அய்யங்கோட்டை பகுதியில் நலத்திட்ட உதவிகளை .வெங்கடேசன் எம்எல்ஏ வழங்கினார் சோழவந்தான் தொகுதிகுட்பட்ட அலங்காநல்லூர் ஒன்றியம் அய்யங்கோட்டை ஊராட்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு பொதுமக்களுக்கு டிபன்பாக்ஸ் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வெங்கடேசன் எம் எல் ஏ வழங்கினார். ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், சரந்தாங்கி முத்தையன், பரந்தாமன் அருண்குமார் நிர்வாகிகள் பிரதீப் சதீஷ் அய்யங்கோட்டை விஜி, மதுரை வடக்கு மாவட்ட நிர்வாகிகள், அய்யங்கோட்டை கிளை கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து வடுகபட்டி, […]
Category: செய்திகள்
பண்ணியான் கிராமத்தில் மழை வேண்டி அன்னதானம்
செக்கானூரணி அருகே பன்னியான் கிராமத்தில் ஆடி வெள்ளியை ஒட்டி மாரியம்மன் கோவிலில் மழை வேண்டி அன்னதானம் நடைபெற்றது மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே பன்னியான் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை ஒட்டி மழை வேண்டி அன்னதானம் நடைபெற்றது. அம்மனுக்கு பால் தயிர் வெண்ணெய் உட்பட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து கோவில் முன்பாக அமைக்கப்பட்ட பந்தலில் அறுசுவை அன்னதானம் காலை 8 […]
முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் ஓ.பன்னீர்செல்வம்: அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..
முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் ஓ.பன்னீர்செல்வம்: அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.. ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். காலை நடை பயிற்சியின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்திருந்தார். அப்போது முதலமைச்சரிடம் நலம் விசாரித்தார். இதனிடையே பிரதமர் மோடி சந்திக்க மறுத்த நிலையில் பாஜக கூட்டணியிலிருந்து பன்னீர்செல்வம் அணி விலகியது. பாஜக கூட்டணியில் இன்று பன்னீர்செல்வம் வெளியேறிய நிலையில் திமுக தலைவருடன் சந்தித்து பேசி வருகிறார். ஒரே நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இரண்டாவது முறையாக பன்னீர்செல்வம் […]
உசிலம்பட்டி காங்கிரஸ் கட்சி சார்பாக கண்டன பொது கூட்டம்
மதுரை தெற்கு மாவட்டம் காங்கிரஸ் கட்சி சார்பாக கண்டன பொதுக்கூட்டம் தேனிரோடு முருகன் கோவில் முன்பாக நடைபெற்றது. இந்திய அரசியல் அமைப்பை காப்போம் மற்றும் மீட்டெடுப்போம் என்ற தலைப்பில் மதுரை தெற்கு மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பாக கண்டன பொதுக்கூட்டம் தெற்கு மாவட்ட தலைவர் அம்மாபட்டி எம். பாண்டியன் தலைமையில் ஏ ஐ சி சி உயர் கமிட்டி உறுப்பினர் எஸ் ஓ ஆர் இளங்கோவன் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் டி சரவணக்குமார் […]
உசிலம்பட்டியில் முன்னாள் அமைச்சர் ,அதிமுக எம் எல் ஏ கடம்பூர் ராஜ் உருவ பொம்மை எரிப்பு
அதிமுக முன்னாள் பொதுச்செயலாளரும் முன்னாள் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துகளை தெரிவித்து இருந்தார்.இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பழைய பேருந்து நிலையம் முன்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசுதாகவும் அதனை கண்டித்தும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஜான்சன் பிரபு சசிகுமார் அழகுமாரி வேங்கை மார்பன் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுக எம்எல்ஏ கடம்பூர் ராஜு வின் உருவ பொம்மையை எரித்தும் அவரைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதனால் […]
சோழவந்தான் அருகே தென்கரை நவநீத கிருஷ்ண பெருமாள் கோவிலில் மகாரண்யம் முரளிதர சுவாமிகள் பக்தி சிறப்புரை
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத நவநீத கிருஷ்ண பெருமாள் கோவிலில் மகாரண்யம் முரளிதர சுவாமிகள் வழிபாடு செய்து சிறப்புரையாற்றினார். பெருமாளுக்கு சிறப்பு ஸ்தோத்திர பாடல்கள் பாடி அர்ச்சனைகள் செய்து தீபாராதனைகள் காட்டப்பட்டது தொடர்ந்து. முரளிதர சுவாமிகள் சிறப்புரை ஆற்றும் போது இறைவனை அடைய அவரது நாமங்களை கேட்பது சிறந்த வழி என்றும் தொடர்ந்து கிருஷ்ணர் கதையை கேட்க நமது பிறவி பெருங்கடல் தீரும் என்று கூறினார் இதில் தென்கரை சுற்று […]
திமுக ஆட்சியில் பங்கு தந்தால் மட்டுமே திமுகவோடு கூட்டணி – இல்லையெனில் விஜய் கூட்டணியை நோக்கி காங்கிரஸ் கிளி பறந்துவிடும் – என உசிலம்பட்டியில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகி பேச்சு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் சார்பில் இந்திய அரசியல் அமைப்பை காப்போம் மற்றும் மீட்டெடுப்போம் எனும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது., இந்த கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்ட மதுரை – சிந்தாமணி பகுதி தலைவர் வேல்முருகன், காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதியில் 5 ஆயிரம் வாக்குகள் இருக்காதா என திருச்சி சிவா பேசுகிறார், கேட்கிறார்., இவர்களை […]
உசிலம்பட்டி பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுடன் வெகுவிமர்சையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் 800க்கும் அதிகமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்., இந்த பள்ளியில் கருமவீரர் பெருந்தலைவர் காமராஜர் -ன் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாளாக மாணவ மாணவிகளின் பேச்சுப் போட்டி கலை நிகழ்ச்சியுடன் அனுசரித்து வெகுவிமர்சையாக கொண்டாடினர்., இவ்விழாவில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி.அய்யப்பன், ரோட்டரி சங்க மூத்த நிர்வாகி ராஜேந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர் மதன் பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு […]
கள்ளர் சீரமைப்பில் பணி நியமணம் எப்போது தமிழக அரசுக்கு தமிழ்நாடு கள்ளர் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் சங்க மாவட்ட நிர்வாகிகள் கேள்வி
உசிலம்பட்டி அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கள்ளர் பள்ளி மாவட்ட கிளையின் அவசர மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முருகன் தலைமை தாங்கினார்.உசிலம்பட்டி வட்டாரச் செயலாளர் இரா.செ. தமிழ்மணி வரவேற்புரை வழங்கினார்.மாவட்டச் செயலாளர் கோரிக்கை விளக்க உரையாற்றினார். கூட்டத்தில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. கள்ளர் சீரமைப்பில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக 18 இடைநிலை ஆசிரியர் பணி நாடுனர் பட்டியல் பெறப்பட்டுள்ளது தொடர்பாகவும், கடந்த ஆறு மாதங்களுக்கு […]
துபாய் விமானம் தொடர்ச்சியாக நேர தாமதம் பயணிகள் அதிருப்தி.!
துபாய் விமானம் தொடர்ச்சியாக நேர தாமதம் பயணிகள் அதிருப்தி மதுரை விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லக்கூடிய ஸ்பைஸ் ஜெட் விமானம் வழமையாக காலை 12:10 மணிக்கு புறப்பட வேண்டியிருந்தது. ஆனால், சமீபத்திய மாற்றங்களின் அடிப்படையில் இந்த விமானத்தின் புறப்பாட்டு நேரம் முதலில் மாலை 5:10 ஆக மாற்றப்பட்டது. அதன் பின்னர், மீண்டும் மாலை 6:10 ஆக மாற்றப்பட்டதற்கும் தொடர்ச்சியான நேர மாற்றங்களுக்கும் விமான பயணிகள் கடும் வேதனையை எதிர்கொண்டு வருகின்றனர். தொடர்ச்சியாக எந்த […]
ரோட்டரி இன்ட்ராக்ட் கிளப் புதிய நிர்வாகிகளாக மாணவிகள் தேர்வு .!
மேட்டுப்பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரோட்டரி இன்ட்ராக்ட் கிளப் புதிய நிர்வாகிகளாக மாணவிகள் தேர்வு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரோட்டரி இன்ட்ராக்ட் கிளப் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்ட மாணவிகளை அறிமுக கூட்டம் நடைபெற்றது புதிய தலைவராக நந்திகா செயலாளராக ஆசிபா பொருளாளராக ஹாசினி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சவிதா மருத்துவமனை மருத்துவர் சசித்திர கலந்துகொண்டு மாணவிகளிடையே தன்னம்பிக்கை குறித்து சிறப்புரை ஆற்றினார் இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் சீதாலட்சுமி உதவி […]
கீழே கிடந்துள்ள தங்கச் செயின்; உரியவரிடம் ஒப்படைத்த நேர்மை மிக்க காவலர்..
தென்காசி மாவட்டத்தில் தவறவிட்ட தங்கச் செயினை உரிய நபரிடம் ஒப்படைத்த தலைமைக் காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. தென்காசி மாவட்டம் வாசுதேவ நல்லூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வரும் சுடலை கண்ணு, பணி நிமித்தமாக தென்காசி வந்துவிட்டு மீண்டும் வாசுதேவ நல்லூர் செல்லும் வேளையில், தென்காசியில் உள்ள ஒரு டீக்கடைக்கு சென்ற போது அங்கு கீழே தங்க செயின் ஒன்று கிடந்துள்ளது. அதனை எடுத்த தலைமைக் காவலர், செயின் உரிமையாளர் இங்கே வந்தால் எனது […]
நிலக்கோட்டை பகுதியில், அரசு கள்ளர் விடுதியை சமூக நீதி விடுதிகள் என, பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு: 15 கிராமங்களில் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டம்..
நிலக்கோட்டை பகுதியில், அரசு கள்ளர் விடுதியை, தமிழக அரசு சமூக நீதி விடுதிகள் என, பெயர் மாற்றத்திற்கு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை 15 கிராமங்களில் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டம் நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே, விளாம்பட்டி, எஸ்.மேட்டுப்பட்டி, ராமராஜபுரம், முசுவனூத்து, துரைச்சாமிபுரம், நிலக்கோட்டை, காமாட்சிபுரம், தெப்பத்துப்பட்டி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் பிரமலைக்கள்ளர் இன மக்கள், தற்போது தமிழக அரசு அரசு கள்ளர் […]
வாடிப்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வெங்கடேசன் எம் எல் ஏ குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி சார்பில் வார்டு 1 முதல் 9 வரை உள்ள வார்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தனியார் மஹாலில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை வெங்கடேசன் எம் எல் ஏ குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மணிகண்டன் வாடிப்பட்டி வட்டாட்சியர் பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன் துணைத் தலைவர் கார்த்திக் முன்னாள் பேரூர் செயலாளர் பிரகாஷ் இளைஞர் அணி வெற்றிச்செல்வன் செயல் […]
மகளிர் உரிமைத் தொகை கோரி 5.88 லட்சம் பேர் மனு..
தமிழக அரசின் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் இதுவரை 12.65 லட்சம் பேர் மனு அளித்திருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கடைகோடி மக்களுக்கும் அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள்/திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்கும் நோக்கில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்த்தை கடந்த ஜூலை 15 அன்று முதல்வர் ஸ்டாலின், கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் தொடங்கிவைத்தார். வருகிற நவம்பர் மாதம் வரை தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் நடைபெறும் இந்த திட்டத்தில் […]
விதைப்பந்து புரட்சியை ஏற்படுத்திய திருமாறன்..
பூமியின் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்கும் விதமாக மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய சூழலில் மனித சமூகம் உள்ளது. அந்த வகையில், தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சமூக நல ஆர்வலர் வெங்காடம்பட்டி பூ.திருமாறன் பூமியில் மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் விதமாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரின் பங்களிப்புடன் ஒரு கோடி விதைப் பந்துகளை உருவாக்கும் திட்டத்தை முன்னெடுத்து விதைப்பந்து புரட்சியை ஏற்படுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள […]
ராமநாதபுரத்தில் தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் கண்ணீருடன் மனு.!
தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீருடன் மனு ராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டினம் பாம்பூரணி வடக்கரை பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளி தட்சணாமூர்த்தியின் மனைவி கீதா என்பவர், தவறான மருத்துவ சிகிச்சை காரணமாக தனது கருப்பை அகற்ற நேர்ந்துள்ளதாகக் கூறி, குற்றம் சாட்டிய மருத்துவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். தற்போது ஒரு குழந்தையின் தாயான கீதா, இரண்டாவது குழந்தை […]
கமுதி பேரூராட்சியில் தூய்மை பணிகள் பாதிப்பு.!
கமுதி பேரூராட்சியில் சாதி வேறுபாடுகள் காரணமாக தூய்மை பணிகள் பாதிப்பு – மாவட்ட ஆட்சியரிடம் தூய்மை பணியாளர்கள் மனு ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாக்கு உட்பட்ட கமுதி தேர்வு நிலை பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், பணியிடங்களில் சாதி வேறுபாடுகள் நடைபெறுவதால் தூய்மை பணிகள் பாதிக்கப்படுவதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனுவொன்று வழங்கினர். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 27 தூய்மை பணியாளர்கள் கமுதி பேரூராட்சியில் பணியாற்றி வருகின்றனர். ஆனால் இவர்களுடன் பணியாற்றும் குருதாம், ராமமூர்த்தி, மாரி, விஜயராகவன், […]
வேதாளை அம்பேத்கர் நகர் மக்கள் வீட்டுமனை பட்டா கோரி மாவட்ட கலெக்டரிடம் மனு.!
வேதாளை அம்பேத்கர் நகர் மக்கள் 20 ஆண்டுகளாக பட்டா கோரி போராடுகின்றனர்: மாவட்ட ஆட்சியரிடம் மனு ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியத்தில் உள்ள வேதாளை பஞ்சாயத்தின் கீழ் functioning அம்பேத்கர் நகர் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வரும் பட்டியல்வகுப்பு மக்களுக்கு நில உரிமை (பட்டா) கிடைக்காமல் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து பட்டா கோரி அதிகாரிகளிடம் மனு வழங்கியும், எந்தவிதமான தீர்வும் கிடைக்காமல் உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் […]
கருக்காத்தி காலணி மக்கள் குடிநீர் கேட்டு ஆட்சியரிடம் மனு!
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்தின் கீழ் இருக்கும் மேலமடைப் பஞ்சாயத்திலுள்ள கருக்காத்தி காலணி கிராம மக்கள், தங்களுக்கான குடிநீர் வழங்கல் முற்றிலும் நிறுத்தப்பட்டிருப்பதை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர். கடந்த ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட குடிநீர் சேவை தற்போது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டும் குடிநீர் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டும் முன்வைத்துள்ளனர். நாங்களும் ஓட்டு போட்டோம் எனவே மற்ற கிராமங்களைப் போன்று நாங்களும் குடிநீர் வசதியை பெற வேண்டும்,” என்கிறார்கள். தற்போது உப்பு தண்ணீரையே குடிக்க […]
You must be logged in to post a comment.