ஒருவர் கடந்த மார்ச் மாதம் Kredit bee app என்ற ஆன்லைன் கடன் செயலி மூலம் ரூ.20 ஆயிரம் வாங்கியுள்ளார். அதனை மாதாந்திர அடிப்படையில் முழுவதுமாக லோனை கட்டி முடித்துள்ளார். […]
தென்காசி மாவட்டத்தில் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து..
தென்காசி மாவட்டத்தில் கோவில் திருவிழாவின் போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே உள்ள வெள்ளாளன் குளத்தில் பூலுடையார் கோவில் ஆடி கொடை விழா இன்று நடைபெற்றது. அதனை முன்னிட்டு பந்தல் மற்றும் மின் அலங்காரம் செய்யப்பட்டது. இந்நிலையில், பகலில் திடீரென தீப்பிடித்து மளமளவென எரிந்தது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் சுரண்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். இதில் 20க்கும் […]
மலையிட பகுதியில் உள்ள அனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பிக்கலாம்; தென்காசி மாவட்ட கலெக்டர் தகவல்..
தென்காசி மாவட்டத்தில் மலையிட பகுதியில் அமைந்துள்ள வரன்முறை செய்யப்படாத அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்து கொள்ள இணையதளத்தில் விண்ணப்பங்கள் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில் தென்காசி மாவட்டத்தில் மலையிடப்பகுதியில் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ விற்பனை செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனைகள் மற்றும் மனைப்பிரிவுகளை அரசாணை எண்.66, வீட்டு வசதி மற்றும் […]
தென்காசி மாவட்டத்தில் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்..
தென்காசி மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தமிழ்நாடு முதலமைச்சரால் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி மாவட்டம் தனி மாவட்டமாக பிரிந்து செயல்பட்டு வந்த நிலையில், தென்காசி மாவட்டத்திற்கான புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து ரூ.11.64 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தினை […]
ஒன்றிய அரசின் பட்ஜெட் நகலை எரிப்பு போராட்டம்.
ஒன்றிய அரசின் மக்கள் விரோத வேளாண்மை விரோத பட்ஜெட்டை கண்டித்து அகில இந்திய விவசாய சங்க போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பாக இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் ஒன்றிய அரசின் பட்ஜெட் நகலை எரிப்பு போராட்டம் நடைபெற்றது. எஸ்.கே.எம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மயில்வாகனம் தலைமையில் தமிழ்நாடு விவசாய சங்க தாலுகா செயலாளர் முருகேசன், தாலுகா தலைவர் செல்வம், தாலுகா பொருளாளர் அந்தோணி, மாவட்ட துணைச் செயலாளர் நவநீதகிருஷ்ணன், சிபிஎம் நகர் செயலாளர் அப்துல் காசிம் உள்பட பலர் கலந்து […]
தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையில் மூதாட்டிக்கு உயர்தர எலும்பு முறிவு அறுவை சிகிச்சை; அரசு மருத்துவ குழுவினர் சாதனை..
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 97 வயது மூதாட்டிக்கு, உயர்தரமான எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்து மருத்துவர். ஜெஸ்லின் தலைமையிலான மருத்துவ குழுவினர் சாதனை படைத்துள்ளனர். தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் செங்குந்தர் தெருவை சேர்ந்தவர் இரத்தினம்மாள். வயது 97. வாகன விபத்தில் காயம் ஏற்பட்டு தென்காசி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சேர்ந்தார். அவருக்கு வலது கால் தொடை எலும்பு முறிந்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்யும் நிலையில் இருந்தார். ஆனால் அவருக்கு இருதய […]
குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் இயற்கை விவசாயம் ( சிறிய அளவில்) குறித்த விவசாய தொழில்நுட்ப பயிற்சி
சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் இந்திய வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கு பல்வேறு வகையான பயிற்சிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் இயற்கை விவசாயம் குறித்த தொழில் நுட்பபயிற்சி பேராசிரியரும் மண்ணியல்துறை விஞ்ஞானி டி செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. 27 நாட்கள் நடைபெறும் விவசாய தொழில்நுட்ப பயிற்சியில் பிரதான் மந்திரி விவசாய தொழில்நுட்ப பயிற்சியில் மண்ணை வளப்படுத்துதல் பலவிதமான இடுப்பொருட்கள் தயாரித்தல் அமிர்த கரைசல் பஞ்ச காவியம் ஜீவாமிர்தம் தேமூர் கரைசல் போன்றவற்றை தயாரிக்கவும், பாரம்பரிய நெல் ரகங்களை எவ்வாறு […]
மதுரை அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி பட்டமளிப்பு விழா..
மதுரை அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அண்ணா தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தின் மதுரை மண்டல உறுப்புக் கல்லூரிகளான மதுரை, திண்டுக்கல் மற்றும் ராமநாதபுரம் பொறியியல் கல்லூரிகளின் 2022 – 2023 ஆம் ஆண்டிற்கான பட்டம் வழங்கும் விழா மதுரை கீழக்குயில் குடியில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தில் நடைபெற்றது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை அமைப்பின் தலைமைச் செயல் […]
இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் கல்லூரியில் இராணுவ வீரர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்து மரியாதை..
இலஞ்சியில் டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் அர்ப்பணிப்புகளை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்தப்பட்டது. தென்காசி மாவட்டம் இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் கார்கில் போர் வெற்றி தின விழா நடந்தது. இதில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் அர்ப்பணிப்புகள் மற்றும் தியாகங்களை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில், கல்லூரி முதல்வர் (பொ) தங்கம் தலைமை வகித்தார், உதவி பேராசிரியர் ஷீலா […]
இளைஞர்களை குறி வைக்கும் போதை ஆசாமிகள்; இரும்புக்கரம் கொண்டு கட்டுப்படுத்த மஜக வலியுறுத்தல்..
இளைஞர்களை குறி வைத்து தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விநியோகம் செய்யும் சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு கட்டுப்படுத்த வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நெல்லை மேலப்பாளையம் பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் பாளை ஃபாரூக் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் மாநில துணை செயலாளர் அலிஃப் பிலால் ராஜா, மண்டல இளைஞர் அணி அஷ்ரப், மாவட்ட பொருளாளர் முகம்மது அலி, மாவட்ட துணை செயலாளர் முருகேசன், […]
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மூலம் தமிழக விசைப்படகு மீது மோதி விபத்தில் ஒரு மீனவர் உயிரிழப்பு அதனை எதிரொலியாக ராமேஸ்வரம் மதுரை தேசிய நெடுஞ்சாலை உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்*
ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர் இந்நிலையில் INT – TN -10 – MM 73 என்ற எண் கொண்ட கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற மூக்கையா முத்து முனியாண்டி மலைச்சாமி ராமச்சந்திர ஆகிய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றச்சாட்டை முன்வைத்து விசைப்படகு மீது இலங்கை ரோந்து கப்பல் […]
மாற்றுத்திறனாளிகள் மனதில் மகிழ்ச்சியை விதைத்த மகத்தான திட்டங்கள்; மனிதநேயமிக்க முதல்வருக்கு மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த தென்காசி மாவட்ட பயனாளிகள்..
தமிழ்நாடு அரசின் மகத்தான திட்டங்கள் மாற்றுத்திறனாளிகள் மனதில் மகிழ்ச்சியை விதைத்துள்ளன. மனிதநேயமிக்க தமிழ்நாடு முதல்வருக்கு தென்காசி மாவட்ட பயனாளிகள் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தமிழக மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி பொருளாதாரத்தில் உயர எடுக்கும் எல்லா முயற்சிகளுக்கும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் மூலம் உறுதுணையாக நிற்கும் மக்கள் அரசாக திகழ்கிறது. மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த 1993ஆம் ஆண்டில் ஊனமுற்றோர் தனி இயக்ககம் சமூக நல இயக்ககத்திலிருந்து […]
கேரள மாநில நிலச்சரிவு; தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிதியிலிருந்து ரூ.5 கோடி நிவாரண உதவி..
நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட கேரளா மாநிலத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த ரூ.5 கோடிக்கான காசோலையை கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார். கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்புகொண்டு தம்முடைய ஆழ்ந்த வருந்தங்களையும் இரங்கலையும் தெரிவித்ததுடன், தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக […]
மக்களுடன் முதல்வர் திட்டம் முகாமில் தில்லையேந்தல் ஊராட்சி மன்ற துணைத் தலைவி மர்சூக் பானு குமுறல்
மக்களுடன் முதல்வர் திட்டம் முகாமில் தில்லையேந்தல் ஊராட்சி மன்ற துணைத் தலைவி மர்சூக் பானு குமுறல் ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாயாகுளத்தில் உள்ள சமுதாய கூடத்தில் ஊரக பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்டம் முகாமில் தில்லையேந்தல் பனையடியேந்தல் மேலமடை வேளானுர் மாயாகுளம் உட்பட சுற்று வட்டாரத்திலுள்ள கிராம மக்கள் கலந்து கொண்டு மனுக்கள் வழங்கினர் முகாமில் தில்லையேந்தல் ஊராட்சி மன்ற துணைத் தலைவி மர்சூக் பானு மனு வழங்கி தெரிவிக்கையில் தில்லையேந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட […]
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி..
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து ரூபாய் 3 லட்சம் நிதியுதவியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், சூரல்மலையில் பணியாற்றிவந்த நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம், சேரங்கோடு 1 கிராமம், கொல்லிஅட்டி, அம்பேத்கர் நகரைச் சேர்ந்த கல்யாணகுமார் (வயது 52) த/பெ. முருகையா என்பவர் நேற்று (30.07.2024) அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார் […]
நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிட திறப்பு விழா
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஒத்தக்கடையில் ரூ 75 லட்ச மதிப்பில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மருத்துவர் தினேஷ்,நகர்மன்ற துணைத் தலைவர் ரமேஷ் ஆணையாளர் பார்க்கவி பொறியாளர் மீரா அலி திமுக நகர செயலாளரும்,வார்டு உறுப்பினர் பெரி.பாலமுருகன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்தனர்.இதில் செவிலியர்கள், நகர் மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள், என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கீழக்கரையில் எஸ்டிபிஐ கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்வு
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தனியார் மகாலில் எஸ்டிபிஐ கட்சியின் தேசிய முதல் கிளை வரை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கீழக்கரை நகர் கமிட்டி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அப்துல்ஜமீல் , அபுல்கலாம் ஆசாத் ஆகியோர் தலைமை தாங்கினார். இதில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான எஸ்டிபிஐ கட்சியின் கீழக்கரை நகர் தலைவர் முகம்மது ஜலில் , செயலாளர் அகமது நதீர் […]
மதுரையில் SDTU தொழில் சங்கத்தின் சார்பாக தலைமைத்துவ பயிற்சி முகாம்
மதுரை தெற்கு மாவட்ட தலைமை அலுவலகத்தில் சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் (SDTU) சார்பாக தலைமைத்துவ பயிற்சி முகாம் மாநிலத் துணைத் தலைவரும் மதுரை மண்டல தலைவருமான அப்துல் சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது .மாநிலத் தலைவர் முகமது ஆசாத் ,தேசிய செயற்குழு உறுப்பினர் ஜலில் கரமனா, மாநில பொதுச் செயலாளர் ரவூஃப் நிஸ்தார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தலைமைத்துவ பயிற்சி வழங்கினார்கள். இறுதியாக மாநில செயற்குழு உறுப்பினர் மூர்த்தி நன்றியுரை கூறினார். இந்நிகழ்சியில் மதுரை […]
எங்களுக்கு அடிப்படை வசதிகள் வேணும்’ – தலையில் முக்காடு போட்டு ஆட்சியர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம்.!
ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றியம் ‘வீரவனூர்’ கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.தங்கள் பகுதிக்கு குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி பெண்கள் தலையில் முக்காடு அணிந்து ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அப்பகுதி கிராம மக்கள் கூறுகையில், எங்களது ஊராட்சிக்கு வழித்தடம் எண் 93 […]