அரியானாவில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 48 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் 3-வது முறையாக ஆட்சி அமைக்கிறது. இதனால் பா.ஜ.க.வுக்கு பல்வேறு மாநில முதல் மந்திரிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தேர்தலில் பாஜக 29 இடங்களில் வெற்றி பெற்றது. அங்கு கணிசமாக வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது.இந்நிலையில், தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர்.இந்தக் […]
Category: செய்திகள்
கவிஞர் பேரா எழுதிய “கூழாங்கற்கள்” நூலினை வெளியிட்ட தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர்..
கவிஞர் பேரா எழுதிய “கூழாங்கற்கள்” எனும் நூலை தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு வெளியிட்டார். நூலின் முதல் படியை நியூஸ் -18 தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் ச. கார்த்திகைச் செல்வன் பெற்றுக் கொண்டார். பொதிகைத் தமிழ்ச் சங்க நிறுவுநர் கவிஞர் பேரா எழுதிய “கூழாங்கற்கள்” சுயசரிதை நூல் வெளியீட்டு விழா நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது. நெல்லையில் கவிஞர் பேரா என அனைவராலும் அன்பாக அழைக்கப்படுவர் கவிஞர் பே.இராஜேந்திரன். நெல்லை பொதிகை தமிழ்ச்சங்க நிறுவுநரும், தமிழ் […]
தமிழ்நாட்டில் வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்திட பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..
தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்திடவும், பொது மக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும், இயற்கைச் சீற்றம், நோய்த்தொற்று இன்னபிற நேரங்களில் அவசர காலப் பணிகளைக் கூடுதலாக மேற்கொள்ளவும், அமைச்சர்களை சில மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்களாக நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். அதன்படி வருவாய் மாவட்ட வாரியாக பின்வரும் அமைச்சர்கள் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திற்கு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, தேனி மாவட்டத்திற்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, திருப்பத்தூர் […]
தென்காசி மாவட்டத்தில் நடந்த மக்கள் குறைதீர்ப்பு கூட்டம்..
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 07.10.2024 திங்கள் கிழமையன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக் கொண்டார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் மூளை முடக்குவாதம் புற உலக சிந்தனையற்ற மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகள் மாற்று வழியில் பிறருடன் தொடர்பு கொள்ள உதவும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மென்பொருளுடன் கூடிய உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் […]
எங்கு பார்த்தாலும் “தலை” கடல் விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாடு! மாஸ் காட்டிய திருமாவளவன்..
தமிழ்நாடு உள்பட தேசிய அளவில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும், தேசிய மதுவிலக்கு சட்டம் இயற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இன்று நடைபெற்றது.இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கி, மாநாட்டை தொடங்கி வைத்தார்.மகளிர் விடுதலை இயக்கத்தின் மாநில துணை செயலாளர்கள் செஞ்சோலை, சிற்றரசி, மங்கையற்கரசி, அமுதா பொற்கொடி […]
கீழக்கரை வடக்குத்தெரு சமூக நல அமைப்பு ( நாசா) நிதி உதவி..
கேரளா வயநாடு நிலச்சரிவு பேரழிவில் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு கட்டமைப்பு பணிகளுக்காக கீழக்கரை வடக்குத்தெரு சமூக நல அமைப்பு ( நாசா) நிதி உதவி வழங்கியது . பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு கட்டமைப்பு , பணியில் முண்ணனியில் செயல்படும் கேரளாவை சார்ந்த *பீப்புல்ஸ் ஃபவுண்டேஷன்* அமைப்பின் வயநாடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.கே .சமீர் அவர்களிடம் , நாசா அமைப்பிற்கு நல்லுள்ளங்கள் வழங்கிய வயநாடு நிவாரண உதவித் தொகை ₹ 2,55,000 /- ரூபாய் இரண்டு லட்சத்து ஐம்பத்தைந்தாயிரத்திற்கான […]
பொதுமக்களை மிரட்டி வழிப்பறி செய்வோர் மீது குண்டர் சட்டம் பாயும்; தென்காசி மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை..
Grindr App உள்ளிட்ட ஆன்ட்ராய்டு செயலிகளை பயன்படுத்தி பொது மக்களை மிரட்டி வழிப்பறி செய்யும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், Google Play Store – Grindr (Gay Chating App) என்ற செயலி (Application) பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த செயலியில் முன் பின் தெரியாத நபர்களிடம் தகவல் பரிமாற்றம் (Chat) செய்யும் வசதி உள்ளது. […]
Grindr ஆப் மூலம் மக்களை மிரட்டி பணம் நகை செல்போன் பறித்த மர்ம கும்பல் அதிரடி கைது..
Grindr எனும் ஆன்ட்ராய்டு ஆப் மூலம் மக்களை மிரட்டி பணம் நகை செல்போன் பறித்த மர்ம கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியை சேர்ந்த ஒருவரை தவறான உறவுக்கு தூண்டும் grindr-app மூலம் தொடர்பு கொண்டு சுரண்டை காவல் நிலைய பகுதிக்கு அவரை வரவழைத்து முறைகேடாக இருப்பது போல் வீடியோ எடுத்து மிரட்டி அவரை தாக்கி பணம், செல்போன் மற்றும் நகைகளை மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர். இது குறித்து அவர், […]
பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க 34 சிறப்பு ரெயில்கள்..
தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-பண்டிகை காலத்தை முன்னிட்டு, இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தெற்கு ரெயில்வே சார்பில் 34 சிறப்பு ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரெயில்கள் மூலம் மொத்தம் 302 ரெயில் சேவைகள் இயக்கப்பட உள்ளது.இதேபோல, இந்திய ரெயில்வே துறை மூலம் இந்த ஆண்டு மொத்தம் 6 ஆயிரம் சிறப்பு ரெயில்கள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் விழாக்கால கூட்டநெரிசலை தவிர்க்க ஏதுவாக அமையும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் மழை..!
இதுதொடர்பாக சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:- தமிழகத்தின் உள்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் வரும் 5-ம் தேதி வரை சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகள், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று […]
பஞ்சாபில் காணாமல் போன ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி; 13 வருடங்களுக்கு பிறகு நெல்லையில் மீட்பு..
பஞ்சாபில் காணாமல் போன ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி 13 வருடங்களுக்கு பின்னர் திருநெல்வேலி மாவட்டம், விஜயநாராயணத்தில் மீட்கப்பட்டு பஞ்சாப் மாநில காவல்துறை உதவியுடன் மீண்டும் குடும்பத்தினருடன் சேர்க்கப்பட்டார். கடந்த 17.09.2024ஆம் தேதி விஜயநாராயணம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் வயது முதிர்வாலும், சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையிலும், தன்னை குறித்து எவ்வித தகவலும் தெரிவிக்க இயலாத நிலையிலும், எவ்வித அடையாள அட்டையும் இல்லாமல் சுற்றித்திரிந்து கொண்டிருந்த நபரை பிடித்து காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் […]
துணை முதலமைச்சர் மற்றும் புதிய அமைச்சர்களுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- பவள விழாவைக் கொண்டாடும் திராவிட முன்னேற்றக் கழகம், தமிழ்நாட்டை ஆறாவது முறையாக ஆட்சி செய்து வருகிறது. கழகத்தின் கரங்களில் தமிழ்நாட்டு மக்கள் ஆட்சி அதிகாரத்தை வழங்கிய போதெல்லாம் நிறைவேற்றிக் காட்டிய தொலைநோக்குத் திட்டங்களின் மூலமாக நாம் அடைந்த வளர்ச்சிதான், இன்று நாம் காணும் நவீன தமிழ்நாடு! அரசும், பொறுப்பும், தலைமையும், முதல்-அமைச்சரின் செயல்களும் கூட்டுப் பொறுப்பு என்பதை உணர்ந்தவன் நான். அதன்படியே செயல்படுபவன் நான். திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை […]
உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர்! செந்தில் பாலாஜி உட்பட நான்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு…
தமிழக அமைச்சரவையில் நான்கு பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதோடு ஆறு அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நேற்றிரவு நியமிக்கப்பட்டார்.இந்த நிலையில், இன்று (செப்டம்பர் 29) மதியம் 3.30 மணிக்கு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், புதிய அமைச்சர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு நிகழ்ச்சியில், இரா. இராஜேந்திரனுக்கு முதலில் பதவிப் பிரமாணம் […]
தமிழ்நாடு தையல் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடுக!! தமிழ்நாடு முதலமைச்சருக்கு டாஸ் மாநில பொதுச்செயலாளர் ஜெபசிங் கோரிக்கை..
தமிழ்நாடு தையல் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடுக!! தமிழ்நாடு முதலமைச்சருக்கு டாஸ் மாநில பொதுச்செயலாளர் ஜெபசிங் கோரிக்கை.. தையல் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டி தமிழ்நாடு முதலமைச்சருக்கு திருச்சபை பணியாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல தொழிற்சங்கம் (டாஸ்) மாநில பொதுச்செயலாளர் ஜெபசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: தமிழ்நாடு முழுவதும் சுமார் 6 லட்சத்திற்கும் மேற்ப்பட்ட தையல் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு தையல் கடை மற்றும் வீட்டில் தையல் இயந்திரம் வைத்து தையல் தொழில் செய்து வருகின்றனர். தையல் […]
சென்னையில் சொத்து வரி கிடு கிடு உயர்வு: 1-ந்தேதி முதல் அமல்..
மத்திய அரசால் அமைக்கப்பட்ட 15-வது நிதி ஆணைய பரிந்துரைப்படி உள்ளாட்சி அமைப்புகளில், உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் சொத்துவரி விகிதத்தை உயர்த்த அறிவுறுத்தியது. அந்த வகையில், தமிழகத்தில் 2022-ம் ஆண்டு சொத்து வரி உயர்த்தப்பட்டது. அப்போது, 600 சதுர அடிக்கு குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 25 சதவீதம் உயர்த்தப்பட்டது.இதேபோல, 601 முதல் 1,200 சதுர அடி வரை பரப்பளவு கொண்ட குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதமும், 1,201 முதல் 1,800 சதுர அடி […]
இன்று பிரமாண்டமாக நடைபெரும் தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டம்! அணைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்பு..
தி.மு.க.வின் 75-ம் ஆண்டு பவள விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கடந்த 17-ந்தேதி அன்று பிரமாண்டமாக நடைபெற்றது. அத்துடன் தி.மு.க. ஒவ்வொரு ஆண்டும் நடத்தும் முப்பெரும் விழாவும் நடைபெற்றது. இது தி.மு.க.வினர் மட்டுமே கலந்துகொள்ளும் நிகழ்ச்சியாக இருந்தது.கூட்டணி கட்சிகள் கலந்துகொள்ளும் வகையில் தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டத்தை நடத்த, கட்சியின் தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் திட்டமிட்டார்.அதன்படி தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டம், காஞ்சிபுரத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை 5 […]
திண்டுக்கல் மாவட்டத்தில் 20 கடைகளுக்கு சீல், 150 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல், ரூ.6 லட்சம் அபராதம் – உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..
திண்டுக்கல் மாவட்டத்தில் 20 கடைகளுக்கு சீல், 150 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல், ரூ.6 லட்சம் அபராதம் – உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை.. திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் மற்றும் புறநகர்,சாணார்பட்டி,ஆத்துார், ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட அலுவலர் கலைவாணி தலைமையில் அலுவலர்கள் செல்வம்,ஜாபர் சாதிக்,ஜோதிமணி உள்ளிட்டோர் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது கடைகளில் இருந்து 150 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட […]
டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய முதல்வர்- காலில் விழுந்து வணங்கிய செந்தில் பாலாஜி..
பிரதமர் மோடியை சந்திப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து டெல்லி சென்றார்.தொடர்ந்து, இன்று காலை 11 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார்.இந்நிலையில், இன்று மாலை டெல்லியில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார்.ஜாமினில் வெளியே வந்த செந்தில் பாலாஜி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்த நிலையில், அவர் முதல்வரை சென்னை விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார்.அப்போது, முதல்வர் ஸ்டாலினை சந்தித்த செந்தில் பாலாஜி, காலில் விழுந்து வணங்கினார்.செந்தில் […]
கேரளாவில் குறி வைத்து ஏ.டி.எம்.களில் கொள்ளை அடித்த வடமாநில கும்பல்: சினிமாவை மிஞ்சிய சேசிங் விரட்டி பிடித்த தமிழக போலீசார், என்ன நடந்தது? முழு விவரம்..
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே வடமாநில கொள்ளைகும்பல் இன்று பிடிபட்டது. கேரள மாநிலம் திருச்சூரில் நேற்று அடுத்தடுத்து 3 ஏ.டி.எம்.களில் வடமாநிலத்தை சேர்ந்த கொள்ளை கும்பல் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது. இதில் 65 லட்ச ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. ஏ.டி.எம்.களில் கொள்ளையடித்துவிட்டு கொள்ளை கும்பல் ராஜஸ்தான் பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரியில் தப்பிச்செல்வதாக நாமக்கல் மாவட்ட போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, கேரளாவில் […]
ரயில் தண்டவாளத்தில் கல் வைத்து ரயிலை கவிழ்க்க சதி? போலீசார் தீவிர விசாரணை..
தென்காசி மாவட்டம் சங்கனாப்பேரி பகுதியில் ரயில் தண்டவாளத்தின் நடுவே சுமார் 10 கிலோ எடை கொண்ட பெரிய கல் வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி ஏதும் நடந்துள்ளதா என்ற கோணத்தில் ரயில்வே போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு புதன் கிழமை இரவு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. சங்கனாப்பேரி பகுதியில் ரயில் சென்ற போது தண்டவாளத்தின் நடுவே சுமார் 10 கிலோ எடை கொண்ட […]
You must be logged in to post a comment.