புதுப்பிக்கப்பட்ட பாம்பன் பாலம்! அக். 2ல் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி? புதுப்பிக்கப்பட்ட பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைப்பதற்காக அக்டோபர் 2ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாம்பனில் கட்டப்பட்டுள்ள மண்டபம்-ராமேஸ்வரம் இடையேயான புதிய ரயில் பாலத்தை வருகிற அக்டோபா் மாதம் 2ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 22 மாதங்களாக, ராமேஸ்வரத்துக்கான ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த பாலம் திறந்த […]
Category: செய்திகள்
நிலக்கோட்டை காவலர் குடியிருப்பை “காவு” வாங்கும் கயவர்கள்! அச்சத்தில் பொதுமக்கள்! அசந்து தூங்கும் நிர்வாகம்..
நிலக்கோட்டை காவலர் குடியிருப்பை “காவு” வாங்கும் கயவர்கள்! அச்சத்தில் பொதுமக்கள்! அசந்து தூங்கும் நிர்வாகம்.. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் அமைந்துள்ள காவலர் குடியிருப்பு பாழடைந்தும் சமூக விரோதிகளுக்கு புகழிடமாகவும் திகழ்கிறது. மக்கள் குடியிருப்புகள் மற்றும் பிரபலமான பள்ளி மற்றும் குழந்தைகள் பெண்கள் அதிகளவில் நடமாடும் பகுதிக்கு மத்தியில் இந்த பாழாப்போன கட்டிடங்கள் இருப்பது தான் பிரச்சனையே. இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக மர்ம நபர்கள் சிலர் போதையில் பட்டப்பகலில் இந்த கட்டிடங்களின் ஜன்னல் கம்பிகளை உடைத்து எடுத்து […]
அரசியல் வாதிகள் கார் கதவுகளை போலீஸ் திறப்பதா?; டிஜிபி தேவாரம் எழுதிய நூலில்..
தமிழக முன்னாள் டிஜிபி வால்டர் தேவாரம், தம் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் மற்றும் குறிப்புகள் பற்றிய நூல் ஒன்றினை எழுதியுள்ளார். “மூணாறிலிருந்து மெரினா வரை” எனும் தலைப்பில் எழுதிய அந்த நூலில் “அரசியல்வாதிகள் கார் கதவுகளை போலீஸ் திறப்பது சரியில்லை” என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்துள்ளார் டிஜிபி வால்டர் தேவாரம். அவர் எழுதிய புத்தகங்கள் நூலகங்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வால்டர் தேவாரம் என்ற பெயரைக் கேட்டாலே கூன் விழுந்த முதுகும் நிமிர்ந்து நேராகும். […]
நெல்லை தென்காசி மாவட்டங்களில் இன்று மின்தடை..
தென்காசி, செங்கோட்டை, சுரண்டை மற்றும் சாம்பவர் வடகரை உபமின் நிலையங்களில் 10.09.2024 செவ்வாய்க் கிழமை (இன்று) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜர்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல்வலசை, இலத்தூர், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தாளம் பாறை, திரவியநகர், ராமச்சந்திர பட்டணம், மேலமெஞ்ஞானபுரம், செங்கோட்டை, கணக்கப்பிள்ளை வலசை, பெரிய பிள்ளை வலசை, பிரானூர், வல்லம், கற்குடி, புளியரை, தெற்கு மேடு, பூலாங்குடியிருப்பு, கட்டளை குடியிருப்பு, சுரண்டை, இடையர் தவணை, குலையனேரி, இரட்டைக் […]
தென்காசி மாவட்டத்தில் சிறப்பு கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி; மாவட்ட கலெக்டர் அறிவிப்பு..
தென்காசி மாவட்டத்தில் +2 மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி படிப்புகளுக்கு வழிகாட்டும் நான் முதல்வன் – உயர்வுக்குப் படி 2024 நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் +2 மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி படிப்புகளுக்கு வழிகாட்டும் நான் முதல்வன் – உயர்வுக்குப் படி 2024 நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி தென்காசி, சங்கரன்கோவில் ஆகிய இரண்டு மண்டலங்களில் நடைபெறும். இதில் தென்காசி மண்டலத்தில் வரும் […]
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!!
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று (06.09.2024) மற்றும் நாளை (07.09.2024) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 08.09.2024 முதல் 12.09.2024 வரை: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். […]
கண் பார்வையை மேம்படுத்தும் சொட்டு மருந்து முதன் முறையாக இந்தியாவில் அறிமுகம்!!
கண் பார்வையை மேம்படுத்தும் சொட்டு மருந்து முதன் முறையாக இந்தியாவில் அறிமுகம்!! என்டோட் மருந்து தயாரிப்பு நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கும் பிரெஸ்வு என்ற கண் சொட்டு மருந்துகளைப் பயன்படுத்துவதால், படிக்கும்போது மட்டும் சிறு எழுத்துகள் தெரியாததால் கண்ணாடி அணிபவர்கள், பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் வரும் அக்டோபர் மாதத்தில் இருந்து விற்பனைக்கு வரும் என்றும், இதன் விலை ரூ.350 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் கடந்த மாதம், இந்த கண் சொட்டு மருந்துக்கு அனுமதி […]
நீர்நிலை கால்வாய்களை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை
ராமநாதபுரம் மாவட்டம், ராஜசிங்கமங்கலம் வட்டம், ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட நீர்நிலைகளான அரசூரணி, சந்தூரணி மற்றும் புலவர் அப்பா தர்ஹா ஊரணிகள் ஆர்.எஸ்.மங்கலத்துக்கு உட்பட்ட பகுதிகளின் நிலத்தடி நீரை உயர்த்துவதற்கு முக்கிய பங்காற்றுகின்றன. மேலும் இவை பொதுமக்கள் குளிப்பதற்கு ஏதுவானதாகவும் உள்ளன.இந்த ஊரணிகளுக்கு நீர் வந்து செல்லும் வாய்க்கால்கள் பல இடங்களில் தடைபட்டும், சில இடங்களில் தூர்ந்து போயும், மேலும் சில இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டும் உள்ளது.இதனால் ஊரணிக்கு நீர் வரத்து தடைபடுகிறது. மழை காலங்களில் போதிய நீரை தேக்கி […]
ஆசிரியர் தின விழா
உசிலம்பட்டி சக்கரவர்த்தி வித்யாலயா பள்ளியில் தாளாளர் முனைவர் லயன் வேல்முருகன் தலைமையில் பள்ளி தலைமை ஆசிரியர் லயன்.. அமுதப்பிரியா முன்னிலையில் ஆசிரியர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது .சி எஸ் ஐ பேராலய அருள் தந்தை கார்டர் ஜான்சன் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு விழாவினை துவக்கி வைத்தார்கள் . மேலும் ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கி வாழ்த்துரை வழங்கினார்கள். பள்ளி ஆசிரியை செல்லராணி வரவேற்புரை வழங்கினார்கள். விழாவில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களும் ஆசிரியர்களுக்கு இனிப்புகள் மற்றும் பரிசு […]
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தங்களின் ஆசிரியர்களுக்கு பரிசுப்பொருட்கள் வழங்கி மகிழ்ந்த பள்ளிக்குழந்தைகள்.
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்பர்.அந்த இறைவனுக்கு ஒப்பான ஆசிரியர்களை கௌரவப்படுத்தும் விதமாக ஆசிரியர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலுள்ள நாடார் சரஸ்வதி தொடக்கப் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாப்பட்டது.காலை இறைவணக்கத்தின் பள்ளித்தலைமை ஆசிரியர் மதன்பிரபு ஆசிரியர் தினம் சிறப்புரையாற்றினார்.இதன் பின் வழக்கம் போல் வகுப்புகள் தொடங்கின.வகுப்பறைக்கு சௌ;ற ஆசிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.பள்ளி மாணவ மாணவியர் தங்கள் பாக்கெட் மணியிலிருந்து சேர்த்து வைத்த காசில் தங்களால் முடிந்த பேனா வாழ்த்து […]
சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும்; தமிழ்செல்வன் எம்எல்ஏ மற்றும் விழித்தெழு இயக்கம் வலியுறுத்தல்..
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மும்பை – தென் தமிழகம் இடையே சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் மற்றும் ரயில் எண் 11021 தாதர் – நெல்லை சாளுக்கியா எஸ்பிரஸ் ரயிலை சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பை, பாவூர்சத்திரம், தென்காசி, செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தி சீயோன் – கோலிவாடா சட்டமன்ற உறுப்பினர் கேப்டன் தமிழ் செல்வன் மற்றும் மும்பை விழித்தெழு ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் தமிழன் ஆகியோர் கூடுதல் பொது மேலாளர் பிரபாத் ரஞ்சனை நேரில் சந்தித்து […]
பேட்மிண்டன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற நித்யஸ்ரீ சிவன்; தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்த்து..
பாராலிம்பிக்ஸ்-2024 பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் SH6 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று நித்ய ஸ்ரீ சிவன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வாழ்த்து செய்தியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது, பாராலிம்பிக்ஸ் 2024-ல் பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் SH6 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற நித்ய ஸ்ரீ சிவன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! உங்களது இந்தச் சிறந்த சாதனை; மகத்தான திறமை, ஆர்வம் மற்றும் கடின உழைப்பை வெளிப்படுத்துகிறது. […]
கடையம் அருகே உள்ள சாலையில் ஆபத்தான பள்ளம்; விரைந்து சீரமைக்க சமூக நல்லிணக்க கூட்டமைப்பு வலியுறுத்தல்..
உயிர் பலி வாங்க துடிக்கும் ஆபத்தான மெகா பள்ளத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக சரி செய்திட வேண்டும் என சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் கடையம் அருகிலுள்ள, திருமலையப்பபுரத்தில், தென்காசி அம்பாசமுத்திரம் சாலையில், வெங்கடாம்பட்டி விலக்கு, ரவண சமுத்திரம் விலக்கு என நான்கு சாலைகள் பிரியும் பகுதி உள்ளது. இதில் வெங்கடாம்பட்டி செல்லும் சாலை கடையம் யூனியனுக்கு சொந்தமானதாகும். இந்த சாலையில் ஏற்பட்டுள்ள ஆபத்தான மெகா பள்ளத்தில் அவ்வப்போது இருசக்கர வாகனங்கள் விழுந்து […]
சோழவந்தான் அருகே மயானத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
சோழவந்தான் அருகே மயானத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன இரும்பாடி பகுதியில் வைகை ஆற்றங்கரையில் மயானத்தில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்காக அங்கிருந்த மரங்களை வெட்டி எடுத்து சென்றதாகவும் இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்டால் எங்களுக்கே தெரியாமல் குடிநீர் தொட்டி கட்டுவதற்கு அதிகாரிகள் முயற்சி எடுத்துள்ளதாக கூறியதாகவும் ஆகையால் மயானத்தில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு […]
ராமநாதபுரம் ரயில்வே மேம்பாலத்தை திறக்க ராமநாதபுரம் நகர் எஸ்டிபிஐ கட்சியினர் கோரிக்கை
ராமநாதபுரம் – கீழக்கரை உயர் மட்ட ரயில்வே மேம்பாலம் 30 கோடியில் அமைக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்த நிலையில், விரைவில் திறந்து பயன்பாட்டுக்கொண்டு வர ராமநாதபுரம் நகர் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர். ராமநாதபுரம் – திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூர், கீழக்கரை, ஏர்வாடி, சிக்கல், சாயல்குடிக்கு செல்லும் பேருந்துக்கள் சக்கரைகோட்டை, ஆர். எஸ்.மடை வழியாக செல்லும் பாதையில் ரயில்வே பாதையை கடந்து செல்லும் நிலையில்தான் உள்ளது. இதில், ரயில்கள் செல்லும் போது ரயில்வே கேட் […]
தென்காசி மாவட்ட எஸ்.பி தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம்..
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலிருந்து 11.09.2024 அன்று இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி செல்வோர்கள் கடைப்பிடிக்கபட வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் நடைமுறைகள் குறித்து, தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஶ்ரீனிவாசன் தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த அறிவுறுத்தல்களை மாவட்ட எஸ்.பி வழங்கினார். அஞ்சலி செலுத்த செல்வோர்கள் அவசியம் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள். அஞ்சலி செலுத்த இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு சொல்வோர் பயணியர் பயணிக்க […]
இலஞ்சி டிஎஸ் டேனியல் கல்லூரியில் நடந்த தேசிய கருத்தரங்கம்..
தென்காசி மாவட்டம் இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்குக்கு கல்லூரியின் தாளாளர் ராஜகுமார் தலைமை வகித்தார். முதல்வர் பொ தங்கம் முன்னிலை வகித்தார். மாணவ ஆசிரியர் காவ்யா வரவேற்றார். குஜராத் அதானி துறைமுக இனோவேஷன் மேலாளர் சுப்பிரமணியன் கல்வியின் சிறப்பு, தனித்திறன் வளர்ச்சி, வளரும் நவீன தொழில் நுட்பம் குறித்து பேசினார். சுரண்டை காமராஜர் அரசு கல்லூரி வணிக நிர்வாகவியல் துறை தலைவர் முனைவர் பிரான்சிஸ் […]
ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் மூலம் பணம் இழக்கும் அபாயம்; நெல்லை சரக காவல்துறை துணை தலைவர் எச்சரிக்கை..
ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் (செயலி) மூலம் பணம் இழக்கும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பா.மூர்த்தி தெரிவித்ததாவது, Google Playstore-ல் Grindr (Gay Dating & Chat) (Application) பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த செயலியில், முன் பின் தெரியாத நபர்களிடம் தகவல் பரிமாற்றம் (Chat) செய்யும் வசதி உள்ளது. […]
உசிலம்பட்டியில் சாலை வசதி கேட்டு பொது மக்கள் மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கண்ணன் தியேட்டர் அருகில் உள்ளது கள்ளர் தெரு.இத்தெருவில் சாலை வசதி அமைத்துத் தர பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் நீண்ட நாள் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.இதனையடுத்து அதிகாரிகள் பேவர் பிளாக் சாலை அமைக்க சில மாதங்களுக்கு முன் தோண்டியுள்ளனர்.ஆனால் இதுவரை சாலை வசதி அமைக்கப்படவில்லை.இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் பதில் இல்லை.இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் கண்ணன் தியேட்டர் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் சுமார் […]
ராமநாதபுரத்தில் பிளாஸ்டிக் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
இராமநாதபுரம் அரண்மனை முன்பாக ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டரி சங்கம் , தேவிபட்டினம் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி, வாணி வேலு மாணிக்கம் மான்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் நெகிழி தவிர்ப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டரி சங்கத்தின் தலைவர் செங்குட்டுவன் தலைமை தாங்கினார். ரோட்டரி மாவட்ட ஆளுநர் தேர்வு தினேஷ் பாபு கலந்து கொண்டு துவக்கி வைத்தார். துணை ஆளுநர் மரு. ரம்யா தினேஷ் மரு. ரமனீஸ்வரி ஆகியோர் துணிப்பைகளை வெளியிட […]