சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு பாராட்டு சான்று; நெல்லை சரக காவல்துறை துணைத்தலைவர் வழங்கினார்..

தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தினை தொடர்ந்து, திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் பா.மூர்த்தி I.P.S. சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு சான்றுகள் வழங்கி பாராட்டினார். தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் பா.மூர்த்தி I.P.S., தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் முன்னிலையில் மாவட்டத்திலுள்ள கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  பின்னர் ஆழ்வார்குறிச்சி காவல் […]

குற்றாலத்தில் சாரல் திருவிழா; மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் துவக்கி வைத்தார்..

தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சி கலைவாணர் அரங்கத்தில் குற்றாலம் சாரல் திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சி கலைவாணர் அரங்கத்தில் 16.08.2024 முதல் 19.08.2022 வரை ஆகிய 4 நாட்கள் நடைபெறவுள்ள குற்றாலம் சாரல் திருவிழாவின் துவக்க விழா 16.08.2024 அன்று தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.ராணி ஸ்ரீகுமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மரு.சதன் திருமலைக்குமார் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் […]

குற்றாலத்தில் தோட்டக்கலைத் திருவிழா மற்றும் மலர் கண்காட்சி; மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் துவக்கி வைத்தார்..

குற்றாலம் பேரூராட்சி அரசு சுற்றுச்சூழல் பூங்காவில் தோட்டக்கலைத் திருவிழா மற்றும் மலர்க் கண்காட்சியினை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் துவக்கி வைத்தார். தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சி அரசு சுற்றுச்சூழல் பூங்காவில் தோட்டக்கலைத் திருவிழா மற்றும் மலர்க்கண்காட்சி துவக்க விழா தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.ராணி ஸ்ரீகுமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனி நாடார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரா.சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது.    இவ்விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் […]

இந்திய ஜனாதிபதியின் திமோர் நாட்டு பயணம்; வெளிநாட்டு மருத்துவக் கல்விக்கு புதிய வழியை ஏற்படுத்தும்..

இந்திய ஜனாதிபதியின் திமோர் நாட்டு அரசு முறை பயணம் வெளிநாட்டு மருத்துவக் கல்விக்கு புதிய வழியை ஏற்படுத்தும் என திமோர் நாட்டு பீஸ் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியின் இந்திய இயக்குநர்கள் தெரிவித்தனர். பல்வேறு ஒப்பந்தங்கள் நிமித்தம் அரசு முறை பயணமாக திமோர் நாட்டிற்கு வருகை புரிந்த இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவை இந்திய பிரமுகர்கள் ஐசக் பாஸ்கர், பூ. திருமாறன், டாக்டர் ஐசலின், சேலம் ஆபிரகாம் திமோர் தலைநகர் டிலியில் சந்தித்தனர். ஆசிய கண்டத்தின் ஒரு அங்கமாகத் […]

தேனியில் பதுக்கி வைத்து புழக்கத்தில் விட இருந்த ரூ.3 கோடியே 40 லட்சம் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல், 2 பேர் கைது..

தேனியில் பதுக்கி வைத்து புழக்கத்தில் விட இருந்த ரூ.3 கோடியே 40 லட்சம் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல், 2 பேர் கைது.. தேனி மாவட்ட போலீசாருக்கு சென்னை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் புகார் மனு  அளித்திருந்தார் அதில் 500 ரூபாய் நோட்டுகள் கொடுத்தால் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தருவதாகவும், அதாவது ஒரு லட்சம் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகள் கொடுத்தால் ஒரு லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள 2 ஆயிரம் […]

வத்தலகுண்டு ரோட்டரி சங்கம் சார்பாக,78- வது சுதந்திர தின விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன..

வத்தலகுண்டு ரோட்டரி சங்கம் சார்பாக, 78- வது சுதந்திர தின விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.. திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலக்குண்டு அரசு நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது. பள்ளியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் பல மரக்கன்றுகள் நடப்பட்டது. விழாவில், சிறப்பு விருந்தினர்களாக,வத்தலகுண்டு ரோட்டரி சங்கத் தலைவர் மருத்துவர் யூசுப் மௌலானா, செயலாளர் மகேந்திர பாண்டியன் துணை ஆளுநர் மாதவன், மற்றும் […]

சிறப்பாக செயல்பட்ட நிலக்கோட்டை வட்டாட்சியருக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டு..

சிறப்பாக செயல்பட்ட நிலக்கோட்டை வட்டாட்சியருக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டு.. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டாட்சியராக தனுஷ்கோடி பணியாற்றி வருகிறார். இவர் பொறுப்பேற்ற நாளில் இருந்து மக்கள் நலன் சார்ந்த விஷயங்களிலும் சமூக அக்கறை கொண்ட விஷயங்களிலும் தனி கவனம் செலுத்தி, தீர்வு காண முடியாத பல்வேறு பிரச்சனைகளை இலகுவாக கையாண்டு தீர்வு கண்டுள்ளார். நிலக்கோட்டை சுற்று வட்டாரத்தில் உள்ள பல கிராமங்களில் கோவில் கும்பாபிஷேக பிரச்சினைகள் தொடர்ச்சியாக இருந்து வந்த நிலையில் அவைகளை சுமூகமாக […]

மதுரை விமான நிலையத்தில் இந்தியாவின் 78வது சுதந்திர தினவிழா..

இந்தியாவின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் விஸ்வநாதன் தேசிய கொடியை ஏற்றி அணி வகுப்பு மரியாதை ஏற்று கொண்டார். மதுரை விமான நிலையத்தில் விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் தேசிய கொடியேற்றி மத்திய தொழிற் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு வழியாக ஏற்றுக் கொண்டார். மதுரை விமான நிலைய வளாகத்தில் அமைந்துள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை மைதானத்தில் மத்திய தொழிற் பாதுகாப்பு படை சார்பில் […]

தென்காசியில் ஒன்றிய அரசை கண்டித்து மதிமுக ஆர்ப்பாட்டம்..

தென்காசியில் மதிமுக சார்பில் ஒன்றிய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டடம் நடந்தது. ஒன்றிய பாஜக அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ் நாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாததைக் கண்டித்தும், சமூக நீதிக்கும் சமத்துவத்திற்கும் எதிரான நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பத்து ஆண்டு காலம் ஒன்றிய பா.ஜ.க., அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சித்து வருகின்றது, 18-ஆவது மக்களவைத் […]

தென்காசி மாவட்டத்தில் இந்திய தேசத்தின் 78வது சுதந்திர தின விழா; நற்சான்றுகள் வழங்கல்..

தென்காசி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர் தலைமையில் 78 வது சுதந்திர தின விழா நடந்தது. தென்காசி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இன்று (15.08.2024) நடைபெற்ற 78 வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர், தேசியக் கொடியினை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக் கொண்டார். சிறப்பாகப் பணியாற்றிய பல்வேறு துறைகளைச் […]

உசிலம்பட்டி அருகே அரசு பள்ளியின் 100வது ஆண்டு விழாவில் மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி முன்னாள் மாணவர்கள் ஊக்கப்படுத்தினர்.,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நல்லுத்தேவன்பட்டியில் அமைந்துள்ளது அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி, 1924 ஆம் ஆண்டு கள்ளர் சீரமைப்புதுறையின் கீழ் துவங்கப்பட்டு பல்வேறு மாணவ மாணவிகளின் கல்வி கண் திறந்த இப்பள்ளியின் 100வது ஆண்டுவிழா இன்று நாட்டின் 78வது சுதந்திர தினத்துடன் இணைந்து கொண்டாடப்பட்டது.,இந்த அரசு பள்ளியின் 100வது ஆண்டு விழாவில் முன்னாள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பள்ளியின் வளர்ச்சிக்கான முன்னெடுப்பின் முதற்கட்டமாக கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்வில் 10, 11, 12 ஆம் வகுப்புகளில் […]

சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறையையொட்டி இன்று மற்றும் ஆக.16,17ல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறையையொட்டி இன்று மற்றும் ஆக.16,17ல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்று 470 பேருந்துகளும், ஆகஸ்ட் 16, 17 தேதிகளில் 365 பேருந்துகளும் இயக்கம். கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, வேளாங்கண்ணி, பெங்களூரு, நாகை, ஒசூர் ஆகிய பகுதிகளுக்கு இன்று 70 பேருந்துகளும், ஆகஸ்ட் 16, 17 தேதிகளில் 65 பேருந்துகளும் இயக்கம். பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவையில் […]

டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி: நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாட்டம்!

டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி: நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாட்டம்!  நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். நாட்டின் 78வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பாரம்பரிய வழக்கப்படி தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக […]

“தேசத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது எப்படி” ஜெ.பி கல்லூரியில் நடந்த சிறப்பு நிகழ்ச்சி..

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அருகே உள்ள ஜெ.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு இலக்கு இதழும், ஜெ.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இணைந்து “தேசத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது எப்படி” என்ற தலைப்பில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் ஆகஸ்ட் 13 அன்று நடைபெற்றது. இதில், ஜெ.பி.பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரியின் நிர்வாகி ப. ஹேம்லெட் தலைமை உரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜ. மைக்கேல் மரியதாஸ், […]

தென்காசி மாவட்டத்தில் போதை பொருட்கள் நடமாட்டம் முற்றிலும் ஒழிக்கப்படும்; புதிய எஸ்பி உறுதி..

தென்காசி மாவட்டத்தில் போதை பொருட்கள் நடமாட்டம் முற்றிலும் ஒழிக்கப்படும் என்றும், ஜாதி மத மோதல்கள், ரெளடிகளின் செயல்பாடுகள் அனைத்தும் ஒடுக்கப்படும் எனவும் புதிதாக பதவியேற்றுள்ள எஸ்.பி வி.ஆர்.சீனிவாசன் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டத்தின் 5வது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக வி.ஆர்.சீனிவாசன் இன்று (14.08.2024) பதவி ஏற்றுக்கொண்டார். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.ஆர்.சீனிவாசன் முன்னதாக அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும், திருநெல்வேலி மாநகர கிழக்கு துணை ஆணையராகவும், திருவாரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும், சென்னை பெருநகர […]

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற 16வது அமைச்சரவை கூட்டம்; 15 புதிய தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல்..

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் 16-வது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சரவைக் கூட்டத்தில் தொழில் துறை சார்பில் 24,700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.44,125 கோடி முதலீட்டிற்கான 15 புதிய தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 24,700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.44,125 கோடி முதலீட்டிற்கான 15 புதிய தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல்: இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் புதிய தொழில்கள் தொடங்குவதற்கான 15 முதலீட்டுத் திட்டங்களுக்கு […]

தென்காசியில் போதை தடுப்பு உறுதி மொழியேற்ற அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள்..

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதி மொழி ஏற்கப்பட்டது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் போதை தடுப்பு உறுதிமொழியினை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் தலைமையில் ஏற்றுக்கொண்டனர்.  இதில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின், போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் போதிய சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் மருத்துவர் மூலம் வழங்கப்படுவதாகவும், பொதுமக்கள் அதனை பயன்படுத்தி கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் […]

வயநாடு பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் யுனைடெட் கல்வி குழும அறக்கட்டளை சார்பாக, யுனைடெட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் சுமார் ஒரு இலட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை, மேட்டுப்பாளையம் CITU பொதுத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் நம்ம மேட்டுப்பாளையம் தோழர்களிடம் வழங்கினர். தற்போது முகாம்களில் தங்கி இருப்பவர்கள், மறுகுடியிருப்பு அமர்த்தப்படும்போது தேவைப்படும் பொருட்களை இவர்கள் வாங்கி தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் யுனைடெட் கல்வி நிறுவனங்களின் தலைவர் சண்முகம், யுனைடெட் கலை […]

கள்ளர் பள்ளிகளை அரசு பள்ளிகளோடு இணைப்பதை எதிர்த்து இந்திய மக்கள் பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தமிழகம் முழுவதும் கள்ளர் பள்ளிகளை அரசு பள்ளிகளோடு இணைக்கும் தமிழக அரசின் முடிவுக்கு தென் மாவட்டங்களில் எதிப்பு கிளம்பியுள்ளது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் அமைந்துள்ள முருகன் கோவில் முன்பு இந்திய மக்கள் பார்வர்ட் பிளாக் மாநில செயலாளர் நேதாஜி தலைமையில் பிரமலைக்கள்ளர் கள்ளர் பள்ளிகளின் மாணவர்களும் வழக்கறிஞர் சங்கத்தினர் பொதுமக்கள் ஆகியோர் ஒன்றிணைந்து கள்ளர் பள்ளிகளை அரசு பள்ளிகளோடு இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் […]

குற்றாலம் சுற்றுலா வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுவது கட்டுப்படுத்தப்பட வேண்டும்; மஜக கூட்டத்தில் வலியுறுத்தல்..

குற்றாலம் சுற்றுலா வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுவது கட்டுப்படுத்தப்பட வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி வலியுறுத்தியுள்ளது. தென்காசி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாக குழு கூட்டம் மாவட்டச் செயலாளர் அஜ்மீர் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணை செயலாளர் நெல்லை பிலால் கலந்து கொணடார். மாவட்ட பொருளாளர் சையது அலி மாவட்ட துணை செயலாளர்கள் சிக்கந்தர், சங்கை இஸ்மாயில் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வக்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!