ராமநாதபுரத்தில் தனியர் மகாலில் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் என் உயிரினும் மேலான.. கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சம்பத்ராஜா ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மாவட்ட கழக செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமை வகித்தார்.. மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் ஜி.பி.ராஜா, இன்பா ஏ.என்.ரகு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் விழா சிறப்புரையாற்றினார் இதில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 225 மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு கலைஞரின் சமூக நீதி, […]
Category: செய்திகள்
வோளனூர் கிராமத்தில் செயல் விளக்கப் பயிற்சி முகாம்
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட வோளனூர் கிராமத்தில் கிரியேட் நிறுவனத்தின் மூலம் விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் குறித்த ஒரு நாள் செயல் விளக்கப் பயிற்சி முகாம் ஆலமரத்தடியில் சுற்றுச் சூழலுக்கு உகந்த வகையில் நடைப்பெற்றது. இப்ப பயிற்சியில் விவசாயிகளுக்கு மனித ஆரோக்கியம், மண் சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பற்ற இரசாயன உள்ளீடுகளின் மீதான வெளிச் சார்பை விவசாயிகள் எவ்வாறு குறைப்பது என்பது குறித்தும் , பண்ணை மற்றும் கிராம மட்டங்களில் உள்ளூரில் கிடைக்கும் மூலப் பொருட்களைப் பயன்படுத்தி பத்திற்கு […]
தேவர் கல்லூரியை திமுக அறக்கட்டளைக்கு தாரை வார்க்க நினைக்கும் செயலை கண்டித்து இந்திய பார்வர்ட் பிளாக் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கள்ளர் கல்விக் கழகத்தின் கீழ் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி செயல்பட்டு வருகின்றது.இதன் தலைவர் செயலாளர்கள் நியமனம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.இந்நிலையில் கள்ளர் கல்விக்கழகத்தின் தலைவர் என்று கூறிக் கொண்டு அய்யர் என்பவர் தன்னிச்சையாக கூட்டங்களை நடத்தி உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியை சென்னையிலுள்ள டாக்டர் கலைஞர் கருணாநிதி அறைக்கட்டளை தத்து எடுக்க ஆவண செய்யுமாறு முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் கல்லூரி கல்வித்துறைக்கும் மனு அனுப்பியுள்ளார்.இந்த மனுவை பரிசீலனை […]
ரவண சமுத்திரம் ரயில் நிலைய அதிகாரியாக தமிழர் நியமனம்; சமூக நல்லிணக்க கூட்டமைப்பு அதிகாரிகளுக்கு நன்றி..
ரவண சமுத்திரம் ரயில் நிலைய அதிகாரியாக தமிழர் நியமனம் செய்யப்பட்டதற்கு சமூக நல்லிணக்க கூட்டமைப்பினர் ரயில்வே மேலதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ள ரவணசமுத்திரம் ரயில் நிலையத்தை, ரவணசமுத்திரம், பொட்டல்புதூர், வீராசமுத்திரம், மந்தியூர், தர்மபுரம் மடம், கோவிந்தப்பேரி, வாகைகுளம், நாணல்குளம், முதலியார்பட்டி, திருமலையப்பபுரம், உள்ளிட்ட பல கிராம மக்கள், ரயில் பயண தேவைகளுக்காக, பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தமிழ் தெரியாத நபர், ரயில் நிலைய அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருந்ததால் […]
தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்களை பெற்ற காவலர்கள்; தென்காசி மாவட்ட எஸ்.பி பாராட்டு..
தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக செயல்பட்டு தமிழ்நாடு முதலமைச்சரின் பதக்கங்களை பெற்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் தலைமைக்காவலர் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் நேரில் அழைத்து பாராட்டினார். சென்னையில் நடைபெற்ற இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள், ஒன்றிய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழாவில் காவல்துறை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, […]
மதுரையில் அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்கள் சாலை மறியல்..
மதுரை அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்கள் 500க்கும் மேற்பட்டோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில், மதுரை அரசு போக்குவரத்து கழக மண்டல தலைமை அலுவலகம் முன்பாக ஓய்வூதியர்களுக்கான 105 மாத DA நிலுவை தொகை வழங்க வேண்டும், 20 மாத பணபலன்களை உடனடியா விடுவிக்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்டோர் […]
சொகுசு காரில் தொடர்ந்து ஆடு திருடிய கும்பல்: காட்டிக் கொடுத்த சிசிடிவி காட்சி..!
சொகுசு காரில் வந்து போலி நம்பர் பிளேட்களை பயன்படுத்தி கிராமம் கிராமமாக சென்று ஆடு திருடும் இரண்டு ஆசாமிகளை, சிசிடிவி காட்சிகளை தொடர்ந்து கண்காணித்து கார் மற்றும் ஆடுகளுடன் ராமநாதபுரம் போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களிலும் தொடர்ந்து ஆடுகள் திருட்டு போவதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்ததை தொடர்ந்து, மாவட்ட எஸ்பி சந்தீஷ் கார்களில் வந்து ஆடுகள் திருடிச் செல்லும் கும்பலை பிடிக்க கேணிக்கரை காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் தலைமையில் தனிப்படை […]
மேலமடை கிராம மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை !
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலமடை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே புதிதாக கட்டப்பட்ட கால்வாய் மூடி உடைந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு பொதுமக்களுக்கும் ஆபத்தான முறையில் இருந்து வருகிறது.. சில மாதத்திற்கு முன்பாக தரமற்ற கம்பிகள் மூலம் மூடிகள் போடப்பட்டு இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அப்பகுதியில் அரசு போக்குவரத்து பேருந்துகள் கனரக வாகனங்கள் வந்து செல்லும் சாலையாக இருப்பதால் தரமான மூடிகளை அமைத்து தர வேண்டும் என்றும் தரமற்ற மூடிகளை […]
ராமநாதபுரத்தில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற போதை பொருள் எதிர்ப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி.!
ராமநாதபுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் போதைப் பொருள் எதிர்ப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் 500 மேற்பட்ட பெண்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். ஏராளமான ஆண்களும் இந்த பேரணியில் பங்கேற்றனர். ராமநாதபுரம் சந்தை திடலில் துவங்கிய இந்த பேரணி சின்னக்கடை வழியாக பாரதி நகர் பள்ளிவாசல் அருகே நிறைவடைந்தது. பேரணியில் சென்றவர்கள் போதை பொருள் நடமாட்டத்தை தமிழக அரசு தடுக்க வேண்டும் என்றும், டாஸ்மாக் கடைகளை தமிழகம் முழுவதும் மூட வேண்டும் என்றுm […]
உறுப்பினர் சேர்க்கை இயக்கம்- உசிலை நகர பாஜக மண்டல் கூட்டம்
பாஜக மண்டல் கூட்டம் உறுப்பினர் சேர்க்கை முகாம் -2024 பயிலரங்கம் உசிலம்பட்டி நகர் மண்டல் தலைவர்.பிரசாத் கண்ணன் தலைமையில் உசிலம்பட்டி குருசாமி கோவில் வண்ணாரப் பேட்டை அரங்கில் நடைபெற்றது, இப்பயிலரங்கத்தில் மதுரை மேற்கு மாவட்டச் செயலாளர்.கவிதா கலந்து கொண்டு வழிகாட்டினார்.பயிலரங்க முன்னிலை மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் நகர பார்வையாளர் வீரபிரபாகரன் மற்றும் சிறப்பு விருந்தினராக மாவட்ட அணி பிரிவு தலைவர்கள் – செயலாளர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இப் பயிலரங்கத்திற்கு. உசிலை நகர் மண்டல் 5 நபர் […]
உசிலம்பட்டியில் பள்ளியில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவில் குழந்தைகள் கிருஷ்ணன்-ராதை வேடமணிந்து வந்தனர்.
தமிழகமெங்கும் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு உதவி பெறும் பள்ளியான நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.இதில் பள்ளி மாணவ மாணவிகள் சுமார் 30க்கும் மேற்ப்பட்டோர் கிருஷ்ணன் -ராதை வேடமணிந்து வந்து மேடையில் தோன்றியது பார்வையாளர்கள் மத்தியில் பரவசத்தை ஏற்ப்படுத்தியது.இவ்விழாவில் பங்கேற்று கிருஷ்ணன்-ராதை வேடமணிந்த அனைவருக்கும் பள்ளி தலைமை ஆசிரியர் மதன்பிரபு பரிசுகள் வழங்கினார்.
உசிலம்பட்டி அருகே கிராமத்தில் முன்அறிவிப்பின்றி வீட்டிற்கு போடப்பட்டிருந்த குடிநீர் குழாய்கள் அகற்றப்பட்டதால் கிராம மக்கள் அதிர்ச்சி.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எருமார்பட்டி பஞ்சாயத்து ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் சந்திரா பாண்டி. இவர் கடந்த ஆண்டு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார்.இவர் உயிருடன் இருந்த போது எருமார்பட்டி பஞ்சாயத்திற்க்கு உட்பட்ட அம்முமுத்தன்பட்டி கிராமத்தில் வீடுதோறும் ஆண்டிபட்டி கூட்டுக் குடிநீர் திட்டத்;தின் கீழ் ஒவ்வொரு வீடுகளிலும் குடிநீர் குழாய் இணைப்பு பதிக்கப்பட்டுள்ளது.அவர் இறந்த பின் தற்போது தற்காலிக ஊராட்சி மன்ற தலைவராக் ராணி பெருமாள் என்பவர் பதவி வைத்து வருகின்றார். இந்நிலையில தற்போதைய ஊராட்சி […]
உசிலம்பட்டியில் நடிகர் விஜயின் கொடி அறிமுகத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
உசிலம்பட்டி பி எம் டி நகரில் தமிழக வெற்றி க்கழக கட்சி கொடி வெளியிட்டு விழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் சதீஷ்குமார் தலைமையில் உசிலம்பட்டி சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர் விஜய் மகாலிங்கம் முன்னிலையில் நகர இளைஞரணி விஸ்வா, ஜெயபால், மனோபாரத், ஆகியோர் ஏற்பாட்டில் தமிழக வெற்றி கழகம் கட்சி கொடி அறிமுக விழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மகளிர் அணி […]
கொசுத் தொல்லை பொதுமக்கள் அவதி
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளிலும் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது.இதனால் குழந்தைகள் மற்றும் நோயாளிகள் இரவு நேரங்களில் மிகவும் சிரமப்படுகின்றனர்.கொசுக்களினால் டெங்கு, மலேரியா போன்ற நோய் பரவும் அபாயம் உள்ளது.எனவே கொசு தொல்லையை கட்டுப்படுத்த கொசு மருந்து அடிக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை.
திமுகவில் இருந்து விலகி SDPI கட்சியில் இணைந்த ஆட்டோ ஓட்டுனர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்.
இராமநாதபுரம் நம்புதாலையில் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் SDPI கட்சியின் கொள்கைகளால் கவரப்பட்டு தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர்.இந்நிகழ்ச்சியின் போது திருவாடானை ஒன்றிய தலைவர் அப்துல் மஜீத் மற்றும் நம்புதலை நகர செயலாளர் கலபத் சகுபர் சாதிக் உடன் இருந்தனர்.
தள்ளாத வயதிலும் சாணை தீட்டும் தொழில் செய்து வாழும் முதியவர் – ‘அரசு சலுகையா’ அப்படினா என்ன..? என கேட்கும் அப்பாவித்தனம்..
நவீன இயந்திரங்கள் குவிந்து கிடக்கும் இந்தக் காலத்தில் சாணை தீட்டும் தொழிலை செய்து தள்ளாத வயதில் முதியவர் ஒருவர் வாழ்வாதாரம் நகர்த்தி வருகிறார். ‘கத்தியை தீட்டாதே… உந்தன் புத்தியை தீட்டு’ என்ற பாடலை அறியாதோர் இருக்க முடியாது. அதே போல, தீட்டுதல் என்றவுடன், சாணை பிடிக்கும் கருவியும்,அதை சுமந்து திரியும் தொழிலாளியும் ஞாபகத்துக்கு வராமல் இருக்க முடியாது.நவீன தொழில்நுட்ப வாழ்க்கையில், எல்லாமே, ‘யூஸ் அண்ட் த்ரோ’ ஆகி விட்ட நிலையில்,இந்தக் காலத்தில் இத்தொழிலுக்கு மவுசு உள்ளதா எனக்கேட்டால், […]
தங்கச்சி மடத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தில் உணவு கடைகளையும் மாலை நேர தள்ளுவண்டி உணவுகடைகள், துரித உணவு வகைகள் போன்றவர்களை மண்டபம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் கு.லிங்கவேல் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு செய்த பொழுது உணவு வணிகத்திலிருந்து பெறப்பட்ட ரகசிய தகவலின் பேரில் பாம்பன் பகுதியில் சிந்தா மளிகை ஸ்டோர் எனும் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவரிடம் விசாரித்த பொழுது நந்தகுமார் என்பவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலைப் […]
சாயல்குடி அருகே 1400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல், கடத்த பயன்படுத்த டாடா சுமோ கார் பறிமுதல், குற்றவாளிகள் தப்பி ஓட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே நரிப்பையூர் கடற்கரை தரவைப் பகுதியில் டாடா சுமோ கார் ஒன்று நீண்ட நேரமாக அப்பகுதியில் நிற்பதாக வாலிநோக்கம் கடலோர பாதுகாப்பு குழுமத்தினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கடத்தல் பொருட்கள் எதுவும் கொண்டு வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் கடலோர பாதுகாப்பு போலீசார் அந்த சுமோ காரை சோதனை இட்டதில் கார் பழுதாகி அதில் 35 மூட்டைகளில் 1400 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். […]
கீழக்கரையில் எஸ் டி பி ஐ கட்சியின் செயல் குழு கூட்டம் ! நகராட்சியை கண்டித்து மின்வாரியத் துறையை கண்டித்தும் தீர்மானம் !!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம் நகர் தலைவர் ஜலில் தலைமையில் தொகுதி துணைத் தலைவர் தாஜுல் அமீன் , மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பகுருதீன் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக மாநில செயற்குழு உறுப்பினர் ஜஹாங்கீர் அரூஸி , விம் மாவட்ட துணைத் தலைவர் முபினா இஸ்மாயில், விம் நகர் தலைவர் சுல்தான் பிவி எஸ்டிபிஐ முன்னாள் நகர் தலைவர்கள் நூருல் ஜமான் , கீழை அசரப் ஆகியோர் கலந்து […]
முக்கிய சரித்திர குற்றவாளியை கைது செய்த தென்காசி மாவட்ட தனிப்படை போலீசார்; மாவட்ட எஸ்.பி பாராட்டு..
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய முக்கிய சரித்திர பதிவேடு குற்றவாளியை தென்காசி மாவட்ட எஸ்.பி உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பல சீறிய முயற்சிகளை முன்னெடுத்து குற்றவாளி பாலமுருகனை கைது செய்த தென்காசி மாவட்ட தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R ஸ்ரீனிவாசன் வெகுவாக பாராட்டினார். தென்காசி மாவட்டம், கடையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடையம் கல்யாணிபுரம் ஊரைச் சேர்ந்த மாடசாமி என்பவரது மகன் பாலமுருகன். சரித்திர பதிவேடு ரௌடியான பாலமுருகன் தமிழ்நாடு […]