தென்காசி மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம்..

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையின் சார்பில் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், தென்காசி மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள், தட்டம்மை (மீசல்ஸ்) ரூபலா கண்காணிப்பு பணி, பருவ கால நோய்கள் தடுப்பு, புகையிலை தடுப்பு நடவடிக்கைகள் அயோடின் பயன்பாடுகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் தர கட்டுப்பாடு மற்றும் மாவட்ட சுகாதார பேரவை நடவடிக்கைகள் பற்றியும் சம்பந்தப்பட்ட துறை […]

மும்பை இணைய குற்ற பிரிவிலிருந்து பேசுவதாக கூறி (‘DIGITAL ARREST’) செய்வதாக மோசடியில் ஈடுபட்ட நபர்கள் கைது..

மும்பை இணைய குற்ற பிரிவிலிருந்து பேசுவதாக கூறி (‘DIGITAL ARREST’) செய்வதாக மோசடியில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புகார் தாரர் ஸ்ரீநிவாசவர்மா என்பரின் கைபேசிக்கு அறிமுகமில்லாத நபரிடமிருந்து whatsapp ல் மும்பை இணைய வழி குற்றப்பரிவிலிருந்து பேசிகிறோம் என்றும் தங்கள் வங்கி கணக்கில் முறையற்ற சட்டவிரோதமான பண பரிவர்த்தணைகள் நடந்துள்ளது என்றும் உங்களுக்கு மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் இருந்து ஒரு அழைப்பானை வந்துள்ளது. எனவே […]

தென்காசியில் புத்தக கண்காட்சி..

தென்காசியில் நேஷ்னல் புக் டிரஸ்ட், புதுடில்லி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மற்றும் தென்காசி ஆகாஷ் ப்ரண்ட்ஸ் ஐஏஎஸ் அகாடமி இணைந்து புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. புத்தக கண்காட்சியை தென்காசி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் பால்சுதர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இவ்விழாவிற்கு ஆகாஷ் அகாடமி நிர்வாக இயக்குநர் மாரியப்பன் தலைமை தாங்கினார். சிபிஐ மாவட்ட செயலாளர் இசக்கி துரை முன்னிலை வகித்தார். செங்கோட்டை நல்நூலகர் ராமசாமி முதல் […]

திருவேங்கடம் மூன்று நபர்கள் கொலை வழக்கு; குற்றவாளிகள் 4 நபர்களுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு..

திருவேங்கடத்தில் மூன்று நபர்களை கொலை செய்த வழக்கில் 4 நபர்களுக்கு தூக்கு தண்டனை மற்றும் ஐந்து நபர்களுக்கு 5 ஆயுள் தண்டனை மற்றும் இரண்டு நபர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தென்காசி மாவட்டம், திருவேங்கடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உடப்பன்குளம் பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு மூன்று நபர்களை கொலை செய்த வழக்கில் 25 நபர்கள் மீது அப்போதைய சங்கரன்கோவில் துணை காவல் கண்காணிப்பாளர் […]

சாம்பவர் வடகரை பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் வெறிநாய்கள்; பொதுமக்கள் அச்சம்..

தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை பேரூராட்சி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தெருநாய்கள் அதிகமான அளவில் சாலைகளில் சுற்றி திரிந்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சாம்பவர் வடகரை பேரூராட்சி பகுதியில் சுற்றி திரியும் வெறிநாய்கள் இரவு மற்றும் பகல் நேரங்களில் சாலைகளில் அதிகமான அளவில் சுற்றி திரிவதால் பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தினமும் அச்சத்துடன் வந்து செல்லும் நிலை தொடர்கிறது.  எனவே சாலையில் சுற்றி திரியும் வெறிநாய்களை பிடிக்க பேரூராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை […]

திருவேங்கடம் மூன்று நபர் கொலை வழக்கு; 11 நபர்கள் குற்றவாளி என தீர்ப்பு..

திருவேங்கடத்தில் மூன்று நபர்களை கொலை செய்த வழக்கில் 11 நபர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம், திருவேங்கடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உடப்பன்குளம் பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு மூன்று நபர்களை கொலை செய்த வழக்கில் 25 நபர்கள் மீது அப்போதைய சங்கரன்கோவில் துணை காவல் கண்காணிப்பாளர் கலிவரதன் கொலை மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தார். இவ்வழக்கின் விசாரனையானது திருநெல்வேலி இரண்டாவது கூடுதல் மாவட்ட […]

காணாமல் போனவர்கள் பற்றிய சிறப்பு விசாரணை முகாம்..

தென்காசி மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் குறித்து பதியப்பட்ட வழக்குகளின் சிறப்பு மனு விசாரணை முகாம் நடந்தது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஶ்ரீனிவாசன் அறிவுறுத்தலின் பேரில், மாவட்டம் முழுவதும் அனைத்து உட்கோட்டங்களிலும் காணாமல் போனவர்கள் குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் காணாமல் போனவர்களை விரைந்து கண்டுபிடிக்கும் விதமாக மாபெரும் விசாரணை முகாம் நடைபெற்றது.  இதில் மாவட்டம் முழுவதும் அனைத்து காவல் நிலையங்களிலும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை அந்த உட்கோட்டங்களில் விசாரணை முகாம் ஏற்பாடு செய்து புகார் தாரர்களை […]

நில அதிர்வுகளை ஏற்படுத்தும் குவாரிகளை நெறிப்படுத்த வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..

நில அதிர்வுகளை ஏற்படுத்தும் கல்குவாரிகளை நெறிப்படுத்த வலியுறுத்தி பொட்டல்புதூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நாளை நடைபெற உள்ளதாக சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள முதலியார்பட்டி, பொட்டல் புதூர், ஆழ்வார்குறிச்சி, ரவண சமுத்திரம், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும், நெல்லை மாவட்டத்தில், ஜமீன் சிங்கம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும், கடந்த 22.9.24 அன்று காலை 12 மணி அளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பயந்து சில மணி நேரங்கள் […]

தமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்; தென்காசி மாவட்ட பயனாளிகள் நன்றி..

தமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மூலம் பயன்பெற்ற தென்காசி மாவட்டத்தை சேர்ந்த பயனாளிகள் நன்றி தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் நோக்கமானது நகர்ப்புற ஏழைகளிடையே சமுதாயம் சார்ந்த அமைப்புகளை உருவாக்கி அவர்களின் வறுமையையும், நலிவு நிலையையும் குறைத்து சுய வேலை வாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுடன் கூடிய வேலை வாய்ப்புகளுக்கு வழி வகுத்து, அதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தினை குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்துவதும், நிலைத்த தன்மை அடையச் செய்வதும் ஆகும். தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார […]

உதயநிதி குறித்து விமர்சனம்: ஆதவ் அர்ஜுனா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்- திருமாவளவனுக்கு, ஆ. ராசா வலியுறுத்தல்..

உதயநிதி குறித்து விமர்சனம்: ஆதவ் அர்ஜுனா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்- திருமாவளவனுக்கு, ஆ. ராசா வலியுறுத்தல்.. உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி குறித்து விமர்சனம் செய்த விசிக துணை பொதுச் செயலாளர்மீது திருமாவளவன் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக துணைப்பொதுச்செயலாள ரும் எம்.பி.யுமான ஆ.ராசா வலியுறுத்தி உள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, திமுகவுடனான கூட்டணி குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பல்வேறு கருத்து களைத் […]

நாட்டின் கருத்தியல் அடையாளமாக விளங்கியவர் சீதாராம் யெச்சூரி: மு.க.ஸ்டாலின் பெருமிதம்..

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் படத்திறப்பு நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டையில் இன்று நடைபெற்றது. இதில் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு அவரது உருவ படத்தை திறந்து வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- சீதாராம் யெச்சூரியின் மறைவு என்னை அதிர்ச்சி அடைய வைத்தது. சீதாராம் யெச்சூரியின் உடல்நலம் குறித்து தொடர்ந்து விசாரித்து கொண்டே இருந்தேன். சிபிஎம் கட்சிக்கு மட்டுமல்லாமல் எங்களுக்கும், சொந்தமானவர், அனைவருக்கும் சீதாராம் […]

அருவருப்பான அரசியலுக்கு முன்மாதிரியாகி, மக்களின் இறை நம்பிக்கையை வைத்து சித்து விளையாட்டு விளையாடும் ஆந்திரா.! சு.ஆ.பொன்னுசாமி கடும் விமர்சனம்..

அருவருப்பான அரசியலுக்கு முன்மாதிரியாகி, மக்களின் இறை நம்பிக்கையை வைத்து சித்து விளையாட்டு விளையாடும் ஆந்திரா.! சு.ஆ.பொன்னுசாமி கடும் விமர்சனம்.. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உலகையே அச்சுறுத்திய “கோவிட்-19” எனும் கொடிய வகை கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் லட்சக்கணக்கானோர் வாழ வழியின்றி கூட்டம், கூட்டமாக, சாரை, சாரையாக சாலை மார்க்கமாக நடைபயணமாக சென்று கொண்டிருந்த தருணத்திலும், பல அரசு மருத்துவமனைகளில் பிராண வாயு உருளைகள் (ஆக்சிஜன் சிலிண்டர்) […]

இலங்கை அதிபராக பதவியேற்றார் அநுரா குமார திசாநாயக்க..! பிரதமர் மோடி வாழ்த்து..!

இலங்கையின் 9-வது அதிபராக அநுரா குமார திசாநாயக்க பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் தேர்தல் நேற்று முன் தினம் நடைபெற்ற நிலையில், மாலையிலேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை முடிவில், தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க, 55 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இந்நிலையில், தலைமை நீதிபதி ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் இலங்கையின் 9-வது அதிபராக அநுர குமார […]

தாண்டிக்குடியை சேர்ந்த சிறுவனின் தற்கொலைக்கு நீதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு..

தாண்டிக்குடியை சேர்ந்த சிறுவனின் தற்கொலைக்கு நீதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு.. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா, பூலத்தூர் பகுதியை சேர்ந்த அழகர்சாமி மகன் ராஜபாண்டி(16). அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பில் 500க்கு 440 மதிப்பெண் பெற்று பள்ளியிலேயே முதல் மாணவராக வந்தார். இந்நிலையில் கடந்த 11.9.2024 அன்று பள்ளியில் மதிப்பெண் சான்றிதழ் வாங்குவதற்காக வந்த மாணவன் ராஜபாண்டியை பொறுப்பு தலைமை ஆசிரியர் சௌந்தரபாண்டியன், அசிங்கமாக பேசி அவமானப்படுத்தி அனுப்பியதாகவும், இதனால் தான் […]

பில்லி, சூனியம், செய்வினை சிறப்பாக செய்வார்! அதிமுக மாஜி எம்எல்ஏ பற்றி பரபரப்பு போஸ்டர்..

 பில்லி, சூனியம், செய்வினை சிறப்பாக செய்வார்! அதிமுக மாஜி எம்எல்ஏ பற்றி பரபரப்பு போஸ்டர்.. சேலம் ஓமலூர் தொகுதி அதிமுக மாஜி எம்எல்ஏ குறித்து பரபரப்பான போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் பில்லி சூனியம், செய்வினை, ஏவலை சிறப்பாக செய்வார் என கூறப்பட்டுள்ளதால் அதிமுகவினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ வெற்றிவேல் (57). இவரை பற்றி ஓமலூர் பகுதியில் பரபரப்பான நோட்டீஸ் அச்சடித்து ஒட்டப்பட்டுள்ளது. அதில், பொதுமக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு! […]

கல்லிடைக் குறிச்சி ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் அமைச்சரை சந்தித்து மனு..

கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என அமைச்சரிடம் கல்லிடை இரயில் பயணிகள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்து வருகிறனர். நெல்லை – செங்கோட்டை வழித்தடத்தில் அதிக வருவாய் தரும் இந்த ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச்சங்க தலைவர் உமர் பாரூக், ஆலோசகர் ஜான் பால் […]

சிறுவர்கள் ஆபாச படத்தை சேமித்து வைத்தாலும், பார்த்தாலும் போக்சோ பாயும்! உச்சநீதிமன்றம் அதிரடி..

சென்னையை சேர்ந்த வாலிபர் செல்போனில் சிறுவர்கள் தொடர்பான ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்தது தொடர்பாக அவர் மீது போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது சட்டப்படி குற்றமல்ல. அவற்றை மற்றவர்களுக்கு அனுப்புவதுதான் குற்றம் என தீர்ப்பு அளித்தார். இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் குழந்தைகள் உரிமைக்கான கூட்டமைப்பு மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்தது.இந்த […]

விவசாயிகளையும் விளை நிலங்களையும் பாதுகாக்க எஸ்டிபிஐ ஆய்வுக்குழு வலியுறுத்தல்..

உயிர்பலிகள் ஏற்படும் முன் விவசாயிகளையும் விளை நிலங்களையும் பாதுகாக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்காசி மாவட்ட நிர்வாகத்தை எஸ்டிபிஐ ஆய்வுக்குழு வலியுறுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைபகுதிகளை ஒட்டியுள்ள வடகரை, பண்பொழி, கரிசல்குடியிருப்பு, புளியரை போன்ற பகுதிகளில் சமீபகாலமாக வன விலங்குகள் விவசாயிகளையும், வேளாண் நிலங்களையும் சேதப்படுத்தி வருகின்றது. அதிலும் குறிப்பாக கடந்த ஒரு மாதமாக வடகரை பகுதியில் விளை நிலங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து நெல், வாழை, தென்னை போன்ற பயிர்களை […]

பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டு மீனவர்கள் குறிப்பாக, ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்படுவது அதிகமாகிவிட்டது; நவாஸ் கனி MP காட்டம்..

பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டு மீனவர்கள் குறிப்பாக, ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்படுவது அதிகமாகிவிட்டது; நவாஸ் கனி MP காட்டம்.. கடந்த காலங்களில் கைது செய்தால் மீனவர்களை விடுவித்து, படகுகளையும் கொடுத்து விடுவார்கள்; ஆனால் தற்போது படகுகளை பறிமுதல் செய்து ஏலத்தில் விட்டு வருகிறார்கள், அது அவர்களின் வாழ்வாதாரம்; கடந்த காலங்களில் அவர்களுக்கு சிறை தண்டனை கிடையாது, தற்போது சிறை தண்டனை, அபராதம் விதிக்கிறார்கள் என்றால் இந்திய அரசு இதை கண்டிக்கவில்லை; பிரதமர் […]

நான்.ரெம்ப..ரொம்ப பிஸிங்க 

நான்.ரெம்ப..ரொம்ப பிஸிங்க  (படித்து விடுங்கள்..! ஏதோ ஒரு புள்ளி உங்கள் வாழ்க்கையின் போக்கையே மாற்றலாம்) நான்..ரெம்ப..பிஸிங்க…இன்று எல்லோரிடத்திலும்வெளிப்படும் Instant வார்த்தைகள்… ஆரோக்கியமான செயல்பாடுகளில் பிஸி…பாராட்டுக்களை பெற்றுத்தரும்… தவறான செயல்பாடுகளில் பிஸி…அவமானங்களையே பெற்று தரும்… Swiggy, Zomato என்னும் உணவு டெலிவரி செய்யும் பைக்குகள் எல்லா நேரங்களிலும் சுற்றுகின்றன. Fast food இல்லாமல் இளைஞர்களின் மாலைப்பொழுதுகள் கழிவதே இல்லை…Cancer வருவதற்கான அத்தனை மூலக்கூறுகளும்(chemicals)Fast food ல் நீக்கமற நிறைந்துஇருக்கின்றன. கையடக்க செல்போன்கள் phornography(ஆபாச வீடியோக்கள்) படங்களினால் ஆபாசத்தில் வழிகிறது. […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!